Nagore Rumi on Fear Segment 6

This is the final segment on Fear by Nagore Rumi. It gives you practical solutions to conquer fear. அச்சம் பற்றிய நாகூர் ரூமியின் 6வது காணொலி இது. இத்துடன் அச்சம் பற்றிய விளக்கங்கள் முடிகின்றன. பயத்தை வெல்வது எப்படி என்று இவை விளக்குகின்றன.

மிழ்முஸ்லிம் தொப்பி குல்லா முண்டாசு தலைப்பாகை தலைத்துணி ஒட்டகக்கயிறு

கவிஞர் புகாரி கனடா

முதலில் மனிதர்கள் ஏன் தொப்பி அணிகிறார்கள் என்று பார்க்கலாம்.

தலையை நேரடிச் சூரியத் தாக்குதலில் இருந்து காக்காவிட்டால், அப்படியே மயங்கிவிழ நேரிடும், பைத்தியம் பிடிக்கவும் வாய்ப்புண்டு, ஏன் சாவுகூட நிகழக்கூடும்.

ஆனால், இந்தத் தேவை கருதிய காரணத்தைத் தாண்டி, மக்கள் தொப்பியை வேறு பல காரணங்களுக்காகவும் அணிகிறார்கள்.

தன்னை அழகு படுத்திக் கொள்ள வேண்டும் என்று சிலர் அணிகிறார்கள்.

எம்ஜிஆர் மண்ணடியில் திமுக பிரச்சார கூட்டத்தில் பங்கேற்றபோது ஒரு முஸ்லிம் அன்பரால் ஒரு தொப்பி ஒன்று அவருக்கு அணிவிக்கப்பட்டது. அன்று அதை அவர் கழற்றவே இல்லை.


அது அவருக்கு நன்றாக இருக்கவே அதுபோன்ற ஒரு வெள்ளைத் தொப்பியை பிறகெல்லாம் அவர் நிர்ந்தரமாகவே அணிய ஆரம்பித்தார்

அவரின் குறைவான முடி அல்லது வழுக்கைப் பகுதி வெகு அழகாக மறைக்கப்பட்டது. கூடவே அவருக்கென்று ஒரு தனித்த அடையாளமும் வந்தது. எம்ஜிஆர் தொப்பி என்று அந்தத் தொப்பிக்கொரு பெயரும் வந்தது.

பெருநகரங்களில் பெண்களும் தங்களை அழுகுபடுத்திக் கொள்ள வண்ண வண்ணமாக அழகிய வடிவங்களில் தொப்பி அணிகிறார்கள்.

முடிசூடும் ராஜவம்சங்கள் அழிந்துபோய்விட்டாலும், அப்படி ஒரு கௌரவம் தரும் என்ற நினைப்பில் சிலர் தொப்பி அணிகிறார்கள், முடிசூடிக் கொள்வதைப் போல.

சிலருக்கு இது ஒரு சமூக அல்லது தங்கள் கொள்கைகளின் அடையாள அங்கீகாரமாக இருக்கிறது. நேத்தாஜி, நேரு போன்றவர்களை இந்த வகையில் சேர்க்கலாம்.

மதம் சார்ந்த அடையாளமாக சிலர் அணிகிறார்கள். முஸ்லிம்கள், சர்தார்ஜிகள், போப்புகள் போன்றவர்களை இந்த வகையில் சேர்த்துக்கொள்ளலாம்.

ராணுவத்தில் தேசப்பற்றின் அடையாளமாக, சீருடையின் அங்கமாகத் தொப்பி அணிகிறார்கள்.

போர்க்களத்தில் இரும்புத் தொப்பிகளைப் பாதுகாப்பிற்காக அணிகிறார்.

அதேபோல மோட்டார் பைக் ஓட்டுபவர்கள் தலையில் இட்டுக்கொள்ளும் தலைக்கவசத்தையும் தொப்பி கணக்கில் சேர்த்துக்கொள்ளலாம்.

