படித்ததில் பிடித்தது – by eraeravi

படித்ததில் பிடித்தது

முனைவர் இறைஅன்பு
இ .ஆ .ப,அவர்களின் ,நெஞ்சைத் தொட்டதும் …சுட்டதும்    நூலில்,  தாய் என்ற  கட்டுரையிலிருந்து சில துளிகள்

தொகுப்பு கவிஞர் இரா .இரவி

தாய்

தாய்  ஈரெழுத்து   திருக்குறள்
ஒரு சொல் காவியம்

அம்மா என்ற சொல் உயிர் எழுத்தில் தொடங்கி,மெய்யை மையப்படுத்தி உயிர் மெய்யில் முடியும்
உன்னதம் கொண்டது .
நான் சின்ன வயதில் இருந்தே என் அம்மாவிடமிருந்து கற்றுக் கொண்டது எதையும் செம்மையாகச் செய்ய வேண்டும் என்பதுதான் .
தாயிடம் இருந்து மனப்பாட சக்தியையும் ,தந்தை இடமிருந்து படைக்கிற திறனும் பெற்றதாய்த் தெரிந்தவர்கள் அடையாளப் படுத்துவார்கள் .     Continue reading “படித்ததில் பிடித்தது – by eraeravi”

பல பயனுள்ள தகவல்கள்- by சித்தி சமிரா பேகம்

 என் நண்பர் அவருக்கு வந்த மெயிலை எனக்கு அனுப்பியள்ளார் இதில் பல பயனுள்ள தகவல்கள் உள்ளன. அதை உங்ககளிடம் நான் பகிர்ந்து அளிக்கிறேன்.
நாம் படித்து பயனடைவது மட்டும் அல்லாமல் நம்மால் முடிந்த அளவு இச்செய்தியினை மற்றவர்களோடும் பகிர்ந்து கொண்டால் மற்றவர்களும் பயன்பெற ஏதுவாயி இருக்குமென நம்புகின்றேன்.

-சித்தி சமிரா பேகம்

1) தமிழகத்தில் எங்கேனும் குழந்தைகள் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்துகிறார்கள் என்ற அவல நிலையைக் கண்டால் உடனே “RED Society” யின் 9940217816 என்ற எண்ணில் அழையுங்கள். அவர்கள் அக்குழந்தைகளின் கல்விக்கு வழி வகுப்பார்கள்.

2) பொறியியல் கல்வி படித்த மாணவர்கள் தங்களின் கல்வி விபரம் குறித்து http://www.campuscouncil.com/

என்ற தளத்தில் பதிந்து வைப்போமானால் குறிப்பிட்ட நாற்பது நிறுவனங்கள் நடத்தும் நேர்முகத் தேர்வில் எளிதாக கலந்து கொள்ள முடியும். Continue reading “பல பயனுள்ள தகவல்கள்- by சித்தி சமிரா பேகம்”

வாசிப்பின் கொடியை இல்லங்கள் தோறும் உயர்த்திக் கட்டுவோம்

ரிசுப் பொருள்களைப் பற்றிப் பேசுகிற சீனப் பழமொழி ஒன்று, அடுத்த தலைமுறைக்கான பரிசாக எதுவம்  தர விரும்பினால், புத்தகங்களைக் கொடு என்கிறதாம். திரும்பத் திரும்பத் திறந்து பார்த்துக் கொள்ளும் பரிசாக நூல்கள் இருக்கும் என்று கேரிசன் கெயிலர் என்கிற அமெரிக்க எழுத்தாளர் ஒருவர் சொல்லியிருக்கிறார். தனித் தீவில் இருக்கத் தண்டனை வழங்கு, ஆனால் புத்தகங்கள் இருக்க வேண்டும் என்னோடு என்றும் சொல்லியிருக்கின்றனர் சில அறிஞர்கள்.  ஆயுதங்களற்ற புரட்சி கூட சாத்தியமாகலாம், ஆனால் நூல்கள் அற்று அல்ல என்று சொல்வோரும் உண்டு.  புத்தகங்கள் மனிதர்களின் கண்டுபிடிப்புகளிலேயே உன்னதமான – தொடர்வினை உருவாக்குகிற – தனக்கு இன்னொன்று ஒப்பற்ற ஒரு வித்தியாசமான கருவி என்று கூட படுகிறது. Continue reading “வாசிப்பின் கொடியை இல்லங்கள் தோறும் உயர்த்திக் கட்டுவோம்”

ஒபாமாவை விஞ்சினார் தோனி – உலகின் பிரபலமானவர்கள் பட்டியல் !

