ஆங்கிலமும் தமிழும் பைத்தியக்காரர்களின் மொழி


ஆங்கிலம் ஒரு பைத்தியக்காரர்களின் மொழி (English is the language of lunatics) என்று பெர்னாட்ஷா சொன்னார்.

அதை நிரூபிக்கும் முகமாக ஒரு காகிதத்தை எடுத்து GHOTI என்கிற ஆங்கில வார்த்தையை எழுதி இதைப்படி என்றார். எல்லோரும் கோட்டி என்று உச்சரித்தார்கள். ஆனால் பெர்னாட்ஷா சொன்னாராம் இதன் உச்சரிப்பு FISH என்று.

ஆங்கிலத்தில் ROUGH என்கிற வார்த்தையில் கடைசி இரண்டு எழுத்துக்கள் ஆகிய GH க்கு உங்கள் ஆங்கிலம் தரும் உச்சரிப்பு F, அதேபோல் WOMEN என்கிற வார்த்தையில் O என்கிற எழுத்து I என்கிற உச்சரிப்பைத் தருகிறது அத்துடன் STATION என்கிற வார்த்தையில் TI என்கிற எழுத்துக்கள் தரும் உச்சரிப்பு SH என்பதாகும். அப்படிப் பார்த்தால் GHOTI என்பதை FISH என்று படிக்கலாமா கூடாதா என்றும், இப்படி குழப்பம் ஏற்படுத்தும் மொழி பைத்தியக்கார மொழியா? இல்லையா? என்றும் கேட்டாராம்.

ஆங்கிலம் ஒரு பைத்தியக்காரர்களின் மொழி என்று பெர்னாட்சா சொல்லலாம். ஆனால் அவருக்கே தெரியும் எந்த மொழியிலும் ஒரு பைத்தியக்காரத்தனம் உண்டு என்று.

  • இதோ தமிழின் பைத்தியக்காரத்தனம். உண்மையில் இவை பைத்தியக்காரத்தனமா? அல்லது மிகுந்த சுவையுடையவையா என்பதை நேயர்கள்தான் முடிவு செய்யவேண்டும்.

    ஒரு புலவர் மன்னைப் புகழ்ந்து பாடினார். மன்னர் அவருக்கு நூறு ரூபாய் பரிசளிப்பதாகக் கூறி, கொண்டு வந்தார்.

    புலவர்: மன்னா, இருநூறு தருகிறேன் என்றீர்களே?. மன்னர் 200 ரூபாய் கொண்டு வந்தார்.

    புலவர்: மன்னா, முன்னூறு தருகிறேன் என்றீர்களே?. மன்னர் 300 ரூபாய் கொண்டு வந்தார்.

    புலவர்: மன்னா, நானூறு தருகிறேன் என்றீர்களே?. மன்னர் 400 ரூபாய் கொண்டு வந்தார்.

    புலவரை ஏன் இப்படி மாற்றினீர்கள் என்று கேட்டார்.

    புலவர் சொன்னார்: நீங்கள் இரு, நூறு ரூபாய் கொண்டு வருகிறேன் என்றீர்கள். அமரவே இடம் இல்லை. அதைச் சொன்னேன். உடனே, 200 ரூபாய் கொண்டு வந்தீர்கள். முன் 100தானே தருவேன் என்றீர்கள். அதைச் சொன்னேன். 300 ரூபாய் கொண்டு வந்தீர்கள். ‘நான் 100 ரூபாய் தருவேன்’ என்றீர்களே என்றேன். உடனே 400 ரூபாய் எடுத்து வந்தீர்கள். இதுதான் நடந்தது.

    மன்னர் மகிழ்ந்து, மொத்தத் தொகையான 1000 ரூபாய் கொடுத்தார்

    இதையே வேறு விதமாகவும் அழகான அருந்தமிழில் தமிழர்கள் கட்டினார்கள்

    புலவர்: ஐநூறு தரமுடியுமா ?
    மன்னன் : தருகிறேன்.

    புலவர்: அறுநூறு தரமுடியுமா?
    மன்னன்: தருகிறேன்.

    புலவர்: எழுநூறு தந்தால் நல்லது!
    மன்னன்: தருகிறேன்.

    புலவர்: எண்ணூறு மகிழ்ச்சியாக இருக்கும்.
    மன்னன்: தருகிறேன்.

