RSS

Monthly Archives: March 2016

ராஜா வாவுபிள்ளை என்கிற சங்கம் அப்துல்காதர்

 

என் பாசத்திற்க்கினிய ராஜா வாவுபிள்ளை என்கிற சங்கம்.அப்துல்காதர்12938195_870740139738983_3371330868096275707_n அவர்களைப் பற்றி சில வரிகள்
நான் அறிந்தவரையில் 1980 ல் உகாண்டாவிற்க்கு வந்தார்..நீங்கள் நினைக்கலாம் எல்லோரும்தான் வெளிநாடு போகிறார்கள் அது போலத்தானே இவரும் என்று
ஆனால் உகாண்டாவில் நடந்த ராணுவ புரட்ச்சியில் நமது ஊரில் உள்ள பலர் தங்களது உடமைகளை எல்லாம் விட்டு சென்ற போது தைரியமாக உகாண்டாவிலேயே தங்கி தனது முதலாளியின் கூடவே இருந்த காரணத்தால் முதலாளியின் குடும்பத்தின் நன்மதிப்பை பெற்று உயர்ந்த சம்பளத்திலும் உயர்ந்த பதவியிலும் இருக்கிறார் அதுமட்டுமா….. Read the rest of this entry »

Advertisements
 
Leave a comment

Posted by on March 31, 2016 in 1

 

காலை உணவைத் தவிர்க்க வேண்டாம்

அறிவியல் கதிர்
காலை உணவைத் தவிர்க்க வேண்டாம்
பேராசிரியர் கே. ராஜு
ஒரு நாளில் நாம் உட்கொள்ளும் உணவில் காலை உணவு மிக முக்கியமானது என்பதை ஏராளமான ஆய்வுகள் எடுத்துக் காட்டிவிட்டன. ஆனாலும் நம்மில் பலர் சரியான காலை உணவை எடுத்துக் கொள்ளத் தவறுகிறோம். இதற்குப் பல காரணங்கள் உண்டு என்பது உண்மைதான். சிலருக்குக் காலையில் பசி எடுப்பதில்லை. பள்ளிக்கோ அலுவலகத்திற்கோ செல்ல வேண்டிய அவசரத்தில் காலை உணவைத் தவிர்ப்போர் பலர். பெண்களில் பலருக்கு காலையில் குழந்தைகளைப் பள்ளிக்குச் செல்லத் தயார்ப்படுத்துவது, சமையலை முடித்து கணவருக்குக் கொடுத்து அனுப்புவது போன்ற வேலைகளில் மூழ்கிவிடுவதால் காலை உணவுக்கு நேரம் ஒதுக்க முடிவதில்லை. காரணங்களை அடுக்குவதை விடுத்து எப்படியாவது காலை உணவை எடுத்துக் கொண்டே ஆகவேண்டும் என்ற தீர்மானத்திற்கு ஒருவர் வந்துவிட்டால் அவருக்கு அது சாத்தியமே. காலை உணவைத் தவற விடுபவர்கள் மதிய நேரத்தில் ஒரு பிடி பிடித்துவிடுவது வழக்கம். அல்லது இடையில் பசியைச் சமாளிக்க கேக், பிஸ்கெட் என ஏதாவதொரு நொறுக்குத் தீனி அல்லது காபி, டீ, குளிர்பானங்களை உட்கொண்டு பசியைச் சமாளிப்பதும் உண்டு. உடல்நலத்திற்கு உதவாத நொறுக்குத் தீனிகளோ பானங்களோ நீடித்த ஆற்றலைத் தர பயன்பட மாட்டா. Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on March 28, 2016 in 1

 