உலக அளவில் புகஜிபெற்ற  அமெர்க்காவின் ‘டைம்’ வார இதழ் உலகின் பிரபலமான 100 பேர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்தப்   பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் பெயர்  ஒபாமா, ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி , அர்ஜெண்டீன கால்பந்து நட்சத்திரம் மெஸ்ஸி ஆகியோரைக் காட்டிலும் அதிக  பிரபலம் பெற்றவராக தெரிவிக்கப்பட்டுள்ளது.  28 ஆண்டுகளுக்கு பிறகு தோனி தலைமையில்  இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பையை வென்ற நிலையில் தோனிக்கு இப்பட்டியலில்  52-வது  இடம் கிடைத்துள்ளது.
 தனது செய்தி வெளியீடுகள் மூலம் உலகளவில் பரபரப்புக்கு வித்திட்டு வரும் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே 9-வது இடத்திலும், பாகிஸ்தான் உளவுத்துறை தலைவர் அகமது ஷுஜா பாஷா 17-வது இடத்திலும், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க் 6-வது இடத்திலும், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா 86-வது இடத்திலும், வெளியுறவு துறைச் செயலாளர் ஹிலாரி கிளிண்டன் 43-வது இடத்திலும் இப்பட்டியலில்  இடம் பிடித்து  உள்ளனர். Continue reading “ஒபாமாவை விஞ்சினார் தோனி – உலகின் பிரபலமானவர்கள் பட்டியல் !”

தனியார் காற்றாலைகளுக்கு கடன் பாக்கி வைக்கும் தமிழக அரசு!

தமிழகத்தில் மின் பற்றாக்குறையை சமாளிக்க கைகொடுத்து வரும் தனியார் காற்றாலை மின் உற்பத்தியாளர்களுக்கு மூன்று மாதமாக, தமிழ்நாடு மின்வாரியம் கடன் பாக்கி வைத்திருப்பதாக, இந்திய காற்றாலை மின்சாரம் அபிவிருத்தி கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue reading “தனியார் காற்றாலைகளுக்கு கடன் பாக்கி வைக்கும் தமிழக அரசு!”

தமிழில் MS OFFICE 2007

MS Office இப்பொழுது தமிழில் வந்துள்ளது. எல்லாமே தமிழ் மயம். எல்லாவிதமான தொடர்புகளும் அமைப்புகளும் தமிழில் உள்ளன. நாம் ஆங்கிலத்தில் இதுவரை புரிந்துக்கொள்ளாத காரியங்கள் எல்லாம் எளிதாக காணமுடிகிறது. ஆங்கிலம் தெரியதவர்களும் கூட தெளிவாக புரிந்துக் கொள்ள முடியும். இதுவரை ஆங்கிலத்தில் பார்த்த நமக்கு இது ஒரு புது அனுபவத்தை கொடுக்கிறது. மேலும் இலக்கண பிழைகளை கூட இதில் காண்பிக்கிறது. இதிலிருந்து புதிய கணினி வார்த்தைகளை தெரிந்துகொள்ள முடிகிறது. மைக்ரோசாப் கம்பெனி இதை இலவசமாக கொடுக்கிறது. Microsoft Office Language Interface Pack 2007 – தமிழ் என்று அழைக்கபடும் இந்த மென்பொருளை நீங்கள் இங்கு தரவிறக்கி பயன்பெறுங்கள்.தரவிறக்கி இதை Install செய்யுங்கள்.
Install செய்த பின் எப்படி அமைப்பது என்பதை பார்ப்போம். Continue reading “தமிழில் MS OFFICE 2007”

வணிகத்துக்கு டாலரைக் கைவிடுகிறது பிரிக் நாடுகள் – அமெரிக்காவுக்கு அடி?

