RSS

Monthly Archives: August 2015

மகாபலிபுரத்தில் புத்தன்

11954645_709748505835736_5159476391727136291_nகேளிக்கைகள் அலுத்துப்போகும்போது
ஆசுவாசம் கொள்ள ஒரு மோனபுத்தன் சிலையை
வரவேற்பறையில் அமரவைத்தான் ஆல்பர்ட் சினோவா

பட்டப்பகலில் நீச்சல்குளத்தில்
கலவிக்கு உடன்படாத காதலிமீது கொண்டகோபத்தில்
விரல்கள் நடுங்க புகைபிடித்து ஊதினான்
மோனபுத்தனின் சாந்த முகத்தில்

நள்ளிரவுக் குடிபோதையில் புதிய நிலைகளுக்கு ஒத்துழைக்காத
அவள் பத்தாம்பசலித்தனத்தை இகழ்ந்து எள்ள,
கேத்தரின் ஒலூசா ஆத்திரத்தில் விசிறியெறிந்த கண்ணாடிக்குவளை பட்டு
உடைந்து சிதைந்தது புத்தனின் மூக்குநுனி. Read the rest of this entry »

Advertisements
 
Leave a comment

Posted by on August 31, 2015 in 1

 

உன்னைப் போல குழந்தையாய் பிறக்க ஆசை.

Nibraasதத்தி தத்தி நடந்திடுவாய்
தடுமாறி விழுந்திடுவாய்.
விழுவது ஒன்றும் பாவமில்லை..
உனக்கு மனதில் ஒன்றுமில்லை..

தங்கம் கையில் இருந்தாலும்
தூரமாய் தூக்கி எறிந்திடுவாய்..
பிஸ்கட் மட்டும் கையில் வைத்து
அழகாக சுவைத்திடுவாய்..

கண்ணீர் சிந்தி அழுதிடுவாய்..
பிறரை அழ வைக்க மாட்டாய்..
விழுந்து விழுந்து சிரித்திடுவாய்.
பிறர் விழ சிரிக்க மாட்டாய்.. Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on August 30, 2015 in 1

 

வெளிப்படையாகவே சொல்லிவிட்டார் ஹர்திக் படேல்!

11885354_10207448995414045_3774986956317867225_nவெளிப்படையாகவே சொல்லிவிட்டார் ஹர்திக் படேல்!
“இடஒதுக்கீட்டை ஒழித்துக்கட்டுங்கள் அல்லது எல்லோரையும் அதன் அடிமைகளாக்கி விடுங்கள். அதாவது எல்லோருக்கும் ஒதுக்கீடு தாருங்கள்” என்பது அவரது இன்றைய முழக்கம். மூன்றே மாதத்தில் தலைவராகி லட்சக்கணக்கானவர்களைத் திரட்டி, நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் இந்த 22 வயது இளைஞர்.

அவரது ஜாதியைச் சேர்ந்த முதல்வர் ஆனந்திபென் படேலை பொம்மை என்கிறார். அதிகாரம் வேறெங்கோ இருக்கிறது என்றும் சாடுகிறார். இத்தனைக்கும் இவர் தலைமையிலான போராட்டத்துக்கு ரத்தினக் கம்பளத்தை விரித்து ஆதரவு தந்தது ஆனந்திபென் அரசு. மிகவும் வறியவர்களான இந்தப் போராட்டக்காரர்களுக்கு நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு. மேலும் போராட்டம் நடந்த மைதானத்துக்குக கட்டணம் செலுத்துவதில் இருந்தும் விலக்குத் தந்தது அவரது அரசு.
கல்வி, சமூக மற்றும் பொருளாதார நிலைகளில் பன்மடங்கு முன்னேறியது அவரது சமூகம் என்பதற்கும் ஆட்சி அதிகாரம் அவர்களின் கைகளில்தான் குவிந்திருக்கிறது என்பதற்கும் சான்றாக, ஏராளமான விவரங்கள் அமுதசுரபிபோல கொட்டிக் கிடக்கின்றன. புதிய ஆதாரங்களைத் தேடித்தர வேண்டிய அவசியமில்லை. Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on August 28, 2015 in 1