அப்புறம் இந்த சுதந்திரப் போராட்டக்காரர்கள் அவர்களுக்கான ஓர் அடையாளமாக அணிந்தார்கள். இன்றும் அதை ஒரு தியாகத்தின் அடையாளமாக வீரத்தின் அடையாளமாக ஆக்கி அரசியல்வாதிகள் சிலர் அணிகிறார்கள்.

கூர்க்காக்கள், சமூக சேவகர்கள் போன்று பல சிறப்புப்பணி செய்பவர்களும் தங்களின் சீருடையாக தொப்பி அணிகிறார்கள்.

இவைதவிர, தலைப்பாகை என்பதையும் நாம் தொப்பி என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு தொப்பியை உருவாக்கத் தெரியாத அந்தக் காலத்தில் தோளில் உள்ள துண்டையே தலையில் கட்டித் தொப்பியாக்கினார்கள் தமிழர்கள்.

வெயிலுக்காகவும், குனிந்து வேலை செய்யும்போது மேல்துண்டைத் தலையில் கட்டிக்கொண்டு கைகளை விடுவித்துக்கொள்ளும் வசதிக்காகவும் இந்தத் தலைப்பாகை பிறந்தது.

பின் தலைப்பாகை கட்டுவது என்பது, உயர்ந்தவர் என்ற அடையாளமாகவும் பாரம்பரிய வழக்கமாகவும் சில சாதிகளின் அடையாளமாகவும் ஆகிவிட்டது.

போலீஸ்காரர் தொப்பி அணிந்து தங்களை அடையாளப் படுத்திக்கொள்வார்கள். பதிவிக்கு ஏற்ப தொப்பிகள் மாறும்.

இப்படியே தொப்பிகளைப் பற்றி ஆராயப்போனால், ஏகப்பட்ட விசயங்கள் வந்துகொண்டே இருக்கும்.

தொப்பிகளில் எத்தனை வகை தொப்பி என்று கணக்கெடுக்கத் தொடங்கினாலும் அது சீக்கிரத்தில் முடிவதாய் இருக்காது.

இனி தமிழ்முஸ்லிமும் தொப்பியும் பற்றிக் காண்போம்.

தமிழ்முஸ்லிம்கள் மத அடையாளமாகவே தொப்பி அணியத் தொடங்கினார்கள்.

ஓர் ஐம்பதாண்டுகளுக்கு முன்பெல்லாம், ஒரு தமிழ்முஸ்லிமின் சட்டைப் பையில் எப்போதும் ஒரு தொப்பி இருக்கும். வேறு சிலருக்கு அது எப்போதும் தலையிலேயே இருக்கும்.

தொப்பி இல்லாமல் இருப்பது ஏதோ பெருங்குறைபாட்டுடன் இருப்பதாகவே சிலரால் கருதப்படும்.

ஹஜ் முடித்து வருபவர்கள், சொந்தங்கள் நட்புகள் அனைவருக்கும் தொப்பிகளை வாங்கிக்கொண்டுதான் தமிழ்முஸ்லிம்கள் வருவார்கள்.

திருமணங்கள் மாப்பிள்ளையின் தலையில் தொப்பி வைக்காமல் நடப்பதில்லை.

தொப்பிதான் தமிழ்முஸ்லிம்களின் ஒரே அடையாளம் என்ற நினைப்பில், நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு வரும் அரசியல்காரர்களும் தொப்பியோடு வருகிறார்கள்.

தொப்பி இல்லாமல் பள்ளிவாசலுக்குள் பிரவேசிக்கக் கூடாது என்று வெளியே எச்சரிக்கைப் பலகையும் சில பள்ளிவாசல்களில் வைத்திருக்கிறார்கள்.

கைவசம் தொப்பி இல்லாதவர்கள், கைக்குட்டைகளைத் தலையில் கட்டிக்கொண்டுதான் துஆ செய்வார்கள், தொழுவார்கள், பள்ளிவாசலுக்குள் நுழைவார்கள்.