இந்தியா, ரஷ்யா, சீனா, பிரேசில் மற்றும் தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான “பிரிக்” நாடுகள் கூட்டமைப்பு, தங்களுக்குள் நடக்கும் வர்த்தக சம்பந்தமான பரிவர்த்தனைகளில், தங்கள் நாடுகளின் கரன்சியையே இனிமேல் பயன்படுத்திக் கொள்ளும் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன!

சீனாவிலுள்ள சான்யா நகரில் இந்தியா, ரஷ்யா, சீனா, பிரேசில் மற்றும் தென் ஆப்ரிக்கா ஆகிய ஐந்து நாடுகளின் கூட்டமைப்பான பிரிக் கூட்டமைப்பின் மாநாடு நடக்கிறது. இம்மாநாட்டில் இந்தியாவின் சார்பில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்றுள்ளார். Continue reading “வணிகத்துக்கு டாலரைக் கைவிடுகிறது பிரிக் நாடுகள் – அமெரிக்காவுக்கு அடி?”

என்னை நீக்க தங்கபாலுவுக்கு அதிகாரம் இல்லை: நடிகர் எஸ்.வி.சேகர் பேட்டி!

காங்கிரஸ் கட்சியில் இருந்து என்னை நீக்க தங்கபாலுவுக்கு அதிகாரம் இல்லை என்று நடிகர் எஸ்.வி.சேகர் கூறினார்.

இது குறித்து இன்று (வியாழன்) அவர் அளித்த பேட்டி வருமாறு:-
நான் ராகுல்காந்தியை சந்தித்து அவர் மூலம் காங்கிரசில் சேர்ந்தேன். சிட்டிங் எம்.எல்.ஏ.வாகவும் இருக்கிறேன். என்னிடம் அகில இந்திய காங்கிரஸ் கட்சி விளக்கம் கேட்டு,அதற்கான  எனது பதிலில் திருப்தி இல்லை என்றால் மட்டுமே எனை கட்சியிலிருந்து நீக்க முடியும்.

தங்கபாலுவால் நீக்கப்பட்டுள்ள பலர் இளைஞர் காங்கிரசை சேர்ந்தவர்கள். தேர்தல் நடத்தி தேர்வு செய்யப்பட்டவர்கள். ராகுல்காந்திதான் அவர்களுக்கு தலைவர். எனவே இளைஞர் காங்கிரசாரையும் தங்கபாலுவால் நீக்க முடியாது. தேர்தலில் தங்கபாலுவுக்கு டெபாசிட் போய்விடும் என்ற பயம் வந்து விட்டது. நான்கு அல்லது ஐந்தாவது இடத்தில் வருவார் என்கிறார்கள். இதனால் அதிர்ச்சியில் உறைந்துள்ளார். Continue reading “என்னை நீக்க தங்கபாலுவுக்கு அதிகாரம் இல்லை: நடிகர் எஸ்.வி.சேகர் பேட்டி!”

விரிவடையும் பேரண்டம்!

நாம் வாழ்கின்ற இப்பேரண்டம் எவ்வாறு தோன்றியது, இது எங்கே எப்படிப் போய் முடியும், இது எவ்வாறு இயங்கிக் கொண்டிருக்கிறது – என்பது பற்றியெல்லாம் ஆராய்ச்சி செய்வது விஞ்ஞானிகள் பலருக்கு மிக விருப்பமானதொரு துறையாகும்.

கடந்த 20 – ம் நூற்றாண்டின் துவக்க காலம் வரை கூட விஞ்ஞானிகள் இப்பேரண்டத்தைப் பற்றி என்ன கருத்து கொண்டிருந்தார்கள் என்றால் – இப்பிரபஞ்சத்துக்குத் துவக்கம் என்று ஒன்று கிடையாது. இது தொடர்ந்து இப்படியே நிலை பெற்றிருக்கும். இதற்கு முடிவு என்று ஒன்றும் கிடையாது – என்பது தான். இதனையே Static Universe Model – என்கிறார்கள் விஞ்ஞானிகள். அதாவது அசையா பிரபஞ்சக் கோட்பாடு என்று இதனைக் கூறலாம். Continue reading “விரிவடையும் பேரண்டம்!”

