(HTML) டாகுமெண்ட் என்றால் என்ன?

[Amazing HTML -- welcome]எச்.டி.எம்.எல். (HTML) டாகுமெண்ட் என்றால் என்ன?

பதில்: சுருக்கமாகச் சொல்வதென்றால் அது ஓர் வெப் பேஜ் என்று சொல்லப்படும் இணைய தளம் ஆகும். வெப்பேஜ் என்பது இன்னொரு வகையான டாகுமெண்ட் . இந்த டாகுமெண்ட் ஒரு குறிப்பிட்ட வகையில் உங்கள் வெப் பிரவுசர் படித்து உணரும்படி எழுதப்பட்டிருக்கும். எச்.டி.எம்.எல். (HTML) என்பதனை விரித்தால் Hyper Text Markup Language என வரும்.

தொழில்நுட்ப ரீதியில் சொல்வதென்றால் இது வெப் பக்கங்களுக்கான புரோகிராமிங் மொழி என்று கூட கூறலாம். (உண்மையில் இது புரோகிராமிங் மொழி அல்ல.) இது எப்படித்தான் எழுதப்படுகிறது என நீங்கள் பார்க்க விரும்பினால் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரைத் திறந்து உங்களுக்குப் பிடித்த இணைய தளப் பக்கத்தைத் திறந்து கொள்ளுங்கள். பின் பிரவுசரில் View மெனுவைத் திறந்து கொள்ளுங்கள். அதன் பின்னர் Source or View Source என்பதனைக் கிளிக் செய்து பார்த்தால் அந்த பக்கம் எப்படி எழுதப்பட்டிருக்கிறது என்பதனை உணர்ந்து கொள்ளலாம்.

உங்களால் இதைப் போல எழுத முடியவில்லை என்றால் வேர்டில் எழுதப்பட்ட டாகுமெண்ட்டை Save as a HTML Document எனக் கிளிக் செய்தால் அந்த பக்கம் எச்.டி.எம்.எல். பக்கமாக சேவ் செய்யப்படும்.

தகவல்: அபூ ஸாலிஹா
http://www.satyamargam.com/articles/tech-sci/tech/41-0041.html

தன்னம்பிக்கை கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி !

1380053_656564551029607_2063540999_nவாழ்க்கை வசந்தமாகும் !

வெற்றி சில நிமிடங்களில் கிட்டிட
வாழ்க்கை திரைப்படம் அன்று !
பயிற்சி செய் ! முயற்சி செய் !
தோல்வி கிடைத்தால்
காரணத்தை ஆராய்ந்தால்
அடுத்தப் போட்டியில்
அதனைத் தவிர்த்திடு !
வெற்றி வசமாகும் !
வாழ்க்கை வசந்தமாகும் !

நினைத்தது கிட்டும் !
என்னால் முடியும் !
என்றே முயன்றால் !
முயன்றது முடியும் !
என்னால் முடியாது !
என்றே நினைத்தால் !
முயன்றது முடியாது !
யாரை நீ நம்பாவிட்டாலும் !
உன்னை நீ நம்பு !
நினைத்தது கிட்டும் !

  • இனிதே பயன்படுத்து !
    பொழுதைப் போக்குவதல்ல
    பொன்னான வாழ்க்கை !
    பொழுதைத் திட்டமிடு !
    பழுது நீங்கும் !
    ஒவ்வொரு வினாடியும்
    ஒவ்வொரு வைரம் !
    போன பொழுது
    திரும்ப வராது !
    இருக்கும் பொழுதை
    இனிதே பயன்படுத்து !

    நெஞ்சில் நிறுத்து !
    வென்றவர்களின் வரலாறு படித்திடு !
    வென்று நீயும் வரலாறு படைத்திடு !
    சாதித்தவர்களின் சாதனை அறிந்திடு !
    சாதித்து சாதனை புரிந்திடு !
    உண்டு உறங்கி வாழ்வதல்ல வாழ்க்கை !
    கண்டு இறங்கி சாதித்து வாழ்ந்திடு !
    எதிர்மறை சிந்தனைகளை
    அகராதியிலிருந்து அகற்று !
    நேர் மறை சிந்தனைகளை
    நெஞ்சில் நிறுத்து !

    வெற்றி வசமாகும் !
    வெந்த சோறு தின்று !
    விதி வந்தால் சாவேன் !
    என்று சொல்வதை நிறுத்து !
    மதியால் சாதித்து வாழ் !
    மண்ணுலகம் போற்றிட வாழ் !
    சராசரியாக காலம் கழிக்காதே !
    சாதிக்கப் பிறந்தவன் நீ !
    வித்தியாசமாக சிந்தித்து !
    விவேகமாக செயல்படு !
    வெற்றி வசமாகும் !

    உலகம் வரவேற்கும் !
    தாழ்வு மனப்பான்மை உன்னை
    தாழ்த்தி விடும் !
    உயர்வாக எண்ணு ! உன்னை நீ
    உயர்வாக எண்ணு !
    உன்னுள் திறமைகள்
    ஓராயிரம் உண்டு !
    இருக்கும் திறமைகளை
    இனிதே பயன்படுத்து !
    உன்னை என்றும்
    உலகம் வரவேற்கும் !
    – கவிஞர் இரா .இரவி !
    ——————————————————————

    திறந்தே இருக்கும் !

    வாய்ப்பு உன் வாசல் வந்து
    கதவைத் தட்டுமென்று காத்திருந்து
    பொன்னான பொழுதை வீணாக்காதே !
    வாய்ப்பு எனும் வாசல் தேடி
    நீ சென்றால் கதவைத் தட்ட வேண்டாம் !
    திறந்தே இருக்கும் !

    ———————————————————————

    மன நிலையைப் பெற்றிடு !

    ஒரே ஒரு முறை முயற்சி செய்து விட்டு
    தோற்றதும் துவண்டிடும் மன நிலை விடு !
    வெற்றி கிட்டும்வரை முயற்சி செய்யும்
    மன நிலையைப் பெற்றிடு !

    கவிஞர் இரா .இரவி !
    1011455_618947788124617_212516009_n

    இரா.இரவி தமிழகக் கவிஞர். இவரது கவிதைகள் முழுவதையும் கவிமலர் என்ற இணையதளத்தில் பதிப்பித்து உள்ளார். இந்த இணையத்தில் கவிதைகள், ஹைக்கூ (குறுங்கவிதைகள்), நகைச்சுவைத் துணுக்குகள், இலக்கிய விழா புகைப்படங்கள், விருந்தினர் புத்தகம், ஆங்கிலத்தில் ஹைக்கூ கவிதைகள் என பல்வேறு பகுதிகள் இடம் பெற்றுள்ளன. மதுரையில் சுற்றுலாத் துறையில் பணி புரிந்து வருகிறார்.