இப்படியாய், இன்னும் பலவாய், தமிழ்முஸ்லிம்களின் மிகமுக்கியமான இஸ்லாமிய அடையாளம் தொப்பிதான் என்றானது.

உலகில் பலவகைத் தொப்பிகள் இருந்தாலும் தமிழ்முஸ்லிம்கள் தங்களின் மத அடையாளமாக இட்டுக்கொள்ளும் தொப்பிகள் தனித்த வடிவங்கள் கொண்டவை.

அதேபோல உலகில் ஆணும் பெண்ணும் சேர்ந்தே தொப்பி அணிந்தாலும், தமிழ்முஸ்லிம்களுள் ஆண்கள் மட்டுமே தொப்பி அணிவார்கள். பெண்கள் முக்காடுதான் இட்டுக்கொள்வார்கள், தொப்பி அணியமாட்டார்கள்.

தமிழ் முஸ்லிம்களின் தொப்பிகள் அன்றெல்லாம் வெல்வெட்டுத் துணியில் வெகு அழகாக இருக்கும். ஒரு கப்பலை கவிழ்த்துத் தலையில் வைத்துக்கொண்டதுபோன்ற வடிவில் கவர்ச்சியாக இருக்கும்.

கறுப்பு நிறத்திலும் அடர் நீல நிறத்திலும் உள்ள தொப்பிகள் சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து இறக்குமதியாகிக்கொண்டே இருக்கும்.

துருக்கித் தொப்பி என்று ஒருவகை தொப்பி உண்டு. அது வட்டவடிவில், நீண்டு, குஞ்சம் கட்டப்பட்டு இருக்கும். அதைத்தான் திருமிகு காயிதே மில்லத் அணிந்திருப்பார். பாக்தாத் திருடன் படத்தில் எம்ஜிஆர் அணிந்திருப்பார்.

இன்றேல்லாம் பெரும்பாலும் வெண்நிறத்தில் பருத்தித் துணியால் நெய்யப்பட்ட தொப்பிகளைத்தான் தமிழ்முஸ்லிம்கள் தலையில் இடுகிறார்கள்.

முஸ்லிம்கள் அனைவரும் தொப்பி வைக்க வேண்டும் என்று இஸ்லாம் கட்டளை இட்டிருக்கிறதா? குர்-ஆனில் அது தொடர்பாக ஏதேனும் குறிப்புகள் உண்டா?

அராபியர்கள், தேவை கருதியே தொப்பி அணிந்தார்கள்.

பாலைவனத்தில் இரண்டு பெரும் தொல்லைகள் உண்டு.

ஒன்று, சூரியன் தலைக்கு மேல் ஏறி நடு உச்சியில் உட்கார்ந்துகொண்டு கடப்பாறை, சுத்தியல்களால் மண்டையைப் பிளக்கும்.

அடுத்தது, அங்கே வீசும் கொடு மணற் புயல் காற்று.

இந்த இரண்டையுமே தாங்க முடியாது.

சூரியன் சுட்டெரிக்கும் என்றால் இந்த மணற்புயல் கடுமையான மூச்சுத் திணறலில் கொண்டுபோய் விட்டுவிடும்.

கண்களிலும் காதுகளிலும் வாயிலும் மண்ணள்ளிக் கொட்டிக்கொண்டே இருந்தால் எப்படித் தாங்கிக்கொள்வது?

இந்த இரண்டிலிருந்தும் தப்பிக்க, அராபியர்கள் ஒரு தொப்பியும் ஒரு மேல்துண்டும் வைத்திருப்பார்கள். கூடவே ஒட்டகங்களைக் கட்டுவதற்கான, அல்லது மேய்ப்பதற்கான ஒரு கயிறும் வைத்திருப்பார்கள்.

