RSS

Monthly Archives: January 2012

எங்களுக்கு அஞ்சல் முகவரியும், மின்னஞ்சல் முகவரியும் உண்டு: மாதவன் நாயர் ஆவேசம்!

எஸ் பாண்ட் அலைக்கற்றை ஒதுக்கீட்டு முறைகேட்டால் அரசுக்கு ரூ.2 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டு¢ள்ளதாக நாடாளுமன்ற பொது கணக்கு தணிக்கை குழு கூறியுள்ளது.

இதையடுத்து, இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர், பாஸ்கர நாராயணா, கே.ஆர். ஸ்ரீதரமூர்த்தி, கே.என். சங்கரா ஆகிய நான்கு விஞ்ஞானிகள் மீது, மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இவர்கள் நான்கு பேரும், எந்த ஒரு அரசு பதவியும் வகிக்கக் கூடாது என, தடை விதிக்கப்பட்டது.

இது தொடர்பாக செய்தியாளர்களை நேற்று சந்தித்த இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர், “எங்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இது மட்டுமல்லாமல், இந்த உத்தரவை பிறப்பிக்க காரணமாக இருந்தவர்கள், அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த மன்னிப்பு எங்களுக்காக அல்ல. நாடு முழுவதும் உள்ள ஒட்டு மொத்த விஞ்ஞானிகளிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்.

 • எங்கள் மீது அரசு எடுத்த நடவடிக்கை தொடர்பான ஆணையே இன்னமும் கிடைக்கவில்லை. நாங்களும் இந்தியர்கள் தான்; இந்தியாவில் தான் வசிக்கிறோம். எங்களுக்கு மொபைல் போன் இணைப்பு, மின்னஞ்சல் இணைப்புகள் உள்ளன. தபால் மூலம் தகவல் தெரிவிப்பதற்கு, முகவரியும் உள்ளது. அப்புறம் ஏன், எங்களை நேரடியாக அணுகாமல், மீடியாக்கள் மூலம் அணுகும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஏன்? ஒரு சிலர், சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு செயல்படுகின்றனர்.

  இந்த விவகாரம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் கடிதம் எழுதியுள்ளேன். அதில், ‘எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவாக நான் செயல்படவில்லை. எனக்கும், சக விஞ்ஞானிகளுக்கும் ஏற்பட்டுள்ள களங்கத்தைப் போக்க வேண்டும் என்பதே என் விருப்பம். எனவே, எங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை ரத்து செய்ய வேண்டும். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்’ என, எழுதியுள்ளேன்.”

  இவ்வாறு மாதவன் நாயர் கூறினார்.
  Source : http://www.inneram.com/news/india-news/mathavan-nair-angry-2726.html

  Advertisements
   
 • Tags:

  மவுஸை பயன்படுத்தும் வழிமுறைகள்:

  கணணியுடன் இணைந்து நம் அன்றாட வாழ்வில் நம்முடன் கலந்ததாக மவுசும் மாறிவிட்டது.
  நாம் அறியாமலேயே நம் கைகளில் ஏற்படும் பலவிதமான பிரச்சினைகளுக்குக் காரண மாகவும் மவுஸ் அமைந்துவிட்டதாகப் பல மருத்துவர்கள் கூறுகின்றனர்.

  கைகளில் குறிப்பாக மணிக்கட்டினைச் சுற்றி ஏற்படும் வலி மற்றும் எலும்பு தேய்மானத்திற்கு மவுஸ் காரணமாய் அமைகிறது என்கிறார்கள். இதனை ஆங்கிலத்தில் musculoskeletal injury என்று அழைக்கின்றனர்.

 • இதற்குக் காரணம் அதனைப் பிடித்துப் பயன்படுத்தும் விதத்தில் நாம் சரியாக அக்கறை காட்டாததுதான். இங்கு மவுஸைப் பிடித்துப் பயன்படுத்தும் வழிகளில் பின்பற்ற வேண்டிய சில மருத்துவ அறிவுரைகளை இங்கு காணலாம்.

  1.முதலாவதாக மவுஸ் பிடித்திருக்கும் முறையில் அவ்வப்போது மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். மாற்றத்தை ஏற்படுத்தினாலும் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் தான் மவுஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.

  2. மவுஸ் பிடித்திருக்கையில் அதனை இறுக்கிப் பிடிக்க வேண்டாம். மிக மெதுவாகப் பட்டும் படாமல் நம் கரத்தினை அதன் மீது வைத்து இயக்கலாம்.

  3.மவுஸ் இயக்கப்படுகையில் உங்களுடைய மணிக்கட்டு தசை அதிகம் இயங்கக் கூடாது. முழங்கை தசைதான் அதனை இயக்கும் செயல்பாட்டின் மையமாக இருக்க வேண்டும். அதற்கேற்ற வகையில் மணிக் கட்டினை நேராகவும் நடுவாகவும் வைக்கவும்.

  4. உங்களுடைய நாற்காலியில் நன்கு சாய்ந்து அமர்ந்து கொள்ளுங்கள். கரங்களைத் தளர்வாக வைத்துக் கொள்ளுங்கள். அதன்பின் மவுஸ் பிடிக்கும் உங்கள் கரத்தை, பெரும்பாலும் வலது கரம், சற்றுத் தூக்குங்கள். உங்கள் கை முழங்கைக்குச் சற்று மேலாக இருக்கும் வகையில் தூக்குங்கள்.

  மவுஸை கீ போர்டு இருக்கும் இடத்திற்கும் அருகே அதே தளத்தில் வைத்துப் பயன்படுத்த வேண்டாம். கீ போர்டுக்கு 1 அல்லது 2 அங்குலம் மேலாக இருக்கும்படி மவுஸ் இடம் பெற வேண்டும். இந்த மவுஸ் அமரும் இடம் சற்றுக் கீழாக சரிவாக இருக்கும்படியாகவும் அமைக்கலாம்.

  5. நீங்கள் மணிக்கட்டின் அமைப்பைச் சற்று சிரத்தையுடன் கவனித்தால் ஒன்று புரியும். இது இயற்கையாகவே சற்று வளைந்த நிலையில் உள்ளது. தட்டையான ஒரு தளத்தில் மணிக்கட்டை வைத்துப் பாருங்கள். வளைவான மணிக்கட்டின் கீழாக ஒரு சிறிய பேனாவினை நுழைத்து எடுக்கும் அளவிற்கு அது வளைவாக இருக்கும்.