    ஆனால், மன்னன் கொடுத்தது நூறு ரூபாய்தான்.

    புலவர்: ஐநூறு ரூபாய் தருகிறேன் என்றீறே?
    மன்னன்: ஐ (! ஆச்சர்யம்), நூறு தருகிறேன் என்றேன்.

    புலவர்: அறுநூறு தருகிறேன் என்றீறே?
    மன்னன்: அறு! (என்னை விட்டு விடு) நூறு தருகிறேன் என்றேன்.

    புலவர்: எழுநூறு ,தருகிறேன் என்றீறே?
    மன்னன்: எழு!(இடத்தை விட்டு) நூறு தருகிறேன் என்றேன்.

    புலவர் : எண்ணூறு தருகிறேன் என்றிறே?
    மன்னன்: எண்(ரூபாயை எண்ணுங்கள்) நூறு தருகிறேன் என்றேன்

    புலவரும், மன்னனே உங்கள் தமிழ்முன் போட்டி போட என்னால் முடியாது நூறே போதும் என்றார்.

    மன்னனும், புலவரே, யாம் தமிழுடன் விளையாடினோம். மகிழ்ந்தோம் என்று கூறி ஆயிரம் ரூபாய் கொடுத்து அனுப்பினான் .

    Source : http://anbudanbuhari.blogspot.in/

  • கன்னியரை கட்டிக்கொள்ள ஆசை!

    ஆசை ஆசை கடலோர மரக்கலராயர் கன்னியரை கட்டிக்கொள்ள ஆசை
    மாமன் வீட்டுக்கே கல்யாணம் பண்ணி குடி போயிடலாம்
    கல்யாணத்தன்றே தந்துடுவார் பெண்ணோடு சொத்தையும்
    மாமன் சாக வேண்டுமென்றும் சொத்து கிடைக்க வேண்டுமென்ற வேண்டலில்லை
    நடு நிசியில் மாப்பிள்ளை களைத்திடாமல் ‘ஜாமப்’ பணியாரமும் கொடுப்பார்
    பெண்மக்களை போடி வாடி என அழைக்காமல் மரியாதையாக அழைத்திடுவார்
    தெரியாமல் குதிரைவீரர் (இராவுத்தர்) பெண்ணை கட்டிக் கொண்டு குதியாய் குதிக்கின்றேன்
    அறியாமல் வந்த என்னை அவர் குடும்பத்தார் ஆட்டிப் படைக்கின்றார்
    கடிவாளம் போட்டு கட்டிப் போட்டார்
    கிடைத்த பணமும் சேமித்த சொத்தும் குதிரைப் பெண்ணை பராமரிக்கவே போயிற்று
    ஆடியோடி நிக்கயிலே ஆசை அடங்கவில்லை
    கடலோரம் போய் கட்டிக் கொள்ள கொள்ளை ஆசை

    மரம்+கலம்+ராயர் – மரத்தால் செய்யப்பட்ட கலம்(கப்பல்)உரிமையாளர் என்பதே மரக்கலராயர் என்பதாகும். இது மருவியே மரக்காயர் ஆனது.
    (இராவுத்தர்=குதிரை ஒட்டி வணிகம் செய்தவர்)

    கவிதையோடு கலந்த ராகம்.
    watch?v=DqYkO9yd6BE&list=FLoabIjVbkTBBMUQ4hGHrCMQ&index=7&feature=plpp_video
    Beauty Tips for My Sisters in Islam
    Rymes of Praise wedding song

    ஏதுண்டு உம்மிடத்தில் என்பார்?


    ஏதுண்டு உம்மிடத்தில் என்பார்?
    வேதமுண்டு எம்மிடத்தில் என்போம்
    வேதத்தை உம்மனத்தில் நிறுத்தினாயா என்பார்?