    வெளிவந்த நூல
    கவிதைச் சாரல் 1997
    ஹைக்கூ கவிதைகள் 1998
    விழிகளில் ஹைக்கூ 2003
    உள்ளத்தில் ஹைக்கூ 2004
    என்னவள் 2005
    நெஞ்சத்தில் ஹைக்கூ 2005
    கவிதை அல்ல விதை 2007
    இதயத்தில் ஹைக்கூ 2007

    சிறப்புக்கள்

    26-01-92 குடியரசு தின விழாவில் சிறந்த அரசுப் பணியாளர்களுக்கான விருதினை மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடமிருந்து பெற்றுள்ளார்.
    .
    இலண்டன் சுடரொளி வெளியீட்டுக் கழகம் உலக அளவில் நடத்திய இரண்டு கவிதைப் போட்டிகளில் பரிசு பெற்றுள்ளார்
    .
    இவரது சில ஹைக்கூ கவிதைகள் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பாட நூலில் இடம் பெற்றுள்ளது
    .
    சிறந்த நூலிற்கான பரிசினை புதுவை துணைவேந்தரிடமிருந்து பெற்றுள்ளார்.
    .
    இவரது 100க்கும் மேற்பட்ட ஹைக்கூ கவிதைகளை விஞ்ஞானி நெல்லை சு. முத்து “புத்தாயிரம் “தமிழ் ஹைக்கூ என்ற நூலில் மேற்கோள் காட்டி உள்ளார்.
    இவரது இணையத்தளக் கவிதைகளை சென்னை இலயோலா கல்லூரி மாணவர் இரவிக்குமார் ஆய்வு செய்து ஆய்வேடு சமர்ப்பித்துள்ளார்.
    .
    தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அறிவியல் தமிழ்த்துறை மாணவர் அன்பு ஷிவா இவரது கவிதைகளை ஆய்வு செய்து வருகிறார்
    .
    கவிஞர் இரா.இரவியின் கவிதை நூல்களை மாற்றுத்திறனாளி திரு.பிரகாசம் M Phil. ஆய்வு செய்து வருகிறார்.

  • துபாய் நிலா வெளிச்சத்தில்

    பாதுகாப்பு (கவிதை)
    hijab
    துபாய் நிலா வெளிச்சத்தில்
    நள்ளிரவில்
    துணையின்றி
    பூச்சிகளின் ஒலிகளுக்கு நடுவே
    மூடிய கடைகளை பார்த்தபடி

    எங்கோ கேட்கும்
    வாகன சத்தத்தை உணர்ந்தபடி
    தெரு விளக்கின்
    பிரகாசத்தை இரசித்தப்படி

    சுத்தமான அகல தெருவில்
    நிமிர்ந்த நடையுடனும்
    நேர் கொண்ட பார்வையுடனும்
    காசு நிறைந்த கைப்பையுடனும்

    விலைமதிப்புள்ள பொருட்களுடனும்
    விலைமதிப்பில்லா கற்புடனும்
    சின்ன சீண்டலுக்கும் கிண்டலுக்கும்
    சிக்காமல் வீடு திரும்பும்போது
    ஆதங்கம் தொட்டது எப்போது விடியும்
    என் தேசம் இப்படியென்று!

    திருமதி. ஜெஸிலா ரியாஜ், துபாய் (நன்றி: திசைகள் இதழ்)

    நன்றி: http://www.satyamargam.com/articles/arts/lyrics/16-0016.html

    அதிரை சித்திக்கின் ‘வளைகுடா வாழ்க்கை’ [ உழைப்பால் உயர்ந்தவன்] [ பகுதி 7]

    adirai news-foreign workersஅரபியிடம் சேவை புரிபவர்கள் பொறுமையாக கனிவான சேவை செய்து அவர் தம் அன்பை பெற்று வாழ்வில் பெரும் முன்னேற்றம் அடைந்தவர்கள் பலர் உண்டு. அதில் நான் கண்ட நிகழ்வை இங்கு பதிய விரும்புகிறேன்.

    அரபு நாடுகளில் கிளீனிங் கம்பெனி அதிக மாக உள்ளது. பெரிய நிறுவனங்களுக்கு ஆபீஸ் பாய் மற்றும் உதவியாளர் போன்ற சேவைகளும் உபரியாக செய்யும். உயர் பதவிகளில் உள்ள அரபிகளுக்கு நேரடி தொடர்புகள் உதவியாளர் மற்றும் ஆபிஸ்பாய் களுக்கு மட்டுமே.!

    இது போன்ற சந்தர்பங்களில் ஆபிஸ் பாய் இன்முகத்துடன் பெரிய பதவியில் இருக்கும் அரபிக்கு சேவை புரிவர் ஆனால் கம்பெனியின் நேரடி அலுவலராக செயல்படாத அந்த ஆபீஸ் பாய்க்கு க்ளீனிங் கம்பெனியின் சொற்ப தொகையே சம்பளமாக கிடைக்கும். இது அரபிக்கும் தெரியம் எனவே மாதமாதம் கணிசமான தொகையை அன்பாக அளிப்பார். இது பொதுவான நடை முறை.

  • ஒருவர் வாழ்வில் நடந்த சோதனைக்கு பிறகு கிடைத்த சாதனை பற்றி இந்த வாரம் கூறுகிறேன்…

    ஒருநாள் ஆபீஸ் பாய் ..அரபிக்கு சேவை செய்யும்போது ..இன்முக சேவை இல்லாது சோகமாய் சேவை செய்தான் அந்த ஆபீஸ் பாய்…காலை நேரம் அலுவல் துவங்கும் தருவாயில் ஆபீஸ் பாயின் சோகமான முகம் கண்டு அதிர்ந்தார் !

    ஏன் சோகமாய் இருக்கிறாய் ? என கேட்டார்…

    எங்கள் கம்பெனியில் ஆள் குறைப்பு செய்கிறார்கள். பலரை ஊருக்கு திருப்பி அனுப்புகிறார்கள். மீதம் இருப்பவர்களுக்கு சம்பள குறைப்பு செய்கிறார்கள். இந்த வேலையால் எனக்கு எதிர் காலம் இல்லை என கூறினான்.

    என்ன செய்வதாக உத்தேசம் ? என அரபி கேட்டார்.

    இந்தியா சென்று ஜவுளி கடை வைக்க போகிறேன் என்றான்.

    அப்படியா ! உனக்கு இந்த நாட்டிலேயே கடை வைத்து தருகிறேன். என கூறி அதன் படியே சிறிய கடையும் வைத்து கொடுத்தார்.

    கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி கடின உழைப்பின் மூலம் ஊரிலேயே பெரிய கடையாக மாற்றினான். அந்த அரபிக்கு கிடைத்த சம்பளத்தை விட மூன்று மடங்கு பணம் ஈட்டி கொடுத்தான். அவனும் நல்ல நிலைக்கு வந்தான்.

    எனவே அன்பு சகோதரர்களே… நல்ல வாய்ப்பு கிடைத்தால் நழுவ விடாதீர்கள்..!

