RSS

Monthly Archives: December 2012

புத்தாண்டு 2013 நம்பிக்கை

400_F_37925893_o3euXjBt9OZ80DltDJ8uZQyWmctudxyHபுத்தாண்டு 2013 நம்பிக்கை
இறைவன் மீது வைத்த நம்பிக்கை உங்கள் மீது வைத்த நம்பிக்கை
போனது போகட்டும்,நிகழ்வது நல்லதாக அமையட்டும் வருவதை சிறப்பாகட்டும். நம்பிக்கையே வாழ்வு. இறைவன் மீது வைத்த நம்பிக்கை உங்கள் மீது வைத்த நம்பிக்கை. நல்லதையே நாடுவோம்.நல்லதையே செய்வோம்.வருவதை எதிர்கொள்வோம் . நிகழ்வது நிகழட்டும்.புதிய ஆண்டு என்று ஒரு கற்பனை கொண்டு நிகழும் நாளை ஒதுக்க வேண்டாம். இன்றைய நாளில் செய்வதை செய் அதன் விளைவை இறைவனிடம் விட்டு விடு. கடமையை ஒதுக்கி பலனை தேடுவதில் பயனில்லை. ஒட்டகத்தைக் கட்டு இறைவனிடம் பாதுகாப்பு கேள்.நபிமொழி
Anas (radi Allahu anhu) reported that a person asked Rasul Allah (sal Allahu alaihi wa sallam), “Should I tie my camel and have Tawakkul (trust in Allah for her protection) or should I leave her untied and have Tawakkul.” Rasul Allah (sal Allahu alaihi wa sallam) replied, “Tie her and have Tawakkul.” (Hasan) [Jami At-Tirmidhi]
இன்றையே தினமே நம்மிடம் இருப்பது போல் வாழ்வோம் . நேற்றைய தினம் தன்னுடைய நன்மை மற்றும் தீமையுடன் கடந்து விட்டது. நாளைய தினமோ இன்னும் வந்தடையவில்லை.இன்றைய தினத்தை உயர்வானதாக்கிக் கொள்வோம். இந்த நாளில் விழிப்பான மனதுடன் நாம் நமது கடமையை செய்வோம்
வண்டினம் ஆரவாரம் செய்து வருதலால் அஞ்சி நடுங்கும் மனதை அறிந்த நாம் நம் செயலின் விளைவால் தீமையாகிவிடுமோ என அஞ்சி நடுங்கும் மனதை பெற்றிட வேண்டும். தீயின் வேகத்தை நீர் கொண்டு அடக்குதல் போல் பெருமை கொண்ட மனதை இறையின் நினைவு கொண்டு அடக்குதல் வேண்டும்
இன்றைய தினம் மகிழ்வாகவும், சாந்தியுடனும் மனநிறைவுடன் இருப்போம்.

ஆகவே நான் உமக்குக் கொடுத்ததை (உறுதியாகப்) பிடித்துக் கொள்ளும்; (எனக்கு) நன்றி செலுத்துபவர்களில் (ஒருவராகவும்) இருப்பீராக”. (திருக்குர்ஆன் 7:144)

பறவைகள் போல், நாம் தேவையில்லாத கோபம், வருத்தம், வலி, பயம் இவைகளை தூக்கிச் செல்வதை தவிர்ப்போம்

வாழ்க்கை அழகானது … அது தொடரட்டும் …

In the name of Allah The most Gracious The most Merciful!
Indeed all the praises are due to Allah, we praise him and we seek his assistance and forgiveness, and we seek refuge in Allah.
Every mistake is from me, and any Truth is from Allah, The Enduring One, He is the Enduring One, I know nothing save that which He hath taught me.
அனைத்துப் புகழும் அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்துக் காத்துப் பரிபக்குவப்படுத்தும் நாயனான அல்லாஹ்வுக்கே ஆகும்.
அ முஹம்மது அலி ஜின்னா,
நீடூர்

Jinnah S.E.A.Mohamed Ali (Jinnah)
nidurali “நீடூர் அலி”

Advertisements
 

Tags:

உன்னோடு பகிர்கிறேன்..!

quote from somewhere (27)அன்புள்ள BLOGGER..!

