யாஅல்லாஹ்! எல்லோருக்கும் கொடுக்கும்படி செய். யாரிடமும் வாங்கும்படி செய்துவிடாதே!

(06.03.2018) எனது தந்தை மர்ஹும்.M.அப்பாஸ் அவர்கள் வஃபாத்தாகி 18 ஆண்டுகள் உருண்டோடி விட்டது. அந்நாளை இன்று நினைத்தாலும் கண்களில் கண்ணீர் கசிகிறது. இறைவன் எனக்களித்த மாபெரும் நிஃமத் எனது பெற்றோர்கள்.
ஒரு சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்த எனது தந்தை, தனது கடின உழைப்பினால் தொழிலில் மேன்மை கண்டவர். நேர்மையை எங்களுக்கு வார்த்தையாய் சொல்லித் தரவில்லை. மாறாக வாழ்க்கையாய் வாழ்ந்து காண்பித்தார்கள். தொழிலா? குடும்பமா? என்று கேட்டால் என் தந்தை கண்டிப்பாக தொழில்தான் என்று சொல்வார்கள். அந்தளவிற்கு தொழிலின் மேல் மரியாதை கொண்டவர். Continue reading “யாஅல்லாஹ்! எல்லோருக்கும் கொடுக்கும்படி செய். யாரிடமும் வாங்கும்படி செய்துவிடாதே!”

இலக்கணம் மாறுதோ?

தென்னகமாம் இன்பத் திருநாட்டில் மேவியதோர் கன்னடத்துக் குடகுமலை கனிவயிற்றில் கருவாகி
தலைக்காவிரி என்னும் தாதியிடம் உருவாகி
வண்ணம் பாடியொரு வளர்த்தென்றல் தாலாட்ட
கண்ணம்பாடி அணைகடந்து நலம் பாடி
ஏர்வீழ்ச்சி காணாமல் இருக்க
சிவசமுத்திர நீர்வீழ்ச்சி எனும் பேரில்
நீண்ட வரலாறாய்…

வீடு தாண்டா கற்பு விளங்கும்
தமிழ் மகள் போல்
ஆடுதாண்டும் காவிரியாய் அடங்கி நடந்து
அகண்ட காவிரியாய் பின் தவழ்ந்து… Continue reading “இலக்கணம் மாறுதோ?”

இருமல் மருந்துகள் குழந்தைகளின் உடல் நலத்திற்கு தீங்கானது!

இருமல் மருந்துகள் குழந்தைகளின் உடல் நலத்திற்கு தீங்கானது என்று குழந்தைகள் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மூத்த குழந்தைகள் மருத்துவ நிபுணர் டாக்டர் சதீஷ் தேஜ்பூரி கூறுகையில்,” இருமல் உடலில் பருவகால மாற்றங்கள் அல்லது கிருமி தொற்று, ஒவ்வாமை ஆகியவற்றால் வரக்கூடியது. இதற்கு இருமல் மருந்துகள் உட்கொள்வது சரியானதல்ல. இருமல் மருந்துகள் எடுத்துக் கொள்வதால் இதயத்துடிப்பு அதிகரித்தல் உள்ளிட்ட அசவுகரியங்கள் வர வாய்ப்புள்ளது. மேலும் இதனை சிலர் உட்கொள்வதால் தொடர்ந்து உட்கொள்ள வேண்டிய அளவுக்கு அடிமையாகவும் வாய்ப்புள்ளது.” என்றார். Continue reading “இருமல் மருந்துகள் குழந்தைகளின் உடல் நலத்திற்கு தீங்கானது!”

கீழடி அகழ்வாராய்ச்சி குறித்த அதிர்ச்சி தரும் தகவல்கள் – எழுத்தாளர் முத்துகிருஷ்ணன் தகவல்

0c50137e0495f901f9427996e8d51b4b_XLதுபை (25 மார்ச் 2018) ஐக்கிய அரபு அமீரகம் கலை இலக்கிய ஆர்வலர்கள் சார்பாக நடத்திய “கீழடி எனும் தமிழ் நிலம்” என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த எழுத்தாளர் அ. முத்துக்கிருஷ்ணன், இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில், தமிழர்கள் குடும்பத்துடன் திரளாக வந்து கலந்து கொண்டனர்.