இந்த தொப்பி துண்டு கயிறு ஆகிய மூன்றையும் தலையில் வசதியாகக் கட்டிக்கொள்வார்கள். இதனால் சூரியனையும் மணல் புயலையும் அவர்களால் சமாளிக்க முடிந்தது.

இதையே சில முஸ்லிம்கள் கண்மூடித்தனமாகப் பிடித்துக்கொண்டு, பாலைவனம் இல்லாத சோலைவனத்தில் வாழும்போதும் இஸ்லாத்தில் கட்டாயம் தொப்பி அணியவேண்டும் இல்லாவிட்டால் நாம் முஸ்லிம் இல்லை என்று மூட நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.

அராபியர்கள், மணல் புயல் வீசும்போது, தலைத்துணியைச் சுற்றிச் சுற்றிக் கட்டி கண்கள் மட்டுமே தெரியும்படி அமைத்துக்கொள்வார்கள். இதுவே முஸ்லிம் பெண்களுக்கு ஹிஜாப் என்கிற தலைத்துணி ஆனது, முஸ்லிம் ஆண்களுக்குத் தொப்பி ஆனது.

இன்றும், சவுதி அரேபியா போன்ற பாலைவன நாடுகளின் மன்னர்கள், தங்களின் கலாச்சார உடைகளை உடுத்திக்கொண்டுதான் ஏனையோரைச் சந்திக்க, அலுவலகங்களில், அரசவையில் வீற்றிருப்பார்கள்.

முதலில் தலையில் தொப்பி வைப்பார்கள். தொப்பியின் மீது தலைத்துணி இடுவார்கள். பின் தலைத்துணியின் மீது ஒரு ஒட்டகக் கயிற்றைச் சுற்றிக் கட்டுவார்கள்.

கூடவே கறுப்பு நிறத்தில் பர்தா, பூர்கா, அபாயா, துப்பட்டி என்றழைக்கப்படும் மேல் அங்கியும் அணிந்திருப்பார்கள். இதுதான் அராபியர்களின் கலாச்சார உடை.

அது தமிழ்முஸ்லிமின் கலாச்சார ஆடையாக ஆகமுடியுமா?

கவனமாகக் கேளுங்கள், பர்தா அணிந்துகொள்வதும், தலைத்துணி இடுவதும் பெண்களின் ஆடைதானே என்று நினைத்துவிடாதீர்கள், அவை அராபிய ஆண்களின் கலாச்சார ஆடைதான்.

பர்தாவும் தலைத்துணியும் அரபு தேசங்களில் ஆணுக்கும் பெண்ணுக்கும் அன்றெல்லாம் அவசியமானது.

இன்றைய, செயற்கைக் குளிர்க் காற்றுக் காலத்தில் அவையெல்லாம் அவசியமில்லை என்றாலும் பாரம்பரிய உடையை அவர்கள் கௌரமாக அணிந்துகொள்கிறார்கள்.

ஆகவே அராபியர்கள் தங்களின் பாலைவன ஒட்டக வாழ்க்கை காரணமாக அணிந்த தொப்பி, தலைத்துணி, ஒட்டகக் கயிறு, பர்தா ஆகியவற்றை இந்த நவீன காலத்திலும் உலக முஸ்லிம்கள் அனைவரும் அணிவது இஸ்லாத்தின் கட்டளை என்று நினைப்பது அறியாமையினால் மட்டுமே அல்லவா?

முன்பெல்லாம் தமிழ்முஸ்லிம்கள் தொப்பி அணியாமல் பள்ளிவாசலுக்கு வரவே மாட்டார்கள்.

தொப்பி அணியாமல் இறைவனிடம் எதையும் வேண்டிக்கொள்ளவும் மாட்டார்கள்.

தொப்பி அணியாமல் திருமணம் செய்துகொள்ளமாட்டார்கள்.

தொப்பி அணியாமல் தொழ மாட்டார்கள்.

தொப்பி அணியாமல் வெளி ஆட்களைச் சந்திக்க வரமாட்டார்கள்.

