RSS

Monthly Archives: May 2011

கனிமொழிக்கு கனிமொழி தேவை

கனிமொழி கலைஞரின் வாரிசுகளில் சிறந்த கல்வியும், நல்கலையும்  அறிந்த இளம் வயது மங்கை.ஆங்கிலத்திலும் தமிழிலும் நல்ல புலமையுடன் கவிதை,கட்டுரை எழுதும் ஆற்றலுடையவர். அவர் அறிவு தந்தை வழி வந்தவை.
தாய் மீது பற்றும் பாசமும் அதிகமுண்டு.பாசம் நல்லது கெட்டது என்பதனை அறியாமல் செய்துவிடும்.இந்த இள வயதிலேயே வாழ்வில் பல துன்பங்களை சந்திக்க வேண்டிய நிலை. அனைவரையும் நம்பி பல இன்னலுக்கு ஆனாலும் இடிந்து போகாமல் இருப்பது பாராட்டுக்குரியது.அவர் அடைந்த வேதனை அவரை பண்படுத்தும் என்பது உறுதி .அரசியலில் நுழையாமலேயே கனிமொழி தனது அறிவின் ஆற்றலினால் பல சாதனைகள் செய்யும் வல்லமை கொண்டவர். அம்பு  எய்தவனை விடுத்து அம்பினை குறை சொல்வது போல் உள்ளது எய்தவன் இருக்க அம்பை நோவானேன் என்று கூறுவதும் வழக்கம் அல்லவா.
பெண்ணே பெண்ணுக்கு எதிரியாவது இயல்போ! பெண்ணின் நிலை காண வேதனை ஆண்களுக்கு வரும் இறக்கம் பெண்களுக்கு வராதோ ?

Advertisements
 

Tags:

ஹெல்மெட்டின் (தலைக்கவசம்)அணிவதின் மறுபக்கம் .

இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று சட்டம் சொல்கின்றது.  ஹெல்மெட் அணிவதால் இருசக்கர வாகன ஓட்டுனருக்கு பாதுகாப்பு. இதன் காரணமாகவே இந்த சட்டம் .காரில் நான்கு சக்கரத்தில் பிரயாணம் செய்பவர்களுக்கு பெல்ட் அணியும் சட்டம் எப்பொழுது வரும். நான்கு சக்கரத்தில் பிரயாணம் செல்வோர் விபத்துகளில் தலையில் அடிபட்டு மடிவோர் அதிகம். Read the rest of this entry »

 

Tags:

சபாநாயகருக்குப் பொருத்தமானவர் ஜெயக்குமார்: விஜயகாந்த்

தமிழக சட்டமன்ற சபாநாயகராகப் பொறுப்பேற்றுள்ள டி. ஜெயக்குமார் சபாநாயகர் பதவிக்குப் பொருத்தமானவர் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். டி.ஜெயக்குமார் சபாநாயகர் பொறுப்பை ஏற்றவுடன் அவரை வாழத்தி தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசியதாவது: Read the rest of this entry »
 

Tags: ,

கலைஞர் கருணாநிதி செய்த கடைசி தவறு !

தி.மு .க. வளர்வதற்கு பெரும் பங்கு வைத்த ஐந்து தி.மு.க.தலைவர்களில் கலைஞர் கருணாநிதியும் ஒருவர்.

இந்த தேர்தலில் தி.மு .க 119 இடங்களில் மட்டும் போட்டியிட வைத்தது கலைஞர் கருணாநிதி செய்த மிகப் பெரிய தவறு.

தனி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் கூட போட்டி போடாத நிலையில் தனது கட்சியின் வலிமையினை தானே மதிக்காமல் போனது,

கடந்த கால ஆட்சியில் இனாம் கொடுத்த பழக்கம் தொகுதி பங்கீட்டிலும் தொடர கட்சிக்காக உழைத்த தொண்டர்கள் மத்தியில் வெறுப்பினை உண்டாகியது .அதனால் தி.மு .க தொகுதி கிடைக்காதவர்கள் தி.மு .க கூட்டு கட்சிக்கு வோட்டு போடவில்லை.

தமிழ்நாடு காங்கிரஸ்  தலைவர்களின் ஒற்றுமை அனவருக்கும் தெரியும். தலைமை வழிதான் தொண்டர்களின் வழி . ஒருவழியாக தானும் தோற்று தி.மு .க.வையும் தோல்வியடைய வழி செய்து விட்டனர் .  Read the rest of this entry »

 

Tags: , ,

சி.பி.ஐ என்றால் என்ன?

