RSS

Monthly Archives: May 2014

கனவு இல்லம் ,

அனைவருக்கும் உள்ள ஆசையும் தேவையும் ஒன்றானதே சொந்த வீடு ,
அமைப்பது என்பது கடினமான ஒன்றாகவே இருக்கிறது ,
அதற்கான முயற்சிகள் செய்தும் தனது உழைப்பின் பெரும்பகுதியை செலவிட வேண்டியுள்ளது அப்படியும் அமைத்துவிட முயன்று பலர் சிரமத்துடனே கட்டி முடிக்க முடிகிறது !
இதற்கு காரணம் பலவகையாக உள்ளன உதாரணமாக நிர்ணயம் செய்த தொகைய மீறி கட்டிடம் அமைப்பது , சரியான கட்டிட மேஸ்திரியோ , காண்ட்ராக்டரோ அமையாததாலும் ,
குறித்த கால அளவை மீறிப்போவதும் ,
அவ்வப்போது கட்டுமான பொருட்களின் விலையில் மாற்றம் ஏற்படுவது ,
அலங்கார பொருட்கள் வாங்கும்போது ஆசையின் காரணமாக மேலும் தொகையை அதிகமாக்குவதாலும் ,,
இப்படி பல பிரச்சினைகளை தாண்டியே அமைக்கப்படுகிறது இதனால் மனவேதனையுடனே வீட்டை கட்டி முடிக்க முடிகிறது ,
இதனை தவிர்க்க ஒரு சில யோசனைகளை ஒவ்வொரு பகுதியாக வெளியிடவுள்ளேன் உபயோகமாக இருக்கும் என்ற நம்பிக்கையோடு !

 • இது எனது விளம்பரம் அல்ல ,
  நண்பர்கள் யாருக்கேனும் வீடு கட்டுவது தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் முகநூல்(facebook) இன்பாக்சில் தொடர்பு எண் கொடுங்கள் தங்களுடைய சந்தேகங்களுக்கு என்னளவு உதவிகள் வழங்குகிறேன் ! கட்டணம் ஏதும் தேவை இல்லை !

  1554462_677177999020232_5383148709311809901_nSathiyananthan Subramaniyan Banumathi

  Advertisements
   
 • Tags: ,

  பாலிசி ஆஃப் லல்லு….!!!

  10364131_459168374227085_5071718696971146046_nலல்லுவோட நண்பர் ஒர்த்தர் பையன் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு அடம்புடிச்சிட்டிருந்தாராம். அவங்கப்பா லல்லுகிட்ட பஞ்சாயத்தக் கொண்டுவந்தாராம்.சொம்ப எடுத்து வாயைக் கொப்புளிச்ச லல்லு பையன்கிட்ட கேட்டாராம்,
  “யப்பா,
  ஏன்யா என்ன பிரச்சினை உனக்கு”

  அந்தப்பையன் சொன்னாராம்….
  “ஒன்னுமில்ல, கல்யாணம்னு ஒன்னு பண்ணுனா அது பெரிய்ய பணக்காரப் பொண்ணத்தான் கல்யாணம் பண்ணுவேன்” என்று.

  “அவ்வளவுதானா…நான் என்னமோ ஏதோன்னு நெனச்சேன்.சரி,பில்கேட்சோட பொண்ணு ஓகேவா..?? என்ற லல்லுவிடம் பையன் பிரம்மித்தபடியே சொன்னானாம்.

  “டபுள் ஓகே சார்…”

 • “சரி நீ இப்ப என்னவேலை பாக்கற”ன்னு லல்லு கேட்க, அதுக்கு அந்தப்பையன் சொன்னான்,

  “சும்மாத்தான் இருக்கேன்”

  லல்லுக்கு அப்படியொரு சந்தோஷம் வந்துச்சாம்.
  “சூப்பர்டா…பையன்னா இப்படித்தான் இருக்கணும்,
  நான் நடத்தி வைக்கறன்டா உனக்கு பில்கேட்ஸ் மகளோட கல்யாணம்”னு கெளம்பி நேரா பில்கேட்ஸ்கிட்ட போனாராம்

  சம்பிரதாய உபச்சாரங்களுக்குப் பின்னாடி
  லல்லு ஆரம்பிச்சாராம்,
  “உங்க பொண்ணுக்கு அருமையான ஒரு மாப்பிள்ள பாத்திருக்கேன் பில்கேட்ஸ்” என்றாராம்

  பில்கேட்ஸ் யாரு எந்த ஊர் என்ன விபரம்னு விசாரிச்சுட்டு
  சொன்னாராம்,
  “என் ஸ்டேட்டசுக்கு தகுந்த மாப்பிள்ளையா இருந்தா பரவால்லயே” என்று யோசிக்க…
  லல்லு இடைமறித்துச் சொன்னாராம்,
  “மாப்பிள்ளை என்ன பன்றாருன்னு நீங்க கேக்கலையே,
  அவர்தான் இந்தியாவோட ரிசர்வ் பேங்க் கவர்னர்” என்று.

  “அடடே, அப்படியா….அப்ப என் பிஸ்னச டெவலப் பண்ண ரொம்ப உபயோகமா இருக்குமே…..நல்லவேளை நீங்க இந்த சம்பந்தத்த விட்றாதீங்க லல்லு,எப்படியாவது முடிச்சுக் கொடுத்துடுங்க” என்றாராம் பில்கேட்ஸ்.

  அடுத்து லல்லு நேரா பிரதமர் ஆபீசுக்குப் போனாராம்,
  சம்பிரதாய உபசரிப்புகளுக்குப் பின் கேட்டாராம்,
  “நம்ம பையன் ஒர்த்தருக்கு வேலை வேணுமே” என்று

  “இதுகெல்லாம் போய் எங்கிட்ட எதுக்கு கேக்கறீங்க லல்லு,
  நீங்களே முடிச்சுடலாமே” என்றாராம் பிரதமர்

  “இல்ல, அவருக்கு ரிசர்வ் பேங்க் கவர்னர் வேலதான் வேணுமாம்.அதுனாலதான் உங்ககிட்ட வந்தேன்” என்றார் லல்லு.