    பேதைமை எம் மனதில் ஊன்றியதால் பொருள் விளங்காமல் போயிற்று
    சேதம் வராமல் சேர்த்து வைத்தேன்
    கல்லாமை கல் நெஞ்சம் உருவாகியது
    சேதமின்றி பொருளறிந்து பெற்ற வேத அறிவு விளக்கம் கொடுத்தது
    கல் நெஞ்சம் கருகி மேன்மையை அடைத்த உள்ளம் ஒளி வீச உணர்கின்றேன்

    ஒற்றுமையில் சிக்குண்டி நம்மில் நாமே மோதுண்டோம் கல் நெஞ்சம்
    ஒற்றுமையின் உயர்வை வேதம் காட்ட சிக்கல் அவிழ்ந்தது
    புல்லுரிவிகள் புகழ் நாடி .பணம் நாடி நம்மை பிரித்தாளும் சக்தியை முறியடித்தோம்
    வேதம் அறிந்து கல்விகற்று களையடுக்க வேண்டும்
    அயலானின் ஆற்றலால் நம்மாற்றல் வீழ்ந்திடுமோ!
    செயலானின் ஆற்றல் ஓய்ந்த்திடுமோ !
    அறிவின் ஆக்கம் அனைத்தையும் வெல்லும்.
    “சீன தேசம் சென்றாயினும் சீர் கல்வியை நாடு” என நபி மொழி இருக்க
    நமக்குள்ளே ஒளிந்திருக்கும் ஆற்றல் ஒளியாய் வீச மற்றவர் நம் வழி நாடுவார்

    ஒதுவோம் பொருள் அறிந்து ஓதுவோம்
    ஓதிய வழியே வாழ்ந்து மறை ஒளி மிளிரச் செய்வோம்
    இறைவன் காட்டிய வழி வாழ்வின் நன்னெறி
    இறைவனைத் தொழுது நிறைவு கொள்வோம்

    கடலோர முஸ்லிம் வீட்டுக் கல்யாணம்

    ஊரலசி உறவலசி
    உண்மையான நட்பலசி
    பாரலசிப் பார்த்துவொரு
    பசுங்கிளியக் கண்டெடுத்து

    வேரலசி விழுதலசி
    வெளியெங்கும் கேட்டலசி
    ஆறேழு உறவோடு
    அணிவகுப்பார் பெண்பார்க்க

    மூடிவச்ச முக்காடு
    முழுநிலவோ தெரியாது
    தேடிவந்த ஆண்விழிக்கு
    தரிசனமும் கிடையாது

    ஆடியோடி நிக்கயிலே
    ஆளரவம் காட்டாமல்
    ஓடிப்போய் பாத்தாலோ
    உதைபடவும் வழியுண்டு

    பாத்துவந்த பெரியம்மா
    பழகிவந்த தங்கச்சி
    நூத்தியொரு முறைகேட்டா
    நல்லழகுப் பெண்ணென்பார்

    ஆத்தோரம் அல்லாடும்
    அலைபோல தவிச்சாலும்
    மூத்தவங்க முடிவெடுத்தா
    முடியாது மாத்திவைக்க

    நாளெல்லாம் பேசிடுவார்
    நாளொன்றும் குறித்திடுவார்
    தோளோடு தோள்சேர
    பரிசந்தான் போட்டிடுவார்

    ஆளுக்கொரு மோதிரமாய்
    அச்சாரம் அரங்கேறும்
    மூளும்பகை வந்தாலும்
    மாறாது வாக்குத்தரம்

    முதல்நாள் மருதாணி
    முகங்கள் மத்தாப்ப்பு
    பதமாய் அரைத்தெடுத்த
    பச்சையிலைத் தேனமுதை

    இதமாய்க் கைகளிலே
    இடுவார் இருவருக்கும்
    உதடுகள் ஊற்றெடுக்க
    ஊட்டுவார் சர்க்கரையை

    மணநாள் மலருகையில்
    மாப்பிளை ஊர்வலந்தான்
    குணமகள் வீடுநோக்கி
    மணமகன் செல்லுகையில்

    அனைவரும் வாழ்த்திடுவர்
    அகங்களில் பூத்திடுவர்
    புதுமணப் பெண்ணவளோ
    புரையேறித் சிரித்திடுவாள்

    வட்ட நிலவெடுத்து
    வடுக்கள் அகற்றிவிட்டு
    இட்ட மேடைதனில்
    இளமுகில் பாய்போட்டு

  • மொட்டு மல்லிமலர்
    மொத்தமாய் அள்ளிவந்து
    கொட்டி அலங்கரித்தக்
    குளுகுளுப் பந்தலிலே

    சுற்றிலும் பெரியவர்கள்
    சொந்தங்கள் நண்பர்கள்
    சிற்றோடை சலசலப்பு
    செவியோரம் கூத்தாட