துரிதமாக ஒரு பயணம் துருக்கி வரையில்…

குறிப்பு – இது தொடரல்ல நீளமான பதிவு

துருக்கி இஸ்தாம்புலில் நடக்கவிருக்கும் தங்க நகைகளின் 2011 கண்காட்சியை காண்பதற்கும், புதிய டிசைன்களை தேர்வு செய்வதற்கும் நான்கு தினங்கள் அலுவலக பணியாக நான் சென்றிருந்தேன்.

பலநாடுகளைச் சேர்ந்தவர்கள் என்னோடு துபாயிலிருந்து எமிரேட்சில் இஸ்தாம்புலுக்கு பயணம் செய்தார்கள். பல இந்தியர்களும் அதில் இருந்தாலும் சில தமிழர்கள் தமிழில் பேசிய சப்தம் கேட்கவே எனக்குள் பரவசம், நான் தனிமைப்பட்ட உணர்வை அந்த தமிழர்களின் பேச்சு நீக்கியது. அவர்கள் யார்? என்ன ஏது என்ற விபரமோ, அறிமுகமோ செய்துக்கொள்ளவில்லை ஆனால் அவர்கள் உரையாடிய தமிழ் என்னை சந்தோசப்படுத்தியது, நம்பிக்கை ஊட்டியது ஆம் தாயோடு பயணிப்பதைப் போன்ற உணர்வைக் கொடுத்தது நமது தாய்மொழி.

விமானத்திலிருந்து இந்த பகுதியை எழுதிக்கொண்டிருக்கிறேன் எமிரேட்சில் எந்த நாட்டுக்கு பயணம் செய்தாலும் தமிழ் படம் இரண்டு ஒளிபரப்புகிறார்கள் அட்டவணைப்படி இந்த மாதம் ஜக்குபாய், அசல் இரண்டு படங்களைப் பார்த்தேன்.

  • இதன் பிறகு ஹோட்டல் அறையிலிருந்து பதிவுசெய்கிறேன்.
    என்னை அழைப்பதற்கு எங்கள் நட்புக் கம்பெனியின் ஊழியர் நண்பர் ஆர்தோ துருக்கி நாட்டைச் சேர்ந்தவர் வந்திருந்தார்.விமான நிலையத்தில் வெப்பத்தை உணர்ந்த நான் வெளியில் வந்ததும் குளிரை சுவாசித்தேன். ஆம் 17 டிகிரி இது சாதாரணம் என்கிறார்கள் துருக்கியர்கள் மைனஸ் எல்லாம் வருமாம்.

    மாலை 6.00 மணிக்கு துருக்கி விமான நிலையத்திலிருந்து நான் தங்கப்போகும் வாவ் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார். விமான நிலையத்திலிருந்து 10 நிமிடங்கள் தான் வாவ் ஹோட்டல் இதற்கு எதிர்புறம் தான் நகை கண்காட்சியின் அரங்கம் இருக்கிறது எளிதாக ஐந்து நிமிடத்தில் நடந்துவிடலாம்.

    ஹோட்டலில் முன் பதிவு செய்யப்பட்டிருந்ததால் அதிகநேரம் எடுக்கவில்லை சில நிமிடங்களில் 17 வது மாடியின் அறை சாவியை தந்தார்கள்.

    அறையின் ஜன்னல் வழியாக கிழக்கு பகுதி துருக்கியை காணமுடிந்தது சாலைகளில் வாகனங்கள் எந்தநேரமும் சென்றுக்கொண்டே இருந்தன சில தருணங்களில் வாகன நெரிசல் டிராபிக் இருந்தது.


    இரவு 8.00 மணிக்கு அறையிலிருந்து ஹோட்டல் உணவகத்திற்கு வந்தேன் துருக்கி நாட்டு உணவுதான் வைத்திருந்தார்கள் சுவையாகதான் இருக்கும் ஆனால் சுவைப்பதற்கு பசி அவ்வளவாக இல்லை அருகில் சூப்பர் மார்கெட் இருக்கிறதா என்று வினவினேன்.நான் மறந்துபோன பல்பேஸ்ட் வாங்குவதற்கு.

    நடக்கும் தூரத்தில் ஏதும் இல்லை சில மைல்கள் போகனும் மெட்ரோ இரயிலை உபயோகப்படுத்துங்களேன் என்றார்கள். Continue reading “துரிதமாக ஒரு பயணம் துருக்கி வரையில்…”