ஆனால் இப்போதெல்லாம் அது மாறிவிட்டது.

தொப்பியில்லாத தலைகள் இன்றெல்லாம் தமிழ் நாட்டின் பள்ளிகளில் நிறையவே தொழுதுகொண்டு நிற்கின்றன.

இப்படி சவுதிக்காரர்களைப் பார்த்துப் பார்த்து தங்களின் ஒவ்வொன்றையும் ஏற்பதும் துறப்பதுமாய் இருப்பதே உண்மையான முஸ்லிமின் சிறந்த செயல் என்று நினைக்கும் முஸ்லிம்கள், நிச்சயமாக குர்-ஆனை நிராகரிக்கிறார்கள் என்றே சொல்லவேண்டும்.

ஏனெனில், முஸ்லிம் தொப்பி வைக்க வேண்டும் என்று குர்-ஆனில் சொல்லப்படவே இல்லை. அதுமட்டுமல்ல தொப்பி என்ற சொல்லே குர்-ஆனில் இல்லை.

நல்ல வேளையாக ஒட்டகக் கயிறையும் தலையில் கட்டுவேன் என்று எந்தத் தமிழ்முஸ்லிமும் நிற்கவில்லை.

அரபுக்காரன் ஒட்டகக் கயிற்றைத் தலையில் கட்டினான் என்றால் அவன் ஒட்டகம் மேய்த்தான் என்பதை தமிழ்முஸ்லிம்கள் புரிந்துகொண்டுதான் இருக்கிறார்கள் என்று நம்புவோமாக.

தொப்பி இடுவதும் இடாததும் அந்த நாளின், நேரத்தின் தட்ப வெட்பத்தையும் ஆடை தேவையையும் பொருத்ததேயன்றி அது இஸ்லாத்தின் தேவையே அல்ல என்பதை இன்றைய தமிழ்முஸ்லிம் உணர்ந்தவனாகவே இருக்கிறான் என்ற உண்மை மகிழ்வைத் தருகிறது.

தமிழ்முஸ்லிம்

நான் இன்று காலை jogging( ஜாகிங், மெது ஓட்டம், சீராக ஓடல்) சென்றுக் கொண்டிருந்த பொழுது

நான் இன்று காலை jogging( ஜாகிங், மெது ஓட்டம், சீராக ஓடல்) சென்றுக் கொண்டிருந்த பொழுது எனக்கு முன்னால் 1/2 கிலோ நான் இன்று காலை joggingமீட்டர் சென்று கொண்டிருந்த ஒரு நபரைச் கவனித்தேன்.

அவர் ஓடிக் கொண்டிருந்த வேகத்தைப் பார்த்த பொழுது அவர் சற்று என்னை விட மெதுவாக ஓடுகிறார் என்பதை என்னால் யூகிக்க முடிந்தது.

அது எனக்கு ஒரு நல்ல உணர்வை தந்தது.

நாம் அவரை பிடித்து விடலாம் என எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.

எனவே நான் என்னுடைய வேகத்தை அதிகரித்துக் கொண்டே சென்றேன்.

சிறிது ,சிறிதாக எங்களுக்கு இடையே உள்ள தூரம் குறைந்து கொண்டே வந்தது.

சில நிமிடங்களுக்கு பிறகு ,

எங்களுக்கு 100 அடி இடைவெளி மட்டுமே இருந்தது.

எனவே நான் இன்னும் வேகத்தை கூட்டி அவரைப் பிடித்து விட வேண்டும் என்ற நோக்குடன் வேகத்தை அதிகரித்தேன்.

இறுதியாக, சாதித்து விட்டேன்!

அவரைப் பிடித்து, அவரைக் கடந்தும் விட்டேன்.


எனக்குள் ” அவரைக் கடந்து விட்டேன்”, என மிகவும் நல்ல படியாக உணர்ந்தேன்.

ஆனால் அந்த நபருக்கு ,

நான் அந்த நபருடன் போட்டி போட்டது கூட தெரியவில்லை.

