Vavar F Habibullah . / DR.HABIBULLAH



https://nidurseasons.blogspot.com/search?q=Vavar+F+Habibullah

THE MAN IN MY LIFE
by .Dr.Vavar F Habibullah

அந்த நாட்களில்…
எனது தந்தை, ஒரு செயின்
ஸ்மோக்கர்.இந்தியா வந்தால்
பெர்கலி தான் அவரது
பேஃவரைட் பிராண்ட்.
நான் தான் கார்ட்டன்
கார்ட்டனாக சிகரெட்
வாங்கி வந்து, அவரிடம்
கொடுப்பேன்.அப்போது
நான், ஒரு பள்ளி மாணவன்.

சிகரெட்டை மிகவும் ஸ்டைலாக
உதட்டில் பொறுத்தி,லைட்டரில்
பற்ற வைத்து புகையை உள்ளிழுத்து
நாசி வழி வெளிவிடும் அழகை நான்
பார்த்து ரசிப்பதை பார்த்து…
கேட்டாரே ஒரு கேள்வி !

“என்னை போல் உனக்கும்
சிகரெட் பிடிக்க ஆவலாக
இருக்கிறதா!”
பயந்து கொண்டே நான்
தலையை அசைத்தேன்.

“ஓகே,டேக் எ சிகரெட்”
அவருக்கே உரித்தான
ஆங்கிலத்தில் தான் பேசினார்.
நான் மெதுவாக
ஒரு சிகரெட் எடுத்தேன்…
உதட்டில் வைத்தேன்
அவர் தான் ஸ்டைலாக
லாவகமாக அதை பற்ற
வைக்க உதவினார்.
“ஓகே…நவ், டேக் த
ஸ்மோக் இன், ரைட்..
டேக் த ஸ்மோக் அவுட்”
அவ்வளவு தான்…
எனக்கு மூச்சுத் திணறியது.
இருமலுடன் சற்று புறை
ஏற,கண்களில் நீர் வடிய
நான் சிகரெட்டை தூக்கி
எறிந்தேன்.என்னை உற்று
நோக்கிய தந்தை கேட்டார்
“வாட் அபவ்ட் யுவர்
எக்ஸ்பீரியன்ஸ்”

எப்படி உங்களால் இப்படி
சிகரெட்டை ஊதி தள்ள
முடிகிறது.நான் அவரிடம்
தைரியமாக கேட்டேன்.

சிகரெட்டை ஒரு வெறுப்பு
பொருளாக, இன்று வரை
நான் கருத, அவர் அன்று
எனக்கு கொடுத்த அந்த ஷாக்
டிரீட்மெண்ட் தான் காரணம்.
‘எ சார்ட் ஆஃப்
பாசிடிவ் சைக்கலாஜி’
என்று சொல்லலாம்.

அந்த நாட்களில், எங்கள்
ஊரில் தியேட்டரில் போய்
சினிமா பார்ப்பது என்பது
கடுமையான குற்றம். நான்
சினிமா பார்க்க போய் வந்ததை
யார் மூலமோ அறிந்த அவர்
சொன்னார்….

தம்பி…ஊருக்கு நல் உபதேசம்
செய்யும் ஹாஜியாரால் தன்
மகனை திருத்த முடியவில்லை
என்று ஊரில் சொல்கிறார்கள்..
அவ்வளவு தான், நான் சினிமா
பார்ப்பதை அன்றோடு நிறுத்தி
விட்டேன்.
நான் இன்று வரை கடை
பிடிக்கும் சில நல்லொழுக்கங்களுக்கு
என் தந்தையே காரணம்
என்றால் அது மிகையல்ல.
Really a very honest
Gentleman

Dr.Vavar F Habibullah

அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் வாவர்_ஹாஜியார்
சகோதரர் Colachel Azheem
அவர்களின் பதிவு..
அறிய வேண்டிய
அரிய மனிதர்கள்….

கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபம் கட்டுமான பணிகளுக்கு கதவுகள், கட்டளைகள் உட்பட மரம் பர்ணிச்சர்கள் தயாரித்து வழங்கிய ஜாரியா சாமில் நிறுவனத்தினை நடத்திய #வாவர் ஃபக்கீர் முகமது ஹாஜியார் குமரி மாவட்டத்தில் முஸ்லிம் சமூகத்திலிருந்து மர அறுவை மில் நடத்திய (ஒரே) நபர்..

கோட்டாறு முஸ்லிம் சமூகத்தின் முக்கிய பிரமுகர்களில் ஒருவர்..
அன்றைய காலத்தின் எஸ் எஸ் எல் சி கல்வியாளரான வாவர் ஹாஜியார் ஆங்கிலத்தில் புலமை மிக்கவர்… சிங்கப்பூரின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான Malaysian Refrigerating Company (MRC)ல் Administrative Officer ஆக பணியாற்றிய பெருந்தகை.

MRC கம்பெனி கப்பல் பயணிகளுக்கு உணவு சப்ளை செய்யும் நிறுவனம் ஆனதால் வாவர் ஹாஜியாருக்கு உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது..