  “லல்லு, என்ன வெளையாடறீங்களா….யாரோ ஒரு பையனுக்கு ரிசர்வ் பேங்க் கவர்னர் பதவி கொடுக்கமுடியுமா”ன்னு கேட்டாராம் பிரதமர்.

  “யாரோ ஒரு பையன் இல்லீங்க,அவருதான் பில்கேட்ஸோட மருமகன்….!! ”

  அச்சச்சோ அப்படியா, இதோ உடனே வேலை கொடுக்கச் சொல்லறேன் என்று விரைந்த பிரதமர் அப்பாயிண்மெண்ட் ஆர்டரை டக்குடக்குன்னு ரெடி பண்ணிக் கொடுத்தாராம்….!!

  இதுதாங்க பாலிசி ஆஃப் லல்லு.
  இந்த மாதிரி சமயோசிதமா அந்த அம்மிணி வேல பாத்தா சரிதான்….
  10171721_443810355762887_237471937607906529_nநிஷா மன்சூர்

   
 • பார்க்கிற ஆண்கள் மேல் எல்லாம் ஆசைப்பட்டு விடுவார்களா என்ன?

  10264848_487701051359366_5912562022190009498_nஆபிஸ் கிளம்பியாச்சு!

  Tamilselviஒரு பெருங்கஷ்டம் நான் வெளியில முழங்கால் போட்டு வந்து சைக்கிள்ல ஏறுறத மேல்வீட்ல நின்று புருஷனும் பொஞ்சாதியுமா வேடிக்கைப் பார்க்கிறது தான்.

  கொஞ்சம் சங்கோஜமா இருந்தாலும் இதையெல்லாம் பழகிக்கனும்ன்னு தேத்திக்கிட்ட நேரம் தான் மேல்வீட்டுக்காரங்களுக்கும் மேல் மாடியில வசிக்குற அந்த குடும்பம் இறங்கி வந்துச்சு

 • தம்பதியர் ஒரே குழந்தை, இப்ப கர்ப்பம் தரிச்சுருக்காங்க போல வயிறு கொஞ்சம் மேடா போட்டிருந்த சுடிதாருக்கு பொருந்தாம இருந்தது

  ஹாய் டா செல்லம்ன்னு சொன்னேன் (எல்லாம் என் வாய் கொழுப்புதான் என்னத்தை சொல்லித் தீக்குறது)

  அந்த குழந்தை சட்டுன்னு ஒதுங்கி முகத்தை ஒரு வெட்டு வெட்டி அவங்க அப்பா டுவீலர் கிட்ட போய் நின்னுக்கிடுச்சு

  சம்பிரதாயத்துக்கு கூட ஒரு புன்முறுவல் இல்லாத முகம் தம்பதியருக்கு

  வெளியூர்ல இருந்து இங்க வந்து டீச்சர் உத்தியோகம் பாக்குற திமிரு – அட அப்படி முறைக்காதீங்க அதை நான் சொல்லல பக்கத்துல வந்து நின்ன எதிர்வீட்டு பாட்டியம்மா சொன்னாங்க கிசு கிசுப்பா

  ம்ம்ம் என்று ஏதோ கேட்டுவைப்போமேன்னு கேட்டுக்கிட்டேன்.

  நீ கொஞ்சம் குறிப்பா அழகா கீற இல்ல அதான் அந்த புள்ளைக்கு பொறாமை, எங்க அவ புருஷன நத்திக்கிடுவியோன்னு!

  என்னது என்று பெருங் கூவலாய் வந்த வார்ததையை தொண்டைக்குள்ளாவே விழுங்கி, சட்டுன்னு சைக்கிள திருப்பி கடுப்புல கொஞ்சம் வேகமா பஸ்டேண்ட் தாண்டி வர வரைக்கும் அந்தம்மா சொன்ன வார்த்தை மனச கொத்திக்கிட்டே இருந்துச்சுங்க!

  (அதெப்படி பார்க்கிற ஆண்கள் மேல் எல்லாம் ஆசைப்பட்டு விடுவார்களா என்ன?)
  GJ ThamilselviGJ Thamilselvi

   
 • அரசியலும், ஆட்சி மாற்றமும் !!!

  parliament (2)
  கடந்தகால ஆட்சியிலே
  நடந்த நிகழ்வு ஏராளம்
  கல்லும் முள்ளும் நிறைந்திட்ட
  கடந்த பாதை வெகுதூரம்

  பத்து வருட ஆட்சியிலே
  பித்துப் பிடித்துப் போயினரே
  பசிக்கும் வயிற்றுக்கு பாலூற்ற
  பாவித் தலைவர்கள் மறந்தனரே

  நித்தம் விலைவாசி ஏறியதே
  நெஞ்சில் அம்பாய் பாய்ந்ததுவே
  குத்தம் எம்பக்கம் இல்லையென
  குரங்கு வித்தை காட்டினரே

 • பித்தம் தெளிவித்த நாட்டுமக்கள்
  பின்னால் தள்ளி விரட்டினரே
  ஆட்சிமாற்றத்தை ஏற்ப்படுத்தி
  அவையில் அடுத்தோரை அமர்த்தினரே

  ஊன ஆட்சி செய்ததினால்
  உள்ளம் கொதித்து வாக்கிட்டு
  தானம் செய்து வழங்கிடவே
  தருணம் நோக்கிப் பெற்றனரே

  மக்கள் கொடுத்த தீர்ப்புயிது
  மதியுணர வைத்த பாடமிது
  சொப்பனம் கொண்ட பதவியிது
  சோபிக்க நல்ல நேரமிது

  அந் நன்றியின் நற்கடனாய்
  அகிலமே போற்றிடும் நல்லாட்சி
  அமைக்கும் கடமை உமதன்றோ
  அன்பின் கட்டளை தானன்றோ

  சிறுபான்மை மக்களுக்கும்
  சீராய் சலுகைகள் வழங்கிடனும்
  பெரும்பான்மை மக்களையும்
  பேதமின்றி நடத்திடனும்