அவரைக் கடந்த பிறகு,
நான் அவரைக் கடப்பதிலே என்னுடைய கவனம் சென்றதால் உணர்ந்து கொண்டவை…..

  1. என்னுடைய இல்லத்திற்கான வளைவில் நான் திரும்பவில்லை.

2.என்னுடைய உள் அமைதிக்கான கவனத்தை நான் இழந்து விட்டேன்.

3.என்னைச் சுற்றி இருக்கும் இயற்கை அழகை ரசிக்க மறந்துவிட்டேன்.

4.தியானத்தை தேடிக் கொண்டிருந்த என் ஆன்மாவை இழந்து விட்டேன்.

5.தேவையற்ற அவசரத்தில், பக்க வாட்டில் இருந்த நடைப் பாதையில் 2,3 முறை கால் இடற நேர்ந்தது. ஏன் கால்கள் கூட உடைந்திருக்கும்.

அப்பொழுது தான் எனக்கு ஞானோதயம் வந்தது. நம் வாழ்க்கையிலும் இதே போலத் தானே?

நம் உடன் பணிபுரிபவர்கள், அருகில் வசிப்பவர்கள், நண்பர்கள், குடும்பத்தாருடன் போட்டியிட்டு அவர்களை விட முன்னேற வேண்டும், அவர்களை விட வெற்றிகரமாக வாழ்ந்து காட்ட வேண்டும் என பேசி நம்முடைய ஆனந்தத்தை நாமே இழந்து கொண்டிருக்கிறோம்.

நம்முடைய நேரத்தையும், ஆற்றலையும் இவ்வாறு ஓடுவதிலேயே தொலைத்து நாம் சேர வேண்டிய உண்மையான இலக்கிற்கான பாதையை தொலைத்துக் கொண்டிருக்கிறோம்.

இந்த ஆரோக்கியமற்ற போட்டியானது ,
ஒரு முடிவில்லாமல் சுழலும் சக்கரம் போல தொடர்ந்து தொல்லை தரும்.

எப்பொழுதும் உங்களுக்கு முன்னால் ஏதோ ஒரு வகையில் யாராவது ஒருவர் முன்னுக்கு சென்று கொண்டிருப்பார்கள்.

உங்களை விட நல்ல வேலை.
நல்ல கார்.
வங்கியில் நிறைய பணம்.
நல்ல படிப்பு.
அழகிய மனைவி.
அழகான கணவன்.
நல்ல குழந்தைகள்.
நல்ல சுற்றுப்புற சூழ்நிலை.
நல்ல நிலை……….

ஆனால் நாம் முக்கியமாக உணர வேண்டியது என்னவென்றால்,

நீங்கள் யாருடனும் போட்டி போடாத பொழுது, நீங்கள் நீங்களாகவே இருக்கும் பொழுது தான் நீங்கள் மிகச் சிறந்தவர் ஆகின்றீர்கள்.

சிலர் தங்கள் கவனத்தை,

அடுத்தவர்கள் எப்படி இருக்கின்றார்கள்,?
எங்கே செல்கின்றார்கள்,?
என்ன அணிகிறார்கள்,?
என்ன வாகனம் ஓட்டுகிறார்கள்,?
என்ன பேசுகிறார்கள்?..
என்பதிலேயே செலுத்துவதால் பாதுகாப்பின்மையை உணருகின்றார்கள்.

உங்களுடைய உயரம், எடை, தோற்றத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் அதை உள்ளது உள்ள படியே ஏற்று நீங்கள் ஆசிர்வாதம் பெற்றவர் என்பதை உணருங்கள்.

கவனத்துடனும், விழிப்புணர்வுடன் ஆரோக்கியமான ஒரு வாழ்வை வாழுங்கள்.

நாம் யாருக்கும் போட்டி இல்லை.
யாரும் நமக்கு போட்டி இல்லை.
அவரவர் வாழ்க்கை அவரவர்க்கு.

