RSS

Monthly Archives: August 2012

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கவி பாடியுள்ளார்களா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கவி பாடியுள்ளார்களா?

இந்த வினாவும் வியப்பும் பலருக்கும் தோன்றியிருக்கக் கூடும். குறிப்பாக, நம் சமகாலக் கவிஞர்கள் இதில் தம் கண்களையும் கருத்தையும் பதித்து, இதற்கான விடையை எதிர்பார்த்துக் காத்திருப்பதை அறிய முடிகின்றது.

மனிதர்கள் எவரிடத்தும் மண்டியிட்டுப் பாடம் படிக்காத மாமனிதரும் மனிதப் புனிதரும் ஆவார்கள் நபியவர்கள். இவ்வுண்மையை,

الذين يتبعو ن الرسول النبي الامي

(அவர்கள் எழுதப் படிக்கத் தெரியாத நபியாகிய (நம்) தூதரைப் பின்பற்றுகின்றார்கள்.)

எனும்(7:157) இறைவசனத்தால் வல்ல இறைவன் அல்லாஹ் உறுதிப் படுத்துகின்றான். எழுதப் படிக்கத் தெரியாத நபியால் இத்துணைப் பெரிய சமூக மாற்றத்தையும் விழிப்புணர்வையும் எவ்வாறு ஏற்படுத்த முடிந்தது என்பதுதான் அன்றைய மற்றும் இன்றைய அறிவு ஜீவிகளால் வியந்து பாராட்ட வைத்த பண்பாகும்.

இலக்கிய விற்பன்னர்களும் கவிஞர்களும் சொற்போர் வீரர்களும் நிறைந்திருந்த அன்றைய அரபுச் சூழலில், அறிவார்ந்த சொற்களால் மறுப்புரை செய்து மாற்றத்தை ஏற்படுத்த இந்த இறை இறுதித் தூதரால் முடிந்தது என்றால், அது இறைவன் அவர்களுக்கு அளித்த சிறப்புத் தகுதியே அன்றி வேறில்லை.

ஆதிக்க வலிமையால் அடக்கி ஒடுக்கப் பார்த்தார்கள் குறைஷியர்; முடியவில்லை! கேலி கிண்டல்கள் செய்து பார்த்தார்கள்; தோல்வியைத் தழுவினார்கள்! இறுதியாக அவர்கள் கைகளில் எடுத்த போர்க்கருவிதான் கவிதை! அவர்களுள் இருந்த கவிஞர்கள் தம் திறமை முழுவதையும் கொண்டு கவிதை பாடினார்கள்; இறைப் பேரொளியைத் தம் நாவுகளால் ஊதி அணைக்கப் பார்த்தார்கள்! அப்போது,

والشعرآء يتبعهم الغاون، الم تر انهم في كل واد يهيمون، وانهم يقولون ما لا يفعلون

(இன்னும் கவிஞர்கள் எத்தகையோரென்றால், அவர்களை வழிகேடர்கள்தாம் பின்பற்றுகின்றார்கள். திண்ணமாக அவர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் அலைந்து திரிவதை (நபியே) நீர் பார்க்கவில்லையா? இன்னும் திண்ணமாகத் தாம் செய்யாததைச் செய்ததாகச் சொல்கின்றார்கள்.)

எனும்(26:2 இறை வசனங்களைக் கொண்டு நபியவர்களை ஆற்றுப் படுத்தினான்; தேற்றினான் அல்லாஹ். ஆனாலும், அத்தகைய கவிஞர்களுக்கும் வாயாப்புக் கொடுக்கும் வாய்ப்பினை, நபியவர்களின் ‘ஹிஜ்ரத்’ எனும் புலம்பெயர்தலுக்குப் பின்னால் அமைத்துக் கொடுக்கின்றான். இதற்கான பல சான்றுகளை இத்தொடரின் இடையிடையே கண்டுவந்துள்ளோம்.

 • புலம் பெயர்ந்த நபியவர்களும் முஸ்லிம்களும் மதீனாவில் தம் வாழ்க்கையைத் தொடங்கிய காலகட்டத்தில் முதலாவதாகச் செய்த பணிகளுள் ஒன்று, தொழுகைப் பள்ளி கட்டியதாகும். தோழர்களுக்குத் தோள் கொடுக்கும் விதமாக, நபியவர்களும் கற்களைச் சுமந்துவந்து இறைவணக்கத்திற்கான இல்லம் கட்டும் பணியில் உதவினார்கள். அந்த ஆர்வம் மிக்க நேரத்தில் இறைத் தூதரின் இதயத்திலிருந்து கீழ்க்காணும் கவிதையடிகள் வெளிவந்தன:

  هذا الحمال لا حمال خيبر ، هذا ابر ربنا و اطهر
  اللهم إن الأجرأجرالآخرة ، فارحم الأنصار والمهاجرة

  இதன் தமிழ்க் கவியாக்கம்:

  கற்கள் சுமக்கும் இச்சுமையோ
  கைபர்ச் சந்தைச் சுமையன்று
  பொற்புள தூய நன்மையினைப்
  பொழியும் இறையின் சுமையாகும்.