    வற்றாத புன்னகையும்
    வழிந்தோடும் பெருமிதமும்
    உற்றாரின் மத்தியிலே
    உட்கார்வார் மாப்பிள்ளை

    உண்பதை வாய்மறுக்க
    உறக்கத்தை விழிமறுக்க
    எண்சான் உடலினுள்ளே
    எல்லாமும் துடிதுடிக்க

    கண்களில் அச்சங்கூட
    கருத்தினை ஆசைமூட
    பெண்ணவளும் வேறிடத்தில்
    பொன்னெனச் சிவந்திருக்க

    சின்னக் கரம்பற்றச்
    சம்மதமா மணமகனே
    மன்னன் கரம்பிடிக்க
    மறுப்புண்டோ மணமகளே

    என்றே இருவரையும்
    எல்லோரும் அறியும்படி
    நன்றாய்க் கேட்டிடுவார்
    நடுவரான பெரியவரும்

    சம்மதம் சம்மதமென
    சிலிர்த்தச் சிறுகுரலில்
    ஒப்புதல் தந்துவிட்டு
    ஊரேட்டில் ஒப்பமிட

    முக்கியப் பெரியோரும்
    முன்வந்து சாட்சியிட
    அப்போதே அறிவிப்பார்
    தம்பதிகள் இவரென்று

    சந்தோசம் விண்முட்டும்
    சொந்தங்கள் இனிப்பூட்டும்
    வந்தாடும் வசந்தங்கள்
    வாழ்த்துக்கள் கூறிநிற்கும்

    முந்தானை எடுத்துமெல்ல
    முந்திவரும் கண்ணீரைச்
    சிந்தாமல் துடைத்துவிட்டு
    சிரிப்பாளே பெண்ணின்தாய்

    கவிஞர் அன்புடன் புகாரி

    http://anbudanislam2012.blogspot.ca/2012/10/blog-post_23.html

    தங்கச்சி நீ கொஞ்சம் படிச்சிக்கோ!

  • சீனா பயண அனுபவம்!

    பயண அனுபவம் – சீனா !

    இந்தியாவில் கல்வி பயில வேண்டும் !
    அமெரிக்காவில் பொருளாதாரம் ஈட்ட வேண்டும் !!
    சீன உணவுகளை சாப்பிட வேண்டும் !!!
    இங்கிலாந்தில் வசிக்க வேண்டும் !!!

    என்பது பழமொழி !

    பல்வேறுபட்ட இனங்களைக் கொண்ட சீனா தேசம். தெற்குப் பகுதி , வடக்கு பகுதி என இரண்டு வகைகளாக பிரிக்கப்பட்டு முறையே “ கேன்டனிஷ் ” மற்றும் “ மேன்ட்ரின் ” என இரு வகை மொழிகள் பேசப்படுகிறது. பல்வேறு மகாணங்களைக் கொண்ட சீன தேசத்தில், என் பயணம் தென் சீனாவில் அமைந்துள்ள தொழிற் நகரம், வரலாற்று நகரம் சுற்றுலா தலம் என பல்வேறு சிறப்புகளைப் பெற்ற “ குவாங்சோ “ ( Guangzhou ) என்ற மகாணத்திற்க்கு……….

    பல முறைகள் சீனா சென்றுள்ள நான், எனது முதல் பயணத்தின் சில அனுபவங்கள் இதோ…………………

    நேரம் : மாலைப்பொழுது
    இடம் : துபாய் இன்டர்நேஷனல் ஏர்போர்ட்நான் காரிலிருந்து இறங்கியவுடன், கை குலுக்கி வாழ்த்து தெரிவித்து விடைபெற்றுக்கொண்டு புறப்பட தயாராகிறார் என்னுடன் பணி புரியும் என் லிபிய நண்பர்……

    நேராக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் போர்டிங் கவுண்டருக்கு சென்று என்னுடைய பிசினஸ் கிளாஸ் டிக்கெட்டையும், எனது பாஸ்போர்ட்டையும் கொடுத்து, “ ஹலால் உணவு “ மற்றும் “ ஜன்னல் ஓர சீட் “ போன்ற வேண்டுகோளுடன் இரண்டு போர்டிங் பாஸ்களையும் ( ஓன்று துபாய் – சிங்கப்பூர், மற்றொன்று சிங்கப்பூர் – குவாங்சோ ) பெற்றுக்கொண்டேன்.