  அருமை ஆட்சி நடத்திட்டால்
  அனைவரும் போற்றுவர் உம் புகழை
  வெறுமை நீக்கி ஒற்றுமையாய்
  வீரத்தைக் காட்டனும் வளர்ச்சியிலே

  பாமர மக்களின் வாழ்வினிலும்
  பூ மணம் வீச செய்திடணும்
  பகட்டாய் ஆட்சி செய்தோர்க்கு
  பாடம் புகட்டிக் காட்டிடணும்

  படைத்தவன் பயமென்றும் இருந்திடனும்
  பகையோனும் உணர்ந்திட நடந்திடணும்
  கொடுத்திடும் கரமென்றும் உயர்ந்திடணும்
  கொள்கையில் நேர்மையை கொண்டிடனும்

  மதவாதக் கொள்கையை விட்டிடனும்
  மனமெல்லாம் ஒன்றாக கூடிடனும்
  ஜனநாயகம் என்றென்றும் தழைத்தோங்க
  ஜாதிமத பேதமின்றி நடத்திடணும்

  யார்வந்து ஆட்சியில் அமர்ந்தாலும்
  எம்மக்கள் தெளிவாக உள்ளனரே
  நன்மைகள் செய்வோர்க்கு நல்வாக்கை
  நாளெல்லாம் கொடுத்திட்டு மகிழ்வனரே

  எத்தனை காலம் தான் இவ்வாழ்வு
  யாருக்கும் இவ்வுலகம் நிலையன்றோ
  இருக்கும் காலத்தை பொன்போன்று
  இன்பமாய் அமைதியாய் வாழ்வது நன்று

  எத்தனை கட்சிகள் ஆண்டாலும்
  இகத்தின் முடிவினில் இறையாட்சி
  அத்தனை ஆட்சியும் அடிபணிய
  ஆண்டவன் கட்டளை அதுவன்றோ

  51mmx51mmஅதிரை மெய்சா
  http://nijampage.blogspot.ae/2014/05/blog-post_26.html

   
 • Tags: , ,

  சந்தன கடத்தல் வீரப்பன், தமிழக நக்சல்பாரிகள், ரஷ்ய – சீன புரட்சிகள் மற்றும் சகுனியின் தாயம்

  ‘‘வாட்?’’ வால்டர் ஏகாம்பரம் அதிர்ந்தார். ‘‘சந்தன கடத்தல் வீரப்பனா?’’

  ‘‘யெஸ்…’’ நிதானமாக பதில் சொன்னான் ஸ்காட் வில்லியம்ஸ்.

  ‘‘வீரப்பன் எப்ப கம்யூனிஸ்ட் ஆனான்?’’

  ‘‘ஆனதா நான் எப்ப சொன்னேன்?’’

  ‘‘இப்பத்தானே அப்படி சொன்னீங்க?’’

  ‘‘இல்லை. உதாரணம் காட்ட அவன் பெயரை குறிப்பிட்டேன்…’’

  ‘‘புரியலை…’’

  ‘‘தெளிவாவே சொல்றேன். சத்தியமங்கலம் காடுகள் அவன் கட்டுப்பாட்டுல இருந்தது…’’

  ‘‘ஆமா…’’

  ‘‘தன்னோட இறுதி காலத்துல தமிழ்த் தேசியவாதியா மாறினான்…’’

  ‘‘ம்…’’

  ‘‘அப்புறம் விஜயகுமார் தலைமையிலான அணி அவனை என்கவுன்ட்டர் செஞ்சது.

  ‘‘இது எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்தான். இதன் மூலமா என்ன சொல்ல வர்றீங்க?’’

 • கேட்ட வால்டர் ஏகாம்பரத்தை உற்றுப் பார்த்தான் ஸ்காட் வில்லியம்ஸ். அவன் உதடுகளில் புன்னகை பூத்தது. ரிவால்விங் சேரில் அமர்ந்தவன், சிகரெட்டை பற்ற வைத்தான். அவருக்கும் ஒன்றை கொடுத்தான். சுருள் சுருளாக புகையை கசியவிட்டவன் நிமிர்ந்தான்.

  ‘‘இனிமே சத்தியமங்கலம் காட்டை எந்த புரட்சிகர அமைப்பாலயும் பயன்படுத்த முடியாது. ஆயுதம் தாங்கிய குழு அங்க பயிற்சி பெற முடியாது. இதுதான் வீரப்பன் நமக்கு செய்த நன்மை…’’

  ‘‘அதாவது அந்தக் காட்டை அவன் காட்டிக் கொடுத்துட்டான்னு சொல்றீங்க…’’

  ‘‘எக்ஸாட்லி. ஒருவேளை நாளை நக்சல்பாரிகள் தமிழகத்துல தலைதூக்கினாலும், ஆயுதக் குழுவை அமைச்சாலும் அவங்களால எங்கயும் பதுங்க முடியாது. தமிழக காடுகள் எப்படி அடர்த்தியா இருக்கு… அது தென் மாநிலங்களோட எப்படி இணைஞ்சிருக்கு… எந்த பாதைல நடமாடணும்… என்னென்ன விலங்குகள் அந்தக் காட்ல இருக்கு… இது எல்லாத்தையும் அவன் அக்குவேறு ஆணிவேறா வெளியுலகுக்கு சொல்லிட்டான். படம் வரைஞ்சு பாகங்களை குறிச்சுட்டான். அதை வைச்சு அரசால அந்தக் காட்டை சுலபமா கண்காணிக்க முடியும்…’’

  ‘‘இதுக்கும் ரங்கராஜனையும், தேன்மொழியையும் சுதந்திரமா நடமாட விட்டதுக்கும் என்ன தொடர்பு இருக்கு?’’