    அடுத்த வாரம்… கிராமத்து ராசாவும் !? பட்டணத்து கூசாவும் !? காத்திருங்கள்…
    [ வளைகுடாப்பயணம் தொடரும்… ]
    sitthik‘பத்திரிக்கைத்துறை நிபுணர்’
    அதிரை சித்திக்
    நன்றி http://nijampage.blogspot.in/2013/08/7.html

  • உன் ஏரியா எங்கேன்னு சொல்லு!

    இரவு ஒன்பதரை இருக்கும். உலகிலேயே இருபத்தி நான்கு மணி நேரமும் பிஸியாக இருக்கும் நந்தனம் சிக்னலில் நத்தையாக ஊர்ந்துக் கொண்டிருந்தேன். ‘பொட்’டென்று பொன்வண்டு சைஸுக்கு ஒரு மழைத்துளி. தலையில் குட்டு மாதிரி விழுந்தது. கொஞ்சநாட்களாக மழையின் வடிவமே மாறிவிட்டது. நமக்கு முன்னெச்சரிக்கை தரும் விதமாக மிதமான தூறல், ஊதக்காற்று எல்லாம் மிஸ்ஸிங். டைரக்டாக அடைமழைதான்.

    சிக்னலை கடப்பதற்குள்ளாகவே தொப்பலாகி விட்டது. உள்ளாடைகள் கூட நூறு சதவிகிதம் நனைந்து, குளிரில் ஜன்னி வந்தது போலாகி விட்டது. மவுண்ட்ரோட்டில் மழைக்கு ஒதுங்க ஒரு பள்ளிக்கூடம் கூட இல்லை. பாலைவனமே பரவாயில்லை. கை, கால் உதறலெடுக்க ஒண்டிக்கொள்ள ஏதாவது இடம் கிடைக்குமாவென்று, மெதுவாக செகண்ட் கீரில் உருட்டிக்கொண்டே வந்தேன்.

    பெரியார் மாளிகை எதிரில் ஃபயர் ஸ்டேஷன். உள்ளே நுழைந்துவிடலாம் என்று பார்த்தால், கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்த தீயணைப்பு வீரர் ஒருவர், “இங்கெல்லாம் வரக்கூடாது” என்று மழையில் நனைந்துக்கொண்டே விரட்டிக் கொண்டிருந்தார். கொஞ்சதூரம் தள்ளியிருந்த நிழற்குடையில் சுமார் நூற்றி ஐம்பது பேர் கரும்புக்கட்டு மாதிரி நெருக்கியடித்து நின்றார்கள். வாளிப்பான சில ஆக்டிவா ஆண்டிகளும் அந்த கூட்டத்தில் இருந்ததைக் கண்டு சோகத்துக்கு உள்ளானேன். ஜோதியில் கலந்துக் கொள்ளலாமா என்று வண்டியை மெதுவாக்கியபோது, அந்த எறும்புப் புற்றுக்குள்ளிருந்து ‘சவுண்டு’ வந்தது. “யோவ். இங்க இருக்குறவங்களுக்கே இடமில்லாம நனைஞ்சுக்கிட்டிருக்கோம். வேற இடத்தைப் பாரு”. வந்தாரை வாழவைக்கும் தமிழகம்.

    மழை சனியன் குறைந்தபாடில்லை. குளிரில் பல்லெல்லாம் கிடுகிடுக்க ஆரம்பித்துவிட்டது. சைதாப்பேட்டைக்கு முன்பாக பேன்பேட்டை அருகே எதிர்வாடையில் ஒரு டீக்கடை தென்பட்டது. கூட்டமும் குறைவாக இருக்கவே, நமக்கொரு புகலிடம் நிச்சயமென்று ‘யூ டர்ன்’ அடித்துத் திரும்பினேன். கடைக்காரர் கலைஞரின் இலவசத் தொலைக்காட்சியை, வாடிக்கையாளர் சேவைக்காக வைத்திருந்தார்.

    vadivelu-02“தைரியம் இருந்தா என் ஏரியாவுக்கு வந்து பாரு”

    “உன் ஏரியா எதுன்னு சொல்லிட்டுப் போ”

  • ஏதோ ஒரு காமெடி சேனலில் ‘நகரம் மறுபக்கம்’ காமெடி ஓடிக்கொண்டிருந்தது. அங்கேயிருந்த பதினைந்து, இருபது பேருமே வாய்விட்டு சிரித்துக் கொண்டிருந்தார்கள். எனக்குப் பக்கத்தில் நின்றிருந்த நடுத்தர வயதுக்காரர் ஒருவர் சிரித்து மாளாமல், வயிற்றைப் பிடித்துக்கொண்டு குலுங்கிக் கொண்டிருந்தார். ஆனந்தச் சிரிப்பால் அவரது கண்களிலும் நீர் தாரையாக பொழிய ஆரம்பித்தது. வடிவேலு நடிக்காதது நாட்டுக்கு எவ்வளவு பெரிய இழப்பு?

    “ஆனா… இப்படியெல்லாம் நிஜமா நடக்க சான்ஸே இல்லை. சினிமாலே மட்டும்தான் நடக்கும்” என்று பொத்தாம்பொதுவாக என்னைப் பார்த்துச் சொன்னார்.

    “இல்லைங்க. நெஜமாவே நடந்திருக்கு. என் ஃப்ரெண்டுக்கே இதுமாதிரி ஆச்சி” என்றேன்.

    “நெசமாவா” என்றவரிடம், கதை சொல்ல தயாரானேன்.

    இதற்குள் மழையின் வேகம் குறைந்துவிட அந்த தற்காலிக கூட்டிலிருந்து பறவைகள் திசைக்கொன்றாக கிளம்பிவிட்டன. என்னிடம் கதை கேட்க இருந்தவரும், அவருடைய பஜாஜ் எம்.எய்ட்டியை உதைத்துக் கொண்டிருந்தார். வசமாக சிக்கிய ஆடு ‘எஸ்கேப்’ ஆகிவிட்டால் கசாப்புக் கடைக்காரனுக்கு எப்படியிருக்கும். அந்த மனநிலைக்கு உள்ளாகி விட்டேன்.

    நோ பிராப்ளம். நமக்குதான் ‘ப்ளாக்’ இருக்கே. இங்கே ஆடுகளுக்கும் பஞ்சமில்லை.

    அந்த கதை என்னவென்றால்…?

    ‘வரவனையான், வரவனையான்’ என்றொரு ப்ளாக்கர் இருந்தார். இயற்பெயர் செந்தில். திண்டுக்கல்லில் வசித்து வந்தார். 2006-07களில் தமிழ் இணையத்தளங்களில் இயங்கிவந்த தீவிரவாதிகளில் ஒருவர். ஓட்டுப் பொறுக்கி அரசியலைப் புறக்கணித்து இணையத்திலேயே இயங்கி வந்த அனானிகள் முன்னேற்றக் கழகம் (அ.மு.க) என்கிற அரசியல் கட்சியில் நாங்களெல்லாம் மெம்பர்கள்.