ஒப்பீடு செய்தலும், போட்டி மனப்பான்மையும் நம் மன மகிழ்ச்சியை திருடுபவை. அவை உங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சியைக் கொல்ல கூடியது.

மற்றவரைக் கவிழ்க்க எண்ணி நாம் கவிழ்ந்து போவது தெரியாமல் வாழ்க்கையில் நிம்மதியை இழந்துவிடுகிறோம்.

உங்களுடனே நீங்கள் போட்டியிட்டு அமைதியாக, ஆனந்தமாக, ஸ்திரமாக வாழுங்கள்.

‘வாழும் இந்த காலம் வசந்தமாக அமையும்.
வாழ்வு நரகமாவதும் சொர்க்கமாவதும் நம் கையில்’

Shared from Mr. Yacoob
தகவல் தந்தவர் Msa Kareem

எண்ண அலைகள் !

— கவிஞர் சீர்காழி இறையன்பனார்

உருண்டை உலகின்

இருண்ட வாழ்வு

இடுக்கண் கொள்வதா ?

சுரண்டல் இல்லா

சுகவாழ்வு

சோபிக்க வேண்டாமா !

இன்னல்கள் இடுக்கண்கள்

சூதுடன் வாதும் சேர்ந்தார்

சொன்னதைச் செய்திட

முனைந்திட வேண்டுமா ?


கல்லறை சில்லரைக்

காசுக்குக் கண்விழித்தால்

வறுமையை மெய்ப்படுத்தும்

வழியாகும் அல்லவா ?

நதியும் பரியும்

நட்பு கொண்டால்

வரியின் புலியும்

வெறிகொண்டால்

காடு என்னாகும் ?

நாடு என்னாகும் ?

மிஞ்சும் சஞ்சலம்

வஞ்சம் தஞ்சம் கொள்ளாது

அஞ்சும் சுகம் கெஞ்சும்

உலகம் நஞ்சாய் வெறுந்திடுமே !

கற்பூர ஒளி

உலகப் பிரகாசம்

பூத்து மகிழ்ந்திடுமே !

அற்புதம் ஆனந்தம்

அணிவகுத்து நிலவிடுமே !

நாடு முன்னேறச்

சுடரும் ஒளிதீபம்

புகழ் மேவத்

தேடும் நன்மை

கூடும் உயர் யாவும்

நாளும் போற்றிடுமே !

மனம் மெய்வாக்கு

மேன்மையின் போக்கு

தினம் உருவாகித்

தெளிவு தேடும்

கருவாகுமே !

தவநிலை கொண்டு

பவநிலை விரட்டும்

அவலநிலை அகற்றும்

அகத்தூய்மையாகுமே !

ஆலையில் பிழிந்த கரும்பு

ஆரமுதாய் சுவைத்தேனாய்

அழகு நிலவாகுமே !

எண்ண அலைகள்

எட்டாத் தொலையாகும் !

எழுத்தின் எல்லை

ஏற்றத்தின் முல்லையாகும் !

பக்திக்கு முக்தி அமுதம்

பட்டினிக்குக் கூழ் அமுதம் !

புல்லுக்குப் பனியமுதம்

புத்திக்கு அறிவமுதம் !

கவலையைக் கருத்தில் கொண்டு

கண்ணீரைக் கைவசமாக்காதே !

சுமைகள் தாங்கும் சுமை தாங்கி

சுகம் தரும்

புன்னகை முகம் தரும்

பூத்திடச் சுகம் தரும் !

கனியும் கருணை

உணர்வு ஒன்றே

மனித குலத்தில் மலரட்டும் !

மனதில் என்றும் வளரட்டும் !

அழுது தொழுது

பழுதிலா நன்மை பெற்றிடவே

முழுமுதல் பொருளை

அருளைப் போற்றிடுவோமே !


நன்றி : இனிய திசைகள் – பிப்ரவரி 2015

நன்றி :முதுவை ஹிதாயத்