இரண்டு யூதர்கள்!

desert
அவர்கள் சாமுவேல் மற்றும் பெஞ்சமின். நெடுந்தொலைவு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இரு யூதர்கள். ஒரு பாலைவனத்தைக் கடந்து செல்லும்போது ஏற்பட்ட கடும் மணற்புயலால் தம் திசையைத் தொலைத்து விட்டனர்.
எங்கு அலைந்து தேடியும் செல்ல வேண்டிய வழி புலப்பட வில்லை. கையில் கொண்டு வந்திருந்த உணவும் நீரும் தீர்ந்து விட்டதால் பசியின் பிடியில் சிக்கித் தவித்தனர்.
கிட்டத்தட்ட சுய நினைவை இழக்கும் தருவாயில், விடிகாலை நேரத்தில் ஒரு குடியிருப்புப் பகுதி கண்ணில் பட்டது கண்டு மகிழ்ச்சியடைந்தனர் இருவரும். தொழுகைக்கான பாங்கு சப்தம் அந்த இடத்திலிருந்து கேட்க, நெருங்கிச் சென்று பார்த்தபோது அது ஒரு பள்ளிவாசல் என்பதைக் கண்டனர்.
ஏதோ உணர்ந்தவனாக சாமுவேல் கூறினான். “பெஞ்சமின்.. இதோ பார். இது முஸ்லிம்கள் வசிக்கும் பகுதி என்பது நிச்சயம். நாம் முஸ்லிம்கள் என்று நடித்தால் மட்டுமே உணவு கிடைக்கும். எனவே, என் பெயரை முஹம்மத் என்று சொல்லப்போகிறேன்.”

  • பெஞ்சமின் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. “என் பெயர் பெஞ்சமின் தான். பொய் சொல்லி அவர்களை ஏமாற்றி உண்ண விரும்பவில்லை!”
    களைத்துத் தளர்ந்து போய் பள்ளிவாசலுக்குள் புகுந்த இருவரையும் கனிவோடு வரவேற்ற இமாம், அவர்களிருவரின் பெயர், விபரங்களை விசாரித்தார்.
    “நான் முஹம்மத்” என்றான் சாமுவேல்
    “நான் பெஞ்சமின், நானொரு யூதன்” என்றான் பெஞ்சமின்
    அவர்களின் உருவத்தை வைத்தே பசியில் இருப்பதை அறிந்து கொண்ட இமாம், பள்ளிவாசலின் உட்புறம் திரும்பி உதவியாளர்களை அழைத்தார்.
    “தயவு செய்து உடனடியாக பெஞ்சமினுக்கு உணவு கொண்டு வாருங்கள்”
    அதிர்ச்சியில் உறைந்து போய் உட்கார்ந்திருந்த சாமுவேலிடம் இமாம் கூறினார். “முஹம்மத், இது ரமளான் மாதம் என்பதை நீங்கள் அறிவீர்கள்”
    – அபூ ஸாலிஹா
    (ஆங்கில சொற்பொழிவு ஒன்றின் தோராய தமிழாக்கம்)
    Source: http://www.satyamargam.com/இரண்டு யூதர்கள்!
    வாரும் நபியே நீர் வாரும் நபியே

  • WON’T THOSE DAYS COME AGAIN? அந்த’ நாட்கள் மீண்டும் வந்திடாதோ?

    kural983WON’T THOSE DAYS COME AGAIN? அந்த’ நாட்கள் மீண்டும் வந்திடாதோ?
    WON’T THOSE DAYS COME AGAIN? (translated from The original Tamil version -with some editing – which is given in the bottom of this article)

    People like us who were born between 1930-80 were really very, very lucky even if the present day children or people of this generation think about us otherwise or mock at us.

    Not in separate beds we slept but with our mother and father together. We were not allergic to any type of food. Kitchen cup-boards wouldn’t have child-proof locks. We were not carriers of books like bullocks. We did not play with helmet while cycling. On return from school we would rush go to play till the sunset. We were not confined to a room, thus preventing ourselves from looking at the outside world.

  • We played with the living, natural, visible friends and not with invisible internet-friends. On being thirsty, we would straightaway go to drink water direct from street-taps and we would not look for bottled mineral water. Even if four friends drank and share the same juice, none had the fear of getting infected from one another. Even after having plate-full of sweets and rice, we wouldn’t be so much obese. Nothing would happen to our legs even if we roamed around throughout the day, bare-footed

    We did not have to put on glasses despite studying under dim candle lights or street lights. We wouldn’t consume nutrient drinks for gaining body strength which we achieved by consuming the water poured on surplus rice remaining after the previous night’s meals. We gleefully played by making the game equipments on our own. Our parents were not rich millionaires. Still they did not run after money . They looked for and bestowed love and not items

    We were very close to them. For them to be in touch with us ….a strong shouting was just enough. No need to look for mobile phone to call us. On being unwell, doctor would come to us and we wouldn’t run to the doctor

    We did not convey our feelings through mobile with fake words. We conveyed our true feelings from our hearts through a letter. So we never broke our words. We had no cell-phone, DVD, Play Stations, X-box, video game, PC, Net, Chat but we had many true friends

    Whenever wished, we would go to our friends’ houses and enjoyed ourselves having nice food and discussions. There was no need to seek prior permission to visit their houses. We had very talented leaders during our era. They spent their wealth for the society. They were not looting the wealth of the society like is being heard of nowadays

    Relatives were very close to each other. So our hearts were serene and thus we did not need health insurance. Our photos would be in black and white but one could feel the colorful good intentions of the people therein. The photos taken now could be in colour but the thoughts of the people therein are dark . We were not beggars of freebies.

    Please say now if we are lucky or unlucky after being born in that era.

    ‘அந்த’ நாட்கள் மீண்டும் வந்திடாதோ?

    1930- 1980 வரை பிறந்த நம்மை போன்றவர்களை இந்த கால குழந்தைகள் அல்லது இந்த ஜெனரேஷன் மக்கள நம்மைபற்றி என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே.

    தனி படுக்கையில் அல்ல அம்மா அப்பாக்கூட படுத்து உறங்கியவர்கள் நாம் தான். எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை. கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை. புத்தகங்களை சுமக்கும்பொதிமாடுகளாகஇருந்ததில்லை. சைக்கிள் ஒட்டும் போது ஹெல்மேட் மாட்டி ஒட்டி விளையாண்டது இல்லை. பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை ஒரே விளையாட்டுதான், ரூமிற்குள் அடைந்து உலகத்தை பார்ப்பதில்லை.

    நாங்கள் விளையாடியது நிஜ நண்பர்களிடம் தான் நெட் நண்பர்களிடம் இல்லை. தாகம் எடுத்தால் தெரு குழாய்க்களில் தண்ணிர் குடிப்போம் ஆனால் பாட்டில் வாட்டர் தேடியதில்லை. ஒரே ஜூஸை வாங்கி நாலு நண்பர்களும் மாறி மாறி குடித்தாலும் நோய்கள் எங்களை வந்தடைந்ததில்லை. அதிக அளவு இனிப்பு பண்டங்களையும் தட்டு நிறைய சாதம் சாப்பிட்டுவந்த போதிலும் ஒவர் குண்டாக இருந்ததில்லை. காலில் ஏதும் அணியாமல் இருந்து நாள் முழுவதும் சுற்றி வந்தாலும் காலுக்கு ஏதும் நேர்ந்ததில்லை.

    சிறு விளக்கு வெளிச்சத்தில் படித்து வந்தாலும் கண்ணாடி அணிந்ததில்லை. உடல் வலிமை பெற ஊட்டசத்து பானங்கள்அருந்தியதில்லை. மிஞ்சிய சாதத்தில் ஊற்றி வைத்த நீரைச் சாப்பிட்டே உடல் வலிமை பெற்றவர்கள். எங்களுக்கு வேண்டிய வீளையாட்டு பொருட்களை நாங்களே உருவாக்கி விளையாடி மகிழ்வோம். எங்கள் பெற்றோர்கள் பண வசதி மிக்க லட்சாதிபதிகள் அல்ல ஆனாலும் அவர்கள் பணம் பணம் என்று அதன் பின்னால் ஒடுபவர்கள் அல்லர். அவர்கள் தேடுவதும் கொடுப்பதும் அன்பை மட்டுமே பொருட்களை அல்ல.

    அவர்கள் தொடர்பு கொள்ளும் அருகாமையில்தான் நாங்கள் இருந்து வந்தோம். அவர்கள் எங்களை தொடர்பு கொள்ள ஏலேய்ய்ய் என்ற ஒரு வார்த்தை போதுமானதாக இருந்தது. அதனால் தொடர்பு கொள்ள செல்போனை தேட அவசியமில்லை. உடல் நலம் சரியில்லை என்றால் டாக்டர் வீடு தேடி வருவார். டாக்டரை தேடிஒடியதில்லை.