வினவு : சிரிப்புப் போலீஸ் ஆஃப் இந்தியா

சி.பி.ஐ என்றழைக்கப்படும் மத்தியப் புலனாய்வுத் துறை பற்றி நீங்கள் கேள்விப்படாமல் இருக்க முடியாது. ஊர் நாட்டில் ஓட்டுக் கட்சித் தலைவர்கள் வீட்டிலிருந்து காணாமல் போன ஜிம்மியில்  ஆரம்பித்து லோக்கல் போலீசால் ‘கண்டு’ பிடிக்க முடியாத கோழி களவாணி வரை துப்புத் துலக்கிக் கண்டு பிடிக்கும் சூராதி சூரர்களாக இவர்களை ஊடகங்கள் உங்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கலாம். கருணாநிதி வீட்டில் சி.பி.ஐ விசாரணை ரெய்டு என்றும் ஏதோ இந்த சூரப்புலிகளைப் பார்த்து கருணாநிதி குடும்பமே நடுநடுங்கி வீட்டின் மூலையில் குந்த வைத்து உட்கார்ந்திருப்பது போல தினமலர் அடிக்கடி குதூகலிப்பதையும் கூட நீங்கள் பார்த்திருப்பீர்கள். Read the rest of this entry »

 

Tags: ,

அதிமுக வெற்றி பெற நாக்கை அறுத்தவருக்கு அரசு வேலை!

சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால் நாக்கை அறுப்பதாக நேர்திக் கடன் செய்து அதனை நிறைவேற்றியவருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா அரசு வேலை வாய்ப்பும் உதவித் தொகையையும் வழங்கினார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த சரிதா, தமிழக முதல்வர் ஜெயலலிதா தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வராக வேண்டும் என்று நேர்த்திக் கடன் செய்து, அதனை 13-5-2011 அன்று நிறைவேற்றினார்.

இவர் நாக்கை அறுத்த தகவல் அறிந்ததும் ஆண்டிப்பட்டி மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் முதல் உதவியும் பின்னர் மதுரை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சையும் அளிக்கப்பட்டது. இச்செய்தி முதல்வர் ஜெயலலிதாவுக்கு எட்டியதும் சரிதாவை சென்னை வரவழைத்து அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. Read the rest of this entry »

 

மனைவியின் ஆசை!

அன்போடு அழகாக  வந்து “நான் எப்படி இருக்கிறேன் சொல்லுங்கள்” என்றாள்.
“என் அன்பு தேவதையே நீ ஒரு  அ  ஆ  இ  ஈ உ ஊ எ ஏ ஐ  ஒ ஓ ஃ”  என்றேன்.
“நான் என்ன ஒரு அரிச்சுவடியா! ஒன்றும்  அறியாதவளா? ” என்றாள்.
“அரிசுவடியில்தான் எல்லாமே ஆரம்பமாகின்றது . உன்னை வைத்துத்தான் குடும்பமே தொடர்கின்றது.
நீ இல்லையெனில் நானில்லை” என்றதுடன்  “நீ என் அன்பானவள் ,ஆசைநாயகி .இனியவள் .உன் மீது எனக்கு உள்ள ஈடுபாடு அதிகம் அளவற்றது” என்று அன்புடன் ஆசைகொண்டு இனிய ஈடுபாட்டுடன் உயிராக ஊடல் கொண்டேன்.அவள் இதயம் இப்போது என் வசம் ஆகும் என நம்பினேன்.
ஆனால் அவள் நம்பவில்லை. கோபம் கொப்பளித்தது.அனல் பார்வை. இயற்கையான பிடிவாதம் . வாதத்துக்கு மருந்துண்டு. பிடிவாதத்திற்கு மருந்தேது!  என்னிலை பரிதாபமானது.வேடிக்கை விபரீதமானது. எல்லாம் ஏமாற்றம்.ஐயகோ! என் செய்வேன் .என்னிலை பரிதாபமானது.
ஒட்டலின்றி ஓட்டமெடுத்தேன் எஃகான உள்ளத்தோடு ஒளடதம் (மாற்று மருந்து) நாடி .

 

Tags: ,