  • அடுத்ததாக இமிக்கிரேஷன், நடைமுறை பணிகளை அக்கவுண்டரில் முடித்துக்கொண்டு விமானம் புறப்படகூடிய அருகில் உள்ள ஓய்வு அறையில் சிறிது நேரத்தை போக்கினேன்.

    அப்பொழுது எனது நினைவுகள் பின்னோக்கி சென்றது……………….டேய் மாப்ளே அங்கே சாப்பாடு ஹலாலாக் கிடைக்காது, சைனிஸ்காரன் இங்கிலீஷ் பேச மாட்டான், லொகேஷன் ப்ராப்ளமா இருக்கும் பாரேன்….என்று என்னை பயமுறுத்திய எனது நண்பர்களின் சொற்க்கள் என் நினைவில் ஓடிக் கொண்டிருந்தது.

    மேலும் பதினைந்து மணி நேரப் பயணமாக இருப்பதால் , எனக்கு பெரிய சலிப்பாகவே இருந்தது.

    விமானம் புறப்பட தயாராவதை ஒலி பெருக்கியில் அறிவித்தவுடன், நேராக எனக்காக ஒதுக்கப்பட்ட சீட்டில் போய் அமர்ந்தேன்.
    விமானம் சிறிது நேரத்தில் சிங்கப்பூர் நோக்கி புறப்பட்டது. சுமார் எழு மணிநேரம் முப்பது நிமிடப் பயணம்………………..

    நேரம் : அதிகாலைப்பொழுது
    இடம் : செங்கி இன்டர்நேஷனல் ஏர்போர்ட், சிங்கப்பூர்
    விமானத்திலிருந்து இறங்கியவுடன் நேராக அருகில் உள்ள அறிவிப்பு பலகையில் “ குவாங்சோ “ செல்லக்கூடிய விமானம் நிறுத்தி வைத்திருக்கிற வாசலின் ( GATE NO. ) எண்னை தெரிந்து வைத்துக்கொண்டேன். காரணம் சில மணி நேரங்களில் அடுத்த விமானத்தில் பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழலால்…………..

    தமிழ் அங்கே ஆட்சி மொழியாக இருப்பதால், அங்காங்கே தமிழில் எழுதிய அறிவிப்புகளை கண்டு வியந்தேன். அதேபோல் சுத்தம் ! ( அதான் நம்மூரூ பேரூராட்சி தலைவரு சுத்தத்திற்கு எடுத்துக்காட்ட சிங்கப்பூரைச் சொன்னாரோ ? என்னவோ ! ) ஏர்போர்ட் முழுவதும் சுத்தமாகவும், பாரம்பரிய கலை நயத்துடன் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சுத்தமான நாடு என்று சொல்லக்கூடிய நாடுகளில் குறிப்பிடத்தக்க நாடாக சிங்கப்பூர் விளங்குகிறது.

    விமானம் சிறிது நேரத்தில் குவாங்சோ நோக்கி புறப்பட்டது. சுமார் நான்கு மணிநேரம் சில மணி துளிகள் பயணம்………………..

    விமானத்தில் இரண்டு விண்ணப்ப படிவங்கள் கொடுக்கப்பட்டது. ஓன்று உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்டது. மற்றொன்று இமிக்கிரேஷன் நடைமுறை பணிகளுக்காக. கிடைக்ககூடிய நேரங்களில் நம்மைப்பற்றிய தகவல்களை அதில் கேட்ட இடங்களில் பூர்த்தி செய்துகொண்டேன்.

    அடுத்த சில மணி நேரங்களில் விமானம் தரை இறங்கியது ஒரே பணிமூட்டம் போல் காட்சியளித்தது. சராசரியான வெப்பநிலைகளுடன் கூடிய அந்நகரில் இதுவரையில் ஒரு முறைக்கூட சூரியனை நான் பார்த்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. காரணம் சூரியனை எப்பொழுதும் ஒரு வகை வெள்ளை நிறத்துடன் கூடிய மேகங்கள் சூழ்ந்துகொண்டு மறைத்துவிடுவதுதான்.