 

Tags:

நண்பர் யுவகிருஷ்ணாவுக்கு மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்

11895971_10207608739406132_7757226126964486165_n

பள்ளிப் படிப்பை முடிப்பதற்குள் குடும்ப பாரத்தை சுமக்க வேண்டிய கட்டாயம். எனவே சென்னை அண்ணா சாலையில் இருக்கும் நாளிதழில் ஆபீஸ் பாயாக தன் பணியை தொடங்கினார். எழுதக் கற்றுக் கொண்டதும் லே அவுட் பயிற்சி பெற்றதும் அங்குதான்.
பிறகு விளம்பர நிறுவனம் ஒன்றில் டிசைனராக பணி. அப்போது இவர் எழுதிய விளம்பர வாசகங்களில் பல இன்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அடையாளமாக திகழ்கிறது.
பின்னர் பிரமிட் சாய்மீரா. திரையரங்கம் திரையரங்கமாக சுற்றியதும் ரசிகர்களின் நாடித் துடிப்பை நேரடியாக அறிந்ததும் இந்தக் காலகட்டத்தில்தான்.
எழுத்தின் மீதான காதல் பத்திரிகை துறைக்கு வரவழைத்தது.
நிருபர், முதன்மை நிருபர், உதவி ஆசிரியர் என படிப்படியாக உயர்ந்தவர் –
இன்று ‘வண்ணத்திரை‘ சினிமா வார இதழுக்கு முதன்மை ஆசிரியராக பொறுப்பேற்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார். Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on August 24, 2015 in 1

 

சொல்லத் தோணுது 48 – குற்றமும் தண்டனையும் – தங்கர் பச்சான்

48

மனிதனை அசைத்துப் பார்க்க அவனது மனசாட்சியால் மட்டுமே முடியும். அரசாங்கம் வழி தவறும் பொழுது அதனை கேள்வி கேட்கவும், நெறிப்படுத்தவும் நீதிமன்றம் என்கின்ற ஒன்று இல்லாமல் போயிருந்தால் எப்பொழுதோ இங்கு எல்லாமும் நடந்து முடிந்திருக்கும்.
செய்து கொண்டிருக்கின்ற குற்றத் தையே குற்றமென உணராமல் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல் வதாக நினைத்துக் கொண்டிருப்பவர் களை, உத்தரபிரதேசத்தில் உள்ள அலகா பாத் உயர் நீதிமன்றத்தில் நீதிமான் பிறப் பித்துள்ள தீர்ப்பு அனைவரின் மனசாட்சி யையும் பிடித்து உலுக்கியிருக்கிறது.
எதிர்காலத் தலைமுறையினரை உரு வாக்க ஊற்றுக்கண்ணாக இருக்கின்ற அரசுப் பள்ளிகளின் ஊற்றுக்கண் மூடப்பட்டு தூர்ந்துபோனதை நீதிமான் திறந்துவிட முயன்றிருக்கிறார். தன் னலத்தை மட்டுமே மதித்து பொதுநலன் குறித்த அக்கறையையே உணராத சமு தாயத்தை உருவாக்கித் தரும் தனியார் பள்ளிகள் பெருக்கெடுத்து, பொதுநல னையும், சமுதாய உணர்வையும், மக்கள் பற்றையும் போதிக்கிற அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுக் கொண்டிருக்கும் காலத்தில் இந்தத் தீர்ப்பு ஒவ்வொருவரின் மனசாட்சியையும் ஒரு நிமிடம் பிடித்து நிறுத்துகிறது. Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on August 23, 2015 in 1

 

நான் காணும் உகாண்டா ….!(தொடர் – 3)

11953244_1709635715926885_1922863743813637457_nஆங்கிலேயர் வந்ததும் கண்டதும்.

ஆங்கிலேயர்கள் உலகத்தின் பல பகுதிகளுக்கும் சென்று வியாபாரம் செய்ய வந்திருப்பதாக நாட்டில் நுழைந்து அரசியலில் அடிவைத்து நாட்டை அடிமைப் படுத்தி சமூகத்து மக்களின் ஒற்றுமையில் விளையாடி சூழ்சிக ள் கொண்டு பிரித்து வைத்து அந்த பிரிவினையில் சுகம்கண்டு கொடுமைகள் பல செய்து கொடுங்கோல் கொண்டு ஆட்சி செய்தனர்.

