ராமன் மருத்துவமனை

Vavar F Habibullah

நாகர்கோவில் நகரை ‘மருத்துவ நகர்’ என்று
IMA மருத்துவ சங்கம் செல்லமாக அழைப்பதுண்டு.காரணம் சென்னையில் கூட
பார்க்க முடியாத சூப்பர் ஸ்பெசலிஸ்ட்கள்
அந்த நாட்களில் நாகர்கோவிலில் சிகிச்சை அளித்து வந்தனர்.

ஒரு 50 வருடங்களுக்கு முன்னால் லண்டனில் படித்த டாக்டர்களால் நாகர்கோவில் நகரம் நிரம்பி வழிந்தது.

தன் சொந்த மக்களுக்காக பிறந்த ஊரில் மருத்துவப்பணி ஆற்ற வேண்டும் என்ற பொறுப்புணர்வு காரணமாக, வசதி வாய்ந்த ஆடம்பரமான மேநாட்டு வாழ்க்கை வசதிகளை துறந்து விட்டு எளிமையான வாழ்க்கை முறையை தன்னார்வத்துடன் ஏற்றுக் கொண்ட நாகர்கோவில் நகரில் வாழ்ந்த சில மருத்துவ மேதைகளை என்னால் மறக்க இயலவில்லை. Continue reading “ராமன் மருத்துவமனை”

நல்ல ஆத்மாக்களின் தாலாட்டுதலில் இவ்வுலகை இறைவன் அழியாமல் காத்துக் கொண்டிருக்கிறான்

பிறருக்கு உதவி செய்வதில் இன்றியமையாததாக இருப்பது எது என்று சொல்லும் போது
அது முதலில் மனிதாபிமானமாகத்
தான் இருக்கிறது..

சிலரை பொறுத்தவரை பணத்தால் செய்வது
மட்டும் தான் உதவி
என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்..

ஆனால் அது உண்மையல்ல மனதால் கூட பல பேருக்கு உதவி செய்யலாம்..

பிறர் மனம் புண்படாதவாறு நல்ல வார்த்தைகளை பேசுவது கூட ஒரு வகையில் அறம் தான்..

முகம் பார்த்து கடும் சொற்கள் கூறாதலும் ஒரு நல்லறம் தான்..

ஒருவர் சாலையை கடக்க முயற்சிக்கிறார் அவரை கைபிடித்து சாலையை கடக்க வழி செய்வதும்
அறம் தான்.. Continue reading “நல்ல ஆத்மாக்களின் தாலாட்டுதலில் இவ்வுலகை இறைவன் அழியாமல் காத்துக் கொண்டிருக்கிறான்”