    நேரம் : பகல்
    இடம் : பையூன் இன்டர்நேஷனல் ஏர்போர்ட், குவாங்சோ, சீனா
    விமானத்தில் இருந்து இறங்கி நேராக இமிக்கிரேஷன் நடைமுறை பணிகளை முடிப்பதற்க்காக கவுண்டரை நோக்கி பயணமானேன். இடையில் சைனீஸ் போலீசார்கள் ஆங்காங்கே செக்கிங் செய்து கொண்டுருந்தார்கள். அவர்கள் தோற்றத்தில் ஒரே அமைப்பிலும், முகத்தில் சிரிப்பு என்பதையே காணமுடியவில்லை. நம்ம ஊர் “சிரிப்பு” போலீஸ்கள் போல் “ மாமூலாக ” இல்லை அவர்கள். ஆனால் அவர்களின் கண்காணிப்பு “ கழுகு “ பார்வையாக இருந்தது குறிப்பிடதக்கது.

    நமது உடல் ஆரோக்கியம் சம்பந்தமாக ஏற்கனவே பூர்த்தி செய்து வைத்திருந்த விண்ணப்ப படிவத்தினை அருகில் உள்ள கவுண்டரில் கொடுத்து விட்டு செல்ல வேண்டும். அங்கே இமிக்கிரேஷன் கவுண்டர்களை இரண்டு வகைகளில் பிரித்து வைத்துள்ளார்கள். ஓன்று உள்நாட்டு பயணிகளுக்காக சில கவுண்டர்களும், மற்றொன்று வெளிநாடுகளில் இருந்து வருகிற பயணிகளுக்காக சில கவுண்டர்களும் என்று.

    நடைமுறை பணிகளை முடித்துக்கொண்டு எனது லக்கேஜ்களை தேடி எடுத்துக்கொண்டு ஏர்போர்ட்டை விட்டு வெளியே வந்தேன்.

    எனக்காக ஏர்போர்ட் வெளியில் கையில் பெயர் பலகையுடன் எனது பெயரை “ நஜ்மி “ என்று அதில் எழுதி வைத்துக்கொண்டு ( சீனர்கள் எனது பெயரை “ நஜ்மி “ என்றே அழைப்பார்கள் ) காத்துருந்தான் என் சைனீஸ் நண்பன் “ ஜேம்ஸ் “ அவனது சீனப் பெயர் “ வு ஜியாவ் பாவ் “ !

    என்ன சகோதரர்களே, வாயில் நுழைய மாட்டேன்ங்குதா……….! இங்கே அலுவலங்களில் பணிபுரியக்கூடிய ஒவ்வொரு சீனர்களும் தங்களுக்கு இரண்டு பெயர்களை வைத்துள்ளனர். ஓன்று சீனப் பெயர், இப்பெயர்களுடன் அவர்களின் குடும்ப இனத்தை அதாவது “ யோ, ஹுய், யீ, ஹேச்சே, துங், மஞ்சு, தை, மியாவ், பூயீ, காவ்ஷான், எலுன்ஸுன், டாங், பாவ், வூ, ஜோவ் இப்படி பல பெயர்களையும் “ அதில் இணைத்துருப்பார்கள். மற்றொன்று இங்கிலீஷ் பெயர், இவை தங்களின் வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் அழைப்பதற்கு இலகுவாக தங்களின் தொழிற்பெயராக கூடுதலாக இணைத்துக்கொள்வார்கள்.

    Canton Fair – அனுபவம், சீன உணவு முறைகள், தொழிற்சாலைகள் – பயணம், குவாங்சோ மஸ்ஜித் – ஜும்மா தொழுகை போன்ற எனது அனுபங்களைப்பற்றி வருகின்ற வாரங்களில் பார்ப்போம் ( இன்ஷாஅல்லாஹ் ! )

    இறைவன் நாடினால் ! தொடரும்…………………

    http://www.nijampage.blogspot.in/2012/01/blog-post_15.html

  • அம்மா உன்னை நேசிக்கிறேன்….