  ‘‘நிறைய. இங்க பாருங்க ஏகாம்பரம்… உலகளவுல கம்யூனிஸ்ட்டுகள் ரஷ்ய & சீன புரட்சிகளைத்தான் குறிப்பிட்டு பேசுவாங்க. இந்த இரண்டு நாடுகள்லயும் நடந்த ஆட்சி மாற்றங்கள் உழைக்கும் மக்களுக்கு நம்பிக்கை தர்றதா சொல்வாங்க. ஆனா, இந்த இரண்டு நாடுகள்லயும் நடந்த போராட்டங்கள், அவங்களை விட கேப்பிடலிசத்துக்குதான் நிறைய பாடங்களை கற்றுத் தந்திருக்கு…’’

  ‘‘அது என்னன்னு தெரிஞ்சுக்கலாமா?’’

  ‘‘தாராளமா. மக்களை எப்படி கம்யூனிஸ்ட்டுகள் அணி திரட்டறாங்க, எந்த வழிமுறைல போராட்டத்தை முன்னெடுத்துச் செல்றாங்க… இதையெல்லாம் கேப்பிடலிசம் ஒரு பாடமா படிச்சது. விளைவு… சீனாவுக்கு பிறகு வேறு எந்த நாடுகள்லயும் இன்னி வரைக்கும் புரட்சி வெடிக்கலை. கியூபா, வெனிசூலா மாதிரியான ஆப்பிரிக்க நாடுகள்ல நடந்த ஆட்சி மாற்றங்களை கம்யூனிஸ்ட் புரட்சியோட ஒப்பிட முடியாது. திரும்பத் திரும்ப மூன்றாம் உலக நாடுகள்ல இருக்கிற கம்யூனிஸ்ட்டுகள் ஒண்ணு ரஷ்ய பாணி இல்லைனா சீன பாணில போராடறாங்க. இந்த இரண்டு வழிமுறைகளையும் எப்படி தடுத்து நிறுத்தணும்னு அதிகார வர்க்கம் நல்லாவே பாடம் கத்துகிட்டு இருக்கறதால சம்பந்தப்பட்ட நாடுகள்ல புரட்சிகர குழுக்கள் வளரும்போதே கிள்ளி எறிய முடியுது. வியட்நாம்ல அமெரிக்கா தோத்துப் போனதா சொல்வாங்க. ஆனா, அங்க கம்யூனிசமும் ஜெயிக்கலை. இதுதான் முக்கியம்…’’

  ‘‘புரியுது ஸ்காட் வில்லியம்ஸ்…’’

  ‘‘சமீபத்துல நடந்த அரபு புரட்சியையும், வால்ட் ஸ்டீரீட் ஆக்கிரமிப்பையும் எடுத்துக்குங்க. என்ன ஆச்சு? ஒண்ணுமே இல்லை. அரபு நாடுகள்ல ஜனநாயக உரிமைக்காகத்தான் போராட்டம் நடந்தது. சமூக மாற்றத்துக்காக இல்ல. அதே மாதிரி கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேலா வால்ட் ஸ்டீரீட்டை மக்கள் ஆக்கிரமிச்சாங்க. இதன் மூலமா என்ன சாதிச்சாங்க? ஒண்ணுமே இல்லை. ஏன் தெரியுமா?’’

  ‘‘ஏன்?’’

  ‘‘ஏன்னா, கம்யூனிஸ்ட் கட்சி எங்கயும் வலுவா இல்லை. இனிமேலும் அவங்களால மக்களை பெருமளவு திரட்ட முடியாது. அதுக்கான எல்லா கதவுகளையும் திட்டம் போட்டு அடைச்சாச்சு…’’

  ‘‘அப்ப வறுமையும், வேலையில்லா திண்டாட்டமும் ஒரு விஷயம் இல்லையா?’’

  ‘‘காமெடி பண்ணாதீங்க வால்டர் ஏகாம்பரம். வறுமையை விட நுகர்வுப் பசிதான் இன்னி தேதில உலக மக்களை ஆட்டிப் படைக்குது. ஆறு மாசத்துக்கு ஒரு செல்ஃபோனை அவன் வாங்கணும். இரண்டு வருஷத்துக்கு ஒருமுறை டிவியை மாத்தணும். மூணு மாசத்துக்கு ஒருமுறை புது டிரெஸ் போடணும். இதுதான் இன்னி தேதில மக்கள் சந்திக்கிற பிரச்னை. புரட்சிகர சக்திகளுக்கு எதிரா கேப்பிடலிசம் கண்டுபிடிச்சிருக்கிற மிகப்பெரிய ஆயுதம் இதுதான். இதுக்கு இன்னொரு பெயரும் இருக்கு. அதுதான் உலகமயமாக்கல். கண்ணுக்கு தெரியாத மின்சாரம் மாதிரி நிதிமூலதனம்தான் இன்னிக்கி உலகையே ஆட்சி செய்யுது. ஒளியை விட வேகமா நாடுவிட்டு நாடு… கண்டம் விட்டு கண்டம்… அது பாயுது. இதன் மூலமா உலக நாடுகள் அனைத்தையும் ஒரே வலைப்பின்னலுக்குள்ள கொண்டு வந்தாச்சு. இதனால என்ன லாபம் தெரியுமா? ஒரு நாட்ல அடிச்சா இன்னொரு நாட்ல வலிக்கும். அதனால தனித்தனியா எந்த நாட்லயும் போராட்டம் நடத்த முடியாது. உலகம் பூரா ஒரே நேரத்துல புரட்சி வெடிச்சாதான் சமூக மாற்றம் நிகழும். அப்படியொரு சம்பவம் நடக்க வாய்ப்பே இல்லை…’’

  ‘‘அப்புறம் ஏன் கம்யூனிஸ்ட்டுகள் சின்ன அளவுலயாவது ஒவ்வொரு நாட்லயும் இருக்காங்க?’’

  ‘‘ஏன்னா அவங்க உதவி நமக்குத் தேவை. அதனால அவங்களை விட்டு வைச்சிருக்கோம்…’’

  ‘‘எப்படி?’’

  ‘‘ரொம்ப சிம்பிள். கனிம வளங்கள் எங்க எல்லாம் இருக்கு… சுத்தமான தண்ணீர் எங்க கிடைக்கும்… இயற்கையான சூழல் எங்கிருக்கு… அந்த இடங்கள்ல என்ன மாதிரியான மக்கள் வாழறாங்க… அவங்க அடிப்படைத் தேவை என்ன… இதையெல்லாம் கம்யூனிஸ்ட்டுங்க வெளி உலகுக்கு சொல்வாங்க. அதாவது எந்த ஆராய்ச்சியும் செய்யாம எல்லா தகவல்களையும் நமக்குத் தருவாங்க. அப்புறமென்ன… ஜாம் ஜாம்னு அந்த இடங்களை நாம ஆக்கிரமிச்சிடலாம். சம்பந்தப்பட்ட மக்களுக்கு என்ன தேவையோ அதுல கொஞ்சத்தை வீசி எறிஞ்சா போதும். வாலை ஆட்டிட்டு நம்ம பக்கம் வந்துடுவாங்க…’’

  ‘‘ரைட். இப்ப தேன்மொழியும், ரங்கராஜனும் என்ன செய்வாங்கன்னு நினைக்கறீங்க?’’

  ‘‘பிரசாரம் பண்ணுவாங்க. போஸ்டர் ஒட்டுவாங்க. பிட் நோட்டீஸ் விநியோகிப்பாங்க. அவங்க பத்திரிகைல எழுதுவாங்க. துண்டு பிரசுரம் வெளியிடுவாங்க. பொது நிகழ்ச்சி நடத்துவாங்க. ரெட் மார்கெட் பிசினஸ் தமிழகத்துக்கு வந்தாச்சுன்னு அடித்தட்டு மக்கள் மத்தில கொண்டு போய் சேர்ப்பாங்க. ‘மெடிகோ’ நிறுவனம்தான் இதையெல்லாம் செய்யுதுன்னு அடையாளம் காட்டுவாங்க. ஒவ்வொரு உடல் பாகத்துக்கும் எவ்வளவு விலைனு பட்டியல் போடுவாங்க. அதாவது ஒரு பைசா செலவில்லாம நமக்கு விளம்பரம் தேடித் தருவாங்க. நமக்கான வாடிக்கையாளர்கள்கிட்ட நம்மை கொண்டு போய் சேர்ப்பாங்க!’’

  ‘‘பிரில்லியண்ட்…’’ என்று வால்டர் ஏகாம்பரம் வியந்த அதே நொடியில் –

  ரங்கராஜனிடமும், தேன்மொழியிடமும் இதையேதான் கூறிக் கொண்டிருந்தார் தமிழரசன். அவர் வேறு யாருமல்ல, சுகாதாரத் துறை அதிகாரியான ராம் வீட்டில் தேன்மொழி சந்தித்தாளே… அதே பெரியவர்தான்.

  ‘‘இப்படியெல்லாம் நாம செய்வோம்னுதான் ஸ்காட் வில்லியம்ஸ் நினைக்கிறான். ஆனா, நாம வேறொரு நடவடிக்கைல இறங்கப் போறோம். ரஷ்யா, சீனா மாதிரியான கம்யூனிச நாடுகள் பின்னடைவு அடைஞ்சதுலேந்து நாம பாடம் கத்துகிட்டு இருக்கோம். அதனால போராட்ட வழிமுறைகளை மாத்தப் போறோம்…’’
  என்றபடி மத்திய கமிட்டியில் ஒப்புதல் பெறப்பட்ட திட்டத்தை விளக்க ஆரம்பித்தார்.

  *இன்று (26.05.2014) வெளியாகியிருக்கும் ‘குங்குமம்’ வார இதழில் ‘சகுனியின் தாயம்’ தொடரின் 20வது அத்தியாயம் பிரசுரமாகியிருக்கிறது. அதன் ஒரு பகுதி இங்கே…
  1069791_10203199636461314_600854483_n
  கே. என். சிவராமன்

   
 • Tags: , ,

  பிர் அவ்ன் – எகிப்து நாட்டின் மாமன்னன் !

  பிர் அவ்ன் –
  எகிப்து நாட்டின் மாமன்னன் !
  தன்னை இறைவன் என்று சொல்லிக் கொண்டவன் !
  தன்னை விழுந்து பணியாத சிரசுகளை சேதம் செய்தவன் !
  எகிப்து மண்ணில் தலையோடு வாழ்ந்தவர்களின் தலைகளெல்லாம் பிர் அவ்னின் காலடியில் பணிவதற்காக இருந்த தலைகளே !
  இறைவன் ஒருவன் என்று நம்பி வாழ்ந்தவர்களை ஒன்றுமே இல்லாமல் ஆக்கியவன் பிர் அவ்ன் !

  10398671_646080165470716_2504653406257615288_nஅப்போதுதான் இறைவன் மூஸா நபியை மண்ணில் பிறக்க வைத்து பிர் அவ்னின் ஆட்டத்திற்கு முடிவு கட்ட நாடினான்.
  குழந்தை மூஸாவை அவரின் தாய் ஒரு பேழையில் வைத்து நைல் நதியில் விட்டுவிட அந்தப் பேழை பிர் அவ்னின் மனைவி ஆசியாவிடம் வந்து சேர்ந்தது.
  குழந்தை இல்லாத பிர் அவ்னின் மனைவி ஆசியா பிர் அவ்னின் அனுமதியோடு குழந்தை மூஸாவை வளர்த்து வந்தார்.
  பிர் அவ்னிடம் ஏராளமான மந்திரவாதிகள் ஜோசியக்காரர்கள் இருந்தனர்.

 • ” மன்னா ! உன் உயிருக்கு ஒரு ஆண் குழந்தையால் ஆபத்து. அதைத் தேடித் பிடித்துக் கொன்று விடு ” என்று பிர் அவ்னிடம் அந்த மந்திரவாதிகள் ஒருநாள் சொன்னார்கள்.
  பிர் அவ்ன் ஆணையிட்டதும் நாடு முழுவதும் பாய்ந்து சென்ற அவன் பட்டாளம் பிறந்த குழந்தை முதல் வளர்ந்த குழந்தை வரை வெட்டிச் சாய்த்தது.
  அன்றைய தினம் அந்த பாலைவன தேசத்தில் ஆண் குழந்தைகளே இல்லாமல் போனது !

  ஆனாலும் …
  மந்திரவாதிகளின் மனம் சமாதானமாகவில்லை
  ” அந்தக் குழந்தை கொல்லப்படவில்லை ” என்று உறுதியாகச் சொன்னார்கள் .
  ‘ கொல்வதற்கு வேறு குழந்தைகளே இல்லை ” என்றான் பிர் அவ்ன் .
  ” இருக்கிறது ஒரு குழந்தை. அது நீ வளர்க்கும் குழந்தை மூஸா ” என்று விளக்கமாகச் சொன்னார்கள் மந்திரவாதிகள்.
  பிர் அவ்ன் துடித்துவிட்டான். தான் பாசத்தோடு வளர்க்கும் குழந்தை தன்னைக் கொல்ல வந்தக் குழந்தையா ? இருக்காது…இருக்கவே இருக்காது என்று நம்பினான். மந்திரவாதிகளை கோபித்துக் கொண்டான்.

  ” மன்னா… வேண்டுமானால் ஒன்று செய்யலாம். அந்தக் குழந்தைக்கு ஒரு சோதனை நடத்தலாம். அந்த சோதனையின் மூலம் அது உன்னை அழிக்க வந்தக் குழந்தையா இல்லையா என்பதை கண்டு பிடித்து விடலாம் ” என்று மந்திரவாதிகள் சொன்னார்கள்.

  ” சரி என்ன செய்யலாம் சொல்லுங்கள் ” என்றான் பிர் அவ்ன் .

  ” ஒரு தட்டில் சிவப்பு வண்ண ரோஜா மலர்களையும் அதேபோல் இன்னொரு தட்டில் நெருப்புக் கட்டிகளையும் வைத்து குழந்தையை தவழ விடுவோம். அது நெருப்பைத் தொட்டால் அது சாதாரணக் குழந்தை. ரோஜாப்பூக்களைத் தொட்டால் உன்னைக் கொல்ல வந்தக் குழந்தை. அதை உடனே கொன்று விட வேண்டும் ” என்றார்கள் மந்திரவாதிகள்.
  ” அப்படியே ஆகட்டும் ” என்று அனுமதி கொடுத்தான் அரசன்.

  அவை கூடியது.
  மந்திரிகளும் மந்திரவாதிகளும் கூடி இருந்த அரண்மனை முற்றத்தில் ஆசியா உம்மா பதறும் உள்ளத்தோடும் அழுத விழிகளோடும் அமர்ந்திருந்தார்.
  இரு தட்டுகளில் பூவும் நெருப்பும் கொண்டுவந்து வைக்கப்பட்டன.
  குழந்தை மூஸா கொண்டு வரப்பட்டு பளிங்குத் தரையில் இறக்கி விடப்பட்டார்.

  ரோஜாவின் வாசனை குழந்தையை கவர்ந்து இழுத்தது. தவழ்ந்து தவழ்ந்து வந்த குழந்தை ரோஜாக்கள் நிரம்பி இருந்த தட்டை நோக்கிச் சென்றது.
  விழி மூடாமல் பிர் அவ்ன் பார்த்துக் கொண்டிருந்தான்…
  ஆசியா உம்மா மனம் பதற கண்களை மூடிக் கொண்டார்.
  மந்திரவாதிகள் மந்தகாசப் புன்னகையோடு மலர்ந்து கொண்டிருந்தார்கள்.
  வீரர்கள் உருவிய வாளோடு குழந்தையை வெட்டிப்போட தயாரானார்கள் .

  ரோஜாத் தட்டில் குழந்தை மூஸா கை வைக்கப் போகும் போது இறைவன் நாட்டப்படி வானவர் தலைவர் ஜிப்ரீல் மூசாவின் கையை தட்டி விட்டார்.
  குழந்தையின் கை நெருப்புத் தட்டில் விழுந்தது.
  தீ சுட்ட வேதனைத் தாங்காமல் அழ ஆரம்பித்தது.
  பிர் அவ்ன் குழந்தையை அள்ளி எடுத்து அணைத்துக் கொண்டான்.
  ” இந்தக் குழந்தையா என்னைக் கொல்ல வந்தக் குழந்தை ? மூடர்களே ஓடிப்போங்கள் ” என்று மந்திரவாதிகளை விரட்டி விட்டான்.
  குழந்தை பிர் அவ்னைப் பார்த்துச் சிரித்தது.
  பிர் அவ்ன் சந்தோசமாக தனக்கு வந்த மரணத்தை தோளில் போட்டு தட்டிக் கொடுத்தான் !

  @ இன்ஷா அல்லாஹ்…
  நான் எழுதிக் கொண்டிருக்கும் ” அளவற்ற அருளாளன் நூலிலிருந்து ஒரு சிறு துளி !
  Abu_HaashimaAbu Haashima Vaver

   
 • ஆளுக்கொரு பாடம்

  1184759_850644248296486_6623685932769302007_n
  by கதிர் வேல்
  ———–
  நம்மை பொருத்தவரை பளிச்சென்று தெரியும் ஒரு மிகப்பெரிய மாற்றம் இது: மத்தியில் அமையும் புதிய அரசுக்கும் தமிழ்நாட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
  குறுகிய காலம் அதிமுகவும், நீண்டகாலம் திமுகவும் மத்திய அமைச்சரவையில் பங்கேற்று இருந்தன. பாமக, மதிமுக போன்ற சிறிய கட்சிகள்கூட இடம் பெற்றிருந்தன. அது முடிவுக்கு வந்துவிட்டது. ஒரேயொரு பிஜேபி எம்.பி.யான ராதாகிருஷ்ணனும், ஒரேயொரு பாமக எம்.பி.யான அன்புமணியும் அமைச்சர் பதவி பெற்றாலும் ஒப்புக்கு சப்பாணி போல அது ஒரு அடையாள பிரதிநிதித்துவமாக மட்டுமே பார்க்கப்படும்.

  எதிர்க்கட்சிகளை அடியோடு ஒழித்துக்கட்டி, மொத்த இடங்களையும் தேசிய ஜனநாயக கூட்டணி கைப்பற்றிய மாநிலங்களின் பட்டியலை பாருங்கள். ஆளும் கட்சியாகவும் பிரதான எதிர்க்கட்சியாகவும் செயல்பட்ட கட்சிகளின் தலைவர்களை தே.ஜ.கூட்டணி மண் கவ்வ வைத்த மாநிலங்களை கவனியுங்கள். பகீரென்று ஒரு ஒற்றுமை புலப்படும்.

  எல்லாமே இந்தி பேசும் மாநிலங்கள்.

 • மராத்தியும் குஜராத்தியும் இந்தியில் இருந்து பெரிதாக வேறுபடும் மொழிகள் அல்ல. ஆகவே அவற்றையும் இ.பே.மா பட்டியலில் இணைத்தது குற்றமாகாது. நாட்டின் வடக்கும் மேற்கும் கைகோர்த்து பிஜேபிக்கு வரலாறு காணாத வெற்றியை வழங்கி நரேந்திர மோடியை பிரதமர் நாற்காலியில் அமர்த்தியுள்ளன. இந்தி பேசாத தெற்கும் கிழக்கும் இந்த சுழலில் சிக்காமல் தன்னிச்சையாக செயல்பட்டுள்ளன. இங்கே ஜெயலலிதாவும் அங்கே மம்தா, நவின் பட்நாயக் ஆகியோரும் கோட்டைக்குள் ஊடுருவல் நிகழாமல் தடுத்துள்ளனர்.

  மேற்கு வங்கத்தில் 2 இடங்களில் பிஜேபி வென்றுள்ளது. டார்ஜிலிங் வழக்கமாக திருணாமுல் காங்கிரசுக்கு தொல்லையான தொகுதி. அங்கு அலுவாலியா வென்றிருப்பதை மம்தா பின்னடைவாக்கருதவில்லை. ஆனால்,அசன்சால் தொகுதியில் 70 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் அவரது வேட்பாளர் பிஜேபியிடம் தோற்றிருப்பதில் சதி நடந்திருப்பதாக நம்புகிறார். தேர்தல் கமிஷன் மீது அவருக்கு கோபமில்லை. தனது கட்சிக்குள் உள்குத்து நடந்திருக்கலாம் என்ற சந்தேகம். விசாரணைக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். அதேபோல தமிழகத்தின் கன்னியாகுமரியில் பிஜேபியைவிட அதிமுகவுக்கு 2 லட்சம் ஓட்டுகள் குறைவாக கிடைத்து மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டதில் அரசியல் சதி நடந்திருக்கலாம் என்று அதிமுக மேலிடம் கருதுகிறது. தர்மபுரி தொகுதியின் ஓட்டு வித்தியாசமும் அதிமுகவை யோசிக்க வைத்திருக்கிறது. விசாரணையில் வில்லங்கமான உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும்போது சில தலைகள் உருளலாம்.

  பிஜேபிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் போயிருந்தால் ஜெயலலிதாவுக்கும் மம்தாவுக்கும் டெல்லியில் நிறைய வேலை இருந்திருக்கும் என்பது உண்மை. ஆனால், பிஜேபி அசுர பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துவிட்டதால் இந்த இரு தலைவர்களும் பெற்ற வெற்றி வீணாகிவிட்டது என்பது அரசியல் புரியாதவர்களின் கணிப்பு. நாடாளுமன்ற மேலவையில் பிஜேபிக்கு பலமில்லாத நிலையில், மாநிலக் கட்சிகளின் ஒத்துழைப்பு அதிகமாகவே தேவைப்படுகிறது. ஆரம்ப கட்டத்திலேயே மோடி அதை சமாளித்தாக வேண்டும்.

  மோடியின் பிரசார உத்திகள் குறித்து நிறையவே எழுதப்பட்டு விட்டது. கடைசிக் கட்டமாக தேர்தல் நடந்த உ.பி., பிகாரை வலையில் வீழ்த்த அமித் ஷா உள்ளிட்ட அவரது தளபதிகள் கையாண்ட வழிமுறைகள் தடாலடியானவை. இலக்கை எப்படியாவது எட்டிவிட துடிப்பவர்கள் தெரிந்தே துணியக்கூடிய விதிமீறல்கள் உண்டு. இலக்கை அடைந்த பின்னர் செய்யக்கூடிய நல்ல காரியங்களால் பழியை துடைத்துவிடலாம் என்ற நம்பிக்கை. பிஜேபியும் அந்த சபலத்துக்கு ஆளானது ஏமாற்றம் அளித்தாலும், இந்திய அரசியலில் இவ்வாறு நடப்பது இது முதல்முறை அல்ல.

  பிஜேபிக்கு கிடைத்திருக்கும் மகத்தான வெற்றியைவிட நாட்டில் அதிகமாக விவாதிக்கப்படுவது காங்கிரஸ் கட்சி சந்தித்திருக்கும் வரலாறு காணாத தோல்விதான். பத்தாண்டுகள் ஆட்சியில் இருந்த கட்சி பெரிதாக எதுவும் சாதிக்காவிட்டால்,மக்கள் அதற்கு ஓய்வு கொடுப்பது இயல்பானது. ஆனால், அடித்து உதைத்து .அடையாளம் காண முடியாத அளவுக்கு காயப்படுத்தி அனுப்புவது ஓய்வெடுக்க அல்ல. அது தண்டனை. கடுமையான தண்டனை. கைப்பற்றிய இடங்கள் கேவலமானதாக இருந்தாலும், கிடைத்த ஓட்டுகள் சதவீதம் ஆறுதல் அளிக்கிறது என்று சமாதானம் சொல்வது அவமானம். அந்த ஓட்டுகள் காங்கிரஸ் கட்சி மீதுள்ள நல்லெண்ணத்தில் கிடைத்தவை என்று நம்ப எந்த முகாந்திரமும் கிடையாது. பிஜேபி, கம்யூனிஸ்டுகள், ஆமாத்மி போன்ற எந்தக் கட்சியையும் நம்பத் தயாராக இல்லாதவர்கள் வேறு வழியின்றி அளித்த ஓட்டுகளாக இருக்கும். அதாவது போட்டாவுக்கு கொஞ்சம் கம்மி.

  குடும்ப அரசியல் ஆதிக்கம் செலுத்திய அத்தனை கட்சிகளுக்கும் மக்கள் இந்த தேர்தலில் மரண அடி கொடுத்திருப்பதை காங்கிரஸ் மேலிடம் கவனத்தில் கொள்ள வேண்டும். பிகாரில் லாலு பிரசாத், உத்தர பிரதேசத்தில் முலாயம் சிங், பஞ்சாபில் பாதல், தமிழகத்தில் கருணாநிதி என வரிசையாக குடும்ப உறுப்பினர்கள் வழிகாட்டுதலில் இயங்கிய கட்சிகள் எல்லாம் சொல்லிவைத்ததுபோல ஒரே தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது இதுதான் முதல்தடவை. இந்த குடும்பங்களுக்கெல்லாம் வழிகாட்டியாக விளங்கியது நேரு – இந்திரா – ராஜிவ் – சோனியா – ராகுல் வம்சம். சோனியா தலைவராக வந்தபோது, பலவீனமாக இருந்த கட்சியில் தலைமைப் பொறுப்பை ஏற்க வேறு தலைவர்கள் ஆர்வம் காட்டாததும், ஒருவரைமற்றவர் ஆதரிக்க முன்வராததும் காரணங்களாக சொல்லப்பட்டன. ஆனால் ராகுலை துணைத்தலைவராக நியமித்தபோது துதிபாடிகளின் கோஷங்களை தவிர வேறுவகையான நிர்ப்பந்தங்கள் கிடையாது.

  அதேபோல மன்மோகனை பிரதமராக்கியதற்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய காரணங்களை காங்கிரஸ் மேலிடம் சொல்ல முடிந்தது; ஆனால், அந்த பிரதமர் தன்னம்பிக்கையுடன் சுதந்திரமாக செயல்பட முடியாதது அல்ல அத்தனை முட்டுக்கட்டைகளும் போடப்பட்டதற்கு எந்த நியாயமும் கிடையாது. தேசிய ஆலோசனை குழுவின் தலைமை பொறுப்பில் அமர்ந்து அரசுக்கு வழிகாட்டியாக சோனியா செயல்பட்டதிலும் மேலோட்டமாக நியாயப்பூச்சுக்கு வழி இருந்தது. ஆனால், பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுத்து செல்ல முடியாமல் மன்மோகனுக்கு தடை போட்டதும், பகிரங்கமாக ஊழலில் ஈடுபட்ட கூட்டணிக் கட்சிகள் மற்றும் சொந்தக்கட்சி அமைச்சர்களை கண்டிக்கக்கூட இயலாதவராக பிரதமரை கட்டிப் போட்டதும் மன்னிக்கக்கூடிய குற்றமல்ல. பேச முடியாதவரை செயல்படவும் முடியாதவராக மாற்றிய பிறகு இந்திய அரசு பொம்மை அரசாக மாறிவிட்டது.

  கட்சிக்கும் ஆட்சிக்கும் வித்யாசம் காட்டுவதற்காக வரையப்பட்டிருந்த மெல்லிய கோடும் அழிக்கப்பட்ட பிறகு அரசு நிர்வாகம் என்பது கண்கட்டு வித்தையாக மாறிப்போனது. இத்தனை மாற்றங்களுக்கும் காரணமானவர்கள் யார் என்பதை வெளிப்படையாக அடையாளம் கண்டு ஒதுக்கி வைக்க அல்லது ஒதுங்கி நிற்க மேலிடத்துக்கு துணிவு வர வேண்டும். ராகுல் காந்தி இன்னும் மாணவனாகத்தான் இருக்கிறார். செமஸ்டரில் சொதப்பினாலும் கோர்ஸ் முடிக்க முடிந்தால் சரி.

  காங்கிரசுக்கும் பிஜேபிக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது என்று சொல்லிதான் ஊழல் எதிர்ப்ப்பு இயக்கத்தை ஆம் ஆத்மி பார்ட்டி என்ற பெயரில் அரசியல் கட்சியாக மாற்றினார் அரவிந்த் கெஜ்ரிவால். அரசியலின் அடிப்படை இலக்கணங்கள் என்ன, அரசியல் நியாயங்கள் என்றால் என்ன என்பதையெல்லாம் புரிந்துகொள்ள முயலாமல் ’இதோ நான் புதிய விதிகளை எழுதுகிறேன்; எல்லோரும் அதன்படி ஆட வாருங்கள்’ என்று அழைப்பு விடுத்தார். அந்த இலக்கணங்களுக்கு உயிர் கொடுக்க டெல்லி மக்கள் வாய்ப்பும் கொடுத்தனர். ஆனால் ஆணவத்தின் உச்சத்தில் அரசியல் பார்வையை இழந்த கெஜ்ரிவால், கைகொடுத்த டெல்லியை தூக்கி எறிந்துவிட்டு இந்தியாவை கைப்பற்ற ஆயத்தமானார். கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் கதையாக நாட்டுமக்களால் நிராகரிக்கப்பட்டு கூனிக்குறுகி நிற்கிறார்.

  ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு பாட்த்தை புகட்டி இருக்கிறான் இந்திய வாக்காளன். அறிவும் அதன் வழியாக உருவாகும் அடக்கமும் கொண்ட தலைவர்களால் அதை புரிந்துகொள்ள முடியும். ’வெற்றியும் தோல்வியும் அரசியலில் சகஜம், ஏனென்றால் இது ஒரு விளையாட்டு’ என்று அலட்சியமாக கூறுபவர்களை காலம் கவனித்துக் கொள்ளும்.

  (இழு தள்ளு 29 / கதிர் / 25.05.2014)
  1509273_822563767771201_2089649643210206418_nKathir Vel

   
 • Tags: , , , , , ,