    எங்களது உணர்வுகளை போலியான உதட்டசைப்பினால் செல்போன் மூலம் பறிமாறவில்லை. உள்ளத்தில் இருந்து வரும் உண்மைகளை எழுத்தில் கொட்டி கடிதமாக எழுதி தெரிவித்து வந்தோம். அதனால் சொன்ன சொல்லில் இருந்து என்றும் மாறியதில்லை. எங்களிடம் செல்போன் டிவிடி, ப்ளை ஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ், வீடியோ கேம் பெர்சனல் கம்பியூட்டர், நெட், சாட் போன்றவகள் இல்லை. ஆனால் நிறைய நிஜமான நண்பர்கள் இருந்தனர்.

    வேண்டும் பொழுது நினைத்த நண்பர்கள் வீட்டிற்கு சென்று உணவுண்டு உரையாடி மகிழந்து வந்தோம். அவர்கள் வீட்டிற்கு போவதற்கு போனில் அனுமதி பெற தேவையில்லை. எங்கள் காலங்களில் திறமை மிக்க தலைவர்கள் இருந்தனர். அவர்கள் சமுகத்திற்காக தங்கள் செல்வங்களை செலவிட்டனர். இந்த காலம் போல சமுக செல்வங்களை கொள்ளை அடித்தவர்கள் அல்லர்.

    உறவுகள் அருகில் இருந்தது உள்ளம் நன்றாக இருந்ததால் உடல் நலம் காக்க இன்சூரன்ஸ் எடுத்தத்தில்லை. நாங்கள் எடுத்த புகைபடங்கள் கருப்பு வெள்ளையாக இருந்தாலும் அதில் உள்ளவர்களிடம் வண்ணமயமான நல்ல எண்ணங்கள் இருப்பதை உணரலாம். ஆனால் இப்போது எடுக்கப்படும் படங்கள் கலராக இருக்கலாம் ஆனால் அதில் உள்ளவ்ர்களின் எண்ணங்கள் கருப்பாகவே இருக்கின்றன. இலவசம் பெறும் பிச்சைகாரர்களாக இருந்ததில்லை. இந்த காலங்களில் பிறந்து வளர்ந்த வந்த நாங்கள் அதிர்ஷ்ட சாலிகளா இல்லையா என்பதை இப்ப சொல்லுங்கள்.

    Regards

    Faizur AMB
    https://www.youtube.com/watch?v=_rE2qOP1MBQ

  • “உங்களுக்காகவே இங்கு இருக்குறேன்..” மயிலாடுதுறை மருத்துவர் ராமமூர்த்தி.(Dr.V.Ramamurthi.M.B.B.S.,)

    முடிகொண்டானிலிருந்து வந்து மயிலாடுதுறைக்கு மகுடம் சூட்டிய மருத்துவர் ராமமூர்த்தி
    Photo-0002Photo-0003

    Photo-0004

  • Photo-0005

    Photo-0006

    Photo-0008

    Photo-0007

    ராமமூர்த்தி டாக்டர் தந்தை S.வெங்கட்ராமன் S.Venkaetaraman
    ராமமூர்த்தி டாக்டர் தாய் V. ராதை V.Rrathai

    Photo-0009
    மருத்துவர் ராமமூர்த்தி அவர்களுக்கு ஒரே மகனார் Dr.SRINIVASAN அவரும் ஒரு சிறந்த மருத்துவர் .
    Dr.SRINIVASAN சிறுநீரக சிகிச்சை நிபுணர்( Dr.SRINIVASAN.M.S., DNB(GS),DNB.(URO) FRCS
    CONSULTANT UROLOGIST

    Photo-0010 ராமமூர்த்தி டாக்டர் அவர்களுடன் நான் (முகம்மது அலி ஜின்னா,நீடூர்)

    ராமமூர்த்தி டாக்டர் தந்தை S.வெங்கட்ராமன் S.Venkaetaraman
    ராமமூர்த்தி டாக்டர் தாய் V. ராதை V.Rrathai

    மருத்துவர் ராமமூர்த்தி அவர்களுக்கு ஒரே மகனார் Dr.SRINIVASAN அவரும் ஒரு சிறந்த மருத்துவர் .
    Dr.SRINIVASANசிறுநீரக சிகிச்சை நிபுணர்( Dr.SRINIVASAN.M.S., DNB(GS),DNB.(URO) FRCS
    CONSULTANT UROLOGIST

    முடிகொண்டானிலிருந்து வந்து மயிலாடுதுறைக்கு மகுடம் சூட்டிய மருத்துவர் ராமமூர்த்தி Dr.V.Ramamurthi.M.B.B.S.,
    மயிலாடுதுறை சுற்று வட்டார மக்களுக்கு ராமமூர்த்தி டாக்டர் மிகவும் நேசமானவர்.
    மருத்துவம் இவருக்கு ஒரு சேவையானது,
    இவரது தந்தை S.வெங்கட்ராமன் S.Venkaetaraman
    தாய் V. ராதை V.Rrathai
    பிறப்பு :ஊர்- முடிகொண்டான்
    மருத்துவர் ராமமூர்த்தி அவர்களுக்கு ஒரே மகனார் Dr.SRINIVASAN அவரும் ஒரு சிறந்த மருத்துவர் .
    Dr.SRINIVASAN சிறுநீரக சிகிச்சை நிபுணர்( Dr.SRINIVASAN.M.S., DNB(GS),DNB.(URO) FRCS
    CONSULTANT UROLOGIST
    மருத்துவர் ராமமூர்த்தி மருமகளும் ஒரு மருத்துவர். தனது மகன் சென்னையோடு தன்னோடு இருக்கச் சொல்லியும் மயிலாடுதுறை மக்கள் நலம் நாடி தனது மனைவியோடு இருந்து தொடர்ந்து மருத்துவ சேவை செய்து வருகின்றார். அவர் தான் பார்க்கும் நோயாளிகளிடமிருந்து பணம் கேட்பதே கிடையாது . நாமே விரும்பி அவரது மேஜையில் ஐந்து ,பத்து ,இருபது நம் விருப்பத்திற்கு நம் திருப்திக்கு வைத்து வர வேண்டியதுதான். சிலர் குறிப்பாக ஏழைகள் பணம் தருவதை அவர் விரும்புவதில்லை .’உங்களுக்காகவே இங்கு இருக்குறேன் தனது மகன் சென்னையோடு தன்னோடு இருக்கச் சொல்லியும் போகாமல் இருக்கிறேன்’ என்பார் .
    அவர் வேண்டுதலுக்கு இணங்க அவர் மகனும் ஒரு மாதத்தில் இரண்டு நாட்கள் தன் தந்தையோடு இருந்து நீர் வியாதிக்கான வைத்தியம் பார்கிறார் .அவரும் அதிகமாக பணம் வாங்குவதில்லை.
    எங்கள் குடும்பத்தோடு மிகவும் நெருக்கமானவர் . அவரது தந்தை எனது பெரியப்பாவை மிகவும் நேசிப்பார் .ராமமூர்த்தி டாக்டர் அவர்களுக்கு கும்பகோணம் சிட்டி யூனியன் கணக்கு திறக்க எங்கள் பெரியப்பா மயிலாடுதுறையில் பெரிய கடை வீதியில் அப்துற் ரஹ்மான் சாஹிப் (‘பெரிய முதலாளி ‘ என்று அழைப்பார்கள்) கையழுத்திட்டு தொடங்கி வைத்தார் என பெருமையாக விசுவாசமாகச் சொல்வார் .இன்றும் சொன்னார்.

    புனிதமான மருத்துவத் தொழில் மயிலாடுதுறையில் ராமமூர்த்தி டாக்டரால் புனிதம் பெற்றது அருகாமையிலுள்ள கிராமப்புறங்களில் இருந்தெல்லாம் மக்கள் அவரிடம் வருவார்கள். அவர் பரிந்துரைக்கும் மருந்து கூட மிகக் கம்மியான விலை கொண்டதாகத்தான் இருக்கும்.

    டாக்டர் ராமமூர்த்தி அவர்கள் குடும்பம் நீடித்து வாழ்ந்து சேவை செய்ய இறைவனை பிரார்த்திப்போம்
    அன்புடன்,
    S.E.A. முஹம்மது அலி ஜின்னா.
    நீடூர்.
    S.E.A. Mohamed Ali Jinnah,Nidur.

    JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
    “Allah will reward you [with] goodness.”

  • Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 3 Final) – இளையராஜா டொராண்டோ

    Rogers Centre Toronto Ilayarajaதன் உயிருள்ளவரை இசைதான் உயர்ந்தது கவிதைகள் தாழ்ந்தவை என்று நிரூபிக்கும் வெறி இளையராஜாவை விட்டு அகன்றால் நான் ஆயிரத்தெட்டு தேங்காய் உடைப்பேன் என்று வேண்டிக்கொண்டேன் எங்கள் வீட்டின் சட்னித் தேவைக்கு 😉

    என் நாடி நரம்புகளை எல்லாம் தீண்டிய இசையைத் தந்த இளையராஜா ஏன் இப்படி ஆகிப்போனார் என்று எனக்குக் கவலை உண்டு. என் இதயம் கவர்ந்த இசைவேந்தர் இளையராஜாவின் கர்வ நெஞ்சம் அப்போதே மாறவேண்டும் என்று அந்த நொடியே ஆசைப்பட்டேன்.