தொல்லியல் ஆராய்ச்சி என்றால் என்ன, அகழ்வாராய்ச்சியின் முக்கியத்துவம் ஒரு நாகரீகத்தின் தொன்மையினை நிச்சயிக்கும் அடிப்படைகள் குறித்த சிறு முன் குறிப்புடன் ஆரம்பித்த முத்து கிருஷ்ணனின் சிறப்புரையில் பேசப்பட்ட முக்கிய செய்திகள் : Continue reading “கீழடி அகழ்வாராய்ச்சி குறித்த அதிர்ச்சி தரும் தகவல்கள் – எழுத்தாளர் முத்துகிருஷ்ணன் தகவல்”

தமிழ் மற்றும் ஆங்கில இஸ்லாமிய பாடல்கள் பதிவிறக்கம் செய்துக் கேளுங்கள்

6Keralak Karaiyoram Valum.mp3     6Allahoo Allahoo.mp3 6Ajmeerin Raja Anmeega.mp3     5Vallal Nabiye Varaathathen.mp3   5Vaanoog…

Source: தமிழ் மற்றும் ஆங்கில இஸ்லாமிய பாடல்கள் பதிவிறக்கம் செய்துக் கேளுங்கள்

சுஜாதாவை பற்றிய நினைவுகள்

 

sujathaசுஜாதாவை பற்றிய நினைவுகள்
அம்பலம் இணைய இதழில் சுஜாதா எழுதிய நறுக் சுருக் கேள்வி பதில்கள்்.

கேள்வி: சுஜாதா சார்! கம்ப்யூட்டர் கம்ப்யூட்டர் என்று பேசுகிறீர்களே… கொஞ்சம் சாப்பாட்டைப் பற்றிப் பேசலாமே. உங்கள் கணிப்பொறி நிறுவனத்தில் கேன்டீன் எப்படி? –

பதில்: கணிப்பொறி, கேன்டீன் இரண்டிற்கும் அடிக்கடி ஒரே பிரச்சினைதான் : ‘‘சர்வர் ப்ராப்ளம்’’.

கேள்வி: திருமணத்திற்கும் மரபுக் கவிதைக்கும் என்ன சார் தொடர்பு?

பதில்: இரண்டிலும் சீர் உண்டு. திருமணமும் ஒரு ‘தளை’தானே? இரண்டும் வளமடையத் தேவை ‘பொருள்’தான். இரண்டிலும் வெற்றி பெற நன்கு யோசித்து ‘அடி’யெடுத்து வைக்க வேண்டும். இரண்டிலும் இலக்கணப் பிழைகள் இருக்கக் கூடும். மணம் புரிந்து கொண்ட மனைவி ‘வஞ்சிப்பா’ளானால் வாழ்க்கை ‘வருத்தப்பா’ ஆகிவிடும். Continue reading “சுஜாதாவை பற்றிய நினைவுகள்”

டென்ஷன் பிரச்சனை

029டென்ஷன் பிரச்சனைக்கு வழிசொல்கிறார் பிசியோதெரபி டாக்டர் கார்த்திகேயன்.

பலரையும் பாடாய்படுத்தி வரும்டென்ஷன் பிரச்சனைக்கு வழிசொல்கிறார் பிசியோதெரபிடாக்டர் கார்த்திகேயன்.வாழ்க்கையை எளிமையானஎதிர்பார்ப்புகளுடன் நடத்தவேண்டும். சின்னச் சின்னசந்தோஷங்களையும்கொண்டாடுவது போன்ற பழக்கங்களை சிறு வயது முதல்வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் முதலில் டென்ஷன்ஆகிற ஆளா என்று உங்களையே கேட்டுப்பாருங்கள்.ஆம் என்றுபதில் வந்தால் எந்தெந்த காரணங்களுக்காக டென்ஷன் வருகிறதுஎன்று பட்டியலிடுங்கள். அவற்றை ஒவ்வொன்றாக மூளையில்இருந்துஒழித்துக் கட்டுங்கள். அப்போது எந்த கனமும் இன்றி மனம்லேசாக இருக்கும். Continue reading “டென்ஷன் பிரச்சனை”

பழங்கள் ஒரு முக்கியமான உணவு;

 

african-fruitsபழங்கள் சாப்பிடும் முறை;;

எல்லோரும் நினைப்பது பழங்கள் சாப்பிடுவது என்றால்,அவற்றை விலைக்கு வாங்கி, வெட்டி, வாயிலிட்டு சாப்பிடுதல் என்று.

