*‘வெளியில் வராதீர்கள். வீட்டிலேயே இருங்கள். யாரையும் வீட்டுக்குள் விடாதீர்கள்’* –

சிறப்பு கட்டுரை
தவறாமல் படிக்கவும்

‘வெளியில் வராதீர்கள். வீட்டிலேயே இருங்கள். யாரையும் வீட்டுக்குள் விடாதீர்கள்’

கற்பனையில் கூட இப்படி ஒரு சூழல் வருமென்று நாம் யாரும் நினைத்திருக்க முடியாது.

சார்த்தர் எழுதிய ‘மீள முடியுமா?’ என்ற நூலில் ஒரு வரி வருகிறது –

‘நரகம் என்பது – மற்றவர்கள் தான்…

பொருளாதாரம் வீழ்ந்துவிட்டது. சொந்த நாட்டின் மக்கள் அகதிகள் போல நடந்தே ஊருக்குத் திரும்புகிறார்கள். வழியில் பசியால் நூற்றுக்கு மேற்பட்டோர் இறந்து போகிறார்கள்.

பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு மிகப்பெரிய இடப்பெயர்வு. உலகத்தையே தலைகீழாகக் கவிழ்த்தியது போல மாற்றங்கள் நிகழ்கின்றன.

இன்னும் நாம் கற்பனையே செய்ய முடியாத அரசியல் மாற்றங்கள் உலகில் நிகழப்போகின்றன.

இந்த க‌ஷ்டகாலத்திலும் நிறைய நல்ல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

நாயக பிம்பங்கள், வேஷங்கள், பொய்கள் எல்லாம் கலைகின்றன.

கங்கை நதி குடிநீராக மாறுகிறது… சூழல் மாசு கட்டுக்குள் வந்திருக்கிறது… மதியம் கிளிகளின் சத்தம் கேட்கிறது… இந்த ஏப்ரல் மாத இரவில் சென்னை லேசாகக் குளிர்கிறது…

Continue reading “*‘வெளியில் வராதீர்கள். வீட்டிலேயே இருங்கள். யாரையும் வீட்டுக்குள் விடாதீர்கள்’* –”

கேரள முதல்வருக்கு கைதட்டல்கள்!

Vavar F Habibullah
கை தட்டல்கள்
ஊக்கம் தரும் செயல் தான்.
சமீபத்தில் மருத்துவ ஃப்ரண்ட்
பணியாளர்களை ஊக்குவிக்க
நாம் கையாண்ட ஒரு செயலி

காய்ச்சல் இருமல் சளி மூச்சுத்
திணறலில் வரும் பெரியவர்களை
விடுங்கள்….சிறிய குழந்தைகளை
சுமந்து வரும் தாய்மார்களைப்
பார்த்தால், கொரோனா பீதியில்
அவர்கள் நடுங்குவது கண்களில்
தெரிகிறது.இது கொரோனா
இல்லை என்றால் வரும் நிம்மதி!
நோயால் சாவதை விட நோய்
பற்றிய அச்சமே மனிதர்களை
மனநோயாளிகளாக மாற்றுகி
றது.சாதாரண காய்ச்சல் கூட
தொற்று நோயோ என்று சந்தே
கிக்கும் மனநிலைக்கு
மக்கள் தள்ளப்பட்டிருப்பதை
பார்க்க முடிகிறது.

Continue reading “கேரள முதல்வருக்கு கைதட்டல்கள்!”

கொரோனா !

நீ எமனுக்குப் பேரனா ? —– இந்த ஆட்டம் ஆடுகிறாய் ?

ஆடாத ஆட்டமெல்லாம் ஆடியவர்கள் அடிமாண்டு போன
கதைகள் உனக்குத் தெரியாதா ?

தடம் மாறிப் போனவர்கள் தடுக்கி விழுந்து தாடையைப்
பெயர்த்துக்கொண்டு – தரையில் உருண்டு தரிப்பணமாய்ப்
போன கதையையும் உனக்குச் சொல்லத்தான் வேண்டுமா ?

ஊனக்கு மூலமும் இல்லை – முடிவும் இல்லை அதனால் நீ
இறைவன் என்று இறுமாப்பு கொள்கிறாயா ? நீ புழு – பூச்சி
கூட அல்ல. உயிரும் உருவமும் அற்ற அற்பப் பதர் நீ ! நீ
இறைவனா ?

Continue reading “கொரோனா !”

இணைந்து இருப்போம்

இணைந்து இருப்போம்

மதம் நமது
தேசமக்களின்
மாறா நம்பிக்கை

அனைத்து மதத்தினர்களும் அவர்கள் நம்பிக்கை சார்ந்த கூட்டங்களில் கலந்து கொள்வது இயல்பே

அது போலதான்
இஸ்லாமிய உறவுகளும்
கலந்துகொண்டனர்

நோய் தொற்று எவ்வாறு ஏற்பட்டது என இதுவரை தெளிவாக தெரியவில்லை

அனைத்து மத கூட்டங்கள்
நடப்பது போலவே
அவர்கள் கூட்டமும்
வழக்கம்போல் நடந்தது

Continue reading “இணைந்து இருப்போம்”