    இளையராஜாவின் திறமைக்கும் இசை ஞானத்திற்கும் அவரின் தலையில் இமயமலை அளவுக்குக் கனம் இருக்கலாம் தப்பே இல்லை. அதை நான் அப்படியே ஏற்றுக்கொள்வேன். ஆனால் அந்தக் கனம் தமிழை நசுக்கிச் சாகடிக்கிறதென்றால் ஏற்க ஒரு தமிழனாய் என்னால் முடியவில்லை.

    ஓ…. இளையராஜா, நம் தமிழன்னை அள்ளிக் கொஞ்சி நேசிக்கும் தமிழன் நீ. அது உங்கள் பிரியமான எதிரி வைரமுத்து சொல்வதுபோல நெருப்பில் போட்டெடுத்த நிஜம்.

    சுமார் பத்தாண்டுகள் வைரமுத்து + இளையராஜா பாட்டுக்களால் இந்த வையம் தித்திக்கும் தேன் பூக்களால் மூச்சு முட்ட முட்ட நிறம்பிப் போனதை எவரும் மறந்திருக்க முடியுமா?

    இளையராஜா இசை உலகில் ஒரு நீல வானம் என்றால் வைரமுத்து திரையிசைப் பாடல் உலகில் ஒரு செவ்வானம்.

    களங்கள் வேறு என்றாலும் உயரம் சற்றும் குறைந்ததல்ல. இப்படியான பிள்ளைகளைக் கொண்ட தமிழன்னை உள்ளம் முழுவதும் பூரித்திருந்தாள். ஆனால் இயல் என்ற தமிழை தற்காலிகமாக நசுக்கிய இளையராஜா இசை என்ற தமிழால் அவள் கண்ணீர் மட்டுமே சிந்தினாள். இதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

    இளையராஜாவின் தனிச்சிறப்பே அவர் தமிழிசையை வானுயர உயர்த்தினார் என்பதுதான். ஆனால் அதில் பெரும் கரும்புள்ளியாய் தமிழை அதல பாதாளத்த்துக்குத் தள்ளினார் என்பது எத்தனைப் பெரிய கலங்கம் இளையராஜாவுக்கு?

  • கனடாவின் மேடையிலும் வைரமுத்து இளையராஜா இணைந்த பாடல்களுள் ஒன்றுகூட பாடப்படவே இல்லை. பாடியிருந்தால், நான் புல்லரித்துப் போயிருப்பேன். அரங்கமே அழுது நிறைந்திருக்கும்.

    இளையராஜா தன் நிகழ்ச்சியைத் தொடங்கும்போது இது பனிவிழும் மலர்வனம் என்றார். வெளியே பனி உள்ளே இசை வனம் என்று அழகாகச் சொன்னார்.

    அது இளையராஜாவும் வைரமுத்து இணைந்திருந்ததால் வந்த அற்புதப் பாட்டு.

    பனிவிழும் மலர்வனம்
    உன் பார்வை ஒரு வரம்
    இனிவரும் முனிவரும்
    தடுமாறும் கனிமரம்

    சேலை மூடும் இளம் சோலை
    மாலை சூடும் மண மாலை
    இருபது நிலவுகள் நகமெங்கும் ஒளிர்விடும்
    இளமையின் கனவில் விழியோரம் துளிர்விடும்

    இப்படியே தேன் சொட்டச் சொட்ட வழிந்துகொண்டே போய்க்கொண்டிருக்கும் இந்தப் பாட்டு.

    ஆனால் மேடையில் அந்தப் பாடலை இளையராஜா பாடவே இல்லை!

    2கண்ணதாசன் திரையிசைப் பாடல்களுக்குள் சந்தக் கவிதைகளையும் சங்கடமே தராத எளிய வார்த்தைகளையும் அற்புதமாய் வழங்கினார்.

    வைரமுத்து புதுக்கவிதைகளை திரையிசைப் பாடல்களுக்குள் அப்படியே முறுகல் நெய் தோசைகளாக ஐவகை சட்னி சாம்பார் பொடிகளோடு அமர்க்களமாகத் தந்தார்.

    வைரமுத்துவுக்குமுன் புதுக்கவிதைகளை பாடல்களில் பொத்தி வைத்த மல்லிகை மொட்டு வேறு யாராவது உண்டா? அந்தப் பாட்டுக்காரனுக்குத்தான் எத்தனை எத்தனை தேசிய விருதுகள். வேறு எவருக்கு அத்தனை தேசிய விருதுகள் திரைப்படப்பாடலுக்காக இந்த உலகில் கிடைத்தது? சிந்திக்க வேண்டாமா?

    அவன் தமிழை அடித்து நொறுக்கி அழித்துப் போட்ட ராஜா ராஜாதானா? பட்டு ரோஜா ரோஜா இவர்தானா? எப்படி இருக்க முடியும் பட்டு ரோஜாவாய்?

    வைமுத்து என்ற மனிதனை ராஜா மானசீகமாக வெறுக்கலாம், ஆனால் வைரமுத்துவின் இசைத்தமிழை எப்படி தமிழர்கள் கேட்கக்கூடாது என்று தடுக்கலாம்?

    கண்டநாள் முதல் வைரமுத்துவைப் போற்றிப்பாடிய நீங்களே தூற்றிப்பாடுவது சரியா ராசய்யா?

    உங்கள் இருவரின் இணைவில் வந்த கற்பூரப் பிறப்புகள் எத்தனை எத்தனை. அவை அனைத்தையும் தமிழர்களுக்கு இல்லாமல் செய்ய உங்களுக்கு என்ன உரிமை உண்டு இளையராஜா?

    -அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
    -பொத்தி வச்ச மல்லிகை மொட்டு பூத்திருச்சு வெக்கத்த விட்டு
    -இளைய நிலா பொழிகிறது இதயம் வரை
    -இது ஒரு பொன் மாலைப் பொழுது
    -கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்
    -சங்கீத ஜாதிமுல்லை காணவில்லை
    -சூரியன் வழுக்கிச் சேற்றில் விழுந்ததது சாமி
    -என்விதி அப்போதே தெரிந்திருந்தாலே கர்ப்பத்தில் நானே கலைந்திருப்பேனே?

    என்று எத்தனை எத்தனை மகுடங்கள்? அத்தனை மகுடங்களையும் தமிழன்னையின் தலையிலிருந்து கழற்றி எறிய உங்களுக்கு உரிமை தந்தது யார்?

    எங்கள் கண்களெல்லாம் உங்கள் இசைகேட்டுக் கசியாத நாளுண்டா? ஆனால் தமிழைத் தள்ளிவைத்து தவறு செய்தது மட்டுமல்லாமல் இன்றுவரை அதே பிடிவாதத்தில் இருக்கிறீர்களே இளையராஜா. இது தகுமா?

    தமிழைவிட உங்களுக்கு உங்கள் வரட்டுக் கௌரவம்தான் பெரிதாகிவிட்டதா?

    எந்த மேடையிலும் உங்களைத் தரக்குறைவாகப் பேசுவதில்லை வைரமுத்து. ஆனால் நீங்கள்? கிடைக்கும் மேடைகளை எல்லாம் அவரைத் தூற்றவே பயன்ப்டுத்துகிறீர்களே? என்றால் நீங்கள் தோற்றுவிட்டீர்கள் என்றுதானே அர்த்தம்?

    இளையராஜா மறக்காமல் மலேசியா வாசுதேவன் அவர்களை நினைவு கூர்ந்து பேசியதைக் கேட்க மகிழ்ச்சியாய் இருந்தது. மலேசியா வாசுதேவன் பாடிய ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே அதேபோல அழகாகப் பாடப்பட்டது.

    ஜெயச்சந்திரன் பாடிய…

    மாஞ்சோலைக் கிளிதானோ
    மான் தானோ மீன் தானோ
    வேப்பந் தோப்புக் கிளி நீ தானோ?

    என்ற பாடலை ஹரிஹரனை வைத்துப் பாடவைத்தார் இளையராஜா. அத்தனை அற்புதமாய் இருந்தது அது. ஹரிஹரன் குரலிலும் பாவத்திலும் இந்தப் பாடலைக் கேட்கும்போது தனக்கு வேறு வகையில் இந்தப் பாடலை அமைக்கத் தோன்றுவதாக இளையராஜா விரும்புவதாக பார்த்திபன் சொன்னார்.

    அடுத்து எனக்குப் பிடித்தபாடலாய் வந்தது ”நெஞ்சுக்குள்ளே இன்னாரென்று சொன்னாத் தெரியுமா?” இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் அலுப்பதே இல்லை எனக்கு.