நீங்கள் நினைப்பது போல் எளிதானதல்ல அது. பழங்களை ‘எப்படி’ அதுவும் ‘*எப்போது’* சாப்பிடவேண்டும் என்பது மிகவும் முக்கியம்.

பழங்களைச் சாப்பிடும் சரியான முறை என்ன?

பழங்களைச் சாப்பிடுவதென்றால், சாப்பிட்ட பிறகு பழங்களை எடுத்துக் கொள்வது அல்ல!!

பழங்களை வெறும் வயிற்றிலேயே சாப்பிட வேண்டும்!! Continue reading “பழங்கள் ஒரு முக்கியமான உணவு;”

விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாகிங் ’சக்கர நாற்காலியில் சிக்கிய பிரபஞ்சம்’

விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாகிங் லண்டனில் காலமானார் என்ற செய்தி கிடைத்தது.

ஐன்ஸ்டீனுக்குப் பிறகு அவரளவுக்கு பிரபலமான, வியக்க வைக்கும் மேதை அவர். அவர் எழுதிய A Brief History of Time என்ற நூல் எனக்கே பெருமளவு புரிந்தது என்றால் அவர் மேதைதானே!
அவர் ஒரு விஞ்ஞானியாக இயங்கியதே ஓர் அற்புதம் என்று சொல்லவேண்டும். அவரால் உடலை அசைக்க முடியாது. மூச்சு விடுவதுகூட ரொம்ப சிரமப்பட்டுத்தான். அவர் நினைப்பதை, கண்ணின் ஓட்டத்தை வைத்து வார்த்தைகளாக திரையில் தோன்றுமொரு மெஷினை வடிவமைத்து அவரது சக்கர நாற்காலியில் பொருத்தியிருப்பார்கள்!

ஒரு விஞ்ஞானியாக இருப்பதற்கு உடல் ஊனம் ஒரு தடையே அல்ல என்பதை நிரூபித்தவர் அவர்.

அவரால் கவரப்பட்ட நான் அவரது சுவாரஸ்யமான வாழ்க்கை வரலாற்றை ஒரு நூலாக எழுதினேன்.

29196371_10211095154560809_3793316112259612672_nசக்கர நாற்காலியில் சிக்கிய பிரபஞ்சம்’

என்ற அந்த நூலை சிக்ஸ்த் சென்ஸ் அழகாக வெளியிட்டது.

Nagore Rumi
Yesterday at 10:14am

டே சீரோ(Day zero)என்றால்?

Mohamed Rafee நாகூர் ரூமி:
டே சீரோ(Day zero)என்றால்?

கடைசி சொட்டு குடிநீரை ஏப்ரல் 12ம் தேதி பருகவுள்ள கேப்டவுன் நகரம்!
தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரம் விரைவில் ‘டே சீரோ’ என்ற நிலையை எட்டவிருக்கிறது.

‘டே சீரோ’ என்றால் என்னவென்று யோசிக்கின்றீர்களா? உலகிலேயே முதன்முறையாக ஒரு பெரு நகரம் சொட்டுத் தண்ணீர் கூட இல்லாமல், முற்றிலுமாக தண்ணீரில்லா நிலைக்குப் போகப்போகிறது. இதைத் தான் ஆங்கிலத்தில் “டே சீரோ” (Day Zero) என்று சொல்கிறார்கள். வரும் ஏப்ரல் மாதம் 12-ம் தேதி, கேப்டவுன் நகரம் இந்த நாளை எட்டுகிறது.

சமூக தளங்களில் அவ்வப்போது பரவும் சில தகவல்களை போன்றதொரு நிலை உண்மையில் உருவாகப் போகிறது நம் கண் முன்னே. அதுவும், சொட்டுத் தண்ணீர் கூட இல்லாமல் போகும் நாளை துல்லியமாக அறிவிக்கப்பட்டு, அதை பதைபதைப்புடன் எதிர்நோக்கியுள்ளனர் கேப்டவுன் மக்கள். Continue reading “டே சீரோ(Day zero)என்றால்?”