  இதனுடன் எந்த தள அழுத்தமும் இருக்கக் கூடாது என்ற வகையில் தான் முன் கரம் மணிக்கட்டுடன் அமைக்கப்பட்டுள்ளது. எனவே மவுஸ் பயன்படுத்துவதற்காக மணிக்கட்டினைத் தளத்தோடு அழுத்து வது இயற்கைக்கு முரணானது.

  6. நம்மில் பெரும்பாலானவர்களுக்கு மணிக்கட்டின் தோலுக்குச் சற்று அடியிலேயே ரத்த நாளங்கள் செல்லும். அதனால் தான் நாடித் துடிப்பினை இங்கு பார்க்கிறோம். எனவே இந்த இடத்தில் அழுத்தம் கொடுத்தால் அது ரத்த ஓட்டத்தில் சிறிதளவேனும் பாதிப்பினை ஏற்படுத்தும். இதனால் இங்கு காயம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

  7. ஒரு சிலர் மணிக்கட்டுப் பகுதிக்கென தனியே ஒரு சப்போர்ட் அமைத்து இயக்குவார்கள். கைக்குட்டையைக் கூட மடித்து வைத்துப் பயன்படுத்துவார்கள். இது கூடவே கூடாது. இது பிரச்சினையை மேலும் பெரிதாக மாற்றிவிடும்.

  8. ஒரு சிலர் கரங்களுக்கு மெதுவாக இருப்பதற்கென மென்மையான சப்போர்ட் ஒன்றை நாற்காலியின் கரங்களில் வைத்துப் பயன்படுத்துவார்கள். இவ்வாறு பயன்படுத்துகையில் கரங்களை அதிலிருந்து எடுக்க மாட்டார்கள். ஒரு வகையில் கரங்கள் கட்டிப் போட்டது போல மாறுகிறது. இதனால் மணிக்கட்டிற்கு அதிக வேலை கிடைக்கிறது. இது மிகவும் பிரச்னையைத் தரும்.

  9. ஒரு சம தளத்தில் கையை வைத்து இயக்குகையில், நம் உள்ளங்கையின் அடிப்பாகத்தில் அதனை அமர்த்தி இயக்க வேண்டும். கீ போர்டினை இயக்குகையில் இது மிகவும் உதவியாக இருக்கும்.

  ஆனால் மவுஸ் பயன்பாடு கீ போர்டு பயன் பாட்டிலிருந்து மாறுபட்டது. கீ போர்டில் கரங்களை உள்ளங்கை சப்போர்ட்டில் வைத்துப் பின் விரல்களை மட்டுமோ, கரங்களையோ இயக்கிப் பின் அவ்வப்போது உள்ளங்கை அடிப் பகுதியில் வைத்து ஓய்வளிக்கலாம்.

  ஆனால் மவுஸ் இயக்கம் அப்படிப்பட்டதல்ல. இங்கு ஒரு தளத்தின் மீது முழு மவுஸ் சாதனமும் நகர்த்தி இயக்கப்படுகிறது. மவுஸ் நகர்த்தல் முழுமையும் முழங்கையை இயக்கத்தின் நடுப்புள்ளி யாக வைத்து இயக்கப்பட வேண்டும்.

  மணிக்கட்டு நடு இயக்கப் புள்ளியாக அமையக் கூடாது. முன்கை, கை மற்றும் மவுஸ் இயங்குவதைத் தடுக்கும் வகையில் செயல்பாடு எது இருந்தாலும், அது பிரச்சினையைக் கொடுக்கும்.

  10. இப்போது ஸ்டைல் என்ற பெயரில் பல வடிவங்களில், பெரும்பாலும் தேவையற்ற வளைவுகளில் மவுஸ் சாதனங்கள் வடிவமைக்கப்பட்டு கிடைக்கின்றன. இது போன்ற வளைவான மவுஸ் பயன்பாட்டிற்குச் சரியானதல்ல.

  இரு புறமும் இணையாகச் சீரான அமைப்புள்ள மவுஸ்தான் சரியான ஒன்று. சில நிறுவனங்கள் இது குறித்து மருத்துவ ரீதியாக ஆய்வுகளை மேற்கொண்டு, சற்றுப் பெரிய அளவில் மவுஸ்களைத் தருகின்றன. இவை மணிக்கட்டிற்கு வேலையைக் குறைத்து கரங்கள் வழி மவுஸ் பயன்பாட்டிற்கு வழி வகுக்கின்றன.

  11. மவுஸை இடது கரத்திலும் பயன்படுத்தும் வகையிலும் செட் செய்திட விண்டோஸ் ஓபரேட்டிங் சிஸ்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. எனவே ஏன் வலது கை, இடது கை என நம் வேலையை மாற்றி சில காலம் மவுஸைப் பயன்படுத்தக் கூடாது
  Source : http://muthupet.org/?p=245

   
 • Tags:

  நார் சத்துன்னா…? என்ன தான் இருக்கு அதுல


  நோஞ்சானாக இருந்தாலும், அடிக்கடி எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதாக எண்ணினாலும், ரத்த சோகை ஆபத்து உள்ளதாக தெரிந்தாலும், டாக்டர் சொல்லும் ஒரே அட்வைஸ்,”நார்ச்சத்து உணவுகளை சேர்த்துக்கொள்ளுங்க’ என்பது தான்.
  அதென்ன, நார்ச்சத்து உணவுகள்? இப்போதெல்லாம், இட்லி முதல் சாம்பார் வரை எல்லாமே, பாக்கெட் உணவு தானே. நல்லவேளை, காய்கறிகளை பதப்படுத்தி, கூட்டு, கறி என்று பாக்கெட் போட்டு விற்பனை செய்யவில்லை. அப்படி வந்து விட்டால் போதும், காய்கறி கடைப்பக்கமே பலரும் போக மாட்டார்கள்.

