RSS

Monthly Archives: December 2015

நயாகரா 2015

டிசம்பர் 25 – 26, 2015 இருதினங்கள் நயாகராவில் குடும்பத்தோடு ஒதுங்கினேன். மகிழ்வாய்ச் சென்ற அந்த தினங்கள் வீடு வந்ததும் கவிதையாய் மலர்ந்தன இப்படி….

*

நயாகரா 2015

*

விடாமல் கொட்டும்

விசுவரூபம்

குளிர் நீர்ச் சிறகுகள்

படபடத்துப் பறக்கும்

ராட்சசப் பறவை

விண்ணைத் தொட்டு

ஏழு வர்ணம் தீட்டும்

தண்ணீர்த் தூரிகை

நெருப்பையும் வெல்லும்

தீரா நீர்ப் புகை

நிலத்தின் மேனியில்

நீர்முத்தம் வரையும்

பருவ ஓவியம்

கவிதை மடியில்

கவிதை எழுதும்

நீரெழுத்துக் கவிதை

காற்றைக் கிழித்து

கரைகள் நிறைத்து

சந்தங்கள் பொழியும்

ஓயாத பாட்டு

துருவப் பனிக் குடங்கள்

துளித் துளியாய் உடைந்து

மில்லியன் கால்கொண்டு நடந்து

பேரரருவியாய் விழுந்து

கடல் சேரும் ஓட்டம்

இது

நீரோட்டமல்ல

ரத்த ஓட்டம்

* Read the rest of this entry »

Advertisements
 
Leave a comment

Posted by on December 29, 2015 in 1

 

இனி பனிக்காலம் !… -ஜே .பானு ஹாரூன்

இருப்பிடம் இல்லா மக்களுக்கும் ..
இனி பனிக்காலம் ….

எங்கே சென்று அணைவார்? .
எதைக்கொண்டு உலைவைப்பார் ?..

நடுங்கும் குளிருக்கு போர்வை தந்தோரே …
இருப்பிடம் தருவீரா ?…

மூவேளை உணவிட்டோரே …
ஒரு வேலை தருவீரா ?… Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on December 28, 2015 in 1

 

மெளனமாய் ஒரு மணப்பெண்ணைப் போல்…

Mohamed Salahudeen

1377439_10153817499881565_8635121692171744312_n

சிறார்கள்
நதியில் கல்லெறிந்து
சிறுக சிறுக
பெருகும் வட்டங்களில்
மகிழ்ச்சியடைகிறார்கள்

நீருடலைக் கிழித்து
விசைப்படகுகளில்
பயணித்து மகிழ்கின்றனர் சிலர்

தூரத்துப் பகுதியிலிருந்து
பொருட்களை சுமந்து வருகின்றன
சரக்குக் கப்பல்கள் Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on December 28, 2015 in 1

 

சென்னை வெள்ளத்தில் சிக்கிய 130 பேரை காப்பாற்றிய பெல்ஜியம் நாட்டுக்காரர்!

11225440_1041802362550063_8229096106424963002_nசென்னை வெள்ளத்தில் சிக்கிய 130 பேரையும், 50 செல்லப்பிராணிகளையும் பத்திரமாக மீட்டுள்ளது பெல்ஜியம் நாட்டை சேர்ந்த பீட்டர் வெய்ன் கெய்ட் தலைமையிலான குழு. தற்போது இந்த குழு சென்னை நகரை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளது.