    திராவிடப் பாரம்பரிய மணம், குணம் நிரம்பிய வரவனையானுக்கு கம்யூனிஸ்ட்டுகள் என்றாலே கேலியும், கிண்டலும் பீரிட்டுக் கிளம்பும். தோழர்களை ‘டவுஸர் பாண்டிகள்’ என்று விமர்சித்து எழுதுவார். ஒரிஜினல் டவுஸர்கள் ஆர்.எஸ்.எஸ்.ஸார் என்பதை நினைவில் கொள்க. தோழருக்கு ஆர்.எஸ்.எஸ். காரர்களும், கம்யூனிஸ்ட்டுகளும் ஏதோ ஒரு புள்ளியில் இணைவதான தோற்றம் தெரிந்ததோ என்ன எழவோ தெரியவில்லை. இவர்களையும் அதே பட்டப்பெயரில் எழுதி வந்தார்.

    எவ்வளவு திட்டினாலும் சொரணையே இல்லாமல் ரியாக்ட் செய்யாமல் இருப்பதற்கு தோழர்கள் என்ன திமுகவினரா அல்லது அதிமுகவினரா. மார்க்சிஸ ஏங்கலிஸ லெனினிய மாவோயிஸ நக்ஸலிய பின்னணி கொண்ட தோழர் ஒருவர் (சுருக்கமாக ம.க.இ.க) தொடர்ச்சியான இவரது விமர்சனங்களை கண்டு ‘டென்ஷன்’ ஆனார். உண்மையில் வரவனையானின் குறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்தான். ஏனெனில் அப்போது அவர்கள்தான் அம்மாவுக்கு சிறப்பாக பஜனை செய்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் நம் மா.ஏ.லெ.மா.ந. காம்ரேடுக்கு குத்துமதிப்பாக தங்கள் இயக்கத்தைதான் குறிவைத்து வரவனை அடிக்கிறார் என்று தோன்றியிருக்கிறது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவர் புயலாக எழுந்தார்.

    திண்டுக்கல்லில் இருந்த வரவனையானுக்கு போன் வந்தது. போனை எடுத்து ‘ஹலோ’ சொன்னார். பதிலுக்கு ‘ஹலோ’ சொல்லுவதை விட்டு விட்டு க்ரீன் க்ரீனாக அர்ச்சனை விழுந்திருக்கிறது. மேலும் ஒரு பகிரங்க நேரடி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

    “நீ எங்கே இருக்குன்னு சொல்லுடா. நேர்லே வந்து உன்னை தூக்கறேன்”

    “நான் திண்டுக்கல்லே இருக்கேன் தோழர்”

    “திண்டுக்கல்லுன்னா எங்கேன்னு கரெக்டா சொல்லு”

    “பஸ் ஸ்டேண்டுலே ஒரு ‘பார்’ இருக்கும். அங்கே வந்து செந்தில்னு கேட்டீங்கன்னா சொல்லுவாங்க தோழர்” நம் தோழர் வரவனையான் அப்போது ‘பார்’ நடத்திக் கொண்டிருந்தார்.

    “தோ வரேன். ரெடியா இரு”

    தோழரை வரவேற்க நம் தோழரும் அவரிட்ட ஆணைப்படி ரெடியாகதான் இருந்திருக்கிறார். டாஸ்மாக் வாசலையே பார்த்து, பார்த்து கண்கள் பூத்ததுதான் மிச்சம்.

    மறுநாளும் போன்.

    “திண்டுக்கல்லே எங்கே இருக்கே?”

    “அதான் சொன்னேனே. பஸ் ஸ்டேண்ட் பார்லே இருக்கேன்னு”

    “நான் அங்கேல்லாம் வரமுடியாது. வீட்டு அட்ரஸை சொல்லு”

    வரவனையானும் சின்ஸியராக அட்ரஸை சொல்லிவிட்டார். “நேர்லே வர்றேன். ரெடியா இரு” என்கிற வழக்கமான பஞ்ச் டயலாக்கை சொல்லிவிட்டு அவரும் போனை வைத்துவிட்டார். மார்க்ஸியம் மீது இவ்வளவு பற்றும், ஈடுபாடும் கொண்ட தோழர் மீது நம் தோழருக்கு காதலே வந்துவிட்டது. தன்னை அஜித்குமாராகவும், தனக்கு போன் செய்த தோழரை தேவயானியாகவும் நினைக்க ஆரம்பித்துவிட்டார். தனக்கு ‘போன்’ வந்த எண்ணுக்கு இவரே மீண்டும் முயற்சித்திருக்கிறார்.

    “ஹலோ தோழர்… கொஞ்ச நேரம் முன்னாடி இந்த நம்பரிலிருந்து பேசினது…”

    “சார்.. இது ஒரு ரூவா காய்ன் பூத்து சார். யார் யாரோ வந்து பேசுறாங்க. யார் யாருன்னு குறிப்பா எனக்கு எப்படி தெரியும்?”

    மூன்றாவது நாளும் போன் வந்திருக்கிறது. ஆரம்பத்தில் விளையாட்டாக இருந்த, வரவனை இந்த கண்டிஷனில் கொஞ்சம் டென்ஷனாகி விட்டார். இம்முறை இவர் தோழர் மீது சொற்வன்முறையை பிரயோகித்திருக்கிறார்.

    “வர்றேன், வர்றேன்னு டெய்லி உதார் விட்டுட்டு ஒரு ரூவா காய்ன் பூத்துலேருந்து பேசுறீயேடா வென்று. நான் வர்றேண்டா உன் ஏரியாவுக்கு. நீ எங்கிருக்கேன்னு சொல்லு. உன் அட்ரஸைக் கொடு. என்னத்தை பிடுங்கறேன்னு பார்த்துடலாம்”

    க்ளைமேக்ஸ் நெருங்கிவிட்டதை உணர்ந்த தோழர் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள முன்வந்தார்.

    “டாய். கம்யூனிஸ்டுகளை அசிங்கமா திட்டுற உன்னை விடமாட்டேன். ஆம்பளையா இருந்தா சென்னைக்கு வாடா.. ஒத்தைக்கு ஒத்தை மோதி பார்த்துக்கலாம்”

    “சென்னையிலே எங்கே. அட்ரஸை சொல்லு”

    “சென்னையிலேன்னா… ஆங்… பனகல் பார்க் வாசல்லே நாளைக்கு காலையிலே பதினோரு மணிக்கு”

    வரவனையானுக்கு சிரிப்பதா அழுவதா என்று புரியவில்லை. எனக்கு போன் செய்து சொன்னார்.

    “தலை… எவனோ காமெடி பீஸ் ஒரு ரூவாய் பூத்துலே இருந்து சும்மா உங்களை கலாய்க்கிறான். சீரியஸா எடுத்துக்காதீங்க. அப்படி நெஜமாவே இவனாலே ஏதாவது ஆவும்னு நெனைச்சீங்கன்னா லோக்கல் போலிஸ்லே நம்பரை மென்ஷன் பண்ணி, ஒரு கம்ப்ளையண்ட் கொடுத்துடுங்க” என்றேன்.