 • உணவு வகைகளில் உள்ள பல சத்துக்கள், சமைப்பதன் மூலமும், எண்ணெய் விட்டு “ப்ரை’ ஆக்குவதன் மூலமும் சத்துக்கள் குறைந்தும், அடியோடு போயும் விடுகின்றன. ஆனால், நார்ச்சத்துள்ள உணவுகளில் உள்ள சத்துக்கள், உடலுக்கு கிடைப்பதுடன், மற்ற உணவுகளில் இருந்து கிடைக்கும் சத்துக்களை தசைகள் உட்பட பல உறுப்புகளுக்கும் போய்ச்சேர்க்கும் உதவியை செய்கிறது.
  35 கிராம் தேவை
  ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், கொலஸ்ட்ரால் மிகாமல் பார்த்துக்கொள்ளவும் நார்ச்சத்துக்கள் முக்கியம். உடலில் இயல்பாகவே நார்ச்சத்து உள்ளது. அத்துடன் உணவுகள் மூலம் கிடைக்கும் நார்ச்சத்துக்கள், ஜீரண சக்தியை ஏற்படுத்தவும் செய்கிறது. ஒரு நாளைக்கு 35 கிராம் நார்ச்சத்து தேவை. காய்கறி, பழங்கள் மூலம் அவற்றை பெறலாம். இவற்றை அப்படியே சாப்பிடலாம்; சத்து குறையாமல் வேகவைத்தும் சாப்பிடலாம்.
  கவர்ச்சி பாக்கெட்
  இப்போது “மால்’ கலாசாரம் வந்து விட்டது; எல்லா வகை உணவுகளும் பாக்கெட்டில் அடைக்கப்பட்டு கிடைக்கிறது. பதப்படுத்தப்பட்டும் கிடைக்கிறது. ஆனால், இப்படி கிடைக்கும் நார்ச்சத்து, முழு அளவில் இருக்காது என்பது தான் நிபுணர்கள் கருத்து. நேரடியாக காய்கறி, பழங்களை வாங்கித்தான் பயன்படுத்த வேண்டும். அதில் தான் 100 சதவீதம் சத்துக்கள் உள்ளன.
  அளவு மிஞ்சினால்
  எதுவுமே அளவு மிஞ்சக்கூடாது என்பர் டாக்டர்கள். ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், எந்த ஒரு உணவையும் சாப்பிடலாம்; ஆனால், அளவு மிஞ்சாமல் இருந்தால் எந்த பிரச்னையும் இல்லை.
  அதுபோலத்தான், நார்ச்சத்தும்; உணவே சாப்பிடாமல், பழங்கள், காய்கறிகளை பச்சையாக சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கலில் போய் விட்டு விடும். வழக்கமான உணவுகளுடன், சாலட், பழங்கள் சேர்த்துக்கொண்டாலே போதும்.
  என்ன சாப்பிடலாம்
  “ஒயிட் பிரட்’டுக்கு பதில், கோதுமை பிரட் சாப்பிடுங்கள்; கேக், பிஸ்கட், சுவீட்களை தவிர்த்து, பச்சை கேரட், கடலை, பட்டாணி போன்ற தானிய வகைகள், பழங்களை சாப்பிடலாம்.
  ஆப்பிள், ஆரஞ்சு, கொட்டையில்லா சாறு உள்ள பழங்கள், காலிபிளவர், ஓட்ஸ், பேரிக்காய், பட்டாணி, வாற்கோதுமை, கொடி முந்திரிப்பழம், அத்திப்பழம், கேரட் போன்றவற்றில் அதிக நார்ச்சத்து உள்ளது. இதுபோல, பலவகை தானியங்கள், கொட்டை வகைகள், பாப்கார்ன், கோதுமை பிரட், பிரவுன் அரிசி போன்றவற்றில் நார்ச்சத்து அதிகம்.
  அவங்களுக்கு “நோ’
  நார்ச்சத்து என்றால், எல்லாரும் சாப்பிட வேண்டும் என்பதல்ல. உடலில் போதிய சத்தில்லாதவர்கள், சில வகை நோயுள்ளவர்கள், கர்ப்பிணிகள் போன்றவர்கள், டாக்டரின் ஆலோசனைப்படி தான் நார்ச்சத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
  நார்ச்சத்து உள்ள உணவுகள், பசியை போக்குமே தவிர, போதுமான கலோரியை தராது. அதுபோல, நார்ச்சத்து உள்ள உணவுகளை சாப்பிடுவோர், கண்டிப்பாக அதிக தண்ணீர் குடிக்க வேண்டும்.
  தினமும் சாப்பிட
  * பழங்கள் அல்லது கேரட், வெள்ளரி, வெங்காயம், தக்காளி சேர்த்த சாலட் சாப்பிடலாம்.
  * பழ ஜூஸ் குடிக்கலாம்; தவறில்லை; ஆனால், பழத்தை அப்படியே சாப்பிட்டால் தான் அதிக சத்து.
  * ஆப்பிள், பேரிக்காய் போன்றவற்றை தோல் நீக்கி சாப்பிடுபவரா? முதல்ல அதை விடுங்க; அப்படியே கடித்து சாப்பிடுங்க.
  * சூப் சாப்பிடுவதென்றால், அதிக காய்கறிகளை சேருங்க.
  * உலர்ந்த பழங்களை தினமும் ஏதாவது ஒரு வேளை சாப்பிடலாம், நொறுக்குத்தீனியாக.
  Source : https://senthilvayal.wordpress.com/2010/02/23/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/

   
 • Tags:

  முனைவர் இரா.குணசீலன்.


  பெயர் -முனைவர் இரா.குணசீலன்.

  கல்வித்தகுதி – பி.லிட்.,எம்.ஏ.,எம்பில்.,பிஎச்டி.,(தமிழ்)

  இளங்கலை – பி.லிட் இராமசாமித் தமிழ்க்கல்லூரி
  காரைக்குடி தமிழ் – 2000

  முதுகலை – எம்.ஏ (தமிழ்) அழகப்பா பல்கலைக்கழகம் – காரைக்குடி
  (இலக்கியம்) – 2002

  ஆய்வுநிலை – எம்.பில் (தமிழ்)அழகப்பா பல்கலைக்கழகம் – காரைக்குடி
  (சங்க இலக்கியம்) – 2003

  ஆய்வுநிலை – பி.எச்டி (தமிழ்) அழகப்பா பல்கலைக்கழகம் – காரைக்குடி
  (சங்க இலக்கியம்) – 2008

  எம்.ஏ (தமிழ்) அண்ணாமலை பல்கலைக்கழகம்
  சிதம்பரம்
  (மொழியியல்)

  சிறப்புத்தகுதி – விரிவுரையாளர் தகுதிக்கான யுஜிசியின் நெட் தேர்வில் தேர்ச்சி (UGC – NET) Eligibility for lectureship in Dec.2003.)

  பணி அனுபவம் – 01.06.2007 முதல் தமிழ் விரிவரையாளராகப் பணிபுரிந்துவருகிறேன். (கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி, திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம்)

  ஆய்வு அனுபவம்

  எம்.ஏ – அருள்மிகு சன்னவனம் சாலியவனேசுரர் திருக்கோயில் ஓர் ஆய்வு.

  எம்.பில் – சங்க இலக்கியத்தில் ஒலிக்கூறுகள். (பத்துப்பாட்டு)

  பி.எச்டி – சங்க இலக்கியத்தில் ஒலிக்கூறுகள்.