இடலாக்குடியில் வாவர் ஹாஜியார் ஆரம்பித்த #ஜாரியா சாமில் நிறுவனத்தில் சுமார் 150 பேர் வேலை செய்துள்ளனர்..தான் வெளிநாட்டில் இருந்தாலும் உறவினர் மேற்பார்வையில் மர அறுவை மில் நடந்து வந்துள்ளது..

எம் ஜி ஆரின் திரைப்படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக புகழ்பெற்ற ஜஸ்டின் ஆரம்ப காலத்தில் இங்கு வேலை பார்த்தவர்..

ஜாரியா சாமில் நிறுவனம் Forest Contract மற்றும் ரப்பர் எஸ்டேட் Coup Contract துறையில் குமரி மாவட்டத்தில் முதல்நிலை நிறுவனமாக திகழ்ந்துள்ளது.. இந்த நிறுவனம் காளை வண்டி, வில் வண்டிகளுக்கான மரத்தினாலான சக்கரம் உற்பத்தியில் சிறந்து விளங்கியுள்ளது..
வீடுகளுக்கு மின்சார ஒயரிங் தேவைகளுக்கான தரமான ரீப்பர் பட்டியல் பல்வேறு மாநிலங்களுக்கும் விநியோகம் செய்துள்ளனர்…

விவேகானந்தர் நினைவு மண்டபம் கட்டுமான பணிகளுக்கு திட்டமிட்ட அன்றைய காலத்தில் மர பர்ணிச்சர்கள் சப்ளை செய்யும் காண்டிராக்ட் முழுவதும் பெற்று ஜாரியா சாமில் தரமான மரச் சாமான்களை சப்ளை செய்த பெருமையை பெற்றது.
விவேகானந்தர் நினைவு மண்டபம் திறப்பு விழாவில் ஜாரியா சாமில் நிறுவனம் கவுரவிக்கப்பட்டுள்ளது அன்றைக்கு மதச்சார்பற்ற பண்பாடு மேலோங்கி இருந்ததை உணர முடிகிறது…

மார்க்க சேவையிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர், நாகர்கோவில் நகரின் மையப்பகுதியில் இஸ்லாமிய கலாச்சார கழகத்தின் சார்பில் ஜும்ஆ பள்ளிவாசல் வருவதற்கு காரணமான வெகுசிலரில் முக்கிய பங்கு வகித்தவர் வாவர் ஹாஜியாரும் ஒருவர்..
பள்ளிவாசல் கட்டுமான பணிகளுக்காக சிங்கப்பூர் சென்ற மர்ஹும் எஸ். பி.எம். சிறாஜுதீன், வழக்கறிஞர் அகமதுகான் உள்ளிட்ட குழுவினருக்கு பெருந்தொகை வசூலித்து கொடுத்தனுப்பிய பண்பாளர்…

தனது மகன்களுக்கு

ஹபீபுல்லாஹ் Vavar F Habibullah
கரீமுல்லாஹ்

அத்தாவுல்லா Athavullah Athavullah
நஜீமுல்லாஹ் , றஹீமுல்லா,Abu Haashima ஷைபுல்லாஹ் என்று பெயர் சூட்டி மகிழ்ந்த பெருந்தகை…
என்றும் நினைவு கூறத்தக்கவர்.

Colachel Azheem

[தந்தையைப் பற்றி அறிந்திராத பல நிகழ்வுகளை கண்முன் கொண்டு வந்த சகோதரர் குளச்சல் அஜீம் அவர்களுக்கு அன்பின் நன்றிகள்..Saif Saif]

Abu Haashima

நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்! !
வாவர் குடும்பத்திற்கு வாழ்த்துக்கள்! !
வாவர் குடும்ப அன்பு சகோதரர்கள்
அனைவரும் செயல் வீரர்கள்
வாழ்த்துவதில் மகிழ்கின்றேன்
அன்புடன் Mohamed Ali

சின்ன சோதனைகளும் கஷ்டங்களும் நஷ்டங்களும்

நமக்கு சின்ன
சோதனைகளும்
கஷ்டங்களும்
நஷ்டங்களும்
ஏற்படும்போதெல்லாம் ஒரு குற்ற உணர்வு
யாருக்காவது
தீங்கு செய்து விட்டோமோ
அதற்குத்தான் இறைவனின் இந்த
சிறிய சோதனையோ
என்று மனது எண்ணும்..
ஆனால் இன்னும்
சில மனிதர்கள்
மக்களாலும்
செல்வங்களாலும்
நோயாலும்
கஷ்டங்களையும்
சங்கடங்களையும்
அனுபவிக்கின்றவர்களுக்கெல்லாம்
எந்த குற்ற உணர்வும்
இல்லாமல்
திரும்ப திரும்ப
எப்படித்தான்
அநியாயங்களை
செய்யவும் தூண்டவும் மனது
வருகின்றதோ..
இறைவன்தான்
இவர்களுக்கு
நேர்வழியை
காட்டவேண்டும்
என்று வேண்டுவதை
தவிர வேறு வழி
இல்லை…..