    “அப்படில்லாம் ஒண்ணுமில்லை லக்கி. வேலை நேரத்துலே போனை போட்டு வர்றேன், வர்றேன்னு உதாரு விட்டுக்கிட்டிருக்கான். அவனை புடிச்சி நாலு காட்டு காட்டலாம்னுதான்” என்றார்.

    மறுநாள் காலை பத்து மணி. அப்போதுதான் அலுவலகம் வந்திருந்தேன். வரவனையானிடம் இருந்து போன்.

    “சென்னைக்கு வந்திருக்கேன் லக்கி”

    “என்ன திடீர்னு”

    “அந்த டவுஸர் பாண்டியை பார்க்கதான். பனகல் பார்க்குலே நிக்கிறேன்” என்றார்.

    ஒரு ரூவாய் காய்ன் பூத் போன்காலை நம்பி திண்டுக்கல்லில் இருந்து ராவோடு ராவாக பஸ் பிடித்து சென்னைக்கு வந்த வரவனையானை நினைத்து அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை.

    “கொஞ்சம் வேலையிருக்கு. முடிச்சிட்டு வர்றேன் செந்தில். நடுவுலே அவன் வந்துட்டான்னா மட்டும் கொஞ்சம் ரிங் அடிங்க. உடனே ஓடியாந்துடறேன்” என்றேன்.

    மதியம் லஞ்ச் டைமில் ஆபிஸில் லீவ் சொல்லிவிட்டு பனகல் பார்க்குக்கு விரைந்தேன். வீரபாண்டிய கட்டபொம்மன் மாதிரி பார்க் வாசலில் ஆடாமல், அசையாமல் கம்பீரமாக செந்தில் நின்றிருந்தார்.

    “பதினோரு மணிக்கு வர்றேன்னு சொல்லியிருந்தான் லக்கி. இன்னும் காணோம்” அப்போதே நேரம் மூன்று மணியை தொட்டிருந்தது.

    “இதுக்கு மேலேயும் வருவான்னு நம்பிக்கை இருக்கா தோழர்?”

    “கம்யூனிஸ்ட்டு ஆச்சே.. சொன்ன சொல்லை காப்பாத்துவான்னு நெனைச்சேன்”

    மேலும் ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம். தோழர் வருவதற்கு அறிகுறியே தெரியவில்லை.

    “சரி. நான் இப்படியே கெளம்புறேன் லக்கி. கோயம்பேட்டுலே விட்டுடுங்க. ஒரு நாளை ஃபுல்லா வீணாக்கிட்டான், நான்சென்ஸ்” என்றார். அப்போது வரவனையைப் பார்க்க, ‘தண்டவாளத்துலே படுத்து தூங்கிட்டிருந்தேனா, அப்படியே ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலு என் கழுத்து மேலே ஏறிப்போயிடிச்சி’ என்று கழுத்தில் ரத்தத்தோடு வடிவேலுவிடம் சொல்லும் கேரக்டர்தான் நினைவுக்கு வந்தது.
    இந்த சம்பவத்துக்கு பிறகு ‘ஒரு ரூவா காய்ன் பூத்’தில் இருந்து ஏதேனும் சாதாரண கால்கள் வந்தாலே, பருத்திவீரன் க்ளைமேக்ஸ் பிரியாமணி மாதிரி “டேய் என்னை விட்டுடுங்கடா…” என்று அடுத்த சில நாட்களுக்கு வரவனை கதறிக் கொண்டிருந்தார். அந்த காலக்கட்டத்தில் இரவுகளில் அவருக்கு வந்த கனவுகளில்கூட நமீதா வந்ததில்லையாம். ஒரு ரூபாய் போன் பூத்துதான் அடிக்கடி வருமாம். ஆனால் மா.ஏ.லெ.மா.ந. காம்ரேடிடமிருந்து அதற்குப்பிறகு போன் வந்ததே இல்லை என்பதுதான் வரலாற்று சோகம். பதிலுக்கு வரவனையின் ப்ளாக்கில் அனானிமஸ் கமெண்டாக “உன் ஏரியாவை சொல்லுடா, அட்ரஸை கொடுடா” என்று மட்டும் கொஞ்ச நாட்களுக்கு ரெகுலராக கமெண்டுகள் வந்துக் கொண்டிருந்தது.
    yuvakrishnaஎழுதியவர் யுவகிருஷ்ணா
    நன்றி http://www.luckylookonline.com/2013/09/blog-post_25.html

    யார் நாடுவார் இவர்களோடு சேர?

    img005பாஜகவோடு கலைஞர் உடன்பாடு காணுவாரா?
    கலைஞர் இனியொருமுறை இந்த தவறை செய்ய மாட்டார்

    அ.தி.மு.க பாஜகவோடு உடன்பாடு, கூட்டு வைக்குமா ?
    இன்றைய முதல்வர் மோடியோடு ,பாஜகவோடு மதிப்பு வைத்து இருந்தாலும் தேர்தலில் உடன்பாடு, கூட்டு கொள்ள மாட்டார். தேர்தலுக்குப் பின் அவர் நிலை மாறுபடலாம் .

    விஜயகாந்த் பாஜகவோடு உடன்பாடு காணுவாரா!
    விஜயகாந்த் உடன்பாடு கொண்டால் அதோடு அந்த கட்சி காணாமல் போய்விடும்

    கம்யூனிஸ்ட் பாஜகவோடு உடன்பாடு காணுமா ?
    கம்யூனிஸ்ட் கொள்கைக்கு மாறுபட்டது பாஜகவோடு உடன்பாடு

  • பாட்டாளி மக்கள் கட்சி பாஜகவோடு உடன்பாடு காணுமா !
    பாட்டாளி மக்கள் கட்சி தனித்தே நிற்கும் .இப்போதைக்கு இது அவர்கள் கோட்பாடு.

    வை .கோ. கட்சி பாஜகவோடு உடன்பாடு காணுமா ?
    கலைஞரைப் போல் இனியொருமுறை இந்த தவறை செய்ய மாட்டார்.

    முஸ்லிம்களுக்கு கணக்கில்லா கட்சிகள் இருந்தாலும் பாஜகவோடு உடன்பாடு கொள்ளாது. முஸ்லிம்கள் பல கட்சிகளோடு கலந்து நின்றாலும் பாஜகவோடு உடன்பாடு கொள்ள மாட்டார்கள் .

    கிருத்துவ மக்களும் பாஜகவோடு உடன்பாடு கொள்ள மாட்டார்கள்

    சகோதர ஹிந்து மக்களும், மனித நேய மக்களும் அதனை தமிழ்நாட்டில் விரும்ப மாட்டார்கள். ஒரு சிலரைத் தவிர.
    அதில் புரட்சிப்புயல், தமிழருவி புதிதாக தோன்றிய பெயரை பெரிது படுத்தும் புதிதாக கொள்கை மாறும் மனிதர் !