    இந்த உலகில் எத்தனையோ உறவுகள் பேனப்படுகின்றன. உறவுகளின் பின்னளில்தான் நமது வாழ்வு முறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூவுலகில் எத்தனையோ உறவுகள் பேனப்பட்டாலும், நேசிக்கப்பட்டாலும் அதில் ஏதோ ஒரு ஆதாயம் நேசிப்பவருக்கும், நேசிக்கப்படுபவருக்கும் இயற்க்கையாகவே இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இந்த உலகில் எந்த எதிப்பார்ப்பும் இல்லாமல், உள்ளார்ந்த அன்பின் வெளிப்பாடாய் இருப்பது ஒரு தாய் தன் சேய் மீது காட்டும் அன்பு.
    இன்று இந்த அன்பிற்க்காக ஏங்கும் பலரைப் பார்க்க முடிகின்ற இவ்வேளையில், இந்த அன்பு கிடைக்கப் பெற்றும் நம்மில் எத்தனைப்பேர் நமது தாயை நேசித்து இருக்கிறோம்..?ஆங்கிலத்தில் ஒரு தத்துவமுண்டு (Father is a Faith but Mother is a Fact) அதாவது தந்தை என்பது ஒரு நம்பிக்கை அடிப்படையிலான விடயம். நமது தாய் சொன்னால்தான் தந்தை யார்ரென்பது நமக்கே தெரியும். ஆனால் தாய் என்பது ஒரு நிதர்சனமான உண்மை. தாய்க்கும், சேய்க்கும் இயற்க்கையாகவே ஒரு பினைப்பு இருக்கிறது. இந்த வேளையிலே நான் என் தாயை நினைத்துப் பார்கிறேன். அவள் எனக்காகப் பட்ட துன்பங்களையும், ஏற்றுக் கொண்ட தியாகங்களையும் என் விழியில் நிழலாடுகின்றது.

  • எத்தனை முறையோ நான் பள்ளிக்கு போக ஆரம்பித்த நாட்களில் கேள்விக் கனைகளால் துளைத்து எடுத்திருக்கிறேன். அப்போதெல்லாம் ஒவ்வொரு முறையும் சலிப்படையாமல் என் உச்சி முகர்ந்து முத்தமிட்ட்டு எனக்கு விடையளிப்பாள், அப்போது அவளிம் ஸ்பரிசம் எனக்கு விளங்கவில்லை. கடையில் பார்க்கும் பொருட்கள் அனைத்தும் வேண்டும் என்று அங்கேயே கதறி அடம் பிடிப்பேன், தன்க்கென்று எதுவும் சேர்க்காத தாய் என் தந்தையனுப்பும் சிறு தொகையில் எங்கள் குடுப்பத்தையும் கவனித்து அதில் சேமிக்கும் சிறு தொகையை நான் கேட்டு அடம்பிடிக்கும் பொருளுக்காக சிலவளிப்பாள் எங்கள் வீட்டின் பொருளாதார மேதை. அப்போதும் கூட கேட்ட பொருல் கிடைத்த மகிழ்ச்சித்தான் என்னை சுற்றிக்
    கொண்டதே தவிற என் தாயின் உள்ளார்ந்த அன்பு விளங்கவில்லை.

    தென்மேற்க்கு பருவ மழையும், தென்கிழக்கு பருவமழையும் கோரத்தாண்டவமாடும் மழைக்காலங்களில் என் தாயோடு பயனித்திருக்கிறேன். அந்த மழையின் கடுமையில் மாட்டிக் கொள்ளும் தருவாயில் நான் நனைத்துவிடக் கூடாது என்பதற்காக அவள் போர்த்தியிருக்கும் முக்காட்டை எனக்குப் போர்தி, தனது குஞ்சுகளை அடைகாக்கும் கோழியைப் போல என்னை காத்து நின்று எனக்கு வரவேண்டிய ஜீரத்தையும், ஜலதோஷத்தையும் அவள் ஏற்றுக் கொண்டு அவதிப்படுவாள். அப்போது கூட மழையில்
    தப்பித்த ஆனந்தம்தான் மேலோங்கியதே தவிர எனக்காக துன்பத்தை ஏற்ற அந்த கருணையின் வடிவம் தெரியவில்லை.

    ஆண்டுகள் கழிந்தன நானும் பெரியவனானேன். நண்பர்கள் வட்டாரமும் அதிகரித்தது. நாடோடிப்போல ஊர் சுற்றுவது. இரவு நேரக்காட்சி சினிமாக் காட்சிப் பார்து விட்டு இரவு நடுநிசியில் தந்தையின் ஏசலுக்கு பயந்து பயந்து கதவைத் தட்டும்போது எனக்காக கண்னுறங்காமல் காத்திருந்து கதவைத் திறப்பாள். அப்போது கூட தந்தையின் ஏசலிலிருந்து தப்பித்த பெருமூச்சுத்தான் வந்தததே தவிர என்னை ஒரு போர் வீரன்போல் காத்த என் அன்னையின் வீரம் விளங்கவில்லை.