  பதிப்புப் பணி

  1.செவ்வியல் மொழி, இலக்கியம், இலக்கணம் (பன்னாட்டுக் கருத்தரங்க ஆய்வுக்கோவை).
  2. நாட்டுப்புற மண்ணும் மரபும் மக்களும் (தேசியக் கருத்தரங்க ஆய்வுக்கோவை)

  தேசியக்கருத்தரங்கு

  1. குறளில் பெரியாரியம் -(குறள்) சேலம் சங்கஇலக்கிய ஆய்வு மையம் – பிப்ரவரி 2005.

  2. நாலாயிர திவ்யபிரபந்த திருவாய்மொழி உரை –(பக்தி) மதுரை காமராசர் பல்கலைக்கழகம்,மதுரை.மார்ச் -2005.

  3. பண்டைத்தமிழர்தம் தெய்வங்கள் -(பக்தி) மதுரை காமராசர் பல்கலைக்கழகம்,மதுரை. மார்ச் 2006

  4. தமிழ் இலக்கியத்தில் ஆளுமை –(இலக்கியம்) பூசாகோ அர கிருட்டிணம்மாள் மகளிர் கல்லூரி,கோவை –பிப்ரவரி -2006.

  5. இணையத்தமிழ் வளர்ச்சியில் ஒருங்குறி-(இணையமும் – கணினியும்) பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி, பெரம்பலூர் – மார்ச்-2009.

  6. சங்க இலக்கியத்தில் விடுகதை – நாட்டுப்புற மண்ணும் மரபும் மக்களும், கே.எஸ்ஆர் கலை அறிவியல் கல்லூரி,திருச்செங்கோடு – மே -2010.

  பன்னாட்டுக்கருத்தரங்கு

  7. பழந்தமிழர் ஒலிச்சூழல் (தமிழ் இலக்கியம்) இந்திய பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி, மார்ச் -2007.

  8. கண்ணதாசனின் பகுத்தறிவுச்சிந்தனைகள் -(கண்ணதாசன்) தமிழய்யா கல்விக்கழகம், காரைக்குடி ஜீன் -2007.

  9. சமூகவியல் நோக்கில் தாய்மொழி வழிக்கல்வி (தாய்மொழிக்கல்வி) இலயோலா தன்னாட்சிக் கல்லூரி,சென்னை –ஜனவரி 2008.

  10. சங்க இலக்கியத்தில் மொழிக்கோட்பாடு என்னும் செம்மொழிப்பண்பு,(செம்மொழி) யுசிசி கருத்தரங்கு, ஆங்கிலம் மற்றும் பன்னாட்டு மொழியியல்த் துறை, அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி.

  11. இணையத்தமிழ் நேற்று-இன்று – நாளை (இணையமும் தமிழும்) ஆர் , மயிலம் ,டிசம்பர் -2009.

  12. உயர்தனிச்செம்மொழி – (செவ்வியல்) கே.எஸ் ஆர் கலை அறிவியல் கல்லூரி, திருச்செங்கோடு. ஜீன் 2009.

  13. அறிவியல் நோக்கில் தொல்காப்பியரின் உயிர்ப்பாகுபாடு – (தொல்காப்பியம்) செம்மொழித் தமிழ் உயராய்வு மையம், புதுவை – ஏப்ரல் – 2009.

  14. சங்க இலக்கியத்தில் இசைமருத்துவம் (எட்டுத்தொகை) செம்மொழித் தமிழ் உயராய்வு மையம், புதுவை – பிப்ரவரி -2010.

 • விருதும் பரிசும்

  (திரட்டி.காம் இணையதளத்தில் ஜனவரி 2009ல் இந்தவார நட்சத்திரமாகத் தெரிவுசெய்யப்பட்டேன்)

  (தமிழ் மணம் இணையதளத்தில் செப்டம்பர் 09 ல் இந்தவார நட்சத்திரமாகத் தேர்வுசெய்யப்பட்டேன்)

  (தமிழ்மணம்.நெட்) 2009 ஆம் ஆண்டுக்கான இணைய வலைப்பதிவுகளில் (தமிழ் மொழி, கலாச்சாரம்,தொல்லியல் என்னும் பிரிவில் முதல்பரிசு (1000 ரூபாய்கான புத்தகங்களும்) பெற்றேன்.

  (பரிசு பெற்ற இடுகை)

  (நட்சத்திர இடுகை)

  1998-1999 ஆம் கல்வியாண்டில் நாட்டுப்புறவியல் பாடத்தில் கல்லூரி முதன்மை பெற்றமைக்காக வெள்ளிப்பதக்கமும் பாராட்டும் பெற்றேன்.
  மரபுக்கவிதைத் திறன்.

  1999-2000 ஆம் கல்வியாண்டில் இராமசமித் தமிழ்க்கல்லூரியில் பயிலும்போது நடைபெற்ற மரபுக்கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றேன்.
  இணையதளங்களில் வெளியான இலக்கியக் கட்டுரைகள்.

  ( உலகத்தமிழ் எழுத்தாளர்கள் – இணையம் (தமிழ் ஆதர்ஸ்)
  1. பூ உதிரும் ஓசை.
  2. மிளகுக்கு இணையா தங்கம்.
  3. துன்பத்தில் இன்பம் காண.
  4. மனையுறை குருவிகளின் காதல்.
  5. உலகுகிளர்ந்தன்ன உருகெழு வங்கம்.
  6. வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை.
  7. இம்மென்கீரனார்.
  8. பசிப்பிணி மருத்துவன்.
  9. தனிமகனார்.
  10. ஏழு வள்ளல்களின் சிறப்பு.
  11. சங்ககால அறுவை மருத்துவம்.
  12. குறுந்தொகை சப்பானிக் கவிதை ஒப்பீடு.
  13. டமிலன் என்றொரு அடிமை.
  14. விழிகட்பேதைப் பெருங்கண்ணனார்.
  15. தீம்புளிப்பாகர்.
  16. வில்லக விரலினார்.
  17. தேய்புரி பழங்கயிற்றினார்.
  18. தமிழர் மரபியல் (பாலியல் நோக்கு)
  19. சகோதரியான புன்னை மரம்.
  20. பெண்களும் மலரணிதலும் (சங்ககாலம்)
  21. ஈமத்தாழி.
  22. (குறுந்தொகை) காதலின் அகலம்-உயரம்-ஆழம்.
  23. பழந்தமிழர் விளையாட்டுகள்.
  24. தொல்காப்பியரின் உயிர்ப்பாகுபாடு.

