தூர்தர்ஷன் நிகழ்ச்சியின் Free Legal Aid – (27-06-2019)

எனது அண்ணன் மருமகன் ரசீது அவர்கள் பாண்டிச்சேரி
பங்கேற்ற தூர்தர்ஷன் நிகழ்ச்சியின் முழு தொகுப்பு. கேள்வி பதில்களுடன்…பார்க்க

நல்லவன்!

by Vavar F Habibullah

என்னய்யா இது
உங்க பேச்சை கேட்டா உயிர்
வாழ முடியுமான்னு தெரியலயே!
எப்ப பார்த்தாலும்
நேர்மையாஇரு..
நல்லவனா இருன்னு
சொல்றீங்க…!
இந்த உலகத்திலே
நல்லவனுக்கு காலம் இருக்க
மாதிரி தெரியலயே ஐயா!

கேள்வி கேட்ட சீடனை
மவுனம் கலைந்து சற்று உற்று
நோக்கிய சூஃபி ஞானி
ஜுனைத் சொன்னார்!


ஓங்கி வளர்ந்த, நேரான
உறுதியான மரங்களே
எப்போதும் முதலில் வெட்டி
கீழே சாய்க்கப்படுகின்றன.
கீழே வீழ்ந்தாலும், மாட
மாளிகைகளை காலா
காலத்திற்கும் தாங்கி
பிடிக்கும் வலுவான தூண்களாகி
அவை மீண்டும் உயிர் வாழ்கின்றன.
ஆனால் கோணல் மாணலான
பயன் தரா மரங்களை எவரும்
வெட்டி சாய்ப்பதில்லை.
எவரும் அதன் கனியை
புசிப்பதும் இல்லை.நாற்றம்
தரும் அந்த மரங்கள் பக்கம்
மிருகங்கள் கூட தலை
வைத்து படுப்பதில்லை.

பல்லாண்டு காலம் கெட்டவனாய்
வாழ்வதை விட சில மணித்துளி
களேனும் நல்லவனாய் வாழ்ந்து
மறைவது ஏற்றம் தரும்.

Vavar F Habibullah

ஞானத்தின் திறவுகோல் நாயகம் அல்லவா.. நபி நாயகம் அல்லவா..

ஞானத்தின் திறவுகோல் நாயகம் அல்லவா.. நபி நாயகம் அல்லவா..
கானத்தில் நான் அதை கொஞ்சம் இன்றி சொல்லவா
ஞானத்தின் திறவுகோல்..

பள்ளி சென்று படிக்கவில்லை பாடம் ஏதும் கேட்கவில்லை(2)
சொல்லிதரும் தகுதி இந்த துனியாவில் எவர்க்குமில்லை (2)
அல்லாஹ்வே ஆசியுடன் அனைத்துமே ஆச்சரியம்
சொன்னதெல்லாம் நீதிகளே சத்தியத்தின் செய்திகளே
ஞானத்தின் திறவுகோல்..

வானம் அதை பார்த்திருந்தார் வல்லல் நபி சிந்தித்தார்(2)
வான் மழை கடல் அலையை கண்டிரையை புகழ்ந்திட்டார்(2)
இறைவன் சொல்லி தந்தான் சாந்த நபி எழுதி கொண்டார்
சொன்னதெல்லாம் நீதிகளே சத்தியத்தின் செய்திகளே
ஞானத்தின் திறவுகோல்..


கலிமா தொழுகை நோன்பு ஜக்காத்து ஹஜ்ஜுடனே(2)
பழுது ஏதுமில்லாத பண்பான வாழ்க்கை முறை(2)
பகுப்புகள் நடந்தனறே வாஞ்சை நபி தொடர்ந்தனறே
சொன்னதெல்லாம் நீதிகளே சத்தியத்தின் செய்திகளே
ஞானத்தின் திறவுகோல்..