    3ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ என்ற பாடலை எஸ்பிபி பாடினார். பாடல் முடிந்ததும் சுவையான இசை விருந்து ஒன்று நிகழ்ந்தது.

    கரகாட்டக் காரன் படத்தில் வரும் “மாங்குயிலே பூங்குயிலே” என்ற மெட்டில் அப்படியே ராத்திரியில் பூத்திருக்கும் பாடல் வரிகளைப் பாடிக்காட்டினார் இளையராஜா. அரங்கு அப்படியே கைத்தட்டல்களால் சூடானது. அப்படியே ராத்திரியில் பூத்திருக்கும் மெட்டில் மாங்குயிலே பாட்டு வரிகளையும் பாடிக்காட்டினார்.

    ”தென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே” என்ற உருக்கமானப் பாடலையும் பாடிவிட்டு, அண்ணே நீங்க எப்படி “நிலா அது வானத்துமேலே” என்றும் பாடினீங்க என்று விவேக் கேட்டார். அதற்கு இளையராஜா ஒரு சுவாரசியமான தகவலைச் சொன்னார்.

    உண்மையில் மணிரத்தினம் நாயகனில் கேட்ட சூழலுக்கு “தென்பாண்டிச் சீமையிலே” மெட்டையும் ”நிலா அது வானத்து மேலே” என்ற மெட்டையும் போட்டுக் கொடுத்திருக்கிறார் இளையராஜா. ஒன்றை எடுத்துக்கொண்டு, அதோடு நில்லாமல் இரண்டாவது மெட்டையும் தனக்கே வேண்டும் என்றும் அதைக் கொஞ்சம் மாற்றி உஜாலாவாகப் பாடுவதுமாதிரி மாத்திக்கொடுங்கள் என்றும் கேட்டாராம்.

    நிலா அது வானத்து மேலே என்ற பாடலை தென்பாண்டிச் சீமையிலே பாடல் போன்ற ஓர் உருக்கமான மெட்டில் மிக அழகாகப் பாடிக்காட்டி ஏராளமான கைத்தட்டல்களைத் தட்டிக்கொண்டுபோனார் இளையராஜா. இப்படியே இசையின் நெளிவு சுழிவுகளைப் பேசப் பேச நான் மிகுந்த ஆனந்தம் அடைந்தேன். அதனால்தான் அப்படியான நிமிடங்களையே எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.

    மற்ற இசையமைப்பாளர்கள் செய்வதுபோலெல்லாம் நடனங்களோடு பாடல் என்றெல்லாம் இளையராஜா செய்யவில்லை. நிகழ்ச்சி முழுவதும் இசை இசை இசை மட்டுமே என்று அழகாகவும் எளிமையாகவும் செய்திருந்தார். நிச்சயம் அது பாராட்டுக்குரிய ஒன்று.

    பார்த்திபன் பாதியில் விடைபெற்றதும் விவேக் வந்தார். வரும்போதே அரங்கம் சிரிப்பால் கடகடத்துப் போனது. உனனே பார்த்திபன் அவரை புதுமாதிரியாக அறிமுகம் செய்யத் தொடங்கினார். நிகழ்ச்சியின் உச்ச நிலைக் கைத்தட்டல்களில் அதுவும் ஒன்று.

    விவேக் இளையராஜாவின் மிகப்பெரிய ரசிகர். இளையராஜா பாட்டைக் கேட்டுக் கேட்டு இளையராஜா பாட்டாகவே ஆகிப்போனார் விவேக். அதைக் கொஞ்சம் சோதித்துப் பார்க்கலாமா என்றார் பார்த்திபன். விவேக் சரியென்று சொல்லி நேராக நின்றார்.

    விவேக்கின் தலையில் பார்த்திபன் தன் கையை வைத்தார். உடனே தலை தொடர்பான ஒரு இளையராஜா பாட்டு வந்தது விவேக்கிடமிருந்து. கைத்தல்கள் அரங்கைப் பிளந்தன. பின் நெற்றியைத் தொட்டார். நெற்றி தொடர்பான இன்னொரு பாட்டு. மீண்டும் கைத்தட்டல்கள். பின் மூக்கைத் தொட்டார்…. அதற்கொரு பாட்டு. ஆ ஆ வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன் என்ற மூக்கால் பாடும் பாட்டு. கைத்தட்டல். பிறகு இடுப்பைத் தொட்டார்….. அவ்வளவுதான் ஹாங்ங்ங்ங்ங்ங்ங்ங்…. நிலாக்காயுது நேரம் நல்ல நேரம்…. என்று வெகு கவர்ச்சியாகப் பாடினார். சொல்ல வேண்டுமா?

    அப்போது தொடங்கியதுதான் சிரிப்பலைகள். விவேக் அசராமல் அனைவரையும் சிரிக்க வைத்துக்கொண்டிருந்தார். நிச்சயமாக விவேக் இளையராஜாவின் இசை நிகழ்ச்சிக்கு மிகுந்த வலிமைதான்.

    நீ ஒரு காமெடியன் நீ எதை வேண்டுமானாலும் காமெடி பண்ணு என்னை வெச்சிமட்டும் காமெடி பண்ணாதே என்று இளையராஜா ஒரு முறை சிரித்துக்கொண்டே ஆனால் சீரியசாகச் சொன்னார்.

    பாத்தீங்களா, அண்ணன் ரொம்ப ஸ்ட்ரிக்டு…… ஸ்ட்ரிக்டு….. ஸ்ட்ரிக்டு….. என்று சொல்லி அதையும் காமெடி ஆக்கினார் விவேக்.

    விவேக் விடைபெற்றதும் பிரசன்னா வந்தார். அவர் மைக்கைக் கையில் எடுத்து ஏதோ கிசுகிசுத்தார். ஒருவருக்கும் ஒன்றும் கேட்கவில்லை. மைக்கை பக்கத்துல வெச்சிக்கங்க என்று பார்த்திபன் சொன்னார். மீண்டும் பாதாளத்திலிருந்துதான் குரல் வந்தது. பிரசன்னாவுக்கு மேடை அனுபவமே இல்லை என்று புரிந்துகொண்டேன். மைக்கைக் கையில் வாங்கினால் அரங்கத்தை அதிரடிக்க வேண்டாமா?

    அப்படியே முக்கலும் முணகலுமாய் இதோ என் மனைவி சினெகா வந்திருக்கிறார். நாங்கள் இருவரும் இளையராஜாவின் ரசிகர்கள். எங்கள் காதலுக்கும் கல்யாணத்துக்கும் காரணம் இளையராஜாதான் என்றார். அவர் பாடல்களைப் பாடித்தான் நாங்கள் காதலித்தோம் கைப்பிடித்தோம் வாழ்கிறோம் என்று புகழ்ந்தார்.

    ஆனால் இளையராஜா இதற்குச் சட்டெனக் குறுக்கிட்டார். நீங்க பண்ற கூத்தையெல்லாம் என் தலையில் போடாதீர்கள். நான் ஏதோ என் இசைப்பயணத்தில் இருக்கிறேன். அந்தப் பாடல்களை நீங்கள் கேட்டு காதல் வயப்பட்டால் அதற்கு நான் பொறுப்பாளியல்ல என்றார்.

    ஆனால் அடுத்த பாட்டு ஆரம்பிக்கும்போது பிரசன்னா இளையராஜாவுக்கு ஒரு பதிலோடு வந்தார். ”இந்தக் கால இளைஞர் செய்யும் காதலுக்கு இளையராஜா எந்தன் பாட்டிருக்கு” என்று நீங்க தானே சார் பாடினீங்க அதனால்தான் நாங்க காதலிச்சோம் என்றார்.

    மேடையில் சினேகா தோன்றினார். பிரசன்னா சினேகா இருவரின் ஆடையலங்காரம் மிக மிகக் கவர்ச்சிகரமாக இருந்தது. மேடைக்கே அது ஒரு புது வர்ணம் பூசியது. ஹலோ டொராண்டோ என்று சினேகா கணீர் என்று முழங்கினார்.

    4கடைசியாக இளையராஜா, வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்காக என்று ஒரு பாடலின் வார்த்தைகளை மாற்றிப் பாடினார். ஆனால் ஈழத் தமிழர்களைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லவில்லை. அவர்களுக்காக ஒரு பாடலை உருவாக்கிக்கொண்டு வரவில்லை. அந்த ஈழ ஏக்கக் கண்களுக்கு எந்த ஒரு போலிக் கனவைக்கூட பரிசளிக்கவில்லை. அவர்மட்டும் அல்ல நீயா நானா கோபியோ, பார்த்திபனோ, விவேக்கோ, கார்த்திக் ராஜாவோ, யுவன் சங்கர் ராஜாவோ எவருமே ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அது ஏன் என்று யோசித்துக்கொண்டே இருக்கிறேன்.