  • அதிரை சித்திக்கின் ‘வளைகுடா வாழ்க்கை’ தொடர்கிறது……[ பகுதி 6 ]

    adirai news - nijam pageHOUSE BOY வேலைக்கு செல்பவர்களில் பலர் தனது வீட்டு ஏழ்மை நிலை அறிந்து இளம் வயதிலேயே உழைக்க முன் வருபவர்களாக இருப்பர். நான் முன்பு கூறிய நிகழ்வின் நாயகன் வீட்டு ஏழ்மை நிலை போக்க வேலைக்கு செல்ல வில்லை மாறாக தான்தோன்றி தனமாக ஊர் சுற்றிய இளைஞனை எப்படியாவது நல்வழி படுத்த ஏதாவது வேலைக்கு அனுப்பி அவன் வாழ்க்கை என்றால் என்ன என்று புரிய வேண்டும் என்ற நோக்கில் வேலைக்கு அனுப்பப்பட்டான். ஆனால் சென்ற இடத்திலும் தனது குறும்புத்தனத்தால் உடுத்திய உடையோடு நாடு திரும்பினான்.

  • அரபிகள் புதிதாக வீட்டு வேலைக்கு வரும் நபரை ஆறுமாதம் வரை கண்காணிப்பர். நாணயமான நடவடிக்கை வேண்டும் என்பது முதல் எதிர் பார்ப்பு அதில் நம்பிக்கை கிடைத்து விட்டால், அரபியர்களுக்கு தனி பிரியம் வந்து விடும். அதன் பின்னர் சோம்பலற்ற வேலை, அற்பணிக்கும் தன்மை இவைகளால் வீட்டில் ஒருவனாக மாறும் நிலை ஏற்படும் .எங்கு சென்றாலும் தன்னோடு அழைத்து செல்வர் .மேலை நாடுகளுக்கு சுற்று பயணம் செல்லும் போது கூட தன்னோடு அழைத்து சென்று மகிழ்வர்.

    அப்பாவி என்ற எண்ணம் ஏற்படும் செயல் பாடு HOUSE BOY வேலைக்கு சிறந்த தகுதி. ஒரு அப்பாவி இளைஞன் ..வீட்டு வேலைக்கு சென்றான் ..வேலைக்கு சென்ற ஆறு மாதத்திலேயே வீட்டு எஜமானரின் அன்புக்கு பாத்திரமாக மாறினான். தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பான் அந்த இளைஞன்.

    1980 களில் கடித தொடர்புகளே அதிகம் .ஒவ்வொரு வாரமும் தனது தாயிடமிருந்து வரும். கடிதத்தை படித்து மகிழ்வான். ஒரு நாள் கடிதம் வந்தது கடிதம் படித்த மறுகணமே கவலைக்கு உள்ளானான் காரணம் ஊரில் அடைமழை காரணமாக் தனது வீட்டு சுற்று சுவர் இடிந்து விட்டது என்ற செய்தி கடிதத்தில் வந்த செய்தியே காரணம்.

    சோகமாக காட்சி அளித்த அவ்விளைஞனிடம் எஜமானி விசாரித்தார்.

    ஏன் கவலையாக உள்ளாய்…

    அரபி மொழி அரை குறையாக தெரிந்து வைத்திருந்த அந்த இளைஞன்

    கடும் மழை காரணமாக வீடு இடிந்து விட்டது என கூறி விட்டான்.

    கவலைப்படாதே என்று கூறிய எஜமானி இந்தியாவில் சிறியதாக புதிய வீடு கட்ட எவ்வளவு தொகை தேவை படுமோ அவ்வளவு தொகையை அந்த இளைஞனிடம் கொடுத்து கவலை படாதே ஊருக்கு அனுப்பி வீடு கட்டி கொள்ளச்சொல் என்று எஜமானி கொடுத்துள்ளார்.

    அந்த இளைஞனும் மகிழ்வோடு அம்மாவிடம் அனுப்பி வைத்தான். பணம் கிடைத்த மறுகணமே தாயார் பதறி போனார். வீட்டு வேலை செய்யும் தன் மகனுக்கு இவ்வளவு பணம் எப்படி கிடைத்தது வகை தெரியா பையன் பணம் புழங்கும் அரபி இடத்தில் திருடி இருப்பானோ என்ற பயமே காரணம். களவுக்கு கை வெட்டும் தண்டனையும் உண்டு என்று அறிந்த தாய் பதறிப்போனார். அதே ஊரில் வேலை பார்க்கும் வேறு நபருக்கு போன் செய்து விவரம் கேட்க… அந்த நபர் அரபியிடம் விவரம் கேட்க… தான் கொடுத்த பணம் தான் என கூறியதோடு வீட்டு வேலைக்கார பையனிடம் அவனது தாயாரின் நேர்மையை பாராட்டியதோடு தன் வீட்டின் ஒரு அங்கத்தினராக ஏற்று கொண்டார்.

    நேர்மைக்கும், அயராத உழைப்பிற்கும் கிடைத்த பரிசு அரபியரின் அன்பிற்கும் பிரியத்திற்குரிய வேலை ஆளாய் ஆகி விட்டால், வாழ்வில் முன்னேற்றம் மிக சுலபம். அடுத்த வாரம் காண்போம்…
    [ வளைகுடாப்பயணம் தொடரும்… ]

    sitthik‘பத்திரிக்கைத்துறை நிபுணர்’
    அதிரை சித்திக்
    http://nijampage.blogspot.in/2013/08/6.html

  • விலகல்

    sunset14இக்கணத்தில்
    உனை விலகிப்போவதைத் தவிர
    வேறு மார்க்கம் ஏதுமில்லை

    எல்லா அபிமானங்களையும்
    ஒதுக்கிவிட்டால்
    ஒரு சத்திரத்தைப் போல
    எளிமையாக உள்ளது
    வாழ்க்கை

  • உன் வழி அதுதான் எனத்
    தேர்ந்தெடுத்து நீ விலகிய பின்
    யாரும் பயணித்திராத
    துயர்மிகு பாதை இதுவானாலும்
    நான் இனிப்
    போய்த் தான் ஆகவேண்டும்

    கோபம் விளைவித்த துணிச்சல்
    என் முன்னே வேகமாக நடக்கிறது
    வெகு சீக்கிரத்திலேயே
    நான் திரும்பி விடுவேன் என
    நீ காத்திருக்கலாம்

    ஏளனப் புன்னகை
    மெல்ல மெல்ல மறைந்து
    உன் முகத்தில் இறுக்கம் வந்தமர்ந்து
    விபரீதத்தை உணரும் கணத்தில்…..
    நீ வரவே முடியாத வெளியொன்றில்
    எனதாத்மா மிதந்து கொண்டிருக்கும்

    (நன்றி : கல்குதிரை வேனிற்காலங்களின் இதழ்-2011)
    நன்றிhttp://faheemapoems.blogspot.in/2011/07/blog-post_19.html

  • நேரலை” இணையக் கவியரங்கில் (சந்த வசந்த குழுமத்தார் நடத்தும் 14/09/2013 அன்று நடந்த கவியரங்கில்​ கவியன்பன் கலாம்