உன்னிடம் பகிர்வதில்
சுகமில்லை, உள்ளோடு
உண்டான சுமைகளையே
உன்னோடு பகிர்கிறேன்

உள்ளம்பீறி பொங்கிப்
பெருகும் உணர்வுக்கீறல்களை
குருதிச் சாயலாய்
உன்னோடு பகிர்கிறேன்

காரிருளைக் கொண்ட
ஒளிச்சேர்க்க மறந்த
நள்ளிரவோடு மட்டுமின்றி
உன்னோடும் பகிர்கிறேன்

 • காரணந்தெரயுமா உனக்கு?
  எந் நகைச்சுவைக்கு
  நகைக்க எதிர்வரும்மெவரும்
  இமைபொழுதில் ஆயத்தப்படுவர்

  உள்ளோடும் சினந்தன்னையும்
  உருவான சிந்தனையையும்
  உணர்வான கண்ணீரையும்
  உணர்வோர் யாருமில்லை

  ஒருமுறைக்கு இருமுறை
  கேட்போர் யாருமில்லை
  உணராதோர் காதிலுரைக்க
  தன்மானம் விடுவதில்லை

  என் னிறைவனோடும்
  நள்ளிரவோடு மட்டுமின்றி
  என் சுமையிறக்க
  உன்னோடும் பகிர்கிறேன்

  பதிவதனைத்தும் உலகுக்கின்றி
  எனக்குநீ மீண்டுமுரைக்க
  என்னிலொருவனாய் இருப்பதால்
  உன்னோடு பகிர்கிறேன்

  என்னுறவு, நட்பு, காதல்
  எவருமெனை உணர்ந்தாரில்லை என்னை
  யுணர்ந்தவனாய் நானுன்னை அறிவதால்
  நான் உன்னோடு பகிர்கிறேன்
  http://rafeeqspoem.blogspot.in/2011/10/blog-post_6.html

   
 • Tags: ,

  “இலவசம்” முந்துங்கள் !

  freeசமூகத்தில் காலம்காலமாக “இலவசம்” என்ற பெயரில் பொதுமக்களிடயே வழங்கப்பட்டு வரும் பொருட்களால் சமுதாயத்தின் நிலைகள் மாறிக்கொண்டே வருகிறது என்றுச் சொன்னால் மிகையாகாது.

  ஆம்….! பிறப்பு முதல் இறப்பு வரை எத்துணை இலவசங்கள் !

  1. அரசியல் கட்சிகள் தேர்தல் நேரத்தில் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் செய்யும் அறிவிப்பாகிய “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இவற்றையெல்லாம் இலவசமாக வழங்குவோம்” என்பதாகட்டும்…………….

  2. தேர்தல் நடக்கும் முந்திய நள்ளிரவில் பொதுமக்களுக்கு வழங்கும் ஊக்கத்தொகை, பரிசுப்பொருளாகட்டும்……………

  3. இலவசப் பொருட்கள் வழங்க “நமது தலைவர்” வருகிறார் என்ற கட் அவுட் அறிவிப்பாகட்டும்…………….

  4. புதிய கடையின் திறப்பு விழாவின்போது கொடுக்கும் இலவசமாகட்டும்……………..

  5. ஒரு பொருள் எடுத்தால் மற்றொன்று இலவசம் என்ற அறிவிப்பாகட்டும்……………..

  6. நூறு சதவீத பொருள் வாங்கினால் கூடுதலாக இருபது சதவீதம் இலவசம் என்ற அறிவிப்பாகட்டும்…………….

  7. பண்டிகைக்கால தள்ளுபடியாகட்டும்……………….

  8. இன்று ஒரு நாள் மட்டும் எதை எடுத்தாலும் பாதி விலை ( ?! ) என்ற அறிவிப்பாகட்டும்…………….

  9. ஒரு மனை வாங்கினால் இன்னொன்று இலவசம் என்பதாகட்டும்…………..

  10. நூறு ரூபாய்க்கு டாப் அப் செய்தால் நூற்றுஐம்பது ரூபாய்க்கு டாக் டைம் என்பதாகட்டும்………………

  இப்படி இலவசங்கள் சமூகத்தில் ரொம்ப மலிவாகக் காணப்படுகிறது.

  “இலவசம்” என்பதின் பொருள் உங்களிடம் ஒன்றை வழங்கிவிட்டு மற்றொன்றை அதாவது அவர்கள் எதிர்பார்க்கும் ஒன்றை உங்களிடமிருந்து மறைமுகமாகப் பெறுவதே.