Mohamed Kaffoor

இயற்கையும் கற்பனையும் கைகள் குலுக்குது ….

Abdul Gafoor is in Kampala, Uganda.

இயற்கையும்
கற்பனையும்
கைகள் குலுக்குது ….

நிலம் நோக்கிய
கதிரவனின் வெள்ளொளி
மெதுவாக மெலிதாகி
நீலம் கலைந்த அவ்வானம்
இரவாக மாறுகிற வேளையில்
சிகப்பை பூசிய செவ்வானம்
வட்டமிகு நிலாவை அழைக்குது ….


வெயில் சாய்கிற
மாலை பொழுதில்
நுரை பொங்கி
குளிர்ந்து பாய்கிற
மலை அருவியில்
இறைவன் வரைந்த
கலை நயத்தில்
காலை நனைத்திட
ஆவல் பிறக்குது ….

அடர்த்தியாய் வளர்ந்த
தாவரமெனும் பாட்டணி
விரிசலாய் அமைக்குது
பசுமையின் கூட்டணி ….

மரங்களின் இலைகள்
அசைகிற நிலைகள்
காற்றை வரவழைக்குது ….

அப்துல் கபூர்
27.11.2019 ….

படம் உபயம்
அன்பிற்குரிய நண்பர்
Buhari Sarafudeen ….
இயற்கையும்
கற்பனையும்
கைகள் குலுக்குது ….

நிலம் நோக்கிய
கதிரவனின் வெள்ளொளி
மெதுவாக மெலிதாகி
நீலம் கலைந்த அவ்வானம்
இரவாக மாறுகிற வேளையில்
சிகப்பை பூசிய செவ்வானம்
வட்டமிகு நிலாவை அழைக்குது ….

வெயில் சாய்கிற
மாலை பொழுதில்
நுரை பொங்கி
குளிர்ந்து பாய்கிற
மலை அருவியில்
இறைவன் வரைந்த
கலை நயத்தில்
காலை நனைத்திட
ஆவல் பிறக்குது ….

அடர்த்தியாய் வளர்ந்த
தாவரமெனும் பாட்டணி
விரிசலாய் அமைக்குது
பசுமையின் கூட்டணி ….

மரங்களின் இலைகள்
அசைகிற நிலைகள்
காற்றை வரவழைக்குது ….

அப்துல் கபூர்Abdul Gafoor
27.11.2019 ….

படம் உபயம்
அன்பிற்குரிய நண்பர்
Buhari Sarafudeen ….

மதீனாவிலேயே, பேரீச்ச மரத்தோட்டங்கள் மிக அதிகமானவற்றுக்குச் சொந்தக்காரச் செல்வந்தர் அபூதல்ஹா.

Nooruddin DarulIslamfamily
மதீனாவிலேயே, பேரீச்ச மரத்தோட்டங்கள் மிக அதிகமானவற்றுக்குச் சொந்தக்காரச் செல்வந்தர் அபூதல்ஹா.

அவரிடம் பைருஹா என்றொரு தோட்டம் இருந்தது. அவருக்கு மிகவும் விருப்பமானது அது. அந்த பைருஹா, மஸ்ஜிதுந் நபவீயின் எதிரே அமைந்திருந்தது. நபியவர்கள் அவ்வப்போது அங்குச் சென்று அதிலோடும் சுனையின் சுவையான நீரை அருந்துவது வழக்கம்.

ஒருநாள் நபியவர்களுக்கு வசனம் ஒன்று இறைவனால் அருளப்பட்டது:

“நீங்கள் நேசிக்கும் பொருள்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மை அடைய மாட்டீர்கள்; எந்தப் பொருளை நீங்கள் செலவு செய்தாலும், நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவனாக இருக்கின்றான்”

மூன்றாவது அத்தியாயத்தின் 92-ஆவது வசனமாக குர்ஆனில் இடம்பெற்றுள்ள வாசகம் அது. அந்த வசனத்தை அபூதல்ஹா அறிய வந்தார். விரைந்து நபிகள் நாயகத்திடம் சென்று, “அல்லாஹ்வின் தூதரே, ‘நீங்கள் நேசிக்கும் பொருள்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மை அடைய மாட்டீர்கள்’ என்று அல்லாஹ் அறிவித்துள்ளான். எனது செல்வத்திலேயே எனக்கு மிகவும் விருப்பமானது பைருஹா. அதை அல்லாஹ்வினுடைய பாதையில் நான் தானமாக அளிக்கிறேன். அதனுடைய நற்கூலி எதுவோ, அது எனக்காக அல்லாஹ்விடம் சேமிக்கப்பட்டிருக்கட்டும். அல்லாஹ் தங்களுக்கு எப்படி அறிவிக்கிறானோ அதன்படி இதைத் தாங்கள் அளித்துவிடுங்கள்”.