சென்னையில் கொட்டித்தீர்த்த மழை நகரத்தையே உலுக்கிப்போட்டது. வெள்ளத்தில் சிக்கிய லட்சக்கணக்கானவர்களை தீயணைப்பு படை வீரர்கள், ராணுவ வீரர்கள், கடலோர காவல் படை வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் பத்திரமாக மீட்டனர். இதனிடையே, வெள்ளத்தில் சிக்கிய 130 பேரையும், 50 செல்லப் பிராணிகளையும் பத்திரமாக மீட்டுள்ளார் பெல்ஜியத்தை சேர்ந்த 42 வயதுடைய பீட்டர் வெய்ன் கெய்ட். Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on December 14, 2015 in 1

 

சிந்தித்தால் – சில நேரங்களில் சிரிப்பு வரும்

உலக நாகரிகம் பிறந்த இடம் கிரேக்கம்.
உலகிற்கு
கல்வியை, கலைகளை
கதைகளை, கணிதத்தை, காவியத்தை
வீரத்தை, விவேகத்தை, விளையாட்டை
ஞானத்தை, தத்துவத்தை பொருளாதாரத்தை
விஞ்ஞானத்தை, மெஞ்ஞானத்தை
பண்பாட்டை, பகுத்தறிவை மருத்துவத்தை
இலக்கியத்தை, இதிகாசத்தை, வேதத்தை
விதியை, மதியை, கவிதையை அனைத்தையும்…….

சொற்கலை, பேச்சுக்கலை எழுத்துக்கலை
விமர்சனக்கலை, விகடக்கலை ஓவியக்கலை
நடனக்கலை, நாடகக்கலை விவாதக்கலை
என ஆயக்கலைகள் அனைத்தையும் உலகுக்கு கற்றுத் தந்த கிரேக்க நாடு…
பெற்றெடுத்த, பிள்ளைகளின் கால்களில் தான் ஒரு காலத்தில் (The whole World ) வீழ்ந்து கிடந்தது. Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on December 13, 2015 in 1

 

ஒரு உயிரை வாழவைத்தவன் உலகில் உள்ள எல்லா உயிர்களையும் வாழவைத்தவர் போலாவார். -அல் குரான்

ஒரு உயிரை வாழவைத்தவன் உலகில் உள்ள எல்லா உயிர்களையும் வாழவைத்தவர் போலாவார்.
-அல் குரான்

பசித்தவர்களுக்கு உணவளியுங்கள்.
-நபிகள் நாயகம்

இயக்கம் ,கொள்கை, பிரிவுகள் பலவகையாக இருந்தும் மனித நேயம் அவசியமாகும் போது அது தானே மலர்ந்து சிறந்து தன் சேவையை சிறப்பாக்குகின்றது Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on December 7, 2015 in 1

 

மதமென்றால் அது மனித நேயமும் ஒற்றுமையுமே! +போப் பிரான்ஸிஸ் அவர்களின் பேச்சு !

12316560_670285116447534_2678172327805853390_nமதமென்றால் அது மனித நேயமும் ஒற்றுமையுமே!

அன்றைக்கு இஸ்லாம் அதன் ஆரம்ப காலத்தில் இருந்த போது முஹம்மது நபியை பார்க்க வந்த சிரியா பாதிரிமார்களுக்கு பேச்சுவார்த்தை நடந்த எந்நேரமும் தொழுகை நடந்து கொண்டிருந்த அந்த பள்ளியிலேயே அவர்களின் பிரார்த்தனையையும் சுணங்காமல் செய்து கொள்ளலாம் என்று திருவாய் மலர்ந்தருளியது போல், இன்றைக்கு ஆப்பிரிக்காவுக்கு விஜயம் செய்த போப் அவர்கள், முஸ்லிம்களின் ஒரு பள்ளிவாசலில் நின்று எல்லோரும் வாருங்கள், ஒற்றுமையாக வாழுங்கள் என்று சொல்கிறார் என்றால், உலகின் மதங்களெல்லாமும் மனிதர்களை முழுமையாக நேசிக்கத்தானே தவிர, ஒருபோதும் அது ஆடா மாடா என்று கேட்பதற்கோ அரிவாளை எடுப்பதற்கோ இல்லை.

ஸ்ரீடி சாயிபாபாவும், மஹான் குருநானக்கும், சாது பரமஹம்ஸரும் இன்னும் இன்னும் எத்தனை எத்தனையோ இந்து மத புண்ணியவான்கள் எல்லாமும் போதித்தது சத்தியமாக இது ஒன்றே. Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on December 2, 2015 in 1