  அரசால் தேவையானவர்களுக்கு இலவசங்கள் வழங்குவதில் தவறில்லை என்றாலும், உழைத்து பிழைக்கக்கூடிய வாய்ப்புள்ளவனுக்கும், வசதி படைத்தவனுக்கும் இலவசங்களைக் கொடுப்பது, அவனை சோம்பேறியாக்கிவிடுகிறது. இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் அரசால் வழங்கப்படும் அனைத்து இலவசங்களும் நாம் ஒவ்வொருவரும் செலுத்தக்கூடிய வரிகளாகிய Professional Tax, Sales Tax, Central Sales Tax, Custom Duty, Income Tax, Dividend Distribution Tax, Excise Duty , Municipal & Fire Tax, Staff Professional Tax, Cash Handling Tax, Food & Entertainment Tax, Gift Tax, Wealth Tax, Stamp Duty & Registration Fee, Interest & Penalty, Road Tax, Toll Tax , Vat & etc போன்றவற்றின் மூலமாக கிடைக்கும் பணமே. அதாவது ஒருவர் பயன்பெற மற்றொருவர் தோளில் சுமக்கும் நிலை.

 • 2.happiness-photos“பசியோடு இருப்பவனுக்கு ஒரு மீனைக் கொடுப்பதற்கு பதிலாக மீன் பிடிக்கக் கற்றுக்கொடுப்பதே சிறந்தது” என்பது பலமொழி ஒரு மீனைக் கொடுத்தால் அவனுக்கு ஒரு வேலை பசியாற்றிவிடலாம். அந்த நிமிடத்திலேயே அவனை அடுத்தவர்களிடம் கையேந்தவும் பழக்கிவிடுகிறோம். இது மட்டுமல்லாமல் மீனை பரிதாபப்பட்டு கொடுப்பவனுக்கும் இதனால் வீணான செலவு. இதைத்தவிர்த்து அவனுக்கு மீன் பிடிக்கக் கற்றுக்கொடுத்தால் அதன் மூலம் அவன் பிடிக்கும் மீனை அவன் சாப்பிடும்போது ஏற்படும் மகிழ்ச்சியே தனி. நான் பிடித்த மீன் இது ! என்ற நினைவில் மகிழ்ச்சி பொங்கச் சாப்பிடுவான். இலவசமாகக் கிடைத்த மீனை சாப்பிடுவதைவீட, அவன் உழைத்து பிடித்த மீனைச் சாப்பிடும்போது கிடைக்கும் ருசியே தனி.

  இன்று பயன்படுத்தப்பட வேண்டிய உழைப்பை நாளை நாம் பயன்படுத்தலாம் என்பதை தூக்கி தூர வைத்துவிட்டு அன்றைய தினம் பயன்படுத்தாத உழைப்பு என்றைக்கும் வீணானது என்பதைக் கருத்தில் கொண்டு இறுதிவரை போராடிக் கடுமையாக உழைப்பதன் மூலமே வாழ்க்கையில் மிக உயர்ந்த நிலையை அடைய முடியும். நீங்கள் உழைக்கும்போது சில தோல்விகள் வரத்தான் செய்யும் தோல்விகள் இல்லாமல் வெற்றி இல்லை. எனவே தோல்விகளைக் கண்டு துவண்டு விடாதீர்கள்.

  கடின உழைப்பே உயர்வான வெற்றிக்கு வழி !

  சேக்கனா M. நிஜாம்
  http://nijampage.blogspot.in/2012/05/blog-post_28.html?showComment=1356593948146#c8259747658011721695

   
 • Leave a comment

  Posted by on December 27, 2012 in Uncategorized

   

  Tags: ,

  கடவுள் இருக்கின்றார்..!

  1கண்டதெல்லாம் கடவுள் இல்லை – நாம்
  கண்டதிளெல்லாம் கடவுள் இல்லை

  காண முடிந்தது கடவுள் இல்லை – நம்
  கருத்துக்கு இசைந்தது கடவுள் இல்லை

  பிணம் ஆனவன் கடவுள் இல்லை -பெரும்
  பணம் கொண்டவன் கடவுள் இல்லை

  மதம் கொண்டவன் கடவுள் இல்லை – பெரு
  சினம் கொண்டவனும் கடவுள் இல்லை

  அகமிருப்பது கடவுள் இல்லை – வெறும்
  சுகம் தருவது கடவுள் இல்லை

  உருகொண்டது கடவுள் இல்லை – யாரும்
  உருகொடுப்பது கடவுள் இல்லை

  ஓராயிரம் கடவுள் இல்லை – இது
  அறியாதவர் சொல் கடவுளே இல்லை

  Rafeeq ul Islam
  http://rafeeqspoem.blogspot.in/2010/02/blog-post.html

   
  Leave a comment

  Posted by on December 26, 2012 in Uncategorized

   

  Tags: ,

  இவன் மானிடன்..!

  idfgfmagesமானிடனாய்ப் பிறந்துவிட்டோம் – நாம்
  மதிகெட்டு இருந்துவிட்டோம்

  ஏட்டிலுள்ளதை படித்துவிட்டோம் – அதையேன்
  படித்தோம் மறந்துவிட்டோம்

  மதசாதியால் பிரிந்துவிட்டோம் – மனம்,
  அதை சகதியால் நிரப்பிவிட்டோம்

  பணத்தை மனதிலே எத்திவிட்டோம் – குணம்,
  அதை குப்பையிலே கொட்டிவிட்டோம்

  கொள்ளாத குற்றங்களை செய்திடுவோம் – பலம்
  இல்லாத எளியவன்மேல் பழிசொல்லிடுவோம்

  தள்ளாத வயது சென்றிடுவோம் – அன்றும்
  இல்லாத பெருமை பேசிடுவோம்

  மானங்கெட்ட ஈனப்பிறவியடா மானுடன் – இவன்
  மாண்டு அழிந்தாலும் மனம் குணம் மாறிடன்
  Rafeeq ul Islam
  Source : http://rafeeqspoem.blogspot.in/2009/11/blog-post_23.html

   

  கவிதைகளும் நானும்

  15747_102183289806853_100000455463856_55302_1348971_nகவிதைகளுக்காக வாழ்க்கையா
  அல்லது
  வாழ்க்கைக்கு
  வணக்கம் செலுத்துவதாய்க்
  கவிதைகளா?

  ஆயுளெனும் பெரும்பாலையில்
  அவ்வப்போது வாழ்க்கை
  கவிதைகளாய்த் துளிர்க்கவே செய்கிறது

  அதன் தித்திப்பு முத்தங்களும்
  திரும்பியோட ஏங்கும் நினைவுகளும்
  விழிகளெங்கும் கவிதைகளாய்ப்
  பொழுதுக்கும் வேர் விரிக்கின்றன

  உணர்வுகளின் உயிர்ச் சிறகுகளை
  ஈரம் உலராமல் எடுத்துப் பதித்துக்கொண்ட
  இதயக் கணங்களாய்க் கவிதைகள்

  மனதைத் தோண்டத் தோண்ட
  சின்னச் சின்னதாய்
  ஞான முட்டைகள் உடைந்து
  கவிதைக் குஞ்சுகள் கீச்சிட்டிருக்கின்றன

 • கவிதைகளைத் தோண்டத் தோண்ட
  சின்னச் சின்னதாய்
  எண்ணப் பொறிகள் சிதறி
  மன முடிச்சுகள் அவிழ்ந்திருக்கின்றன

  தீபத்தைத் தொட்டால்கூட
  சுடாமல் போகலாம்
  தீபம் பற்றிய கவிதையோ
  சத்தியமாய்ச் சுடும்

  புயலைப் புரிகின்ற மொழியில்
  மொழிபெயர்க்கவும் செய்யும்
  அதை வளைத்துப்
  பெட்டிக்குள் இடும் சாமர்த்தியத்தைப்
  பூந்தென்றல் வரிகளில்
  பதுக்கிவைக்கவும் செய்யும்

  கவிஞனின்
  பிரம்மாண்ட எழுச்சி
  கவிதை
  கவிதைகளின் பித்தன்
  கவிஞன்

  கவிதைக்கும் மனத்திற்கும்
  இடைவெளி இல்லை
  ஏனெனில்
  அது என்னுடைய இயல்பு

  கவிதைக்கும் வாழ்க்கைக்கும்
  ஏராளமான இடைவெளி
  ஏனெனில்
  அது வாழ்க்கையின் இயல்பு

  வாழ்க்கையை வளைத்து
  கவிதை ரதம் ஏற்றும்
  தவ முயற்சிகளே
  கவிதைகளாயும்
  நிகழும் வாழ்க்கையாயும்
  என்னோடு

  என்னைப்பற்றி

  anbudanBuhari2004
  வானூறி மழை பொழியும் வயலூறி கதிர் வளையும் தேனூறி பூவசையும் தினம்பாடி வண்டாடும் காலூறி அழகுநதி கவிபாடிக் கரையேறும் பாலூறி நிலங்கூட பசியாறும் உரந்தையில் நான் பிறந்தேன்

  தஞ்சாவூரையும் பட்டுக்கோட்டையையும் இணைத்து ஒரு கோலம் போட்டால் சிரிக்கும் பூசணிப்பூவை நீங்கள் ஒரத்தநாட்டின் கொண்டையில்தான் செருகவேண்டும்.

  தென்னங்கீற்றைப் போல வாரி வகிடெடுத்த தெருக்கள் ஒரத்தநாட்டிற்குப் பேரழகு. உரந்தை என்று சுருக்கமாக அதன் பெயர் கொஞ்சப்படும்.

  என் ஊரைப்பற்றி நான் சொல்லிவிட்டேன் என்னைப்பற்றி என் கவிதைகள் சொல்லட்டும்.- அன்புடன் புகாரி
  நேர்காணல்KavithaikaloduBuhari
  ஒரத்தநாடு
  ஒரு கவிதையின் கதை
  எனக்கு மின்னஞ்சல் அனுப்ப

  செல்பேசி 416-500-0972
  http://anbudanbuhari.blogspot.in/2012/12/blog-post_23.html

   
 • Leave a comment

  Posted by on December 25, 2012 in Uncategorized

   

  Tags: , , ,

  பிறப்பும் இறப்பும் இணைந்த எனக்கு எத்தனை கொண்டாட்டங்கள் !

  ROSEB017பிறப்பும் இறப்பும் இணைந்த எனக்கு எத்தனை கொண்டாட்டங்கள் !
  பிறந்து விட்டேன். நான் பிறந்ததற்காக பல வித மிட்டாய்கள் கொடுத்து மகிழ்ந்தார்கள் பெற்றோர்கள். அவர்கள் இல்லை நான் இருக்கிறேன். அவர்கள் அறிவார்கள் நானும் போய் விடுவேனென்று ஆனால் அந்த சிந்தனை அவர்களுக்கு அப்பொழுது வந்திருக்காது.
  வருடா வருடம் சில ஆண்டுகள் அவர்கள் ஆசைப்பட்டு என் ‘பிறந்த நாள்’ கொண்டாடினார்கள். அதன்பிறகு நான் வளர்ந்தபின் ‘முதிர்சியடைந்தபின்’ என் ‘பிறந்த நாள்’ நானே கொண்டாடுகின்றேன்.

  பின்பு பல கொண்டாட்டங்கள் தொடர்கின்றன. தம ஆண் உறுப்பில் ஒட்டிக்கொண்டுள்ள ஒருதோலை நீக்குவதற்கு( Circumcision is the removal of the foreskin, which is the skin that covers the tip of the penis.( ‘ சுன்னத்’ என்ற பெயரில் கொண்டாட்டம் தேவையா )ஒரு விருந்தோடு கொண்டாட்டம் ,

  என் சகோதரி பூப்பெய்தினால் ஒரு அழைப்பு பத்திரிகை அடித்து ஒரு விருந்து
  பயணம் வந்தால் ,பயணம் போனால் இப்படியே கொண்டாட்டங்கள்… தொடரும் கொண்டாட்டங்கள் …
  இறைவா என்ன செய்வேன்! பணத்திற்கு எங்கு போவேன்!
  உயிர் போனபின் மூன்று , ஏழு ,நாற்பது பின்பு வருடா வருடம் நினைவு நாள் கொண்டாட்டம்.
  மற்றவருக்கு கொண்டாட்டம் எனக்கு அல்லது என் குடும்பத்திற்கு திண்டாட்டம் .

 • “பிறந்த நாள் கொண்டாட்டம்” “காதலர் தினம் ” “ஹேப்பி ஆசீர்வதிக்கப்பட்டவர் பிறந்த நாள்” அல்லது இந்த வகையான மற்ற பிறந்த நாள் கொண்டாட்டங்கள் அனைத்தும் மேற்கு நாடுகளால் திணிக்கப்பட்டவை

  இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
  எவருடைய இறப்புக்காகவும், பிறப்புக்காகவும் சூரிய கிரகணமும் சந்திர கிரகணமும் ஏற்படுவதில்லை. ஆயினும், அவ்விரண்டும் அல்லாஹ்வின் சான்றுகளில் ஒரு சான்றாகும். அவ்விரண்டையும் நீங்கள் காண நேர்ந்தால் (இறைவனைத்) தொழுங்கள்.
  என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

  இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
  சூரியனும், சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரண்டு சான்றுகளாகும். எவருடைய இறப்புக்காகவும் பிறப்புக்காகவும் அவற்றிற்கு கிரகணம் பிடிப்பதில்லை. கிரகணத்தை நீங்கள் காணும்போது அல்லாஹ்வை நினைவு கூருங்கள்.
  என அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

   
 •