    அப்படியே ஒருவழியா இளையராஜாவின் வடை பாயச இசை விருந்து முடிந்துபோனது. நான் பனியில் நனைய என்னைத் தயார்ப் படுத்திக்கொண்டேன். அந்த ஊசிக் குளிரில் கொட்டும் பனியில் மக்கள் இறங்கி நடந்து விடைபெற்றார்கள். ஒரு ஆறுதல் வார்த்தை தந்திருக்கலாம்தான் வேறு எதைச் செய்துவிட முடியும் உங்களால் என்று மீண்டும் எனக்குத் தோன்றியதைத் தடுக்க முடியவில்லை.

    நிகழ்ச்சிக்குச் செல்லும்போது எனக்கு அதிக அளவில் எதிர்ப்பார்ப்புகள் இருந்தன. நான் இன்னும் ஆழத்துக்குப் போகலாம் என்ற கனவுகளோடுதான் சென்றேன். என் எதிர்பார்ப்புகளில் தவறிருந்ததாக நான் இப்போதும் நினைக்கவில்லை. எனக்கான இசைத் தீனி போதவில்லை என்று எனக்குப்பட்டது.

    இளையராஜா என்னை ஆட்டிப்படைத்த இசைஞானி. இன்று அவரைத் தேடித் தேடிப் பார்க்க வேண்டிய நிலை.

    என்ன காரணம் என்று மீண்டும் யோசித்துக்கொண்டே வீடுவந்து சேர்ந்தேன்.

    (நிறைந்தது – உள்ளமல்ல நிகழ்ச்சி வர்ணனை)
    Source : http://anbudanbuhari.blogspot.ca/2013/02/ilayaraja-toronto-16-feb-2013-part-3.html
    Catching Canada.- கவரும் கனடா

  • நான் முட்டாள் ஒவ்வொரு முறையும் வாங்கிக் கட்டிக் கொள்கிறேன்!

    733743_424262327658289_1325672283_nஎன் தோழியே
    உன்னை சகோதரி
    எனச் சொல்ல மனம் வரவில்லை
    ஒன்னாம் வகுப்பிலிருந்து
    ஒன்றாக படித்திருந்தோம்

    காலம் கடந்து விட்டது
    நாம் உருவங்களும் மாறி விட்டது
    நாட்பு மாறவில்லை

    உனக்கும் எனக்குமான
    எல்லை எது என்பதை
    மிக சரியாக
    புரிந்து வைத்திருக்கிறோம்

  • ஒவ்வொரு பேச்சின்
    ஊடே உன் கணவரை
    சுட்டிக் கட்டும் போது
    விளங்கிக் கொள்கிறேன்
    எனக்கான தூரத்தை

    ஆனால் போடா வாடா
    போடி வாடி
    திருமணத்தோடு
    நின்று விடும்
    என எண்ணிய நான் ஏமாளி

    போங்க வாங்க என்றால்
    என்னடா ங் போடுகிறாய்
    என்கிறாய்

    நமக்குள் ஒரு முடிவு
    எடுத்துக் கொண்டோம்
    கணவன்
    கணவனின் தாய்
    இருக்கும் போது
    போங்க வாங்க
    இல்லாத போது
    போ வா

    ஆனால் நான் முட்டாள்
    ஒவ்வொரு முறையும்
    வாங்கிக் கட்டிக் கொள்கிறேன்
    நினைவில்லாமல்
    உன்னிடம் போங்க வாங்க
    என்று பேசியும்
    கணவன் மாமியார்
    முன்பு போ வா
    என்று பேசியும்

    (ஒன்னாம் வகுப்பிலிருந்து இன்று வரை என் தோழியாக இருக்கும் என் தோழிக்கு)

    aவலையுகம் ஹைதர் அலி

  • சமையல்ல இம்பூட்டு சங்கதியா !?

    1ஒவ்வொரு கலைஞனுக்கும் அவரவர் துறையில் ஆர்வமும் மோகமும் எப்படி உள்ளதோ அது போலத்தான் சமையல் செய்வதும் ஒரு கலை உணர்வைச்சர்ந்தவையே..! சமையெலுக்கென படிப்பு என்று ஒன்று இருந்தாலும், அனுபவத்தில் சமைக்கும் சமையலின் ருசியே தனிதான். ஒவ்வொருவருடைய கைப்பக்குவமும் வெவ்வேறு ருசியை கொடுப்பது சமையலின் தனிச்சிறப்பாகும்.அடுத்து சொல்லப்போனால் சமையல் என்பது எல்லோரும் செய்து விட முடியாது. ஏனென்றால் இதற்கு மூலதனமாக ஆர்வமும் அக்கறையும் பொறுமையான மனபக்குவமும், கவனமும், நினைவாற்றலும், தன் நம்பிக்கையும், வேண்டும். இதில் ஒன்று குறைந்து விட்டாலும் சமையலின் தரம், சுவை குறைந்து விடும்.

    நம் நாட்டை பொறுத்த மட்டில் வீட்டுச்சமையல் என்றால் அது பெண்கள் மட்டும் செய்யும் வேலையென எழுதப்படாத சட்டமாக வைத்துள்ளோம். ஆனால் மேலை நாடுகளில் வீட்டுச்சமையல் வேலைகளை பெண்களை விட ஆண்களே அதிக எண்ணிக்கையில் சமைத்து தமது மனைவி பிள்ளைகள் உறவினர்கள், விருந்தினர்களென அனைவருக்கும் பரிமாறுகிறார்கள். அதை அங்கு யாரும் பெரும் பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை.

    வெளிநாடுகளில் பணி புரியும் நம் நாட்டவர்கள் மற்றும் வெளி நாட்டவர்கள் அநேகமாக சொந்தமாகவே தான் சமைத்து சாப்பிடுகிறார்கள். சமைக்கத் தெரியாமல் சமைக்கத் தொடங்கி ஆரம்ப காலத்தில் சுவையில்லாமல் வீணடித்து விடா முயற்சியாக களமிறங்கி சமையல் கலை வல்லுனர்களாக சிறந்து விளங்கியவர்களும் நிறைய பேர் உண்டு. நாம் சொந்தமாக சமைத்து சாப்பிடுவதே உடல் நலத்திற்கு நலமானதாகும். நீண்ட நாள் உயிர்வாழ சுத்தமான சமையலும் ஒரு காரணமாக இருக்கிறது. ஏனென்றால் வீட்டுச்சமையலில் அனைத்துப்பொருட்களும் நல்ல முறையில் சுத்தம் செய்து சுத்தமான பாத்திரங்கள், பாட்டில்களில் வைத்திருப்போம். மீண்டும் எண்ணெய் மற்றும் உடலுக்கு சீக்கிரம் கேடு விளைவிக்கும் பொருட்களை நிகர அளவை விட குறைத்து உபயோகிப்போம். மருத்துவர்களின் அறிவுரையும் அதுவே..!

  • முன்பொரு காலத்தில் நமதூரிலும் நமதூரை சுற்றியுள்ள பிற ஊர்களிலும் திருமணம்,மற்றும் பல சுப காரியங்களுக்கு பெரிய அளவில் [விருந்து] சமைப்பதற்கு வேண்டி ஒரு சில பகுதிகளில் மேஸ்திரி என்றும் பண்டாரி என்றும் அழைக்கப்படும் சமையலில் பிரசித்தி பெற்ற பல சமையல் வல்லுனர்கள் இருந்தார்கள் அவர்களின் மறைவிற்கு பிறகு விரல் விட்டு எண்ணும் அளவில் தான் ஒரு சிலர் சமையல் வேலையில் ஈடுபட்டு கொண்டு இருக்கிறார்கள்.

    அறுசுவை-உணவை-2ஆகவே இன்றைய காலகட்டத்தில் நிலைமை எப்படி இருக்கிறதென்றால் ஒரு திருமண நிகழ்வுக்கோ வேறு விஷேச நிகழ்வுக்கோ குறிப்பிட்ட தேதியில் சமையலுக்கு ஆள் கிடைப்பார்களா..? என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு கொண்ட பிறகே அந்த விழாவின் தேதி குறிப்பிடும்படியாக உள்ளது. அந்த அளவுக்கு சமையல் என்பது யாவற்றிலும் முக்கியம் அங்கம் வகிக்கிறது.எனவே சமையல் கலையை முறையாக பயின்று பலன் பெற பல உயர்தர கேட்ரிங் கல்லூரிகள் உள்ளன. அவற்றில் சென்று முறையாக பயின்று சமையல் கலையில் வெற்றி பெறலாம்.

    பத்தும் வகுப்பு வரை படித்து தேர்ச்சியானவர்கள், +2 படித்து முடித்தவர்கள் மேற்ப்படிப்பு படிக்க விருப்பமில்லையெனில் சமையல் முறைப்படிப்பான கேட்ரிங் படிக்கலாம். இது நம் வாழ்க்கைக்கு பயன் தரும் படிப்பேயாகும். வேலை வாய்ப்புக்களும் நிறைய உள்ளது. அல்லது சுய தொழிலாக செய்தாலும் நல்ல வருமானம் ஈட்டலாம். தனக்கென்று எப்பொழுதும் எங்கு சென்றாலும் கை கொடுக்கும் ஒரு தொழிலாகவும் பயனளிக்கும்.

    ஆகவே இன்றைய காலகட்டத்தில் கேட்ரிங் என்னும் சமையல் முறைப்படிப்பை ஆண்,பெண் இரு பாலரும் படித்து சமையல் கலை அறிந்து கொண்டால் தனக்கென ஒரு தொழிலையோ வேலையையோ நிலை நாட்டி கொள்ளலாம். இப்போது நம் நாட்டிலும், உலகில் உள்ள அநேக நாடுகளிலும் கேட்ரிங் படித்து டிப்ளோமா பட்டம் பெற்றவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்பும் கிடைக்கிறது.

    எல்லோரும் மருத்துவராகவும், இன்ஜீனியராகவும், விஞ்சானியகவும் ஆகிவிட்டால் சமையல் கலையை யார் தான் அறிந்து கொள்வது !?

    இன்று நம் கண்முன்னே காண்கிறோம் உலக பிரசித்து பெற்ற எத்தனையோ உணவு வகைகள் உள்ளன. அந்த உணவு வகைகள் எத்தனையோ கோடீஸ்வரர்களை உருவாக்கி தனக்கென்று ஒரு முத்திரையுடன் உலகை வளம் வந்து கொண்டிருக்கின்றன. ஆகவே உயர் கல்வி கற்க விருப்பம் இல்லாதவர்கள் சமையல் கலையை முறையாக பயின்று வென்று வந்து விட்டால் நீங்களும் ஒரு சாதனையாளர்களாகவோ, தொழிலதிபர்களாகவோ திகழலாம்…!!!

    3அதிரை மெய்சா
    Source :http://nijampage.blogspot.in/2013/02/blog-post_21.html

  • கற்றவருக்கும் கல்லாதவருக்கும் இதற்கு வேறுபாடில்லை

    asikருசி அறிவேன்
    ரசிக்கத் தெரிவேன்
    குறை காண்பேன்
    குற்றம் பார்பேன்
    கொடுத்தவர் பட்ட கடுமை அறியேன்

    எதை கொடுத்தாலும் போதுமென்ற மனமில்லை
    வயிறு நிறைந்தால் போதுமென்றே சொல்லவேண்டும்
    வயிறு நிறைந்தது போதும் நிறுத்துங்கள்
    வாயார வாழ்த்திச் செல்லும் தர்மம் உண்ணக் கொடுப்பதே

  • வயிறு நிறைய கொடுத்தார்
    போதுமென்று வயிறு சொன்னது
    வரி வரியாக கவிதையை தந்தார்
    போதுமென்று மனம் சொல்லவில்லை
    வாழ்த்துச் சொல்ல ஆர்வம் வந்தது

    வாக்குரிமை படித்தவருக்கு மட்டுமென்பார்
    படித்தவர் திறம்பட தவறு செய்து தப்பிப்பார்
    உண்பவருக்கு சமைக்கத் தெரியாது
    சமைத்த உணவை தரம் பார்க்கத் தெரியும்
    ஆட்சியில் பட்ட அவலம் அறிந்து மாற்றத் தெரியும்
    கற்றவருக்கும் கல்லாதவருக்கும் இதற்கு வேறுபாடில்லை
    ‘தர்மம்’ – தேரிழந்தூர் தாஜுதீன்

  • காலத்தின் கோலங்கள்

    காலத்தின் கோலங்கள்

    நிறம் கொடுத்து முக நிறம் மாற
    நீர் கொட்ட உண்மை முகம் வர
    உண்மை வெளிச்சம் காட்ட
    கண்ணீர் முகத்தில் வடிகின்றது

    உறவுக்கு ஒரு வேடம்
    ஊருக்கு ஒரு நடிப்பு
    உள்ளத்தில் இருட்டு
    ஊரார் உதற சிதைவு

    Hardware-Problemsகை நீட்டி பிச்சை கேட்கும் புத்தி
    கபடமாக காசு கறக்கும் கீழ்மை
    கள்ள மனதுடன் பழகும் பாங்கு
    உள்ளது அறியவர சிறையில் இருப்பு

    மலரின் மணம் மறைந்து இருக்காது
    மனதின் மனம் மறைந்து இருக்கும்
    மலரைப் பறிக்க மனம் நாடும்
    மனம் பணத்தை பறிக்கவும் நாடும்

    வேதம் படிக்கும் மனம் வீம்பும் பேசும்
    வேதம் படித்து வாதமும் செய்யும்
    வேதம் வாழ்வை உயர்த்த வேண்டி
    வேதம் படிப்பது வேண்டாததை தவிர்க்க

    வேதம் வந்தது மக்களுக்கு
    வேதம் தமக்கே தெரியும் என்ற தலை கணம்
    வேதம் அறிய பல்வழி இருக்க
    வேதம் யம்வழியே உயர்வழி என்ற இறுமாப்பு
    Say Something Nice- நல்லதைச் சொல்

    பாரதிராஜா – இளையராஜா மோதல் : நடந்தது என்ன?

    ilya baradiபிரபல இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும் பிரபல இயக்குநர் பாரதிராஜாவுக்கும் இடையே கடும் மோதல் வெடித்துள்ளது. தன்னை விழாவுக்கு அழைத்து மேடையில் வைத்து அவமானப்படுத்தியதாக பாரதிராஜா பற்றி இளையராஜா கோபமாகக் குமுறியுள்ளார்.

    அண்மையில் பாரதிராஜாவின் புதிய படமான ‘அன்னக்கொடியும் பருத்திவீரனும்’ பாடல் வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற்ற போது, அவ்விழாவுக்கு இளையராஜாவை அழைத்திருந்த பாரதிராஜா, நட்பின் உரிமையோடு மேடையில் இளையராஜாவை ஒருமையில் விமர்சித்துள்ளார். “நீ (இளையராஜா)

    யாருடனும் பத்து நிமிடம் கூட உட்கார்ந்து பேசுவதில்லை. தலைக்கனம் பிடித்து ஆடாதே. நாம் மூவர்.அதில் ஒருவன்(வைரமுத்து) நம்முடன் தொடர்பில் இல்லை. மூவரும் மீண்டும் ஒன்று சேருவோம்” என்று பாரதிராஜா அப்போது பேசியுள்ளார்.

    இந்தப் பேச்சால் புண்பட்டிருந்த இளையராஜா, வார இதழ் ஒன்றில் வாசகர் ஒருவரின் கேள்விக்கு விடையளிக்க வாய்ப்பு கிடைத்த போது, பாரதிராஜாவுக்கு நல்ல பதிலடி கொடுத்துள்ளார்.

    “மேடையில் என்னைப் பற்றி பாரதிராஜா பேசிய விஷயங்கள் எல்லாமே என்னிடம் தனியாகப் பேசியிருக்க வேண்டியவை. ஆனால் ஏன் அப்படி பொதுமேடையில் பேசினார் என்றால் தனியாக என்னிடம் பேசும்போது அவருக்கு நான் கொடுக்கும் பதிலில், பேச முடியாமல் வாயடைத்துப் போவாரே – அதுதான் காரணம்” என்று கூறியுள்ளார் இளையராஜா

  • மேலும் “கிடைத்தற்கரிய மானிட ஜென்மத்தில் கிடைத்த நல்லச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கடைத்தேறுவதை விட்டுவிட்டு தன் புகழைத் தானே பாடுவதிலும், அடுத்தவனை குறை கூறுவதிலுமா இந்த ஜென்மம் கழிய வேண்டும்? அவருக்கு என் மீதுள்ள குறையெல்லாம் நன் அவரைப் போல இல்லையே என்பதுதான். அதாவது குடித்துக் கொண்டும், கூத்தடித்துக் கொண்டும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ என்னவோ? இல்லை, இப்படி ஏதோ ஒரு விஷயத்தை நான் இழந்து கொண்டிருப்பதாக நினைக்கிறாரோ? அப்படி நான் மாறுவதென்பது நடக்கிற காரியமா? அவர் நினைக்கிறபடிதான் நான் இருக்க வேண்டுமா? இல்லை என்றால் ஏன் இந்தப் புத்திமதி, என்னை மேடையில் அவமதிப்பது? அவர் பேச்சை வெறும் பைத்தியக்காரன் பேச்சு என்று விட்டு விட வேண்டியதுதான். எப்படியோ இந்த ஜென்மம் வீணாகி விட்டது. கடந்தது கடந்ததுதான். பூங்காற்று திரும்புமா?” என்று கூறியுள்ளார்

    “என்ன இப்படி எழுதிவிட்டேனே என்று உங்களுக்குத் தோன்றலாம். அவ்வளவு பெரிய விழாவில் என்னை வற்புறுத்தி அழைத்துச் சென்று என்னை அவமதித்துப் பேசியது மட்டும் ஏற்புடைய செயல்தானா? அப்படிப் பேசினால் அது இணையத்திலும், காணொளிகளிலும் பதிவாக ஆகிவிடும் என்பது பாரதிராஜாவுக்குத் தெரிய வேண்டாமா?,” என்றும் தனது பதிலில் இளையராஜா குமுறியுள்ளார்.

    இளையராஜாவின் இந்த பதில் பற்றி பாரதிராஜாவிடம் கேட்டபோது “விடுங்கள், பதிலுக்குப் பதில் அறிக்கை விட நாங்கள் ஒன்றும் கட்சி நடத்தவில்லை” என்று கூறிவிட்டார்
    Source: http://www.inneram.com/news/cinema-news/baradiraja-ilayaraja-9202.html

  • Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 2) – இளையராஜா டொராண்டோ

    Ilayaraja Toronto 2துவக்கத்தில் வந்த கோபிநாத் விடைபெற்றதும், பார்த்திபன் களத்தில் இறங்கினார். அவரின் வழமை மாறாத குண்டக்க மண்டக்கக்களை விட்டு ஆட்டினார்.

    எலிவேட்டரில் மேலேறிக்கொண்டிருக்கும்போது பாருங்க எல்லாம் குட்டிக்குட்டியா எவ்ளோ அழகா இருக்கு என்று உடனிருந்த பெண்சொல்ல பார்த்திபன் சொனனாராம் குட்டிகள் எல்லாம் அழகாத்தான் இருக்கும் என்று.

    பார்த்திபன் சொன்னதை அப்படியே சரியாகச் சொல்லி இருக்கிறேனா என்று தெரியவில்லை. இவ்வளவுதான் எனக்கு ஞாபகம் இருக்கு. ஏன்னா அது என்னைச் சென்று சேரவே இல்லை 😉

    கடிக்கலாம், ஆனால் அடித்தொடையை விழுந்து கடிக்கப்படாது 😉

    இளையராஜாவின் வழமையான பாடல்கள் சென்றுகொண்டிருந்தன. அதில் நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி வந்ததும் அது என்னை என்னவோ செய்தது. எழுந்து உட்கார்ந்தேன். சாதனா சர்க்கம் சொர்க்கம் காட்டினார். ஹரிஹரன் வழக்கம்போல சொர்க்கத்திலேயே நின்றுகொண்டிருந்தார்.

    நிகழ்ச்சிக்கு வரமுடியாமல்போன என் நண்பருக்கு நான் உடனே தொலைபேசி மூலம் அந்தப் பாடலில் வரிகளைக் கேட்க வைத்தேன்.

    இளையராஜா தன் சொந்த இசைக்குழுவை அப்படியே அழைத்து வந்திருந்தார். தரத்தில் எந்த குறைபாடும் இருக்கக்கூடாது என்பதில் அவர் எடுத்துக்கொள்ளும் கவனம் எல்லோருக்கும் தெரிந்த விசயம்தான். இந்த விழாவிலும் அப்படியேதான். பாராட்டுக்கள்.

    பிசிறுகள் இல்லாமல் இசை சன்னமாக ஒலித்தது. அது இதயத்தின் ஆழத்தில் இதயாக இறங்கியது. சில நேரங்களில் நிகழும் சிறுபிழையும் ராஜா விடவில்லை.

    மீண்டும் வாசிங்கடா என்று சொல்லிவிட்டார். இறங்கிச் சென்று நின்று ஒவ்வொருமுறையும் அவர் அக்கறையாய் நேசித்துக் கவனித்துச் செய்ததைக் காண மகிழ்ச்சியாய் இருந்தது.

    ஏன்னா….. அண்ணன் ரொம்ப ஸ்டிரிக்டு….. ஸ்டிரிக்டு…. ஸ்டிரிக்டு…. என்று விவேக் அவ்வப்போது அதையும் சுட்டிக்காட்டிக்கொண்டேதான் இருந்தார்.

    Parthipanபார்த்திபனும் விவேக்கும் உண்மையிலேயே இளையராஜாவின் இசை வெறியர்கள்தாம். எங்குமே விட்டுக்கொடுக்காமல் எத்தனை உயரம் உயர்த்திப்பிடிக்கமுடியுமோ அத்தனை உயரம் உயர்த்திப் பிடித்தார்கள்.

    எத்தனை நல்ல விசயமாக இருந்தாலும், அதை உயர்த்திப் பிடிக்க நிச்சயம் ஆட்கள் தேவை.

    இதே மேடையில் 2000 அல்லது 2001ல் ஏஆர் ரகுமான் இசையைக் கேட்டிருக்கிறேன். அது உட்காரவும் இடமில்லாத கூட்டத்தைக் கொண்டிருந்தது.

    அப்போது கிடைத்த ஒரு குதூகலம் எனக்கு இப்போது இல்லை என்பது உண்மை. அதற்குக் காரணம் நானாகவே இருக்கலாம். எனக்கு அது முதல் நேரடி நிகழ்ச்சி.

    அதுமட்டுமல்லாமல் அதுபோல கனடாவில் பிரம்மாண்டமாக ஒரு தமிழ் இசையமைப்பாளரைக் கொண்டு நிகழும் நிகழ்ச்சி நிகழ்வது அதுதான் முதன்முறை.

    கூடவே இந்திப்பாடல்களும் பாடப்பட்டதால், தமிழ் அல்லாத இந்தியர்களின் கூட்டமும் சொல்லிமாளாத அளவு வந்திருந்தது. அப்படி வந்த கூட்டம் தமிழ்ப்பாட்டையும் மிகவும் ரசித்துக் கேட்டது வரவேற்கக்கூடியதாய் இருந்தது,

    அறிமுகமே இல்லாத ஒரு இந்திக்காரர் ”ஒருவன் ஒருவன் முதலாளி” என்ற பாட்டை எனக்கு எப்படியாவது பதிவு செய்து கொடுத்துவிடு என்று என்னிடம் அன்று கெஞ்சினார்.

    ரகுமானின் இசை அரங்கையே அதிரடிக்கும் இசை. ராஜாவின் இசை பூ மலர்வதைப் போன்ற இசை. இரண்டையும் ரசிக்க முடிந்த நான் இசையின் ரசிகனே தவிர ஒருவரை ரசித்து ஒருவரை விட்டுவிடும் கண்மூடி ரசிகன் அல்ல.

    ”கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை” என்ற பாடல் அன்று என் கண்களில் நீரை வரவழைத்தது. நான் மிகவும் நெகிழ்ந்துபோயிருந்தேன்.

    அப்படியான ஒரு இதயத் தாக்கம் எனக்கு நேற்று கிடைக்கவில்லை. அதற்குக் காரணம் என் சொந்தச் சூழல்களின் மாற்றமாகவும் இருக்கலாம்.

    ஆனாலும் எம் எஸ் விஸ்வனாதன் தன் பாடல்களை இந்த மேடையில் ஏற்றியிருந்தால் நாம் மீண்டும் அழுதிருப்பேன் என்று எனக்குத் தோன்றியது.

    நேற்றுபோல் இன்று இல்லை
    இன்றுபோல் நாளை இல்லை

    காதலின் தீபம் ஒன்று
    ஏற்றினாளே என் நெஞ்சில்….

    என்னால் மறக்கவே முடியாத பாட்டு. அந்தப் பாடலைத் தேர்வு செய்து எஸ்பிபியைப் பாடவைத்து அரங்கில் எனக்கொரு தங்கத் தொட்டில் செய்துகொடுத்தார் ராஜா. நன்றி பண்ணைப்புரத்து பாட்டுக்காரா!

    ”தந்தன நந்தன தாளம் வரும்….” என்ற பாடலை எவரும் மறந்திருக்கமுடியாது. அது அவ்வகைப்பாடல்களில் முதலாவது. அதைத் தொடர்ந்து ஆயிரம் பாடல்கள் அதுபோல வந்துவிட்டாலும் அதை மட்டும் அசைக்கவே முடியவில்லை.

    அந்தப் பாடலுக்கு எங்களுக்காகவே பிரத்தியேகமாய் இசையைக் கொஞ்சம் மாற்றியமைத்துப் பாடவைத்து இசையமைப்புப் பணியைச் செம்மையாய்ச் செய்துகாட்டினார் ராஜா.

    இதுபோலெல்லாம் வேறு இசையமைப்பாளர்கள் செய்வதே இல்லை. இது ராஜாவுக்கே உரித்தான சிறப்பு. ராஜா இசையை எடுத்து எளிமையாய்ச் சொல்வதில் அதிகம் ஆர்வம் காட்டக்கூடியவர். இதுவரை நான் கண்ட இளையராஜா நிகழ்ச்சிகளிலெல்லாம் இதை அழகாகச் செய்து என்னை வெகுவாகக் கவர்ந்திருக்கிறார்.

    நிகழ்ச்சி முழுவதுமே நான் இதுபோன்ற விசயங்களையே விரும்புவேன். அப்படியே அனைத்துப் பாடல்களையும் சோதனை முயற்சிகளாகவே செய்திருந்தால் நான் இன்னும் இரண்டு நாள்கூட அந்த அரங்கிலேயே உட்கார்ந்திருப்பேன்.

    *

    Engeyum-Eppothum-Raja-Toranto-Concert-Photo-2இளையராஜா ஒரு நல்ல கவிஞர். ஆனால் வைரமுத்துவுடன் வந்த லடாய்க்குப் பிறகு அவர் இசையா கவிதையா என்ற சண்டையிலிருந்து மீளவே இல்லை என்றுதான் எனக்குப் படுகிறது.

    எல்லா மேடைகளிலும் பாடல் வரிகளை அவர் கேவலமாகவே பேசுகிறார். ஆனால் பாரதி பாடல்களைத் தேடிப்பிடித்து இசையமைத்து வெற்றிபெறுகிறார் 😉

    ஒரு முறை கண்ணதாசன் சொன்னார். இசை வார்தைகளுக்கு சிறகு கட்டிப் பறக்கவிடும் என்று. அது உண்மைதான். அதில் மாற்றுக்கருத்தே இல்லை.

    ஆனாலும் இறக்கை கட்டிக்கொள்ளத் தகுதியான அந்த வரிகளை எழுத ஒரு கண்ணதாசன் வேண்டும், ஒரு வைரமுத்து வேண்டும். ஒரு டி ஆர், நா.முத்துக்குமார், மதன் கார்க்கி என்று வார்த்தைகளின் சுவையறிந்தவர்கள் வேண்டும்.

    அப்போதுதான் பாட்டு ஆயுள் கூடிய ஒன்றாய் இருக்கும். இல்லை என்றால் ஓரம்போ ஓரம்போ என்று ஓரம்போய்விடும்.

    என்னிடம் கொடுத்தாலும் நானும் வார்த்தைகட்டி வையம் ஏற்றுவேன். இதை யாருக்கிட்டேயும் அவசரப்பட்டு சொல்லிடாதீங்க 😉

    ஓரம்போ ஓரம்போ என்ற புகழ்வாழ்ய்ந்த பாடலையும் இளையராஜா பாடினார். பாட்டுலகில் அது ஒரு புதிய முயற்சி என்று பேசப்பட்டது. ஆனால் இலங்கை வானொலி அந்நாளில் இது பாட்டே இல்லை என்று கூறி காற்றலையில் ஏற்ற மறுத்தது.

    இன்றும் நாம் அதைக் கேட்கிறோம். ஆனால் ஒருவரும் விரும்பிப் பாடுவதில்லை. ஏனெனில் அதன் வார்த்தைகள் இதயத்தோடு பேசவில்லை.

    ஆனால் காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே என் நெஞ்சில் பாடலை மக்கள் தாங்களாகவே விரும்பிப் பாடுகிறார்கள். இளைய நிலா பொழிகிறது என்றால் இயல்பாகவே இதயத்திலிருந்து பாடுகிறார்கள். எல்லாம் ராஜாவின் பாட்டுத்தான் என்றாலும் ஏன் இந்த வித்தியாசம்?

    அங்கேதான் வரிகள் வரிந்துகட்டிக்கொண்டு நிற்கின்றன.

    இந்த ஓரம்போ பாடலைவிட இளையராஜாவின் இன்னொரு அந்த சமயத்துப் பாட்டு எனக்குப் பிடிக்கும்.

    வாடை வாட்டுது
    ஒரு போர்வை கேக்குது
    இது ராத்திரி நேரமடீ…

  • இந்தப் பாடலை எவருக்காவது நினைவிருக்கிறதா? முழுக்க முழுக்க ஸ்டீரியோவிலான பாட்டு. ஸ்டீரியோவை உச்சத்தில் உயர்த்தி தனித்தனியே பிரித்துப் பாடப்பட்ட பாட்டு என்று சொன்னார்கள் அன்று. ஆனால் இளையராஜா இந்தப் பாடலை எங்கும் பாடுவதே இல்லை ஓரம்போ ஓரம்போ என்றுதான் பாடுகிறார்.

    ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. என் இசை ஞானம் என்பது என் காதுகளோடு சரி. மூளை…. சுத்தம் 😉

    இளையராஜாவின் மூத்த புதல்வர் கார்த்திக்ராஜா வந்தார். இளையராஜாவின் மேஜிக் என்ற தலைப்பில் சில விசயங்களைச் சொன்னார். அதில் முக்கியமானது என்னவென்றால் கவிதை என்பதெல்லாம் குப்பை. இசை என்பது மட்டுமே கோபுரம் கோபுரம் கோபுரம்.

    அதை நிரூபிக்கும் வகையில் இளையராஜா சில வரிகளைச் சொன்னார்

    தாமரை மலரில்
    மனதினை எடுத்து
    தனியே வைத்திருந்தேன்

    ஒரு தூதும் இல்லை
    உன் தோற்றம் இல்லை
    கண்ணில் தூக்கம் பிடிக்கவில்லை

    என்று இசை எதுவும் இன்றி மொட்டையாக வாசித்தார். தாமரை மனதில் மனதினை எடுத்து தனியே வைத்திருந்தேன். இந்த வரிகளைக் கேட்கும் போது உங்களுக்கெல்லாம் என்ன தோன்றுகிறது என்று அரங்கத்தாரைக் கேட்டார். ஆனால் பதிலுக்குக் காத்திருக்காமல் ராஜாவே சொன்னார், இதில் ஒன்றுமே இல்லை. வெத்து வார்த்தைகள். இதில் எந்தப் பொருளும் இல்லை என்றார்.

    ஆனால் இப்ப பாருங்க என்று அப்படியே இசையோடு பாடிக்காட்டினார்.

    எனக்கு ஒன்றும் புரியவில்லை. தலை சுற்றியது!

    Engeyum-Eppothum-Raja-Toranto-Concert-Photo-6”தாமரை மலரில் மனதினை எடுத்து தனியே வைத்திருந்தேன்”

    அடடா எத்தனை அற்புதமான கண்ணதாசனின் வரிகள்? உனக்காக என் மனதை நான் எப்படி வைத்திருந்தேன் என்று காதலி சொல்கிறாள். எந்த எண்ணங்களும் இடைமறிக்காத வேறு எந்த நினைவுகளும் தீண்டாத தனிமையில் வைத்திருந்தேன் என்கிறாள்.

    அத்தோடு நின்றாளா நிற்கவில்லை, மேலும் சொல்கிறாள் அந்த மனதை உனக்காகக் காத்திருக்க எங்கோ ஒரு நாற்காலியில் உட்கார வைக்கவில்லை. அல்லது படுக்கையில் கிடத்திருக்கவில்லை. ஏனெனில் என் மனம் காதல் மனம். மெல்லிய மனம். பூவினும் மெல்லியது அது. ஆகவே அதை தாமரை என்ற நீண்ட இதழ்களைக் கொண்ட பூவின் இதழ்களின் மேல் தனியே வைத்திருந்தேன் என்கிறாள். சிறிய இதழ்கள் என்றால் உன்னை நினைத்துக் கனத்துக்கிடக்கும் என் இதயம் கீழே விழுந்துவிடுமே என்ற அக்கறையில் தாமரை இதழ்களின் மேல் வைத்திருந்தேன் என்கிறாள்.

    உன்னிடமிருந்து ஒரு தூதும் இல்லை. ஒரு தூதும் இல்லாமல் இந்த மனம் எப்படிச் சமாதானம் அடையும் என்று காதலி கேட்பது எத்தனை நியாயமானது?

    சரி தூதுதான் இல்லை, என் நினைவினில் அல்லது கனவினில் உன் தோற்றமாவது வரவேண்டுமா இல்லையா? அதுவும் இல்லையே? ஒரு பொய்யான தோற்றத்தைக்கூட நீ தராமல் போய்விட்டாயே காதலா என்று எப்படி உருகுகிறாள் காதலி? பிறகு தூக்கம் எங்கிருந்து வரும்?

    இந்த வரிகளை எல்லாம் இளையராஜா வெத்து வார்த்தைகள் என்கிறார்.

    என்றால் இவர் கவிஞர்தானா என்ற கேள்வி எழுகிறது. நிச்சயமாக இளையராஜா நல்ல கவிஞர் அதில் சந்தேகமே இல்லை. ஆனால் ஏன் இப்படி சொல்கிறார் என்றால் அதற்கொரு காரணம் உண்டு. வைரமுத்துவோடு வந்த லடாயின் காரணமாக இவர் கவிஞர்களை எல்லாம் கீழாக்கினார். அதனால் கவிதைகளும் இவருக்குக் கீழாகத் தெரிகின்றன.

    இது ஒரு மனப்பிறழ்வன்றி வேறென்ன?

    (தொடரும்)
    http://anbudanbuhari.blogspot.in/2013/02/ilayaraja-toronto-16-feb-2013-part-2.html