    வந்தது என் கல்லூரி நாட்கள் ஊரைவிட்டு, என் குடும்பத்தை பிரிய நேறும் வேளை. இதுவரை என்னை நிமிடம் கூட பிரியாமல் என்னையே சுற்றிக் கொண்டிருந்த என் அன்னையின் கண்கள் குழமாகியது அதைக்கூட புரிந்துக் கொள்ள முடியா வண்ணம் கல்லூரிக் கனவுகள் என் கண்னை மறைத்துவிட்டது. கல்லூரியில் படிக்கும் நாட்களில் என் அம்மா தினந்தோறும் போன் போட்டு பேசுவாள்… “ தங்கம், ராஜா, என் கண்மனி எப்படிப்பா இருக்கே…. சாப்டியா..? உடம்பு நல்லா இருக்காமா…? ரோட்ல நறையா வண்டிகள் வரும் பாத்துப் போடி ராஜா…. சிலவுக்கு பணம் இருக்கா…??? “ இப்படி கணிவின் முகவரியாய் என் தாய்.. நானோ.. “ இருக்கேம்மா….. எரிச்சல் பட்டுக் கொண்டு….. சரி.. சரி.. பணம் மட்டும் பேங்க்ல போட்டு விடுங்க… அப்புறம் பேசுறேன்…” என்று வெடுகெண்டு போனை கட் செய்யும்போது, பணத்தின் வருகைக்காகத்தான் மனம் காத்திருந்ததே தவிர என் அன்னையின் உள்ளார்ந்த அன்பு தெரியவில்லை.

    ஆண்டுகள் கடந்தது… கல்லூரியையும் முடித்தேன்… எல்லோருக்கும் இடமலித்த வளைகுடா.. என்னையும் ஆரத்தழுவி அனைத்தது…. அப்போதுதான் நான் மனிதனாக ஆனேன்.. இந்த பாலைவனப் பிரதேசம் என்னுள் தேங்கிக் கிடந்த பாச ஊற்றுகளை வெளிக்கொனர்ந்தது.. நல்ல சோற்றுக்கு அலைந்து திரியும் போது தான் என் அன்னை பாசத்துடன் ஊட்டிவிட்ட உணவின் சுவைத் தெரிந்தது.

    கடும் குளிரில் இங்கு நடுநடுங்கி படுக்கும்போதுதான் என்னை போர்த்தி விட்டு என்னைத் தாலாட்டிய என் அன்னையின் ஸ்பரிசம் தெரிந்தது. நோய்வாய் பட்டு கவனிக்க நாதியில்லாமல் இங்கு கிடக்கும் போதுதான் என் அன்னையின் அரவனைப்பின் ஆழம் தெரிந்தது… இப்படி பல பல நிகழ்வுகளில் என் அன்னையின் அரவனைப்பை இந்த வெந்த மணலில் நினைத்து நினைத்து ஏங்கியிருக்கிறேன்…

    என்னுள் பல மாற்றங்களை ஏற்படுத்திய என் இன்றும் கிஞ்சிற்றுக்கூட மாறாமல் அதே அன்போடு என்னை ஆரத் தழுவுகிறாள் தன்னுடைய பேச்சுக்களால். அதே விசாரிப்புகளோடு என் அன்னையின் தொலைப்பேசி அழைப்பு.. அதே நேசிப்பின் வார்த்தைகள் அவளிடத்தில்… நெஞ்சை அடைக்கும் அழுகையில் கண்கள் கண்ணீரைத் வெளிக்கொணற “ அம்மா உன்னை நேசிக்கிறேன் “ என்று சொல்ல வார்த்தை வராமல்… கண்ணீர் தோய்ந்த கண்களோடு இறுக்கி கட்டி அனைக்கிறேன் தொலைப்பேசியை….

    -லால்தமிழன்
    http://www.nidurneivasal.org/

    அம்மா என்றழைக்காத உயிரில்லையே.