    நேரலை” இணையக் கவியரங்கில் (சந்த வசந்த குழுமத்தார் நடத்தும் 14/09/2013 அன்று நடந்த கவியரங்கில்​ கவியன்பன் கலாம் அழைத்ததும் கவிதை அரங்கேற்றி​யதும்/ பின்னூட்டங்களும் காண்க
    அக்கவியரங்கில் கலந்து கொண்டோர் உலகளாவிய அளவில் 38 கவிஞர்கள்/ புலவர்கள்/ பாவலர்கள்/ தமிழறிஞர்கள் ஆவார்கள். இத்தமிழ்ச் சங்கத்தில் அடியேனுக்கும் ஓர் அங்கீகாரம் கிட்டியது இறைவன் எனக்களித்த அருளென்பேன்; எல்லாப் புகழும் இறைவனுக்கே!
    ;
    அழைப்பு – 2

    கவியன்பன் கலாம் – எனக்குக் கவிதை எழில்

    விழியிரண்டில் கழிவிரக்கம் நிறைத்துக் கொண்டு
    விருப்பமுடன் நோன்பியற்றி மகிழ்ந்து நின்றே
    அழுதழுதே ஆசைகளை அறவே நீக்கி
    அறவழியில் செல்வதையே அகத்தில் கொண்டு
    தொழுதபடி மேலோர்கள் செல்லும் பாதை
    துணையாகக் கொண்டபடி கடப்பார் ஆகிப்
    பழுதெதுவும் போகாத கவிதை செய்யும்
    பண்புடைய கலாம்காதர் அறியார் யாரே.

    நாணல்மகன் செல்வழியில் தாமும் சென்று
    நலமளிக்கும் கவிபலவும் நன்கு மாந்தி
    மாணவராய் மாண்புடனே பாடல் யாத்து
    மகிழ்வுடனே மன்றிலிங்கு கொடுப்பார் தம்மைப்
    பூணநல்ல மலர்போலே பாடல் செய்து
    புகழென்றும் ஈட்டுகின்ற புலவர் தம்மைக்
    காணவேண்டும் ஆசையினால் அழைக்கின் றேனே
    கலாமிங்கே கவியெழிலைப் பொழியத் தானே.

    -சிவசூரி

  • என் கவிதையிடப்பட்டு அரங்கேற்றம்

    இக்கவியரங்கத்தில் அடியேனின் “ஒரு பா ஒரு பஃது” என்னும் வாய்பாட்டில் அந்தாதியாக வனைந்து 10 வெண்பாக்கள் பாடினேன்

    கவியரங்கம்- 38

    என் கவிதையின் தலைப்பு: “எனக்குக் கவிதை எழில்”(கவிதையும் காதலியும்)

    இறைவாழ்த்து:

    அலகிலா அருளும் அளவிலா அன்பும்

    இலகுமோர் இறையின் இனியபேர் போற்றி!

    சபை வாழ்த்து:

    சந்த வசந்தச் சபையோரை வாழ்த்தியே

    இந்தக் கவிதையை இவ்விடம்-தந்தே

    அரங்கேற்றம் செய்யும் அபுல்கலாம் யானும்

    கரங்கூப்பி வந்தேன் கனிந்து.

    ஒரு பா ஒரு பஃது

    எழிலாய்த் தெரியும் இதழைக் கடித்து

    விழியால் நுழைந்து விளக்கம் படித்து

    மொழியும் உணர்வை முழுதும் சுவைத்துக்

    கழியும் கவிதையாய்க் காண். 1)

    காண்பதும் ஆங்குக் கவிதை எழிலெலாம்

    மாண்புள பெண்ணின் மருவிலாத் தோற்றமே

    கேண்மையும் கேட்கக் கிளையும் மயங்கிட

    ஆண்மையை ஈர்க்கும் அது 2)

    அதனெழில் கூடும் அசையும் தொடையில்

    மதுரமாய்ச் சீராய் மயக்கும் நடையில்

    இதுவரை யானும் இதுபோல் சுவைக்க

    எதுவரை போவேன் இயம்பு 3)

    இயம்பும் கவிதை இதயம் விரும்பும்

    நயமும் ஒலியும் நயமுடன் பேசும்

    வியக்கும் அணிகள் விரவிக் கிடக்கும்

    செயலை மறக்கும் செயல் 4)

    செய்யப் படுமிந்தச் செய்யுள் வரிகளில்

    நெய்யப் படுமந்த நேர்த்தியாம் பட்டினை

    கையா லுடுத்திய கன்னித் திறமையை

    மெய்யா லுமுணரும் மெய் 5)

    மெய்தான் உடலும் மெதுவாய் அழியுமே

    பொய்தான் கவிதையெனப் பொய்யாய் மொழிந்தாலும்

    செய்யும் புலவரின் செய்யுள் எழிலெலாம்

    உய்யும் புகழில் உயர்ந்து 6)

    உயர்ந்து நிமிர்ந்த உணர்வை எழுப்பி

    வியக்கும் புலமை விதைகள் நிரப்பி

    மயக்கும் வழிகளில் மங்கை எழிலாய்

    இயக்கும் கவிதை இனிது 7)

    இனிக்கும் எதுகைகள் ஈரிதழ் போல

    கனியாய்ச் சுவைக்கக் கவியின் எழிலாய்த்

    தனித்து விளங்கும் தளையடி மோனை

    அனைத்தும் அழகியின் அன்பு 8)

    அன்பினால் ஈர்க்கும் அழகிய மங்கைபோல்

    என்பையும் ஆட்டும் எழிலார் கவிதைகள்

    மன்பதை எங்கும் மகிழ்ச்சியை ஊட்டிடும்

    என்பதைச் சொல்லுவேன் இன்று 9)

    இன்று படித்த இனிய கவிதையால்

    நன்றாய் உணர்வோம்; நளின வரிகளில்

    குன்றா இளமை; கொழிக்கும் வளமையில்

    என்றும் கவிதை எழில் 10)

    .அவற்றைப் பார்த்து என்னையும் என் வெண்பாக்களையும் பாராட்டியோரின் பின்னூட்டங்கள் இவைகளாகும்:

    அன்புள்ள கலாம்.

    ஒருபா ஒருபஃது சிறப்பு.
    கவிதையும், கருத்தும்”எழில்”

    வாழ்த்துகள்

    இலந்தை (நிறுவனர்/ தலைமையாசான், “சந்த வசந்தம்” யாப்புக்குழுமம்.)

    கலாமின்கை பற்றிக் கவிதையாம் கன்னி
    உலாவந்தாள் ஊட்டினாள்.

    கவிதைக் கன்னிக்கு அழகிய அந்தாதிமால சூட்டியுள்ளீர்கள். பாராட்டுகள்.

    ..அனந்த்

    காதலியை எண்ணிக் கவிதை வடித்திட்ட
    காதிரின் காதல்வாழ் க.

    -sdn

    நல்ல அந்தாதிப் பாக்கள்.
    சங்கரன்

    அந்தாதி முயற்சியைப் பாராட்டுகிறேன்.