இறைவசனம் என்று ஒன்று அருளப்பெற்றால், அது அவர்களுக்குத் தெரியவருகிறது. அதை ஓதுகிறார்கள். அது செய்யச் சொல்வதைச் செய்கிறார்கள். தடுக்கச் சொல்வதை அப்படியே தடுத்துக் கொள்கிறார்கள். அவ்வளவுதான்! அவர்களுக்கு குர்ஆன் என்பது வண்ணக் காகிதத்தில் அழகாய் அச்சடிக்கப்பெற்ற நூலல்ல, வாழ்வியல் நெறி! அதிலுள்ளவை ஓதி நெஞ்சில் ஊதிக்கொள்ளும் வாசகங்கள் அல்ல, அல்லாஹ்வின் வார்த்தைகள் என்பதை உணர்ந்து வாழ்ந்த சமூகம் அது.

அதனால்தான் அது உயர்ந்தது! உன்னதம் அடைந்தது!

“நீர் உரைத்ததைக் கேட்டேன். நன்று உரைத்தீர் அபூதல்ஹா! இது மிகச் சிறந்த நற்செயல்! ஆனால், இதை உமது உறவினர்கள் மத்தியில் பகிர்ந்து அளித்துவிடுங்கள்,” என்றார்கள் முஹம்மது நபி (ஸல்).

“அப்படியே ஆகட்டும், அல்லாஹ்வின் தூதரே!” என்றவர், திரும்பி வந்தார். தம் உறவினர்கள் சிலரை அழைத்து, “இந்தாருங்கள் பிடியுங்கள்” என்று தோட்டத்தை அவர்களுக்கு பங்கிட்டுக் கொடுத்துவிட்டு, தமது அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விட்டார்.

(ரலியல்லாஹு அன்ஹு – அவரை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக)

நூல்: தோழர்கள்
மதீனாவிலேயே, பேரீச்ச மரத்தோட்டங்கள் மிக அதிகமானவற்றுக்குச் சொந்தக்காரச் செல்வந்தர் அபூதல்ஹா.

அவரிடம் பைருஹா என்றொரு தோட்டம் இருந்தது. அவருக்கு மிகவும் விருப்பமானது அது. அந்த பைருஹா, மஸ்ஜிதுந் நபவீயின் எதிரே அமைந்திருந்தது. நபியவர்கள் அவ்வப்போது அங்குச் சென்று அதிலோடும் சுனையின் சுவையான நீரை அருந்துவது வழக்கம்.

ஒருநாள் நபியவர்களுக்கு வசனம் ஒன்று இறைவனால் அருளப்பட்டது:

“நீங்கள் நேசிக்கும் பொருள்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மை அடைய மாட்டீர்கள்; எந்தப் பொருளை நீங்கள் செலவு செய்தாலும், நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவனாக இருக்கின்றான்”

மூன்றாவது அத்தியாயத்தின் 92-ஆவது வசனமாக குர்ஆனில் இடம்பெற்றுள்ள வாசகம் அது. அந்த வசனத்தை அபூதல்ஹா அறிய வந்தார். விரைந்து நபிகள் நாயகத்திடம் சென்று, “அல்லாஹ்வின் தூதரே, ‘நீங்கள் நேசிக்கும் பொருள்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மை அடைய மாட்டீர்கள்’ என்று அல்லாஹ் அறிவித்துள்ளான். எனது செல்வத்திலேயே எனக்கு மிகவும் விருப்பமானது பைருஹா. அதை அல்லாஹ்வினுடைய பாதையில் நான் தானமாக அளிக்கிறேன். அதனுடைய நற்கூலி எதுவோ, அது எனக்காக அல்லாஹ்விடம் சேமிக்கப்பட்டிருக்கட்டும். அல்லாஹ் தங்களுக்கு எப்படி அறிவிக்கிறானோ அதன்படி இதைத் தாங்கள் அளித்துவிடுங்கள்”.

இறைவசனம் என்று ஒன்று அருளப்பெற்றால், அது அவர்களுக்குத் தெரியவருகிறது. அதை ஓதுகிறார்கள். அது செய்யச் சொல்வதைச் செய்கிறார்கள். தடுக்கச் சொல்வதை அப்படியே தடுத்துக் கொள்கிறார்கள். அவ்வளவுதான்! அவர்களுக்கு குர்ஆன் என்பது வண்ணக் காகிதத்தில் அழகாய் அச்சடிக்கப்பெற்ற நூலல்ல, வாழ்வியல் நெறி! அதிலுள்ளவை ஓதி நெஞ்சில் ஊதிக்கொள்ளும் வாசகங்கள் அல்ல, அல்லாஹ்வின் வார்த்தைகள் என்பதை உணர்ந்து வாழ்ந்த சமூகம் அது.

அதனால்தான் அது உயர்ந்தது! உன்னதம் அடைந்தது!