பொருளியல் அரசியலில் புதுமை விஞ்கானமதில்(2)
அருளியல் இல்லறத்தில் ஆன்மிக வழிமுறையில்(2)
எத்துரையும் கற்றிருந்தார் ஏகன் அருள் பெற்றூயர்ந்தார்
சொன்னதெல்லாம் நீதிகளே சத்தியத்தின் செய்திகளே
ஞானத்தின் திறவுகோல்..

பண்பான நபிபெருமான் பல்கலைகழகமன்றோ(2)
அன்பான மாணவராம் அவர்வழி உம்மத்தன்றோ(2)
தேர்வினிலே வென்றிடுவோம் தீன்வழியில் நின்றிடுவோம்
சொன்னதெல்லாம் நீதிகளே சத்தியத்தின் செய்திகளே
ஞானத்தின் திறவுகோல்..

ஞானத்தின் திறவுகோல் நாயகம் அல்லவா.. நபி நாயகம் அல்லவா..
ரசூல் நாயகம் அல்லவா..
கானத்தில் நான் அதை கொஞ்சம் இன்றி சொல்லவா

ராஜராஜ சோழன் தொடர்பாக… உரையாடலுக்கான சில புள்ளிகள்… /கே. என். சிவராமன்

  • இன்றிருக்கும் தமிழக மக்கள் தொகை கிபி 9ம் நூற்றாண்டான பிற்கால சோழர் காலத்தில் இல்லை…
  • சாதிகள் பிற்கால சோழர் காலத்திலும் தொழில் சார்ந்தே இருந்தது – நெகிழ்வுத்தன்மையுடன். இன்றிருக்கும் இறுக்கம் அன்றில்லை. குறிப்பாக தீண்டாமை இல்லை.
  • நிலங்களுக்கு உரிமையாளர்களாக மன்னர்கள் மட்டுமே இருந்தார்கள். அதை அனுபவிப்பவர்கள் மட்டுமே மக்கள். எல்லா சமூக மக்களும் தங்களுக்கான நிலங்களை அனுபவித்தார்கள். என்ன… அனுபவிப்பதை எந்த சமூகத்தாலும் விற்க முடியாது.
  • பிராமணர்களுக்கு நிலங்களை ஒதுக்கும் ‘பிரும்மதேய’ வழிமுறை பல்லவர்கள் காலத்திலேயே தோன்றிவிட்டது. பிற்கால சோழர்கள் காலத்தில் அதன் எண்ணிக்கை அதிகமானது.
  • ‘அரசு’ முறை தோன்றியபோதே அதன் உப விளைவாக தேவதாசி முறை உருவாகிவிட்டது. போர் வீரர்களும் வணிகர்களும் சிற்பிகளும் கைவினைத் தொழிலாளர்களும் வேளாண் மக்களும் பாலியல் தொழிலை மேற்கொள்ளும் பெண்களை அணுகியிருக்கிறார்கள்.
  • அன்றைய காலகட்டத்தில் இருந்த அனைத்து நீதி சாஸ்திரங்களையும் தழுவி கவுடில்யர் எழுதிய ‘அர்த்த சாஸ்திர’த்தில் பாலியல் தொழில் செய்யும் பெண்களை எப்படி ஒற்றர்களாக மன்னர்கள் பயன்படுத்த வேண்டும் என விளக்கியிருக்கிறார்.
  • பிற்கால சோழர் காலம் வரை தமிழகத்தை ஆண்ட எல்லா சாம்ராஜ்ஜியங்களின் மன்னர்களும் எல்லா சமூகத்தை சேர்ந்த குறுநில மன்னர்களின் வீட்டில் இருந்தும் பெண் எடுத்தார்கள்; பெண் கொடுத்தார்கள். இதன் வழியாக எல்லா சமூகங்களும் (பின்னாளில் சாதியாக அணி திரண்டவை) அரசு அதிகாரங்களை அனுபவித்தன.
  • விஜயநகர பேரரசு (நாயக்கர் காலம்) வலுவாக காலூன்றிய பிறகுதான் சாதி அமைப்புகள் தீண்டாமை என்னும் கொடூர கட்டத்தை நோக்கி நகர்ந்தன; இறுகின.