  (திண்ணை இணைய மின்னிதழ்)
  25. இணையத்தில் தமிழ் (தொழில்நுட்பக்கட்டுரை)

  ( வரலாறு.காம்.)
  26. சங்க இலக்கியத்தில் விடுகதை (இரு பகுதிகளாக)

  (பதிவுகள்.காம்)
  27. மடலின் படிநிலைகள்.

  (முத்துக்கமலம்.காம்.)
  28. உயர்தனிச் செம்மொழி.

  (தமிழ்த்தோட்டம்.காம்)
  29. வெறியாட்டு.
  30. மூளை என்னும் கணினியைக் காக்கும் ஆன்டிவைரஸ்.
  31. வலவன் ஏவா வானஊர்தி.
  32. சீறும் பாம்பை நம்பினாலும் சிரிக்கும் பெண்னை நம்பக்கூடாது ஏன்?

  சிறப்புத் துறைகள்.
  1. சங்க இலக்கியம்.
  2. இக்கால இலக்கியம்.;
  3. மொழியியல்.
  4. கணினி, இணையம்,தொழில்நுட்பம்.
  விக்கிப்பீடியா
  முனைவர் இரா.குணசீலன். விக்கிப்பீடியா

  விக்கிப்பீடியா பக்கம் செல்ல இங்குhttp://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE._%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D சொடுக்கவும்.

  மின்னஞ்சல் முகவரி – gunathamizh@gmail.com

   
 • Tags:

  உணர்வுகளைக் தூண்டும் ‘ ஆப்பிள்’!

  vayal


  கஜுராஹோவையும், காம சூத்திரத்தையும் உலகுக்கு அளித்த நம் தேசத்தில் 30 கோடி மக்கள் பாலியல் குறைபாடுகளுடன் வாழ்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால்தான் நமது புராதன இந்திய சமையல் குறிப்புகளில், காதலை தூண்டும் உணவுப் பொருள்கள் பற்றி எழுதிவைத்துள்ளனர்.

  உணவுகள் காதல் செயல்பாடுகளை தூண்டுமா என்ற கேள்விக்கு விஞ்ஞானத்தில் பதில் ‘ஆமாம்’! என்றுதான் சொல்லப்பட்டுள்ளது. அந்தந்த ஊருக்கு ஏற்றபடி காதல் உணவுகள் மாறுகின்றன. அரேபியருக்கு ஒட்டக திமிழும்,ஸ்பெயின் நாட்டவருக்கு குங்குமப்பூவும்,சீனர்களுக்கு பறவைக்கூடு சூப்பும் பாலுணர்வு தூண்டும் உணவாக குறிப்பிடப்பட்டுள்ளன.

  வைட்டமின்களும் தாது உப்புகளும்

  ஆண்மை வீரியத்தை அதிகரிக்க துத்தநாகம் இன்றியமையாதது.

  எல்லா பழங்களிலும் காய்கறிகளில் இருக்கும் பொட்டாசியம் ஆண்மை வீரியத்தை அதிகரிக்கும். செலினியம் உள்ள வெண்ணெய், மீன்கள், முழுக்கோதுமை, எள் முதலியவைகளும் காதல் உணவுகள்

  மங்கனீஸ் அடங்கிய கொட்டைகள், விதைகள், முழுத்தானியங்கள் முதலியவைகளும் பாலியல் ஆற்றலுக்கு உதவும். பாஸ்பரஸ், தாதுப்பொருளும் ‘தாது விருத்திக்கு’ உதவும். வைட்டமின் ‘இ’,‘சி’,‘ஏ’,‘பி’ காம்ப்ளெக்ஸ், ஃபோலிக் அமிலம், விட்டமின் பி 6, பி 12, இருக்கும் உணவுகள்

 • பிரசித்தி பெற்ற உணவுகள்

  பாதாம் பருப்பு – தொன்று தொட்டு ஆண்மையையும், மக்களைப் பெற சக்தி அளிக்கும் உணவாக கருதப்படுகிறது. கருமிளகு, தேன், மிளகாய் முதலியன பாலுணர்வை தூண்டும் உணவாக கூறப்படுகின்றன.

  ஆயுர்வேதத்தின் படி கோதுமை அரிசி, உளுத்தம் பருப்பு இவை ஆண்மையை ஊக்குவிக்கும், விந்துவின் தரத்தை உயர்த்தும். சோம்பு சமையலிலும் பயன்படுகிறது. மையலிலும் பயனாகிறது!

  வாழைப்பழம்

  பொட்டாசியமும் ‘பி’ விட்டமின்களும் செக்ஸ் ஹார்மோனை தயாரிக்கத் தேவை. எனவே வாழைப்பழம் ஒரு ஆண்மையை பெருக்கும் முக்கியமான பழமாக கருதப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் துளசி ஆண்களின் பாலுணர்வு ஆர்வத்தை தூண்டுகிறது. வாழைப்பழத்தில் உள்ள ஒரு வேதிப்பொருள் செக்ஸ் உணர்வை அதிகரிக்கும். பப்பாளி, மாம்பழம், கொய்யாபழம் இவைகளும் சிறந்த இளமை காக்கும் பழங்கள். கொய்யாப்பழம் பெண்களின் ஜனனேந்திரிய உறுப்புக்களின் தசைகளை வலுப்படுத்தும்.

  சாக்லேட்

  சாக்லேட் ஒரு ஆன்டி – ஆக்சிடான்ட். இதில் உள்ள தியோப்ரோமைன் வேட்கையை பெருக்கும். பால் அதுவும் எருமைப்பால், தயிர்(பகலில்) மோர், வெண்ணை, நெய் இவை இல்லாமல் இந்திய உணவுகள் இல்லை. இவையெல்லாம் உடலுறவுக்கு வலிமை ஊட்டும் உணவுகள்.

  காதல் ஆப்பிள்

  வெங்காயம் தொன்றுதொற்று இந்தியாவில், எகிப்தில், அரேபியாவில் ஆண்மை ஊக்கியாக பயன்படுத்தப்பட்டு வரும் காய்கறியாகும். அதுவும் வெள்ளை வெங்காயம் சிறந்தது. வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி உண்ண வேண்டும். “ஆனியன் சூப்” புத்துணர்ச்சி ஊட்டும். இவை தவிர குடமிளகாய், இஞ்சி, செலரி, வெள்ளரி, தனியா இவைகளும் உதவும்.

  பூமிக்கு அடியில் விளையும் கிழங்குகள், பூமியின் சக்தியை உறிஞ்சி, அதை நமக்களிக்கும். கேரட், முள்ளங்கி போன்றவை ஆண்மையை பெருக்கவல்லவை. தக்காளியும் சிறந்த பாலுணர்வு ஊக்கி. ஃப்ரான்ஸில் இதை ‘காதல் ஆப்பிள்’ என்பார்கள்.