“நீர் உரைத்ததைக் கேட்டேன். நன்று உரைத்தீர் அபூதல்ஹா! இது மிகச் சிறந்த நற்செயல்! ஆனால், இதை உமது உறவினர்கள் மத்தியில் பகிர்ந்து அளித்துவிடுங்கள்,” என்றார்கள் முஹம்மது நபி (ஸல்).

“அப்படியே ஆகட்டும், அல்லாஹ்வின் தூதரே!” என்றவர், திரும்பி வந்தார். தம் உறவினர்கள் சிலரை அழைத்து, “இந்தாருங்கள் பிடியுங்கள்” என்று தோட்டத்தை அவர்களுக்கு பங்கிட்டுக் கொடுத்துவிட்டு, தமது அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விட்டார்.

(ரலியல்லாஹு அன்ஹு – அவரை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக)

நூல்: தோழர்கள்


ஆசிரியர்: நூருத்தீன்

சம்மணம் என்றால் என்னவென்று தெரியுமா?

சம்மணம் என்றால் என்னவென்று தெரியுமா?

சங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள்…

✅ நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்கவைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம்…
இரண்டு சக்கர வாகனத்தில் பயணிக்கும் பொழுது, பேரூந்தில், இரயில் வண்டிகளில், சினிமா தியேட்டரில், பள்ளிகளில், அலுவலகங்களில், வீடுகளில், சோபாக்களில், கட்டில், நாற்காலி இப்படி நன்றாக யோசித்துப் பார்த்தால் நாம் அதிகநேரமாக காலைத் தொங்க வைத்துக்கொண்டே இருக்கிறோம்.
இப்படிக் காலைத் தொங்கவைத்து அமர்வதால் நமக்குப் பல உடல் உபாதைகள் உருவாகிறது…

✅ இதற்குக் காரணம் என்னவென்றால் காலைத் தொங்கவைத்து அமரும்பொழுது, நமது உடலில் இரத்த ஓட்டம் இடுப்பிற்குக் கீழ்ப்பகுதியில் மட்டுமே அதிகமாக செல்கிறது…


✅ நாம் காலை மடக்கி சம்மணம் போட்டு அமரும்பொழுது இடுப்புக்கு மேலே இரத்த ஒட்டம் அதிகமாகவும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

✅ நமது உடலில் இடுப்புக்கு கீழே உள்ள கால்களுக்கு நடக்கும்பொழுது மட்டும் இரத்த ஓட்டம் சென்றால் போதும்.

✅ மிக முக்கியமான உறுப்புகளாகிய சிறுநீரகம், கணையம், நுரையீரல், மூளை, கண், காது ஆகியவை இடுப்புக்கு மேல்ப்பகுதியில்தான் இருக்கிறது.

✅ எனவே ஒருவர் காலை தொங்கப்போடாமல் சம்மணங்கால் போட்டு அமர்ந்திருந்தால் அவருக்கு சக்தியும், ஆரோக்கியமும் அதிகமாக கிடைக்கிறது.
எனவே, சாப்பிடும் பொழுதாவது கீழே உட்கார்ந்து காலை மடக்கி அமர்ந்துதான் சாப்பிட வேண்டும்.
ஏனென்றால், இடுப்புக்கு கீழே இரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும்பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது.

✅ சாப்பிடும்பொழுது காலைத் தொங்க வைத்து நாற்காலியில் அமர்வதனால் இரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாக செல்கிறது.

✅ இந்திய வகை கழிவறை செல்லும்போது மட்டும்தான் காலை மடக்கி அமர்கிறோம் யுரோப்பியன் கழிவறையில் அமரும் பொழுது குடலுக்கு அதிக அளவு அழுத்தம் கொடுத்தால் மட்டுமே கழிவு வெளியேறும், அதனால் தான் இப்பொழுது சிறுகுழந்தைகள் கூட யுரோப்பியன் வகையினை பயன்படுத்துவதால் அவர்களால் தரையில் சுக ஆசனத்தில் அமர்வதற்கு முடியாமல் தவிக்கிறார்கள்.

✅ ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களால் சம்மணங்கால் போட்டுக்கூட தரையில் உட்கார முடியவில்லை என்றால் இந்த உடம்பை எந்த அளவிற்கு கெடுத்து வைத்திருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். எனவே முடிந்த வரை காலை தொங்கவைத்து அமர்வதை தவிருங்கள்… எனவே யுரோப்பியன் வகை கழிவறைகளை தவிருங்கள்…

✅ கட்டிலிலோ, ஷோபாவிலோ அமரும்பொழுது சம்மணம் இட்டே அமருங்கள்…

✅ சாப்பிடும் பொழுது தரையில் ஏதாவது ஒரு விரிப்பை விரித்து அதன்மேல் சம்மணங்கால் போட்டு அமர்ந்து சாப்பிட்டால் சாப்பாடு நன்றாக ஜீரணிக்கும்…

✅ சில வீடுகளில் அதற்கு வாய்ப்பில்லை என்று இருந்தால் டைனிங் டேபிளில் அமர்ந்து காலை மடக்கி வைத்து அமர்ந்து சாப்பிட்டுக் கொள்ளுங்கள்…