    -சிவா சிவா

    அழகான அந்தாதிக் கவிதைகள்! மனத்தை ஈர்த்தன! நன்றியும் வாழ்த்துக்களும்!கலாம் அவர்களே மேன்மேலும் சீரும் சிறப்பும் பெற்று இலக்கியப் பணி தொடர்வீர்.

    -சுப்பராமன்

    கலாமின் காதற் கவிதை எழில்தான்!
    சலாம்செய் வதுவே சரி!
    பொதுவாக எல்லா ஈற்றடிகளும் நன்று.

    எழிலான கவிதை.. கலாம் ஐயா அருமை
    அன்புடன் அகிலா

    கலாம் கவிதை அழகு..

    -கவியோகி வேதம்

    திரு கலாம் அவர்களின் அந்தாதிக் கவிதையை படித்து இன்புற்றேன். கலாம் கவிதை கலக்கல். வாழ்த்துக்களுடன்
    பாரதி எழிலவன்

    கவிதையில் காதலியைக் கண்ட கலாம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..
    சோதரி
    புஷ்பா கிறிஸ்ரி

    இறுதியுரையில் கவியரங்கத் தலைவர் உயர்திரு. சிவசூரியார் அவர்கள் வாழ்த்தளித்த வாழ்த்துப்பா:

    கண்ணசைவில் பலகோடி கற்பனைகள் சிந்தும்
    கலாம்காதர் கட்டிவந்த கவிநங்கை வந்தாள்
    பண்ணிசைத்துப் பாடுகின்ற வெண்பாவாய் வந்தாள்
    பாவடியாம் பட்டாடை மின்னிவர வந்தாள்
    பெண்ணிதழாய்ப் பீடுடனே எதுகையெழில் கொண்டாள்
    பெருமைமிகு அணிபலவும் உடலேந்தி வந்தாள்
    மண்ணுலகில் நடக்கின்ற மதிபோல வந்தாள்
    வாசமிகு அந்தாதி மாலையென வந்தாள்.

    அண்மையிலே வந்துநின்றே அன்புமழை பெய்தாள்
    அசைகின்ற சீரழகில் ஆனந்தம் தந்தாள்
    வண்ணமயில் தோகையென வடிவேந்தி வந்தாள்
    மழலைமொழி போலினிக்கும் கவியன்பன் நெஞ்சில்
    எண்ணுகின்ற பொருள்யாவும் எழிலாகத் தோன்ற
    எம்மரங்கில் ஒளியூட்ட மரபுவழி வந்தாள்
    தண்டமிழின் தொடையெல்லாம் பின்னிவர வந்தாள்
    தளையெல்லாம் வளையாக்கித் தானணிந்து வந்தாள்.

    செப்பலோசை சிரிப்பாகச் செவிமடலில் மோத
    செம்மாந்து நடைநடந்து தேனாறாய் வந்தாள்
    முப்பொழுதும் முத்தமழை பொழிபவளாய் வந்தே
    முத்தமிழாய்ச் சித்தமெலாம் முறுவலித்து நின்றாள்
    தப்பெதுவும் நினையாத தமிழ்நெஞ்சில் தோன்றிச்
    சந்தமுடன் நடைநடந்து சபைநடுவே வந்தாள்
    எப்பொழுதும் துணையாகும் எழில்நங்கை போலே
    எம்மனத்தில் கலாம்காதர் இடம்பிடிக்க வந்தாள்.

    சிவசூரி.

    என் நன்றியுரை:

    என்னுடைய கவிதையைப் பாராட்டியும் ஆய்ந்தும் கருத்துச் சொன்ன, சொல்ல நினைத்த அனைவருக்கும் என் நன்றி

    அன்பின் கவியரங்கத் தலைவர் சிவசூரியார் ஐயா அவர்கட்கு, தமிழ் மணக்கும் தமியேனின் வணக்கம்.
    அற்புதமாய்ச் சொற்களென்னும் கற்களில் கட்டிய எனக்கான இவ்வாழ்த்து மாளிகை என்னும் வசந்த மாளிகைக்குள் உள்ளத்தால் குடிபுகந்தேன்; அதனால், தங்களை உளம்நிறைவாய்ப் புகழ்கிறேன்.
    சொன்னதைச் செய்யும் உன்னத நற்பண்பின் பெருந்தகையாளரின் பக்கத்தில் இருப்பதும் எனக்கு மிக்க மகிழ்ச்சியை அளிப்பதற்கு என்றும் யாப்பு மணம் வீசும் “சந்த வசந்தம்” என்னும் இப்பாத்தோட்டத்தில் அடியேனும் அடியெடுத்து வைத்ததும் இறைவன் அளித்த பேறென்பேன். தங்களின் அனுமதியுடன் இப்பாராட்டுப் பத்திரத்தை என் வீட்டின் வரவேற்பறையில் காட்சிக்கு வைப்பதே அதன் மாட்சிக்கு யான் செய்யும் கடனாகும் என்பதையும் இம்மாமன்றத்தில் அறிவிக்கிறேன்.
    என்றும் நன்றிகளின் ஆனந்தக் கண்ணீருடன்,
    பணிவுள்ள மாணவன்,
    கலாம்

    அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்
    kalam
    “கவித்தீபம்”, “கவியன்பன்” கலாம்,
    அதிராம்பட்டினம் ( பாடசாலை),
    அபுதபி (தொழிற்சாலை)
    வலைப்பூந் தோட்டம்:
    http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
    அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844/ 055 7956007
    மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com , kalamkader2@gmail.com
    Skype : kalamkader

  • அறிஞர் அண்ணா பற்றிய அரிய தகவல்கள்

    முனைவர் இரா.குணசீலன்
    அரசியல், இலக்கியம், சொற்பொழிவு, நாடகம், பகுத்தறிவு எனப் பல துறைகளில் முன்மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்து காட்டியவர் அறிஞர் அண்ணா ஆவார்.

    இன்றைய சுயநலமிக்க அரசியல்வாதிகளுக்கெல்லாம் அறிஞர் அண்ணா ஓரு வாழ்க்கைப் பாடம்.
    ஓரிருநூல்களை எழுதிவிட்டு விருதுக்காகத் தவமிருக்கும் இன்றைய இலக்கியவாதிகளுக்கு அறிஞர் அண்ணா ஓர் நூலகம்.
    நகைச்சுவை உணர்வோடு, சிந்திக்கத்தூண்டும், நயமிக்க சொற்பொழிவு செய்வதில் இவர் ஒரு வல்லவர்.
    வாழ்க்கையை, சமூக நிலையை நாடகமாக்குவதில் சிறந்த நாடகவியலார்.
    இவரது சிந்தனைகள் கடவுள் நம்பிக்கையாளரையும் ஒரு மணித்துளியாவது சிந்திக்கச்செய்யும் ஆற்றல்வாய்ந்தன.

    அறிஞர் அண்ணா பற்றிய அரியபல தகவல்களைத் தன்னகத்தே கொண்ட இணையதளம்
    http://www.arignaranna.net/
    Untitled
    Source: http://www.gunathamizh.com/2013/09/blog-post_14.html