  மாமிச உணவுகள்

  மாமிச வகைகளில் நீர் வாழ் பிராணிகளின் மாமிசம் உண்பது நல்லது. கடல் மீன்களை விட நதிமீன்கள் பாலியல் உணர்வை தூண்டுபவை. கடல் முத்துசிப்பி, சிறந்த ஆண்மை பெருக்கியாக கருதப்படுகிறது.

  வெற்றிலை – உணவுக்கு பின் தாம்பூலம் தரிப்பது உடலுறவு ஆசையை தூண்டும். ஆனால் பாக்கு, புகையிலை, ஆல்கஹால் இவை எதிர்மாறான விளைவுகளை உண்டாக்கும்.

  தேன்

  எகிப்தியர்கள் காலத்திலிருந்தே பல பழங்கால மருந்துகள் தேன் அடங்கியவை. மீட் என்ற பானம் தேனிலிருந்து தயாரிக்கப்பட்டது. இது காதல் உணவை அதிகப்படுத்தும் மருந்தாக கருதப்படுகிறது.

  வாசனை திரவியங்கள்

  ஜாதிக்காய், ஏலக்காய், குங்குமப்பூ, இலவங்கப் பட்டை இவைகளும் ஆசையை அதிகரிக்கும் குறிப்பாக ஜாதிக்காய் “விந்து முந்துதலை” தடுக்கும். இந்த வாசனை திரவியங்களை பாலுடன் சேர்த்து உட்கொள்ள வேண்டும். இலவங்கப்பட்டை தான் ஆசைய ஊக்குவிக்கும். அதன் இலைகள், எதிர்மாறாக ஆண்மை ஆசையை குறைத்து விடும்.

  பாலுணர்வை குறைக்கும் உணவுகள்

  ஒரு சராசரி மனிதனுக்கு தேவையான புரதம், கார்போஹைடிரேட், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் செறிந்த உணவுகளை தேவையான கலோரிகளில் எடுத்துக் கொள்ளாவிட்டால், உடல் ஆரோக்கியத்துடன் பாலியல் திறனும் சிதைந்து விடும். சர்க்கரை, மதுபானங்கள், காப்பியில் உள்ள காஃபின் முதலியவை, ஊட்டச்சத்து உணவை, உடல் உட்கிரகிக்க விடாது. இதனால் ஆரோக்கியம் குன்றினால் ஆண்மையும் குறையும். எனவே அதீத காதல் உணர்வுகளால் கஷ்டப்படுபவர்கள் இனிப்பு, சோயா நிறைந்த உணவுகளால் இச்சையை ஒரளவாவது கட்டுப்படுத்திக் கொள்ளலாம்.

  பாலியல் ஆசையை கட்டுப்படுத்த உதவும் உணவுகளில் ஒன்று சோயாவிலிருந்து தயாரிக்கப்படும் “டோஃபு”. சோயா பால் மற்றும் டோஃபூ, உடல் துத்தநாகத்தை கிரகிப்பதை தடுக்கிறது. வெள்ளரிக்காய், டர்னிப், முட்டைக்கோஸ் போன்றவைகளும் செக்ஸ் ஆசையை குறைக்கிறது. இந்த உணவுகள் தைராய்டு செயல்பாடுகளை குறைக்கும். தைராய்டு தான் பாலியல் உணவுகளை கன்ட்ரோல் செய்கிறது.
  Source : http://senthilvayal.wordpress.com/2011/11/02/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE/

   
 • Tags: ,

  படிக்கட்டுகள்… !

  நீங்கள் முன்னேறுபவராய் இருக்கிறீர்கள் அல்லது பின்னடைபவராக இருக்கிறீர்கள். இரண்டுக்கும் இடைப்பட்டதாக இருப்பதாக சொல்வது நம்மை நாம் சமாதானப்படுத்திக் கொள்வதுதான்.

  வாழ்க்கையில் முன்னேற துடிப்பவர்களின் முதல் குணம். அவர்கள் உண்மையை எதிர் கொள்பவர்கள். You must have the guts to face the truth.

  உங்கள் குணம் / தரம் உங்களுக்கு தெரியவில்லையா..? அல்லது நீங்க… ரொம்ப(வே) நல்லவன்னு நினைத்துக் கொண்டிடுக்கிறீர்களா…? நீங்கள் உண்மையிலேயே யார் என்பதற்கு ஒரு சின்ன பயிற்சி இருக்கிறது. இதை Mirroring Technique என்று சொல்வார்கள். இதை ஷாவ்லின் [Shaolin] பயிற்சிகளில் பயன்படுத்துவார்கள். உங்களோடு இருப்பவர்கள் உங்கள் முகத்தை நேருக்கு நேர் பார்த்து ‘ நீ ஒரு சோம்பேரி, நீ சொல்றவன,.செய்றவன் இல்லெ… நீ ஒரு மிகப்பெரிய காலம் தாழ்த்துபவன்…’ இப்படி அடுக்கி கொண்டே போவார்கள். அவர்களின் விமர்சனம் உண்மையில்லாத பட்சத்தில் ஒன்றும் இருக்காது. அது உண்மையாய் இருந்தால் அழுகை கியாரன்டியா வரும். உண்மையை சந்திக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் கண்ணீர் வரும்.

 • இதை கார்ப்பரேட் ட்ரைனிங் இல் எப்படி பயன்படுத்துகிறார்கள் தெரியுமா?. உங்களுடன் ட்ரைனிங் வந்தவர்கள் ஒரு 10-பேர் என வைத்துக் கொள்வோம். எல்லோர் கையிலும் ஒரு பேப்பர் கொடுத்து உங்களைப்பற்றி கருத்து எழுத சொல்வார்கள் [உண்மை மட்டும்] அதில் எழுதியவர்கள் பெயர் இருக்காது. அந்த 10 பேரின் கருத்தில் எது ரிப்பீட் ஆக வருகிறதோ அது நிச்சயம் உடனே கவனிக்கபட வேண்டிய விசயம். அது உங்களின் பிரதிபலிப்பு.

  மேற்சொன்ன இரண்டு பயிற்சிகளிலும் நான் கலந்து கொண்டிருக்கிறேன்.
  முதலில் கற்றுக்கொள்ளும் மனப்பான்மையில் நல்ல கல்வி எங்கிருந்து கிடைக்கிறது என்பது முக்கியமல்ல. நாம் எதைக் கற்றுக்கொண்டால் நமக்கு பயன்படும் என்பது முக்கியம். இப்படித்தான் யூதர்களை சிலர் வெறுத்து அவர்கள் கண்டுபிடித்த பல மருத்துவ கண்டுபிடிப்புகளை ஏற்றுக்கொள்ளவே இல்லை. நஷ்டம் முஸ்லீம்களுக்குதான் என்பதை இதுவரை இந்த சில பிடிவாதக்காரர்கள் ஏற்றுக்கொள்ளவும் இல்லை.