வாருங்கள் நண்பர்களே வாருங்கள்

வாருங்கள் நண்பர்களே
வாருங்கள்
நாங்கள் அதே இடத்தில்தான்
இருக்கிறோம்
நாங்கள் மாறவில்லை
நீங்கள்
மாற விடவில்லை
அவ்வாறே ஆகிப்போனோம் நாங்கள்
உங்களை எதிர்ப்பார்ப்பது
நாங்கள் மட்டுமல்ல
எங்கள் கரங்களும்தான்
ஐந்தாண்டுக் கொருமுறை
நாங்கள் வேண்டும் அந்த
ஐந்தாண்டும் உங்களுக்காகவே
மாற வேண்டும்
ஆடையில்லாதவனிடமும்
நீங்கள் அடிப்பணிவீர்கள்
உங்கள் ஆதாயத்திற்காக வேண்டி
நாளை
ஆடையிழந்தவன்
நாடிவந்தால்
அனுமதி மறுப்பீர்கள் எங்கே
நாங்கள்
ஆதாயம் அடைந்து விடுவோமோமென்று Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on March 24, 2016 in 1

 

அறிவுக் கடலில் சங்கமம்….!

உறக்கம் உறங்காமல்
கனவைப் பிறப்பித்தது

விளைவுகள் அறியாமல்
வியாக்கியானம் வியாபித்தது

உரமெறியே உள்ளத்தில்
உறுத்தல் உறைத்தது

உயர்வுள்ளலாய் உரைக்க
உரத்துச் சொன்னது

ஏட்டறிவும் பட்டறிவும்
போட்டிகள் போடுது

சிகரத்தை தொட்டுவிட
உந்தித் தள்ளுது

பார்த்ததும் படித்ததும்
எண்ணத்தில் ஓடுது Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on March 24, 2016 in 1

 

Intel ‘Out’ Side…. Good Bye Mr. Grove.- Rafeeq Sulaiman

10411795_10154006889491575_3905131098562193638_n

கம்ப்யூட்டர் வாங்கவேண்டும் என்று முடிவு செய்துவிட்டால், உடனே Intel inside இருக்கிறதா என்பதே நம் கேள்வியாக இருக்கும். இல்லையா?
அந்த இன்டெல் சிப் தயாரித்த ஆண்டி க்ரோவ் இன்று காலமானார். அவருக்குவயது 79.
1936 இல் ஹங்கேரியில் பிறந்தார். ஹிட்லரின் நாஸிப்படைகளின் தாக்குதலில் தப்பித்த சில யூத குடும்பங்களில் இவரது குடும்பமும் ஒன்று. இவரின் இளம் வயதில் இரண்டாம் உலகப்போர் நடைபெற்றது. ஹங்கேரியை நாஸிப்படைகள் சூழ்ந்துகொண்டது. பெயரை மாற்றிக்கொண்டு ஆஸ்திரியா வழியாக அமெரிக்காவுக்குத் தப்பித்தது இவரது குடும்பம். அமெரிக்காவிலேயே படித்தார். ஆங்கிலம் கற்றார். பிறகு வேதியியல் பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார். Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on March 22, 2016 in 1

 

உலக கவிதை தினம்: அரங்கேற்ற நேரம் / தாஜ்

1622033_1009456672457409_4514723580586646188_n

பார்வைக்குத் திறக்கப்பட்டது
என் சித்திரக் கூடம்
கருப்பின் பரப்பில்
மையலான சித்திரம்
எக்ஸ்ரே பாணி
நிர்வாண
காட்சிகளைப் பரப்பியிருந்தேன். Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on March 21, 2016 in 1

 

குருவிகளே… எங்கள் ஞானக் குருக்களே…

Abu Haashima

அன்று –
எங்கள் தோள்களில்
ஒரு குழந்தையைப்போல்
ஒட்டி உறவாடி
உறவு கொண்டாடிய உயிரே !
எங்கே போனாய்
இன்று !

இருள் பிரியாத வேளையில்
இமை பிரித்து
உன் இதழ் விரித்து
நீ சிந்தும்
உன் செல்லச் சிணுங்கல்தானே
சூரியனை தட்டி எழுப்பி
நடைபயில வைக்கும் !

ஜன்னல்களில்
நீ வந்து உட்கார்ந்து
இசைக்கும் ராகம் கேட்டு
கண்விழிக்காத
சின்னச் சிட்டுக்கள் உண்டோ ? Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on March 21, 2016 in 1