✅ சாப்பிடும் முறை…!
1.நின்று கொண்டு சாப்பிடும் பழக்கத்தை மாற்றி. குடும்பத்துடன் அமர்ந்து ஒன்றாய் சாப்பிடுங்க…

  1. எந்த வகை சாப்பாடாக இருந்தாலும் நன்றாக மென்று, கூழாக்கி சாப்பிடுங்கள்…
  2. பேசிக் கொண்டு, தொலைக்காட்சி, புத்தகம் பார்த்து கொண்டே சாப்பிட கூடாது…
  3. சாப்பிடும் பொழுது இடையில் தேவையில்லாமல் தண்ணீர் குடிக்காதிங்க. கடைசியில் தண்ணீர் குடிக்க மறக்காதீங்க.
    போதிய அளவில் தண்ணீர் பருகுங்கள்…
  4. அவசர அவசரமாக சாப்பிட வேண்டாம்…
  5. பிடிக்காத உணவுகளை கஷ்டபட்டு சாப்பிட வேண்டாம்…
  6. பிடித்த உணவுகளை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிட வேண்டாம்…
  7. ஆரோக்கிய உணவுகளை அதிகம் சாப்பிட பழகவும்…
  8. இரவு உணவில், முள்ளங்கி மற்றும் கீரை உணவுகளை சேர்க்க வேண்டாம்…
    10.சாப்பாட்டுக்கு அரை மணிநேரம் முன்பு பழங்கள் சாப்பிடுங்கள்… பின்பு பழங்கள் சாப்பிட வேண்டாம்…
  9. சாப்பிடும் முன்பு சிறிது நடந்துவிட்டு பின்பு சாப்பிடவும். இரவு சாப்பிட்ட பின், நடப்பது நலம்…
  10. சாப்பிட வேண்டிய நேரம்…காலை – 7 to 9 மணிக்குள் மதியம் – 1 to 3 மணிக்குள் இரவு – 7 to 9 மணிக்குள்
  11. சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து தான் தூங்க வேண்டும்…
  12. சாப்பிடும் முன்பும் பின்பும் கடவுளுக்கு நன்றி சொல்ல மறக்காதீர்கள்…

✅ அமருங்கள் சம்மணமிட்டு.

👉 அனைவருக்கும் பகிருங்கள். இது போல பயனுள்ள பதிவுகளுக்கு இந்த பக்கத்தை லைக் செய்யவும்.

Source:https://temple.dinamalar.com/

உறவும், பாசமும்,மார்க்கமும்(மதமும்) மனிதநேயத்தை உள்வாங்கிக் கொள்ள வேண்டும்

Dr.Suri mama letters.Dr.Suri is a Brahmin how is attached with our family.It is wonderful . எங்கள் தகப்பனாரும்(S.E..A. Abdul Kader) அவ…

Source: உறவும், பாசமும்,மார்க்கமும்(மதமும்) மனிதநேயத்தை உள்வாங்கிக் கொள்ள வேண்டும்

Dr.Suri mama letters.Dr.Suri is a Brahmin how is attached with our family.It is wonderful .

எங்கள் தகப்பனாரும்(S.E..A. Abdul Kader) அவர்களது மூத்த சகோதரர்ரும் (S.E.A.Abdul Rahman) மிகவும் பாசத்தோடு வாழ்ந்தார்கள்.அவர்கள் வாழும்  காலத்தில் மயிலாடுதுறையில் சிறப்பாக வியாபாரம் செய்தார்கள் .அனைத்து மக்களுடனும் நேசமாக இருந்தாகள் . பிராமண குடும்பத்தை சார்ந்த பெரியவர் குடும்ப பாசத்தோடு  இருக்க முதியோராகி உடல்நலம் பாதிக்கப் பட்டு இறக்கும் தருவாயில் தனது சிறு வயது மகளையும் (ராஜம்) மகனையும்  (சூரி) பாதுகாத்து வளர்த்து வரும் பொறுப்பினை S.E.A.Abdul Rahman அவர்களிடம் விட்டு இறைவனடி சேர்ந்தார். .அவர்கள் வசதி குறைவானவர்கள் அல்ல.
அவர்களை பிராமண முறைப்படி  வளர்த்து வந்தார்கள். எங்களுக்கு அவர்கள் உடன்பிறவா சகோதரி,சகோதரர்ராக வளர்ந்தாகள்.
ராஜம் அக்காவுக்கு கேப்டன் Dr . அண்ணாசாமி அவர்களுக்கு திருமணம்  செய்து வைத்தார்கள் , Dr. அண்ணாசாமி சென்னை T .நகரில் புகழ்பெற்ற கண் மருத்துவராக பணி  செய்தார்.
அண்ணன் Dr  சூரி அவர்கள் லாயட்ஸ் சாலையில் மருத்துவ தொழிலும் மற்றும் மருந்தகம் வைத்திருந்தார் .அந்த கடையின் பெயரின் முதல் மூன்று எழுத்துகள் எங்கள் குடும்பத்தைக் குறிக்கும் (SEA )சொல்லாக இருக்கும் கடையின் பெயர் SEAMARS CORPARATION .   SEA – எங்கள் குடும்பத்தைக் குறிக்கும், R -ராஜம்,S- சூரி அவர்களது குழந்தைகள் சிறப்பாக படித்து உயர்ந்த பதவியில் அமெரிக்காவிலும் மற்ற இடங்களிலும் வாழ்கிறார்கள்.
Dr  சூரி அவர்கள் வாழும் காலம் வரை எங்களது பெரியப்பா படத்தினை கடவுள் படத்திற்கு பக்கத்தில் வைத்து மரியாதை தருவார் .
அவர்கள்  இஸ்லாமிய முறைப்படியே எங்களை முறையிட்டு அழைபார்கள்.
(பெரிய சரித்திரம். சுருக்கமாக தந்துள்ளேன்) நான் சென்னையில் படித்ததால் தொடர்ந்து அவர்களை பார்த்து வருவது வழக்கம்
அவர் எழுதிய மடல்களை அவசியம் பாருங்கள்.
ஆரம்பம் 1 ல் 786 வைத்து தொடங்கும்.
( கடிதத்தை கிளிக் செய்து பெரிது படுத்தி படியுங்கள் )