  • கிழக்கிந்திய கம்பெனி காலத்தில் நில உரிமையாளர்களாக தனி மனிதர்கள் மாறத் தொடங்கினார்கள். இதன் விளைவாக நில உரிமைகள் தொடர்பான போராட்டங்கள் வலுவடைந்தன. சாதி / தீண்டாமை கொடுமைகளுக்கும் இட்டுச் சென்றன.
  • விஜய நகர பேரரசை உருவாக்கியவர்களும் அந்த அரசை தென்னிந்தியா முழுக்க பரப்ப ஆலோசனை வழங்கியவர்களும் 14 – 15ம் நூற்றாண்டை சேர்ந்த பார்ப்பனர்கள். கவனிக்க ‘அந்தணர்கள்’ என்ற பொருள் இவர்களுக்குப் பொருந்தாது. பார்ப்பன மேலாதிக்கத்தின் புள்ளி விருட்சமாக வளரத் தொடங்கியது இக்காலத்தில்தான்.
  • பிற்கால சோழர்கள் காலத்திலேயே சாதி இறுக்கம் அடைந்துவிட்டது என்று இப்போது சொல்வதன் வழியாக விஜயநகர – நாயக்கர் கால கொடுங்கோன்மையை மறைக்கிறோம் என்று பொருள். அதாவது பார்ப்பனீய விஷத்தை மூடி மறைக்கிறோம் என்று அர்த்தம்.
  • ஏனெனில் பிற்கால சோழர்களின் காலம் வரை மன்னர்களாக இருந்தவர்கள் யாரும் அந்தணர் குலத்தை சேர்ந்தவர்கள் அல்ல. இன்று இடைநிலை சாதிகளாக சொல்லப்படுபவர்கள்தான் – அந்த சமூகங்களை சேர்ந்தவர்கள்தான் – சிம்மாசனத்தில் அமர்ந்து ஆட்சிப் புரிந்தார்கள். விதிவிலக்காக அந்தணர்கள் சில காலம் ஆட்சி செய்திருக்கக் கூடும். ஆனால், பெரும்பான்மை அவர்கள் அல்ல. போலவே இக்காலத்தில் அந்தணர்கள் அமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள். ஆனால், கட்டளையிட்டு அமல்படுத்தும் இடத்தில் அவர்கள் அன்று இல்லை.
  • ஆக, இன்று பிற்கால சோழர்கள் குறித்து அதுவும் சாதி தொடர்பாக பேசுவது என்பது முழுக்க முழுக்க பார்ப்பனீய விஷத்தை மறைக்கும் செயலே. இன்று இடைநிலை சாதிகளாக இருப்பவர்களை மறைமுகமாக தாக்கி அதன் வழியாக இப்போதைய பார்ப்பனீயத்துடன் கள்ளக் கூட்டு வைக்கும் நடவடிக்கையே.
  • இன்று ஒடுக்கப்பட்ட சமூகம் / சாதியாக அறியப்படுபவர்கள் விஜயநகர – நாயக்கர் காலத்தில்தான் அந்த நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

இந்தப் புள்ளிகள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்..?
உரையாடலாம் வாருங்கள்…

கே. என். சிவராமன்

https://www.facebook.com/nagarajan.sivaraman1/posts/10219297691382626



பாரதியாரின் குடும்பம்

பாரதியாரின் ஒரிஜினல் குடும்ப புகைப்படம்.

நமது இளைய தலைமுறைக்காக.!!

httஇளைய மாப்பிள்ளை நடராஜன், இளைய புதல்வி சகுந்தலா,
செல்லம்மா பாரதி, பேரக்குழந்தைகள் (படம் 1934)