  அமைதியில்லாத மனம் எதையும் தொடர்ந்து சாதிக்காது. நம்மிடம் உள்ள மிகப்பெரிய பொக்கிஷம் தொழுகை. இதன் மூலம் பல சுபிட்சங்களை பெற்றுக்கொள்ள முடியும் என்பதை தெளிவாக முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

  அடுத்து “CREATION” நீங்கள் இதுவரை உங்கள் கடந்த காலங்களில் ஏற்பட்ட நிகழ்வுகளில் சில முடிவுக்கு வந்திருக்கும் சூழ்நிலை. இதில் மாற்றம் ஏற்படும் என தெரிந்திருக்க வேண்டும். இதை Personal creation என சொல்லப்படுகிறது.

  உங்களின் இயக்கத்தில் (செயல்களில்), எண்ணத்தில் இது உங்களுக்கே தெரியாமல் சுற்றி சுற்றி ஒரு பிளாஸ்டர் மாதிரி ஒட்டி இருக்கும். உங்கள் வார்த்தையில் செயலில் நிச்சயம் இது தெரியும். உதாரணத்துக்கு பல விசயங்கள் உங்கள் வாழ்க்கையில் நடந்ததை சொல்லலாம். சின்ன வயதில் வெளியூரில் படம் பார்க்க போனதற்கு ஒப்பாரி வைத்த பெரியவர்கள். நீங்கள் மதித்து நின்று கொண்டிருக்கும்போது நீங்கள் ஒரு உதவாக்கரை என்று லேசாக மனதில் “ட்ரில்” செய்திருப்பார்கள். உங்கள் புது முயற்சி அனைத்திலும் இந்த ‘உதவாக்கரை’ கமர்சியல் ப்ரேக் அடிக்கடி வந்து போகும்.

  முதலில் வாழ்க்கையில் சேர்ந்த குப்பைகளை முதலில் மனதிலிருந்து தூக்கி எறிய கற்றுக்கொள்ளுங்கள். குப்பைகளை அகற்றாமல் அதில் அழகான வீடு கட்ட நினைப்பதை எப்படி சொல்வது…

  எல்லாம் எனக்கு தெரியும் என்ற மனம் எதையும் கற்றுக்கொள்ள விடாமல் எப்போதும் உங்களுக்கெ தெரியாமல் ஒரு மாதிரி ‘ஹேங்’ ஆன கம்ப்யூட்டர் மாதிரி இருக்கும். கம்ப்யூட்டர் ஹேங் ஆகி விட்டால் நீங்கள் சரி செய்து விடலாம் நீங்கள் ஹேங் ஆகி விட்டால்.??

  If you think your training is finished You are FINISHED.

  தொடர்ந்து எதற்கு சக்தி கொடுத்துக் கொண்டிருக்கிறீர்களோ அது பிறகு உண்மையாகிவிடும். எனவே வாழ்க்கையில் எது உங்களுக்கு தேவையில்லையோ அதில் அனாவிசயமாக உங்கள் சக்தியை செலவழிக்காதீர்கள். உதாரணம்; இல்லாத நோய் இருப்பதாக நினைத்து கவலைப்படுவது. / உங்களின் தொழிலில் நீங்கள் செய்த முயற்சிக்கு பலன் இருக்காது என ரிசல்ட் தெரியுமுன் திருவாய் மலர்வது. / தன்னை ஒரு வயதானவன் என்று சொல்லிக்கொண்டிருப்பது…. இதேபோல் வெளிநாட்டில் இருந்து கொண்டு ஊரில் பெண்களுக்கு இடையே நடந்த சண்டைக்கு பஞ்சாயத்து பன்ன நினைப்பது. இதில் லாபம் அடைவது செல்போன் கம்பனிதான் என்பது நேற்று நிலோபர் / ராஜேஸ்வரி மகப்பேரு மருத்துவ மனையில் பிறந்த பிள்ளைகலுக்கு கூட தெரியும்.. இது தொடர்ந்து உங்கள் செயல்களை குறைத்து விடும். அடுத்து வீட்டில் மதிக்காத சூழ்நிலையை சொல்லி அழும் எபிசோட் ஆரம்பித்து விடும்.

  காயப்படுத்திய உறவுகளை எதிரியாக பார்ப்பதும் உங்கள் முன்னேற்றத்தை தடுக்கும். இன்னும் மனதில் இருக்கும் பாரத்துடன் எவ்வளவு தூரம் உங்களால் நடக்க முடியும்.

  சில நடவடிக்கைகளையும் பார்போம். தன்னை சுத்தமாக வைத்துகொள்வது, சரியாக வைத்துக்கொள்வது பொது மக்கள் தொடர்பு உள்ள அனைத்து தொழிலில் இருப்பவர்களுக்கும் பொருந்தும். உங்களின் பெல்ட் பக்கிள் தேய்ந்து போய்விட்டதா?. உங்களின் டூத் பிரஸ் சுருளும் அளவுக்கு பயன்படுத்துபவரா?. நிதம் சேவிங் செய்யாமல் மூக்கு முடி வெளீயே தெரிய கஸ்டமர்களை பார்க்க ஆரம்பிக்கும் டைப்பா நீங்கள்…. முதலில் மாற்றிக்கொள்ளுங்கள். நேர்த்தி இல்லாத மனிதனை உலகம் அவ்வளவாக பார்ப்பதில்லை. மென்மையான வாசனை உங்களுக்கு நல்லது. பல்லவன் பஸ்சில் ஏறும்போது ‘நேத்திக்கடனுக்கு’ நேந்து விட்ட கிடாய் மாதிரி வியர்வை நாறும் எந்த மனிதனும் தொழிலில் சத்தியமாக முன்னேர முடியாது. தன்னை சரி செய்து கொள்ளாதவன் எப்படி தொழிலை சரியாக செய்ய முடியும். அதற்காக அத்தர் போடுகிறேன் என்று ரொம்ப சீப்பாக உள்ள பாட்டில் [இங்கெல்லாம் 5 வெள்ளிக்கு 2 விற்கிறான்] அதை போட்டு பக்கத்தில் இருப்பவர்களுக்கு சைனஸ் பிரச்சினையயை கொடுத்து விடாதீர்கள்.
  தொடராக வரும் (இன்ஷா அல்லாஹ்)….
  – ZAKIR HUSSAIN
  Source : http://adirainirubar.blogspot.com/2012/01/blog-post_2884.html

   
 • Tags: ,

  எதுக்காகப் பொருள் தேடறீங்க..?