Dr.Suri
Dr  சூரி தம்பதியர்களுக்கு ஒரு மகன் பாலா (அமெரிக்காவில் உள்ளார் )மூன்று மகள்கள் கீதா ,தாரா ,ரமா .
ரமா சென்னையில் பற்கள் சிகிச்சை மருத்துவராக (Dentist)பணி செய்கிறார்

பாசத்துடன் வாழ்த்துக்கள் Nazreen Salman அவர்களுக்கு

படங்கள் பேசும்
“A picture is worth a thousand words”
Mohamed Ali Mohamedali Jinnah

S.E.A. Mohamed Ali Jinnah,Nidur.
S.E.A.முகம்மது அலி ஜின்னா,
நீடூர்.
JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
“Allah will reward you [with] goodness.”

*சீன அதிபர் சொன்ன தத்துவக் கதை …

“சிறு வயதில் நான் மிகுந்த சுயநலக்காரனாக இருந்தேன். நல்ல பொருள் எதுவாக இருந்தாலும், எது கிடைத்தாலும், அதை நானே கைப்பற்றிக் கொள்வேன்.

இந்தக் குணத்தின் காரணமாகவே, மெதுவாக எல்லோரும் என்னை விட்டு விலக ஆரம்பித்தார்கள்.

ஒரு கட்டத்தில் எனக்கு நண்பர்களே இல்லாமல் போய் விட்டார்கள். நானோ என் மீது தவறு இருக்கிறது என்றே நினைக்கவில்லை;

மற்றவர்களைக் குறை சொல்லிக் கொண்டிருந்தேன். அந்தச் சமயத்தில் என் அப்பா எனக்குக் கற்றுக் கொடுத்த மூன்று வாக்கியங்கள் தாம் வாழ்க்கையில் எனக்கு உதவியாக இருந்தன.


ஒருநாள் அப்பா, இரண்டு அகலமான பாத்திரங்களில் நூடுல்ஸ் சமைத்து எடுத்து வந்தார்.

அந்த இரண்டையும் சாப்பாட்டு மேஜை மேல் வைத்தார். ஒரு பாத்திரத்திலிருந்த நூடுல்ஸின் மேல் மட்டும் ஒரு முட்டை வைக்கப்பட்டிருந்தது;

இன்னொன்றின் மேல் முட்டையில்லை. அப்பா என்னிடம் கேட்டார்… `கண்ணு… உனக்கு இந்த இரண்டில் எது வேண்டுமோ, நீயே எடுத்துக் கொள்!’ என்றார். அந்த நாட்களில் முட்டை கிடைப்பது அரிதாக இருந்தது.

புத்தாண்டின் போதோ, பண்டிகைகளின் போதோ தான் எங்களுக்குச் சாப்பிட முட்டை கிடைக்கும். எனவே, நான் முட்டை வைத்திருந்த நூடுல்ஸ் கிண்ணத்தை எடுத்துக் கொண்டேன்.

நாங்கள் சாப்பிட ஆரம்பித்தோம். என்னுடைய புத்திசாலித்தனமான முடிவுக்காக எனக்கு நானே என்னைப் பாராட்டிக் கொண்டேன். முட்டையை ஒரு வெட்டு வெட்டினேன். என் தந்தை அவருடைய கிண்ணத்தை எடுத்து சாப்பிட ஆரம்பித்த போது எனக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. அவருடைய கிண்ணத்தில் நூடுல்ஸுக்கு அடியே இரண்டு முட்டைகள் இருந்தன.