அதுபோலவே உகாடாவிலும் தவறாது செய்தனர். அப்படி செய்ய அவர்கள் வந்தபோது உகாண்டா எப்படி இருந்தது என்று பாப்போம்.

19 ம் நூற்றாண்டின் இறுதியில் உகாண்டாவில் எண்ணிவிடும் அளவில் சில நாடுகள் இருந்தன. அவைகள் அரசர்களால் ஆளப்பட்டு வந்தது. அவற்றில் புகாண்டா எனும் நாடு பல்வகை களிலும் சிறப்பு வாய்ந்ததாக திகழ்ந்தது. Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on August 23, 2015 in 1

 

இன இழிவு

inam

ஒன்றே குலம்! ஒருவனே தேவன்!! என்ற தெளிவான ஏகத்துவ கொள்கையிலிருந்த நம் தமிழகம், ஆரியர்களின் படயெடுப்பிற்குப் பின்னர் ஜாதி அடிப்படையிலான மனு தர்ம கொள்கைக்கு அடிமைப்பட்டது. அதன் காரணமாக ஒருதாய் மக்கள் பல ஜாதிகளாகப் பிளவு படுத்தப்பட்டனர். வேதம் ஓதுவோர் பிரம்மாவின் முகத்தில் பிறந்த உயர் ஜாதியாகவும், ஆட்சி புரிவோர் பிரம்மாவின் தோளிலிருந்து பிறந்த அடுத்த ஜாதியாகவும், வியாபாரம் செய்வோர் பிரம்மாவின் இடுப்பிலிருந்து பிறந்த மூன்றாம் ஜாதியாகவும், மற்றவர்கள் எல்லாம் பிரம்மாவின் காலிலிருந்து பிறந்த நாலாம் இழி ஜாதியாகவும் ஆக்கப்பட்டுள்ளனர். அதற்கு மேலும் இந்த நாலாம் ஜாதியினர் பள்ளர், பறையர் சக்கிலியர் என மேலும் இழிவுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த மக்களை தீண்டத்தகாத மக்களாகக் கற்பனை செய்து ஒவ்வொரு ஊரிலும் ஒதுக்குப்புறமான இடங்களில் சேரிகளில் வாழ நிர்ப்பந்த்திக்கப்படுகின்றனர். உயர்ஜாதி மக்கள் இந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அளித்துவரும் இன்னல்களும் கொடுமைகளும் ஏட்டில் அடங்கா.

செத்த மாட்டின் தோலை உரித்து எடுத்த குற்றத்திற்காக அடித்தே கொல்லப்பட்டனர் சிலர். மனித மலத்தை தின்க வைக்கப்பட்டனர் சிலர். மனித சிறு நீரை குடிக்க வைக்கப்பட்டனர் சிலர். தாழ்த்தப்பட்ட மக்களுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள பஞ்சாயத்துகளில் போட்டியிடும் தாழ்த்தப்பட்ட வேட்பாளர்களை சதி செய்து கொள்ளப்படும் பல நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன. சில மாதங்களுக்கு முன்பு 27 சதவிகிதம் கொடுக்கப்படுவதை எதிர்த்து மேல் ஜாதியினர் செய்த வேலை நிறுத்தம், பந்த், சாலை மறியல் நோயாளிகளின் உயிரோடு விளையாடிய உயர் ஜாதி டாக்டர்களின் வன் செயல்கள் இவை அனைத்தும் கீழ் சாதி மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை படம் பிடித்துக் காட்டுகின்றன. அதுவும் 21ம் நூற்றாண்டில் விஞ்ஞானத்தில், நாகரீகத்தில் முன்னேறி இருக்கும் இக்காலத்தில் மனிதனுக்கு சக மனிதனே ஜாதியின் பெயரால் இழைக்கும் வன் கொடுமைகள் வளர்ந்து வருகின்றன. Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on August 23, 2015 in 1