  இறைவா! எமது கூலியதோ
  இறவா மறுமைக் கூலியதே
  நிறைவாய் மக்கா மதீனாவின்
  நேசர்க் குதவி புரிந்திடுவாய்!
  (சஹீஹுல் புகாரீ – 3906)
  அண்ணலெம் பெருமான் (ஸல்) அவர்கள் தமது நபித்துவத்தின் தொடக்கத்தில் எதிர்கொண்ட போரின்போது ஒரு மலை மீது ஏறிச் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது கற்பாறையொன்றில் தடுக்கி விழப் போனார்கள்! கல் தடுக்கிய காலை நோக்கினார்கள்; முன் விரலிலிருந்து குருதி வடிந்துகொண்டிருந்தது! அந்த வேதனை அவர்களை வருத்தியபோதும், தமது கால் விரலைப் பார்த்துக் கீழ்க்கண்டவாறு கவியடியொன்றைக் கூறி, வேதனையை மாற்றிக்கொண்டார்கள்:

  إصبع دميت هل أنت إلا
  و في سبيل الله ما لقيت

  இதன் தமிழ்க் கவியாக்கம்:

  செங்குருதி சிந்துகின்ற விரலே உன்கால்
  செல்லுகின்ற பாதையிறைப் பாதை யன்றோ?
  (சஹீஹுல் புகாரி – 2802 / 6146, சஹீஹ் முஸ்லிம் – 3675)
  ஹிஜ்ரி ஐந்தாமாண்டில் நடைபெற்ற அகழ்ப் போரின் முன்னேற்பாடாக மதீனாவைச் சுற்றி அகழ் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த அருமைத் தோழர்களைக் கண்டு கவலையுற்றும், அவர்களுக்கு ஆர்வமூட்டியும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள்,

  اللهم لا عيش إلا عيش الآخرة
  فاغفر للأنصار و المهاجرة

  என்ற ஈரடிக் கவிதையினைப் பாடினார்கள்.
  (சஹீஹுல் புகாரீ – 2834,4099)

  அக்கவியடிகளின் தமிழ்க் கவியாக்கம் இதோ:

  இறைவா! உண்மை வாழ்வதுவோ
  என்றும் நிலைத்த மறுமையதே
  நிறைவாய் மதினா மக்காவின்
  நேசர் களைநீ மன்னிப்பாய்!

  கருணை நபியவர்கள் கவிகளும் பாடியுள்ளார்கள் என்பதற்கான சில சான்றுகளே இவை. அவர்கள் காரணமின்றிக் கவிதைகளை வெறுக்கவுமில்லை; அவர்களுக்கு இறைவன் கொடுத்திருந்த ‘வஹி’ என்ற உயர் இலக்கியத் திறன் கொண்டு, கவிதைகளைக் கேட்டு மகிழ்ந்தும் உள்ளார்கள்; பாடுவோரை ஊக்கப்படுத்தியும் உள்ளார்கள் என்பதுவே உண்மையிலும் உண்மையாகும்.
  அதிரை அஹ்மது
  adiraiahmad@gmail.com

  இறைதூதர் கவிதைகளுக்கு அன்புடன் புகாரியின் விமரிசனம்

  அன்பிற்கினிய மூத்தசகோதரர் அதிரை அகமது அவர்களுக்கு,
  அஸ்ஸலாமு அலைக்கும்.

  இறைத்தூதரின் கவிதைகளை மொழிமாற்றி இட்டிருக்கிறீர்கள். அழகாக வந்திருக்கிறது. அருமையாக இருக்கிறது.

  >>>>>>
  கற்கள் சுமக்கும் இச்சுமையோ
  கைபர்ச் சந்தைச் சுமையன்று
  பொற்புள தூய நன்மையினைப்
  பொழியும் இறையின் சுமையாகும்.
  >>>>>>

  கற்களையா உன் தோள்கள் சுமக்கின்றன; இறையின் அளவற்ற அருளையல்லவா சுகமாய்ச் சுமக்கின்றன!

  அடடா எத்தனை அழகு. மருந்தைத் தேனில் கலந்து கொடுப்பார்கள். அங்கே மருந்தும் தேனும் சம அளவில் இருக்கும் அல்லது தேன் சற்று கூடுதால் இருக்கும்.

  ஆனால் இக்கவிதையிலோ குடம் குடமாய்த் தேன் கவிழ்ந்து அப்படியே கொட்டிக்கொண்டே இருக்கிறது வெறும் சுண்டைக்காய் அளவு சுமைக்காக. இக்கவிதையைக் கேட்டபின் அந்தச் சுமையைச் சுமக்கத்தான் எத்தனை புத்துணர்ச்சி உற்சாகப் பெறுக்கெடுக்கும்.

  கவிதைக்குப் பொய்யழகு என்பார்கள். பொய் என்பது உண்மையில் பொய்யல்ல அலங்காரம். கண் என்ற உண்மைக்கு மை என்பது அலங்காரம். கவிதை என்ற உண்மைக்கு கற்பனை என்பது அலங்காரம்.

  உண்மைக்கு அலங்காரம் செய்ய வந்த ஒரு கற்பனை நயமே இன்னொரு பெரும் உண்மையாகிறது இக்கவிதையில் மட்டும்தான். ஆகவே இது உண்மையிலேயே தனித்துவமான கவிதை. கவிதைகளையெல்லாம் வென்றெடுத்த கவிதை என்பேன்.

  எப்படி எனில்….

  ஒரு சாதாரண கவிஞன் ”நீ சுமப்பது கல்லல்ல இறைவனின் அருள்” என்று கூறியிருந்தால், அட எத்தனை அழகாகச் சொல்லி இருக்கிறான் கவிஞன் என்று பாராட்டுவோம். இறைவனின் அருளைச் சுமப்பதாய் நினைத்து நாம் கற்களைச் சுமப்போம் வாருங்கள் என்று அனைவரையும் அழைப்போம்.

  ஆனால் அதையே இறைத்தூதர் சொன்னால் என்னவென்று பொருளாகும்?

  கல் என்பது அருளுக்குச் சமம் என்ற நிலை மாறி அது இறைவனின் அருளேதான் என்று ஆகிவிடுமல்லவா? ஏனெனில் சொல்லுவது ரசூல் அல்லவா?

  கவிதைக்கு அலங்காரமாய் வந்த கற்பனையே அது வெறும் கற்பனை அல்ல, உண்மை என்று ஆன ஒரே கவிதை இது மட்டும்தான் என்பேன்.

  >>>>>>
  செங்குருதி சிந்துகின்ற விரலே உன்கால்
  செல்லுகின்ற பாதையிறைப் பாதை யன்றோ?
  >>>>>>

  இது நாயகத்தின் கவிதை என்று எனக்கு முதன் முதலில் சில ஆண்களுக்கு முன் அறிமுகம் செய்து வைத்தவர் நாகூர் ரூமி என்னும் முகமது ரஃபி. நான் படித்த ஜமால் முகமது கல்லூரியில் எனக்கு மூத்தவர். இன்று ஆங்கிலப் பேராசிரியர், எழுத்தாளர், மற்றும் கவிஞர். அவரின் மொழியாக்கம் இப்படி இருந்தது.

  ரத்தம் வரும் நீயோ ஒரு விரல்தான்
  ஆனால் இது அல்லாஹ்வுக்காக நீ கொடுத்த குரல்தான்

  எந்த ஓர் இன்னல் வந்த போதும் சட்டென்று இறைவனை நினைத்து எளிதாக ஆக்கிக்கொள்ளும் ஈமான் நிறைந்த உள்ளம்தான் இறைதூதரின் கவிதைகளில் அப்பட்டமாய் வெளிப்படுகின்றது.

  அந்தப் பொதுத்தன்மையே இறைதூதரின் கவிதைகளில் முதன்மை என்று நான் காண்கிறேன்.

  குறைசிகளின் பெருங் கொடிய இன்னல்களுக்கு மட்டுமல்ல, கல் சுமப்பது, விரலில் வழியும் ரத்தம் போன்ற சின்னச் சின்ன இன்னல்களுக்கும்கூட இறைதூதர் இறைவனின் அருளையே பற்றிப் பிடித்து வெற்றி கொள்கிறார்.

  இது அனைத்து முஸ்லிம்களுக்கும் மிக நல்ல பாடம்.

  நான் இறைதூதரின் கவிதைகளுக்கும் விமரிசனம் எழுதுவேன் என்று கனவு கூட கண்டது கிடையாது. இன்று எனக்கு அந்த வாய்ப்பினைத் தந்த அன்பு ஆய்வாளர் உங்களுக்கு எத்தனை நன்றிகளை எப்படிச் சொல்வது என்றே தெரியவில்லை!

  >>>>>>
  கருணை நபியவர்கள் கவிகளும் பாடியுள்ளார்கள் என்பதற்கான சில சான்றுகளே இவை. அவர்கள் காரணமின்றிக் கவிதைகளை வெறுக்கவுமில்லை; அவர்களுக்கு இறைவன் கொடுத்திருந்த ‘வஹி’ என்ற உயர் இலக்கியத் திறன் கொண்டு, கவிதைகளைக் கேட்டு மகிழ்ந்தும் உள்ளார்கள்; பாடுவோரை ஊக்கப்படுத்தியும் உள்ளார்கள் என்பதுவே உண்மையிலும் உண்மையாகும்.
  >>>>>>>

  இந்த அருமைத் தொடருக்கு இந்த முத்தாய்ப்பு வரிகள் மிகவும் சிறப்பாகவே அமைந்துள்ளன. நான் முன்பே உங்கள் தொடரின் பகுதிகளில் சொன்னதுபோல், நீண்டகாலம் ஓர் நல்ல ஆய்வுக்காகக் காத்திருந்தேன்.

  நான் முதன் முதலில் இது தொடர்பாக தமிழில் வாசித்த கட்டுரை பேராசிரியர் நாகூர் ரூமியினுடையது. அதுவும் அருமையானதுதான். ஆனால் அது என்னைப் போன்றவர்களுக்குத்தான் ஏற்றதாக இருந்தது. அர அல போன்றவர்களுக்கு அல்ல.

  நாகூர் ரூமியின் கட்டுரையை கீழுள்ள சுட்டியில் காண்க:
  http://anbudanislam2012.blogspot.ca/2012/07/blog-post_9653.html

  ’வஹீ என்ற உயர் இலக்கியத் திறன்’ என்ற சொற்றொடரை அழகாகப் பயன்படுத்தி இருக்கிறீர்கள். ஆம் அது ஓர் உயர் இலக்கியத் திறனேதான். அதை நல்ல கவிஞர்களால்தான் எளிதாகவும் சரியாகவும் அணுகமுடியும் என்பது என் அழுத்தமான கருத்து.

  மிகப் பெரும் கவிஞர்களாலேயே சூழப்பெற்ற அரபு மண்ணில் அவர்களையெல்லாம் அதிசயிக்கவும் ஆச்சரியப்படவும் வைக்கும் உயர் கவிதை நடையில் குர்-ஆன் இறங்குவதுதானே மிகவும் பொருத்தமானது. இறைவன் என்ன அறியாதவனா? இது போல் ஓர் வரியையாவது இவர்கள் எழுதுவார்களா என்ற சவால்கூட திருமறையில் உள்ளதல்லவா?

  இஸ்லாம் வாளால் தோன்றிய மதம் என்பார்கள்
  அது உண்மை அல்ல
  இஸ்லாம் கவிதையால் யாக்கப்பட்ட மார்க்கம் என்றால்
  அதை நாம் தாராளமாக நம்பலாம்

  >>>>ஆதிக்க வலிமையால் அடக்கி ஒடுக்கப் பார்த்தார்கள் குறைஷியர்; முடியவில்லை! கேலி கிண்டல்கள் செய்து பார்த்தார்கள்; தோல்வியைத் தழுவினார்கள்! இறுதியாக அவர்கள் கைகளில் எடுத்த போர்க்கருவிதான் கவிதை!<<<<<

  ஆமாம், குறைசிகளின் இனத்தில் பிறந்த அண்ணல் நபிக்கு 90 விழுக்காட்டிற்கும்மேல் எதிர்ப்பினைக் கொடுத்தவர்கள் குறைசிகள்தாம். குறைசிகளின் எதிர்ப்பு தீராத ஒன்றாகவே இறுதிவரை இருந்தது.

  நாயகம் 40 வயதில் நபித்துவம் அடைகிறார். இஸ்லாம் பல வெற்றிகளை எட்டியபின்னரும்கூட தன் 52வது வயதில் அதாவது 12 வருடங்கள் ஆகியும் தீராத பகையை குறைசியர் கொடுக்க மதினாவுக்கு அடைக்கலம் தேடிச் செல்கிறார். அத்தனை கொடுமைக்காரர்கள் குறைசியர்.

  அவர்கள் கைகளிலும் கவிதைகளா எனும்போது எனக்கு மட்டுமல்ல அந்தக் கவிதைகளுக்கும் நிச்சயம் உயிர்போக வலித்திருக்கும்.

  நெருப்பு எவர் கைக்கும் வரும்தான். ஆனால் கொள்ளிக்கட்டைகளை எப்படி சுடர் விளக்குகளால் விரட்டி வாழ்வை ஒளிமிகுந்ததாய் ஆக்கமுடியும் என்பதற்கு இஸ்லாமியக் கவிதைகள் சிறந்த நல் உதாரணங்களாய் அமைந்துள்ளன.

  அக்கவிதைகளுள் சிலவற்றைத் தொகுத்து மொழிமாற்றி இத் தொடர் முழுவதும் தோரணங்களாய்க் கட்டி கம்பீரமாய் தொங்கவிட்ட உங்களை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை.

  குறைசியர் கவிதைகளுக்கும் இஸ்லாமியர் கவிதைகளுக்கும் இடையே நிகழ்ந்த யுத்தம் முழுவதையும் பதிவு செய்தால் எப்படி இருக்கும் என்று நான் கற்பனை செய்து பார்க்கிறேன். புல்லரிக்கிறது.

  அன்புடன் புகாரி
  Source : http://anbudanislam2012.blogspot.in/2012/08/blog-post_29.html

  Advertisements
   
 • Tags: , ,

  வெறுப்பு எஸ் எம் எஸ் – அமெரிக்காவின் உதவியை நாடும் இந்தியா

  இந்தியாவில் முஸ்லிம்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் கடந்த வாரம் அனுப்பப்பட்ட எஸ் எம் எஸ் மற்றும் வீடியோ படங்கள் எங்கிருந்து அனுப்பப்பட்டன என்பது குறித்து இந்தியா அமெரிக்க வெளியுறவு மற்று உள் நாட்டு பாதுகாப்பு அமைச்சகங்களிடம் உதவி கோரியுள்ளது. அஸ்ஸாம் மற்றும் மியான்மரில் முஸ்லிம்கள் தாக்கப்படுவது கண்டித்து சென்ற வாரம் மும்பையில் ரஸா அகடெமி என்ற முஸ்லிம் அமைப்பு நடத்திய பேரணியில் ஏறபட்ட வன்முறையைடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அஸ்ஸாம் மற்றும் மியான்மரில் முஸ்லிம்கள் கொடூரமாக படுகொலை செய்யப்படுவது போன்ற புகைப்பட காட்சிகள் எஸ் எம் எஸ், எம் எம் எஸ் மற்றும் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் பரப்பப்பட்டன.

 • இதனால் முஸ்லிம்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டது. மேலும் தென் இந்தியாவில் வாழும் வட இந்தியர்களுக்கெதிராகவும் செய்திகள் பரப்பபட்டதில் சென்னை, பெங்களூரு, ஹைதரபாத் போன்ற நகரங்களில் வசிக்கும் பிகார், அஸ்ஸாம் மாநிலத்தவர்கள் தங்களின் சொந்த மாநிலங்களுக்கு திரும்ப ஆரம்பித்தனர். இதனால் மத ரீதியாகவும், இன ரீதியாகவும் கலவரம் நடத்த அந்நிய சக்திகள் திட்டமிட்டதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது குறித்து பேஸ்புக், டுவிட்டர் நிறுவனங்களிடம் விசாரித்த புலனாய்வு அமைப்புகள், அமெரிக்காவிலிருந்து செயல்படும் கம்ப்யூட்டர் சர்வர்களிடமிருந்து இவைகள் அனுப்பப்பட்டுள்ளன என்பதை உறுதி செய்துள்ளது. இதற்காக தற்போது அமெரிக்க வெளியுறவு துறை மற்றும் உள் நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் மூலம் வெறுப்பு செய்திகளை அனுப்பியவர்களை கண்டறிய உதவுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

  Source : http://www.inneram.com/news/india-news/2012-08-21-03-24-08-5520.html

   
 • கையெழுத்துப் பத்திரிகையிலிருந்து ட்விட்டர் வரை


  கையெழுத்துப் பத்திரிகையிலிருந்து ட்விட்டர் வரை

  உரையாடல் சுகம். உரையாடுவதற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணமிருக்கிறது. ஒன்றை நாம் ஏற்றுக்கொள்கிறோமோ, ஆட்சேபிக்கிறோமோ.. எதுவாக இருந்தாலும் அதற்கு உரையாடல் அவசியம். உரையாடுவதற்கான மனப்போக்கு நமக்கு எப்போதும் வாய்ப்பதில்லை. அல்லது நம்மெதிரே உரையாடுவதற்கு எப்போதும் ஆள் கிடைப்பதில்லை. உரையாடல் பலருக்கும் ஒரு கட்டத்தில் சலித்து விடுகிறது. ஒருவேளை ஏற்கனவே உரையாடியதையே திரும்ப உரையாட வேண்டி இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். அல்லது உரையாடலுக்காக செலுத்த வேண்டிய உழைப்பு அயர்ச்சியைத் தரலாம். எது எப்படியோ எல்லோருமே ஏதோ ஒரு காலக்கட்டத்தில் மற்றவர்களுடனான நம்முடைய உரையாடலை, ஏதோ ஒரு காரணத்தால் நிறுத்திக் கொள்கிறோம். இப்படிப்பட்ட நிலையில் எழுபத்தைந்து ஆண்டு காலமாகவே யாருடனேயோ, எதற்காகவோ எப்போதும் உரையாடிக் கொண்டேயிருப்பது எத்துணை பெரிய சாதனை?

  கலைஞர் தன்னுடைய டீனேஜில் தன் சக மாணவர்களோடு உரையாடத் தொடங்கினார். தன்னைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளை அ முதல் ஃ வரை அலசினார். இத்தகைய உரையாடலுக்காகவே இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பினை தோற்றுவித்தார். அழகிரிசாமியின் அபாரப்பேச்சால் ஈர்க்கப்பட்டவர் தன் உரையாடலை கேட்போர் வசீகரிக்கும் வண்ணம் மெருகேற்றினார். தன்னுடைய அமைப்பினை மாணவர் மன்றமாக – திராவிட இயக்கத்தின் சார்பு கொண்ட முதல் மாணவர் அமைப்பாக – உருமாற்றினார். மன்றத்துக்காக ‘மாணவநேசன்’ என்கிற கையெழுத்துப் பத்திரிகையை தோற்றுவித்தார். தனக்கே தனக்கான அந்தப் பத்திரிகையில் எழுத்து வாயிலாக உரையாடத் தொடங்கினார்.

  பிற்பாடு அந்த கையெழுத்துப் பத்திரிகையை ‘முரசொலி’ என்கிற பெயரில், அவ்வப்போது கட்டுரைகளை எழுதி துண்டுப் பிரசுரமாக, அச்சடித்து வினியோகிக்கத் தொடங்கினார். பின்னர் ‘முரசொலி’ வார இதழாக மாறி, திருவாரூரில் இருந்து வெளிவரத் தொடங்கியது. சென்னைக்கு இடம்மாறிய பின்னர் நாளிதழாக வளர்ச்சியைக் கண்டது. அன்றிலிருந்து இன்றுவரை தன் உடன்பிறப்புகளோடு ‘முரசொலி’ வாயிலாக கலைஞர் உரையாடிக் கொண்டேதானிருக்கிறார். உடன்பிறப்புகளோடு மட்டுமின்றி தன்னை எதிரிகளாக கருதுபவர்களோடும், எதிர்க்கருத்து கொண்டிருப்பவர்களோடும், வசைபாடுபவர்களோடும், புறம் பேசுபவர்களோடும் கூட அவர் உரையாட மறுத்ததில்லை. கலைஞரே ஒருமுறை சொன்னார். “சவலைப்பிள்ளையாய் இருந்தாலும் முரசொலி என்னுடைய தலைச்சன் பிள்ளை”. மந்திரவாதியின் உயிர் ஏழு கடல், ஏழு மலை தாண்டி எங்கோ வசிக்கும் கிளியிடம் இருக்கிறது என்பார்கள். கலைஞரின் இதயம் என்றும் முரசொலியாக துடிக்கிறது. பிற்பாடு முரசொலியின் கிளைகளாக குங்குமம், முத்தாரம் என்று கிளைவிட்ட இதழ்கள் ஏராளம்.

  கலைஞரின் உரையாடல் பத்திரிகைகளோடு மட்டும் நின்றுக் கொண்டதில்லை. உரையாடலுக்கு கிடைக்கும் எந்த வெளியையும் அவர் பயன்படுத்திக் கொள்ளத் தவறியதில்லை. ஓவியம், நாடகம், கவிதை, இலக்கியம், சினிமா, மேடை, சட்டமன்றம், தொலைக்காட்சி என்று எது கிடைத்தாலும், அதில் மற்றவர்களுடனான தன் உரையாடலை கூர்தீட்டிக் கொண்டார். கலைஞர் பங்குகொண்ட திரைப்படங்கள், மேடைநாடகங்கள், புத்தகங்கள் என்று எதை எடுத்துக் கொண்டாலும் அவை வெறும் பொழுதுபோக்குக்கு என்றில்லாமல், அவற்றினூடாக சமூகம் குறித்த தன் சிந்தனைகளை உரையாடலாக எப்போதும் நிகழ்த்திக்கொண்டே இருந்திருக்கிறார்.

 • வெளிப்படையாக பதினான்கு வயதில் தமிழ் சமூகத்தோடு உரையாடத் தொடங்கியவர், தன் வாழ்நாளோடே இணையாய் வளர்ந்துவரும் ஊடகத்தின் வடிவங்கள் அத்தனையையும் பயன்படுத்திக் கொள்ளத் தவறவில்லை. உதாரணத்துக்கு, தொண்ணூறுகளின் மத்தியில் ‘பேஜர்’ எனும் கருவி அறிமுகப்படுத்தப்பட்டபோது, ஆர்வமாக அதை வாங்கினார். கலைஞர் வாங்கிய பேஜரில் தமிழில் செய்திகள் வரும் (இயக்குனர் மணிவண்ணன் உள்ளிட்ட மிகச்சிலர்தான் தமிழ்பேஜர் பயன்படுத்தினார்கள் என்று நினைவு). கணினியில் தமிழ் உள்ளீடு குறித்து, ஆர்வமாக கேட்டுத் தெரிந்துக்கொள்வார். கம்ப்யூட்டர் பயன்படுத்தத் தெரிகிறது என்கிற காரணத்துக்காகவே நிறைய இளைஞர்களை தன்னுடைய நண்பர்களாக ஆக்கிக் கொண்டார்.

  இன்றும் தாளில் எழுதுவதுதான் அவருடைய விருப்பமென்றாலும், தொழில்நுட்ப வளர்ச்சியை குறை சொல்லும் போக்கு அவரிடம் இல்லவே இல்லை. சமீபகாலமாக இணையத்தளங்களின் வளர்ச்சி, அவை சமூக வலைப்பின்னலாக உருவெடுத்து வருவது ஆகியவற்றையும் நண்பர்கள் மூலமாக அறிந்துக் கொண்டிருக்கிறார். வலைத்தளங்களில் எழுதப்படும் முக்கியமான கட்டுரைகளை அவர் பிரிண்ட் எடுத்து வாசிப்பதாக ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறேன். கலைஞர் தொலைக்காட்சி தொடங்கப்பட்ட புதிதில் கலைஞர் டி.வி. vs சன் டி.வி. மோதலையொட்டி, நாம் எழுதியிருந்த கட்டுரை ஒன்றினை (கலைஞர் தொ.கா.வில் பருத்திவீரன் திரைப்படம் திரையிடப்பட்டபோது) கலைஞர் வாசித்ததாக, அத்தொலைக்காட்சியில் பணிபுரிந்த நண்பர் ஒருவர் மூலமாக கேள்விப்பட்டிருந்தோம். சமீபத்தில் கூட ‘டெசோ’ குறித்து நாம் எழுதியிருந்த கட்டுரையை அச்செடுத்து, தன்னுடைய கட்சி சகாக்களிடம் கொடுத்து உரையாடியிருக்கிறார். ஃபேஸ்புக்கில் தன்னையும், கட்சியையும் பற்றி நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ எழுதப்படுவதையெல்லாம் நண்பர்கள் மூலம் அறிந்து வாசிக்கிறார்.

  இப்போது உரையாடலுக்கான இந்த களத்தையும் அறிந்துக்கொண்டார் கலைஞர். எனவேதான் ட்விட்டர் இணையத்தளத்தில் தனது உரையாடலை தொடரும் வண்ணம் தன்னுடைய கணக்கினை தொடங்கியிருக்கிறார். தொடங்கிய முதல்நாளே ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலைஞரின் கணக்கை பின்தொடரத் தொடங்கியிருக்கிறார்கள். கலைஞரின் ட்விட்டர் கணக்கு : https://twitter.com/kalaignar89 கலைஞர் எதைத் தொட்டாலும் பொன் தான்.

  எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பாக கையெழுத்துப் பத்திரிகையில் தொடங்கிய கலைஞரின் உரையாடல், அவரது எண்பத்தி ஒன்பது வயதில் இணையத்தில் ட்விட்டர் கணக்கு வரை தொடர்கிறது. உரையாடலில் இவரளவுக்கு காதல் கொண்ட இன்னொரு மனிதரை நம்மால் காணமுடியுமா என்பதே சந்தேகம்.

  எழுதியவர் யுவகிருஷ்ணா
  Source: https://seasonsnidur.wordpress.com/?p=5555&preview=true

   
 • Tags: , ,

  சுதந்திரம் அருமை அறிய சுதந்திரம் வேண்டும்

  சுதந்திரம் அருமை அறிய சுதந்திரம் வேண்டும்
  சுதந்திரம் வந்தால் விடுமுறை அதனால் அதிகமாக தொலைகாட்சி நிகழ்சிகள் பலவிதம் . தொலைக் காட்சியினர் குடும்பங்களை சோம்பேறியாகவும் பொறுப்பு இல்லாதவனாகவும் மாற்றி தவறான காட்சிகளை காட்டியும் நிறைய பொருள் ஈட்டுகின்றனர்.
  விடுமுறை கிடைத்ததால் ஓய்வு மற்றும் ஊர் பொய் வரலாம். இதுதான் நடக்கின்றது. மற்ற பண்டிகை நாட்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் சுதந்திர நாள் ,மற்றும் குடியரசு நாள் கொண்டாடத்திற்கு கொடுக்கப்படுவதில்லை. இது மனதோடு ஒன்றாத ஒரு நாளாகவே வந்து மறைகின்றது
  சுதந்திரம் அருமை இக்கால இந்திய மக்களுக்கு சுதந்திரத்தின் அருமை தெரிய வாய்ப்பில்லை. அரசு விழாக்கள் கொடி ஏற்றும் நிகழ்வுடன் ஆயுத வலிமை காட்டி ஊர்வலம்.இத்துடன் முடிகின்றது
  சாதாரண வெறுப்பான காதலர் தின கொண்டாட்டங்களுக்கு கிடைக்கும் உற்சாகம் கூட மக்களிடத்தில் இல்லை.

 • பெரும்பான மக்கள் ஆங்கிலேயன் ஆட்சியைக் காணவில்லை. மற்ற நாடுகள் சுதந்திரம் பெறுவதற்கு அடைந்த சிரமங்களும், தொல்லைகளும் அடைந்த துன்பங்களை குறைக்க காந்தி அடிகள் நமக்காக அயராது பாடுபட்டு குறைத்து விட்டார் . அல்ஜீரியா மக்கள் பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து பெற்ற துன்பங்கள் நம்மை விட அதிகம். இரண்டாம் உலகப் போரில் ஆங்கிலேயனுக்கு ஒரு நெருக்கடியை ஹிட்லர் உண்டாக்கியதால் நம் தயவை நாடி அங்கிலேயர் வர வேண்டிய கட்டாய நிலை .அதை அருமையாக ,சாதுர்யமாக பயன்படுத்திக் கொண்டார் காந்தி அடிகள். அவருக்கு கிடைத்த உயர்ந்த தொண்டனாக நேரு அமைந்தது இந்திய நாட்டின் சுதந்திரச் செடி நன்கு வேருடன் கூடிய ஆலமரமாக தெற்காசியாவில் நிலை பெற வாய்ப்பானது , மலேசியா மற்றும் சிங்கப்பூரிலும் இது நிலையானது , சுதந்திரம் பெற்ற பின்பும் முதலில் கடுமையான முறையை கையாள்வதின் வழியே மக்களுக்கு நன்மை செய்ய முயன்றதால் மக்கள் அவரை நேசிக்க ஆரம்பிக்க முயன்றனர் , அதன் பின்புதான் மக்களுக்கு கட்டுப்பாடான உரிமைகளை தர ஆரம்பித்தார் . அனைத்து மக்களையும் ஒரே கண் கொண்டு பார்த்தார் . மத வேறுபாடு காரணமாக சண்டை வராமலும் மற்றும் அனைத்து மக்களும் நேசத்துடன் வாழ வேண்டும் என்பதில் முக்கியம் கொடுத்தார் . அது ஒரு மிகவும் சிறிய நாடாக இருந்ததால் அவர் நினைத்ததை அவரால் சாதிக்க முடிந்தது அதனால் லிகுவான்கியு மக்கள் மனதில் நிலையான இடம் பிடித்தார்,
  நம் நேருஜி அவர்கள் அதேபோல் உயர்வான கொள்கைகளை பெற்றிருந்தும் அவர் ஒரு போதும் அடக்கு முறையை கையாள முயலவில்லை, அதனால் மக்கள் நேருவை மிகவும் நேசித்தனர் ,நேருவின் அறிவு அவருக்கு கை கொடுத்தது, அதனால் நம் அண்டை நாடுகள் அனைத்தும் (மலேசிய மற்றும் சிங்கப்பூரைத் தவிர ) பெயருக்குத்தான் மக்களாட்சி ஆனால் ஆள்வது முப்படை வீரர்கள்தான். இந்தியாவில் வாழும் மக்கள் மனித உரிமையின் மாண்பினை நன்கு அனுபவித்து விட்டனர் . இங்கு ஒரு காலமும் இராணுவ ஆட்சி வராது. அதன் பெருமை காந்திக்கும்,நெருக்கும் அவர்களுக்கு உரு துணையாக இருந்தவர்களுக்கும் போய்ச் சேரும்.

  சுதந்திர வந்து நமக்கென்று பல்வேறு நாடுகளிலுருந்து எடுக்கப்பட்ட நன்மை பயக்கக் கூடிய ஒரு கலவையாகத்தான் நமது அரசியல் சாசன சட்டங்கள் உருவாக்கப்பட்டன . அது தொடர்ந்து காலத்தின் கட்டாயத்தை கருதி பல மாற்றங்களை ஏற்படுத்த அவசியம் வந்து ஏகப்பட்ட திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இது தேவைதான் .
  இருபினும் அதிலும் ஒரு ஓட்டையை தெரிந்தோ தெரியாமலோ வைத்து விடுகின்றனர் .A law without exception is no law

  இது போதும் பலர் தவறு செய்த பின் தப்பிக்க . ஊழல் செய்பவர் ஊழலை ஒழிக்க வேண்டும் என்கிறார். தேர்தல் வந்தால் பணம் வாரி இறைக்கபடுகின்றது . சட்டம் இருப்பது மக்களை பாதுகாக்க அந்த சட்டமே பாதிக்கப்பட்டவனுக்கு சாதகமாக அமையாமல் பொய் விடும் நிலையும் நாம் பார்க்கின்றோம் . “சட்டம் ஒரு இருட்டறை அதிலே வக்கீலின் வாதம் ஒரு ஒளி விளக்கு ஏன்று அண்ணா சொன்னார்” . வாதம் செய்பவரே இருட்டில் மாட்டிக்கொள்ளும் நிலை மிகவும் வேதனையாக உள்ளது .
  சுதந்திரத்தின் அருமை தெரிய ஒவ்வொரு மனிதனும் திருந்த வேண்டும்’ வெறும் கொண்டாடத்தினால் ஒரு நன்மையும் விளையாது . வீண் விரயங்களை கட்டுப் படுத்த வேண்டும் . தலைவர்கள் வாழும் முறை மக்களுக்கு நல்வழி காட்டும். தலைவன் சரியில்லையென்றால் தொண்டன் தலைவன் வழிதான் தொடர்வான். உடலுக்கு ஆபத்து வராமல் தலைக்குத்தான் ஹெல்மெட் . முதலில் தலையை பாதுகாத்துக் கொள்ளுங்கள் , தலைமையை முறைபடுத்திக் கொள்ளுங்கள் , பின்பு அனைத்தும் சிறப்பாக அமையும் . போதும் ‘ஹீரோ வொர்ஷிப்’வேண்டாம் சுய சிந்தனை தழைக்கட்டும் அது உரிமையை பாதுக்காக்கும் , அப்பொழுதுதான் சுதந்திரம் முழுமையடையும்

   
 • Tags: , ,

  பூவின் மணம் பரப்பும் காற்று!

  நாகூர் மண்வாசனை

  (“வெதை (விதை) ஒண்ணு போட்டா சொரை ஒண்ணா முளைக்கும்?” என்று நம்மூரில் பழமொழி சொல்வார்கள். கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் என்பதைப்போல என் நண்பன் நெளஷாத் அலி பற்றி  “பூவின் மணம் பரப்பும் காற்று” என்ற தலைப்பில் தினகரன் வாரமஞ்சரியில் விசு கருணாநிதி எழுதிய கட்டுரை இது – அப்துல் கையூம்)

  நாகூர் ஈ.எம். ஹனீபாவின் மகனைப் பார்த்தேன். அப்பாவைப் போலவே ‘ஹை’ பிச்சில் பிய்த்து உதறுகிறார் என்று அலுவலகத்தில் கூறினேன். உடனடியாக ஏற்றுக்கொள்ளத் தயங்கியவர்களாய் ‘அப்படியா!’ என்றார்கள்!

  எதனையும் நம்பிக்கையுடன் சொல்லும் சுஐப்புக்கும் நம்ப முடியவில்லைபோலும், கவனம் வேறெங்கோ போக வாய் மட்டும் ‘ஹாங்!’ என்றது. பரபரப்போடு பக்கங்களை விரைவாக முடித்து விடத் துடிக்கும் பரசுராமனின் முகத்திலும் என் எதிர்பார்ப்பைக் காணவில்லை. பல்லைக்காட்டி ஒரு சிறு புன்னகையுடன் நிறுத்திக்கொண்டார். ஏனையவர்களும் அப்படித்தான். கிருஷாந்தி, ரேணுகாவும் கூட புன்னகையோடு சரி.

  நல்லவேளை பிரதம ஆசிரியர் செந்தில் வேலவர் இந்தியா சென்றிருந்ததால் இருக்கவில்லை. அவர் வேறோருவரை ஹனீபாவின் வாரிசு என என்னிடமே புகழ்ந்திருக்கிறார். எனக்கு பொய்க்காக, முகஸ்துதிக்காக பல்லிளித்து தலையசைக்கத் தெரியாது. பட் பட்டென்று முகத்திற்கு நேரே சொல்லி விடுவேன். அதனால் பலருக்கு என் மீது எரிச்சல். அது வேறு விடயம்.

  ஹனீபா மகன் விடயத்தில் விட்டுக்கொடுக்க மனது தயாரில்லை. நாகூர் ஹனீபா என்ற குரல் இஸ்லாமியர்களை மட்டுமன்றி வேற்று மதத்தவர்களையும் ஈர்த்திருக்கிறது. அந்தளவு வசீகரமான சாரீரம் அவருடையது. “இறைவனிடம் கையேந்துங்கள்!…

  View original post 623 more words

   
  Leave a comment

  Posted by on August 6, 2012 in Uncategorized

   

  சன் டிவியுடன் அரசு டிவி ஒப்பந்தம்

  சன் குழும சேனல்களை ஒலிபரப்புவதற்கு தமிழக அரசின் அரசு கேபிள் டிவி, சன் டிவியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இனி அரசு கேபிள் டிவியில் சன் நிகழ்ச்சிகளும் ஒலிப்பரப்பாகும். கடந்த ஒரு ஆண்டுகளாக இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். கடந்த 26ந்தேதி இது தொடர்பான இறுதி கட்ட பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக திங்களன்று ஒப்பந்தம் கையெழுத்தானது.

  ஒப்பந்தப்படி சன் டிவி தனது குழுமத்தின் அனைத்து சேனல்களையும் அரசு கேபிள் டிவிக்கு வழங்க, அரசு கேபிள் டி மாநிலம் முழுவதும் உள்ள தனது சந்தாதாரர்களுக்கு ஒலிபரப்பும். இதற்காக அரசு கேபிள் டிவி மாதம் 2 கோடி ரூபாய் சன் டிவிக்கு செலுத்தும். திமுக ஆட்சியின் போது மாறன் சகோதரர்களோடு ஏற்பட்ட பிணக்கில், கருணாநிதி அரசு கேபிள் டிவியை தொடங்கினார். பின்னர் குடும்ப சண்டை முடிவுக்கு வந்தவுடன் அரசு கேபிள் டிவி கிடப்பில் போடப்பட்டது.

 • சென்ற வருடம் அதிமுக ஆட்சி பொறுப்பை ஏற்ற போது மீண்டும் அரசு கேபிள் டிவிக்கு உயிரூட்டப்பட்டது. அதிலிருந்து கடந்த ஒரு வருடமாக பேச்சுவார்த்தை நடந்து வந்ததில் தற்போது முடிவு ஏற்பட்டுள்ளது. இது நாள் வரை சந்தாதாரர்கள் இருவித கட்டணங்களை செலுத்தி வந்தனர். அரசு டிவியில் சந்தா 75 ரூபாயாக இருந்தாலும், சன் டிவியின் நிகழ்ச்சிகள் தான் மக்களிடையே பிரபலாமாக இருந்து வருகின்றன. இதனால் மக்கள் சன் டிவி சந்தாக்களையே பெற்றனர். அரசியல்ரீதியாக ஜெயலலிதாவும் கருணாநிதியும் எதிரும் புதிருமாக இருந்தாலும் வியாபார, வர்த்தக விஷயங்களில் ஒரு விதமான “புரிதலோடு” செயல்பட்டு வருவதற்கு இது ஒன்றே எடுத்துகாட்டு.
  Source : http://www.inneram.com/news/tamilnadu-news/2012-08-02-04-31-13-5406.html

   
 • Tags: ,