அதைப் பார்த்து விட்டு நான் மிகவும் வருத்தப்பட்டேன். அவசரப்பட்டு நான் எடுத்த முடிவுக்காக என்னை நானே திட்டிக் கொண்டேன். அப்பா மென்மையாகச் சிரித்தபடி என்னிடம் சொன்னார்…

`மகனே நினைவில் வைத்துக் கொள்… உன் கண்கள் பார்ப்பது உண்மையில்லாமல் போகலாம். மற்றவர்களுக்குக் கிடைப்பதை நீ அடைய வேண்டும் என நினைத்தால் இழப்பு உனக்குத் தான்.’’

அடுத்த நாளும் என் அப்பா இரண்டு பெரிய கிண்ணங்கள் நிறைய நூடுல்ஸ் சமைத்துக் கொண்டு வந்து சாப்பாட்டு மேஜையில் வைத்தார்.

முதல் நாளைப் போலவே ஒரு கிண்ணத்திலிருந்த நூடுல்ஸின் மேல் ஒரு முட்டை வைக்கப்பட்டிருந்தது; இன்னொன்றில் இல்லை. அப்பா என்னிடம் கேட்டார்… `

மகனே… உனக்கு இந்த இரண்டில் எது வேண்டுமோ, நீயே தேர்ந்தெடுத்துக் கொள்!’ இந்த முறை நான் கொஞ்சம் புத்திசாலித்தனமாக யோசித்தேன். முட்டை வைக்கப்படாத கிண்ணத்தை எடுத்துக் கொண்டேன். அன்றைக்கும் எனக்கு ஆச்சர்யம் காத்திருந்தது.

நூடுல்ஸை அள்ளும் குச்சியால், கிண்ணத்துக்குள் அடிவரை எவ்வளவு துழாவிப் பார்த்தும் ஒரு முட்டை கூடக் கிடைக்கவில்லை. அன்றைக்கும் அப்பா சிரித்தபடி சொன்னார்…

மகனே… எப்போதும் அனுபவங்களின் அடிப்படையிலேயே ஒன்றை நம்பக் கூடாது.

ஏனென்றால், சில நேரங்களில் வாழ்க்கை உன்னை ஏமாற்றக் கூடும், தந்திரத்தில் விழ வைக்கும். இதை ஒரு பாடமாக எடுத்துக் கொள். இதை எந்தப் பாடப்புத்தகங்களிலிருந்தும் கற்றுக் கொள்ள முடியாது.’

மூன்றாவது நாள், அப்பா மறுபடியும் இரு பெரிய கிண்ணங்களில் நூடுல்ஸ் சமைத்து எடுத்து வந்தார். இரு கிண்ணங்களையும் மேஜையின் மேல் வைத்தார்.

வழக்கம் போல ஒரு கிண்ணத்திலிருந்த நூடுல்ஸில் முட்டை; மற்றொன்றில் இல்லை. அப்பா கேட்டார்… மகனே நீயே தேர்ந்தெடுத்துக் கொள். உனக்கு இவற்றில் எது வேண்டும்?’ இந்த முறை அவசரப்பட்டு கிண்ணத்தை எடுத்து விடாமல் நான் பொறுமையாக அப்பாவிடம் சொன்னேன்…

அப்பா நீங்கள் தான் இந்தக் குடும்பத்தின் தலைவர். நீங்கள் தான் நம் குடும்பத்துக்காக உழைக்கிறீர்கள். எனவே, முதலில் நீங்கள் உங்களுக்கான கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். மற்றதை நான் எடுத்துக் கொள்கிறேன்’ என்றேன்.

அப்பா என் கோரிக்கையை நிராகரிக்கவில்லை. முட்டை இருந்த நூடுல்ஸ் கிண்ணத்தை எடுத்துக் கொண்டார். நான் எனக்கான நூடுல்ஸைச் சாப்பிட ஆரம்பித்தேன்.

நிச்சயமாக இந்தப் பாத்திரத்தில் முட்டை இருக்காது என்று தான் நினைத்தேன். அன்றைக்கும் எனக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. கிண்ணத்தின் அடியில் இரண்டு முட்டைகளிருந்தன.

அப்பா கண்களில் அன்பு கனிய என்னைப் பார்த்தார். பிறகு புன்முறுவலோடு சொன்னார்… மகனே, நினைவில் வைத்துக் கொள். மற்றவர்களுக்கு நீ நல்லது நினைக்கும் போதெல்லாம், உனக்கும் நல்லதே நடக்கும்!’

அப்பா சொன்ன இந்த மூன்று வாசகங்களை, வாழ்க்கைப் பாடங்களை எப்போதும் நான் நினைவில் வைத்திருக்கிறேன். அதன்படி தான் நான் செயலாற்றுகிறேன்.

உண்மையைச் சொல்லப் போனால், நான் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறேன்…’
http://tamiludayam.in/2018/06/%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/

கற்க…கசடற.

Dr.Vavar F Habibullah · திருவள்ளுவர்…! ஹிந்துவா,கிருத்துவரா, சமணரா அல்லது பவுத்தரா என்பது தெரியாது.ஆனால் அவர், தமிழ் இன மக்களுக்காக…

Source: கற்க…கசடற.