  பொருள் தான் வாழ்க்கையின் அடித்தளம்.
  பொருள் இல்லாதவரை இந்த உலகில் நாய் கூடத் திரும்பிப் பார்ப்பதில்லை!
  அதனால் தான் எல்லோருமே பொருள் தேடுகிறோம்.

  நாம் தேடும் பொருள் யாருக்காக..?

  தனக்கு!
  தன் குடும்பத்துக்கு!!
  அடுத்து வரும் தன் தலைமுறைக்கு!!!
  அடுத்தடுத்து வரும் தன் தலைமுறைகளுக்கு!!!!

  என்ற பதிலே பெரும்பாலோனரிடமிருந்து வரும்.
  சரி! இதுதானே சராசரி மனித வாழ்க்கை!

  இதையும் தாண்டி சிந்தித்தவர்கள் தான் மாமனிதர்களாக மதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

 • இதோ சங்ககாலத் தலைவன் ஒருவனுடைய சிந்தனை.

  “தம்மை விரும்பி வாழ்வோருக்கு உதவி செய்து அவர்களைக் காத்தலால் வரும் மகிழ்ச்சி ஒன்று,
  தாம் விரும்பும் சுற்றத்தாருடன் கூடிக்கலந்து இன்புறும் மகிழ்சி மற்றொன்று.

  இவ்விரண்டு மகிழ்ச்சிகளின் திறவுகோல் பொருள்!
  அதனால் பொருளைத் தேடவேண்டும் என ஓயாமல் நினைந்தான் தலைவன்.“

  தன் குடும்பத்தின் வறுமை நீங்கவேண்டுமே என்று எண்ணவேண்டி தலைவன்,
  விருந்தினருக்கும், சுற்றத்தாருக்கும் உதவி செய்யப் பொருள்வேண்டுமே என்று எண்ணுகிறான்.

  தன்னலத்தோடு பொதுநலச் சிந்தனையும் கலந்திருப்பதால் தானோ சங்ககாலத்தைப் பொற்காலம் என்கிறோம்.

  பாடல் இதோ..

  தம் நயந்து உறைவோர்த் தாங்கி தாம் நயந்து
  இன் அமர் கேளிரொடு ஏமுறக் கெழீஇ
  நகுதல் ஆற்றார்நல்கூர்ந்தோர்! என
  மிகுபொருள் நினையும் நெஞ்சமொடு அருள் பிறிது
  ஆபமன் வாழி தோழி கால் விரிபு
  உறுவளி எறிதொறும் கலங்கிய பொறி வரிக்
  கலைமான் தலையின் முதல் முதற் கவர்த்த
  கோடல் அம் கவட்ட குறுங்கால் உழுஞ்சலி
  தாறு சினை விளைந்த நெற்றம் ஆடுமகள்
  அரிக் கோற் பறையின் ஐயென ஒலிக்கும்
  பதுக்கைத்து ஆய செதுக்கை நீழல்
  கள்ளி முள் அரை்ப பொருந்தி செல்லுநர்க்கு
  உறுவது கூறும் சிறு செந் நாவின்
  மணி ஓர்த்தன்ன தெண்குரல்
  கணிவாய் பல்லிய காடு இறந்தோரே!

  அகநானூறு 151
  பாலை
  காவன் முல்லைப் பூதரத்தனார்.
  தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் சொல்லியது.

  ஆடுகளப் பறை

  தோழி..
  வாழ்க! பாலை நிலத்தில் குட்டையான வாகைமரங்கள் கோடைக்காற்றில் உலர்ந்து மிகுதியான காற்று வீசும்போது,கூத்தியர் ஆடும் போது முழங்கும் பறைபோல, அவற்றின் விளைந்த நெற்றுகள் ஒலிக்கும்.

  பல்லி சோதிடம்

  அங்கு கற்குவியலில் கள்ளிச் செடிகள் நிற்கும்.
  பல்லி, சோதிடன் போல அவ்வழியே செல்வோருக்கெல்லாம் நிமித்தம் கூறும்.
  அத்தகைய காட்டைக் கடந்து சென்ற நம் தலைவர் முன்பு நம்மிடம் அருளோடு இருந்தார்.

  ஈத்துவக்கும் இன்பம்

  இப்போது தம்மை விரும்பி இருப்போரை ஆதரித்து!
  தாம் விரும்பும் உறவுகளுடன் இயைந்து மகிழ்ந்திருக்க இயலாதவொரு வறுமையுற்றார். அதனால் வாழ்க்கைக்குச் செல்வமே துணையாகும் என்று நினைந்து நம்மிடம் அருள்கூர்வதைக் கைவிட்டார். வறுமையை நீக்கும் பொருள் மகிழ்வைத் தரவல்லது. விருந்தினரையும், சுற்றத்தாரையும் மகிழச் செய்வது.
  “அடுத்தவர்களுக்குக் கொடுப்பதால் தோன்றும் இன்பமானது,
  இன்பங்களுள் தலைசிறந்தது.“ என்று உணர்ந்தவராக என்னை நீங்கிப் பொருள் நாடிச் சென்றார்!
  நாம் என்ன செய்யமுடியும்..? என்கிறாள் தலைவி.

  பாடல் வழியே.
  1. விருந்தினருக்கும், சுற்றத்தாருக்கும் உதவுவதே இல்லற வாழ்வின் அடிப்படைக் கடமை என்பது உணர்த்தப்படுகிறது.
  2. பறையொலிக்கு ஏற்ப ஆடுகளமகள் (கூத்தியர்)ஆடும் வழக்கம் சுட்டப்படுகிறது.
  3. சங்ககாலம் தொட்டே பல்லியின் ஒலியை, மக்கள் நிமித்தமாகக் கருதியமை உணரமுடிகிறது.

  (பொருள் மனிதனைப் படுத்தும் பாடு கொஞ்மல்ல –
  தங்கள் மேற்பார்வைக்கு “துபாயா அபுதாபியா?)
  Source : http://gunathamizh.blogspot.com/2011/06/blog-post.html
  by முனைவர்.இரா.குணசீலன்
  தமிழ் விரிவுரையாளர் கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி திருச்செங்ககோடு நாமக்கல் மாவட்டம் தமிழ்நாடு இந்தியா.

  The art of writing is the art of discovering what you believe. — Gustave Flaubert

   
 • Tags: