சவூதி அரேபியா வெஸ்டர்ன் ஆட்டோ கம்பெனி நடத்திய சமய நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி!

27.05.2018 ஞாயிறு அன்று மாலை சவூதி அரேபியா தம்மாம் மாநகர் ரோஸ் ரெஸ்டாரண்ட் ஆடிட்டோரியத்தில் வெஸ்டர்ன் ஆட்டோ கம்பெனி சார்பில் சமய நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தலைமையேற்று வாழ்த்துரை வழங்கிய வெஸ்டர்ன் ஆட்டோ கம்பெனி சர்வீஸ் பொது மேலாளர் திரு என்னும் திருஞான சம்பந்தம் அவர்கள் முஸ்லிம்களின் நோன்பு என்பது ஈகையை உணர்த்தும் ஒரு அரிய நிகழ்வாகும் என குறிப்பிட்டார்.

அசோக் லேலண்ட் கம்பெனியின் துபாய் டிவிஷன் துணை பொது மேலாளர் உமா சங்கர் தனது கருத்துரையில் தாம் ஒரு வாகன விபத்தில் சிக்கி கொண்ட போது பலரது வேடிக்கைக்கு முன்னால் ஒரு இஸ்லாமிய நண்பர் ஓடி வந்து என்னை மீட்டெடுத்து மருத்துவமனையில் சேர்த்து எனது பெற்றோர் வரும் வரை அருகில் இருந்து கவனித்தார். Continue reading “சவூதி அரேபியா வெஸ்டர்ன் ஆட்டோ கம்பெனி நடத்திய சமய நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி!”

“நல்லவனா மட்டும் இருந்தா பத்தாது ,வல்லவனாவும் இருக்கணும்”

நிஷா மன்சூர்
இன்று காலையில் குளித்துக் கொண்டிருந்த போது ஒரு அழைப்பு வந்திருந்தது. பொதுவாக புதிய எண்களிடமிருந்து அழைப்பு வந்தால் நான் எடுப்பதில்லை. திரும்பத்திரும்ப வந்தாலோ அல்லது ஏதாவது அழைப்பை எதிர்பார்த்திருந்தாலோ மட்டுமே எடுப்பது வழக்கம். கிளம்பி வண்டியில் அமர்ந்ததும் ஏதோ சிந்தனையில் அந்த எண்ணைத் திரும்ப அழைத்தேன்.எதிர்முனையிலிருந்து வந்த “அஸ்ஸலாமு அலைக்கும்” என்ற முகமனுக்கு பதில் அளித்தபின் அவர் தனது பெயரைக் கூறினார். எனக்கு நினைவில்லையாதலால் “எந்த பாபு.?” என்று கேட்க,
அவர் பதிலுக்கு
“எங்களை எல்லாம் நீங்கள் நினைவுல வெச்சிருக்க மாட்டீயன்னு தெரியும் சார். நான் போன வருசம் உங்ககிட்ட வேலை பாத்து, வேலைக்கு லாயக்கில்லாத ஆளுன்னு நீங்க வெரட்டி விட்ட அதே பாபுதான் பேசறேன். தற்செயலா உங்க நம்பரைப் பாத்தேன்,அதான் ரமலான் முபாரக் சொல்லலாம்னு போன் பண்ணேன்” என்றார்.

“ஓ,நீங்களா பாபு…. நல்லாருக்கீங்களா ரமலான் முபாரக்.
நல்லது.நீங்க நல்லா இருக்கீங்கள்ள” என்றதுக்கு Continue reading ““நல்லவனா மட்டும் இருந்தா பத்தாது ,வல்லவனாவும் இருக்கணும்””

அன்பும் நம்பிக்கையும் கடப்பதும் கூட பயம் தரும்…!

முல்லா நஸ்ருதீன்…! இந்த பெயர் என்னைப்போன்ற கதை பிரியர்கள் அனைவருக்கும் மிகவும் பரீட்சையமான பெயர் என்பதோடு மிகமிக விருப்பமான பெயரும் கூட!

அந்த முல்லா நஸ்ருதீன் ஒருநாள் தன் திருமணம் முடிந்த நிலையில் ஒரு மாலை வேளையில் தன் புது மனைவியுடனும் குடும்பத்தினருடனும் தனது ஊருக்கு படகு சவாரி செய்கிறார்!

படகு சிறிது தூரம் சென்ற நிலையில் கடும் காற்று…! படகு காற்றின் வேகத்தால் நிலை தடுமாற பயணம் செய்த அனைவரின் மனதிலும் பெரும் பயம் கவ்விப்பிடிக்கிறது! முல்லா ஒருவரைத்தவிர! Continue reading “அன்பும் நம்பிக்கையும் கடப்பதும் கூட பயம் தரும்…!”

 

நான் நகைச்சுவையை எப்போதுமே தேடி அலைந்ததில்லை. என்னைச் சுற்றி நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வும் நகைச்சுவையாகவே எனக்கு தென்படுகிறது. மனதுக்குள் எப்போதுமே சிரித்துக் கொண்டிருப்பது ஒரு உற்சாகத்தை தரும் என்பதென்னவோ நிஜம்.

பஹ்ரைனில் நான் எதிர்கொண்ட நகைச்சுவைக்கு பஞ்சமேயில்லை.

இந்தியாவிலிருந்து வந்த ஒரு நண்பரை அழைத்துக் கொண்டு காரில் சென்றேன். பெட்ரோல் பங்கில் 5 தீனார் நோட்டை நீட்டி “மும்தாஜ்” என்றேன்.
“யாருங்க அந்த மும்தாஜ்? ” என்றார் நண்பர்.
“உயர் ரக பெட்ரோலுக்கு பேரு மும்தாஜ்; அதோ இன்னொன்று தெரிகிறதே அது குறைந்த ரகம்” என்றேன்.
“அப்ப அதுக்குப்பேரு ஷகிலாவா?” என்றார்.
எனக்குள் எழுந்த சிரிப்பை அடக்க வெகு நேரம் பிடித்தது. Continue reading “”

வரலாற்றுச் சிறப்புமிக்க ஹார்வார்ட் தமிழ் இருக்கை கனவு நிறைவேறியது ..

 

unnamedவலைத்தமிழ் செய்தி மடல்
ஹார்வார்டில் தமிழ் இருக்கை அமைக்கும் மிகப்பெரிய சாதனை நிகழ்வு, உலகத் தமிழர்களின் முழுமையான ஒத்துழைப்புடன் மே, 2018-ல் நிறைவேறியது. ஹார்வார்ட் பல்கலைக்கழகக் குழுவுடன் இறுதிப் பேச்சுவார்த்தை நடத்தி, மீதம் கொடுக்கவேண்டிய தொகையை கையளித்து திரும்பிய ஹார்வார்ட் தமிழ் இருக்கை செயற்குழுவின் சார்பாக முனைவர் சொர்ணம் சங்கர் இந்த தகவலை தெரிவித்தார். Continue reading “வரலாற்றுச் சிறப்புமிக்க ஹார்வார்ட் தமிழ் இருக்கை கனவு நிறைவேறியது ..”

இன்பம் நிலைக்கும் இன்’ஷா அல்லாஹ்.

 

 

வெய்யிற் காலம் வந்து போகும்
வேடந் தாங்கல் பறவைக் கூட்டம்
மெய்யின் மாதம் மலர்ந்த பின்னர்
வேடந் தாங்கும் பக்தர் கூட்டம்

உதயம் தொடங்கி அந்தி வரைக்கும்
உணவும் நீரும் வேண்டா(து) ஒதுக்கல்
இதயம் கொள்ளும் இறைமை நினைவை
இருந்தும் நாவில் ஏனோ பொய்கள்?

நோன்பில் வந்த ஞான வேதம்
நன்றாய் ஓத நன்மை கற்போம்
நோன்பில் மட்டும் ஓதி விட்டு
மூடி வைத்தல் யாரின் குற்றம்? Continue reading “இன்பம் நிலைக்கும் இன்’ஷா அல்லாஹ்.”

அந்த நாள் அமைச்சர்

 

அந்த நாள் அமைச்சர்

88 – களின் துவக்கத்தில்
என்று நினைக்கிறேன்
தமிழகத்தில் அரசு
கலைக்கப்பட்டு
கவர்னர் ஆட்சி
பிரகடனம் ஆன நேரம்.

எனது நண்பர்
முனீர் ஹோடா IAS
அப்போது ஆளுநரின்
ஆலோசகராக இருந்தார்.
அவரது அறையில் அமர்ந்து
நாங்கள் பேசிக் கொண்டிருந்த
நேரம், ஒரு வயதான பெண்மணி
அவரை காண வெளியே
காத்திருந்தார்.
வயதான பெண்மணி என்பதால்
அவரை உடனே உள்ளே வர
அநுமதிக்குமாறு தன் பிஏ விடம்
உத்தரவிட்டார் அவர்.
வந்தவர் யார் என்பதை
உடனே புரிந்து கொண்ட
அவர், என்னை காசுவலாக
அந்த பெண்மணிக்கு அறிமுகம்
செய்து வைத்தார் Continue reading “அந்த நாள் அமைச்சர்”

கவிதையே தெரியுமா ?

கவிதைக்குள் மெல்லிய
ஓசையெனும் உயிர்
வேண்டும்

 

உள்ளும் புறமும்
அர்த்தங்கள் பல்லாயிரம்
புதைந்திருக்க
வேண்டும்

கற்பனை யானாலும்
சொற்க்களை
வாசிப்போர்க்கு
நேசிப்பு வர
வேண்டும்

கவிதைச்சொல்
பூச்சுக்களில்லா
புரிந்திடும் சொல்கொண்டு
புனைத்து
செவி திறந்து
மெய்மறக்கச்
செய்திட வேண்டும் Continue reading “கவிதையே தெரியுமா ?”

“அப்பா நா ஒரு கேள்வி கேட்கவா”

மகன் : “அப்பா நா ஒரு கேள்வி கேட்கவா.?”

தந்தை : “கண்டிப்பா.. என்ன கேளு..?”

மகன் : “நீங்க ஒரு மணி நேரத்திற்கு எவ்வளவு சம்பாரிப்பீங்க..?

தந்தை : “அது உனக்கு தேவை இல்லாத விஷயம் … நீ எதுக்கு இது எல்லாம் கேக்குறே..?

மகன் : “சும்மா தெரிஞ்சிக்கத்தான்… சொல்லுப்பா .”

தந்தை : “உனக்கு தெரிஞ்சே ஆகணும்னா சொல்றேன் … மணிக்கு 100 ரூபாய் சம்பாரிப்பேன்.”

மகன் : “ஓ..!! (தலைகுனிந்தவாறே) .. அப்பா நா அதுல 50 ருபாய் எடுத்துக்கவா?”

(தந்தைக்கு கோபம் வந்தது …) Continue reading ““அப்பா நா ஒரு கேள்வி கேட்கவா””

தக்கலை ஹலீமாவின் மக்களு:

தக்கலை அஞ்சுவன்னம் முஸ்லிம்களின் வாழ்வியல் பதிவு என்னும் நூலை அண்மையில் படித்தேன். இனப் பண்பாட்டு வரைவியல் வகைமையிலான ஒரு கவனம்பெறத்தக்க பதிவு. மனிதர்கள் எப்போதும் தம்மைக் கடந்தகாலங்களோடு தொடர்புகொண்ட ஓரு பிரதேசப்பரப்பில் நங்கூரமிட்டுக் கொள்கிறார்கள். அது அவர்களின் பண்பாட்டு உலகமாக , அடையாளமாக அவர்களுக்கே உரிய தனித்த அடையாளங்களாக அர்த்தப்படுகிறது. அந்த உலகினுள்தான் நவீன வியாபாரக் கலாச்சாரம் முரட்டுத்தனமாக குறுக்கிடுகிறது. பண்பாட்டுச் செழுமைமிக்க ஒரு வாழ்க்கை வியாபாரப் பொருட்களாலான உலகால் அச்சுறுத்தலுக்கு ஆளாகிறது. நினைவுகளில் தங்கியிருக்கும் இடங்கள், நிகழ்வுகள் மற்றும் மனிதர்கள் அவர்களின் பொருளாதாரப் பெறுமதியால் அல்லாமல் குறியீட்டு ஆற்றலால் அழுத்தம் பெறுகிறார்கள். உன்னதமான தொழில்நுட்பம் , உயரிய தகவல் தொடர்பு விரைவான போக்குவரத்து என வெளிப்படையாக முன்னிலைப்படுத்தப்படும் உலகமயமாதல் நமது பொருளாதாரம், இலக்கியம் பண்பாடு , இயற்கை, வாழ்வியல் , குடும்பத்தொடர்பு என்னும் எல்லாத் தளங்களிலும் இன்று ஆளுகை செலுத்த முயல்கிறது. Continue reading “தக்கலை ஹலீமாவின் மக்களு:”