RSS

Monthly Archives: December 2010

புத்தாண்டில் உறுதி மொழி

பூத்திருக்கும் புத்தாண்டில் புத்துணர்வு பூத்திடக்

காத்திருக்கும் உங்கள் கடமைகள்- யாத்திருக்கும்

பாக்கள் அரங்கேற்றம் பார்த்தல்போல் வெற்றிபெற

ஊக்கம் பெறுதல் நலம்.

நலமுடனே வாழ்வை நகர்த்தலுக்குத் தேவை

பலமுடனே தேகப் பயிற்சி – விலகிவிடும்

நோய்கள் விரைவாக நோக்காய் அடிக்கடிநாம்

காய்கனிகள் உண்ணல் சிறப்பு.

சிறப்பான வாழ்வைச் சிறிதாய்ச் சுருக்கிப்

பிறப்பால் உயர்ந்த பிறவி – நிறத்தால்

இனத்தால் மொழியால்  இழிவாய்ப் பிரியும்

மனத்தினை விடச்சிறக்கும் நாள்.

நாளும் மனத்திலே நாட்டம் மிகுந்திட

ஆளும் இறையினை ஆர்வமுடன் – கேளும்

வளமான வாழ்வு வலுவான எண்ணம்

களத்தில் மகிழ்வினைப் புகுத்து.

“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்


Advertisements
 

Tags:

தமிழ்நிருபர் இணையதளம் வழங்கும் ஒரு லட்சம் பரிசு

 

Tags: ,

அடுத்த படியில் கால்வைத்து விட்டேன்!

பதினெட்டு அல்லது பத்தொன்பது வயது இருக்கும் அப்போது, சினிமாத்துறையில் இணைய வேண்டும் என்ற ஆசையில் சென்னையில் காலடி வைத்தேன். எனது பால்ய நண்பன் கார்த்திக்கின் மாமா சிவா அவர்கள் ஆரம்பத்தில் உதவிகள் செய்தார், அவரின் மூலமாக இயக்குனர் ராஜிவ்மேனன் அவர்களிடம் இண்டர்வியூவிற்கு போனேன், அப்பொழுது ”கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்” படம் எடுத்து கொண்டிருந்தார், அடுத்த படத்திற்கு நிச்சயமாக வாய்ப்பு தருகிறேன் என்று உறுதியளித்தார், ஆனா பாருங்க அதன் பிறகு அவர் எந்த படமும் இயக்கவில்லை!

அதன் பிறகு வேலுபிரபாகரன் போன்ற இயக்குனர்களிடம் வாய்ப்பு வந்தது, பெரிய இயக்குனர்களிடம் சேர்ந்தால் சீக்கிரமாக கற்று கொள்ளலாம் என காத்திருந்தேன், ஆனாலும் சோறு திங்காமல் இருக்க முடியாதே, அதனால் நண்பன் ராஜாவின் ஆலோசனையின் பேரில் ஹோட்டலில் வேலைக்கு சேரலாம் என முடிவு செய்தேன், அவனது சிபாரிசின் பேரில் எனக்கு தாஜ் கோரமெண்டலில் வேலை கிடைத்தது, ஒன்றரை வருடம் அங்கே வேலை செய்தேன், அதன் பிறகு சினிமாதுறையில் வாய்ப்பு தேடும் ஆர்வம் குறைந்தது, படிப்படியாக உணவகத்துறையில் ஆர்வம் அதிகமானது, ஈரோடு வந்தது லீஜார்டின் என்ற ஹோட்டலில் வேலைக்கு சேர்ந்தேன்.

Read the rest of this entry »

 
2 Comments

Posted by on December 29, 2010 in Uncategorized

 

Tags: , , , ,

செம்மலரின் கொற்றவன்….. (கலிவெண்பா) by இராஜ. தியாகராஜன்

நவம்பர் 14 – குழந்தைகள் நாளன்று ஜவஹர்லால் நேருவைப் பற்றி நான் பாடிய பாடல்.  அரசியலில் எத்தனையோ மாற்று கருத்துகள் இருக்கலாம்.  ஆனால்  இம்மனிதருக்கென்று என்னில் என்றுமே ஓரிடம் உண்டு.

 

கொஞ்சுமெழிற் செம்மலரின் கோதில்சீர் கொற்றவராம்

பிஞ்சுமொழி பேசுகின்ற பிள்ளைகளுக் குற்றவராம்!

அஞ்சுதலே இல்லையெனும் ஆன்மபலம் பெற்றாலும்,

வெஞ்சினமாய்ப் பேசாத மெல்லியலுங் கற்றவராம்!

 

வேளாண்மை செய்பவர்கள் மேலாண்மை உற்றிடவும்,

நூலகங்கள் நம்நாட்டோர் நூறெனவே பெற்றிடவும்,

ஆளுகின்ற போதிலவர் ஐந்தாண்டுத் திட்டமெலாம்,

சீலமுடன் தீட்டிவைத்த சீர்த்தியையும் நாடறியும்!

Read the rest of this entry »

 
1 Comment

Posted by on December 28, 2010 in Uncategorized

 

Tags: , , , , ,

கல்வி தாகம் 1: TNPSC Group 1 பற்றி கூடுதல் விளக்கம்

TNPSC Group 1 பற்றி கூடுதல் விளக்கம்.
நம் சமுதாயத்தை சேர்ந்த மிகச்சிலரே TNPSC Group1 மூலமாக DSP, துனை கலெக்டர் போன்ற பதவிகளை பெற்றவர்கள். பின்பு பணிமூப்பு அடிப்படையில், புரோமோசன் பெற்று மாவட்ட ஆட்சித் தலைவாராகவும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளாராகவும் ஆனவர்களும் உண்டு.
TNPSC Group1 தேர்வுமுறை UPSC-Civil Service Exam போல இருந்தாலும் சில வேறுபாடுகள் உண்டு. மேலும் தமிழ்நாடு அளவில் நமக்கு இடஒதுக்கீடு இருப்பதால், இந்த தேர்வில் அதிகம் கவணம் செலுத்துவது பயன் அளிக்கும்.
Preliminary Exam. (Prelim)
இந்த Prelim Exam போட்டியாளர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காகவே நடத்தப்படுகின்றது, அதாவது வடிகட்டும் தேர்வு. இதில் TNPSC group1 பொருத்தமட்டில் ஒரு பரிட்சைதான். அதிலும் ‘பொது அறிவு (GK)’ பற்றிய வினாக்களே இடம் பெறும். இதற்க்கு 300 MARKS உண்டு. (For Syllabus and more details Visit http://www.tnpsc.gov.in) Read the rest of this entry »
 

Tags: , , ,

இன்று ஏதாவது கவிதை எழுதினீர்களா?

அறிதலில்லா அறிதல் கவிதை நூலுக்கான என் முன்னுரை

இன்று ஏதாவது கவிதை எழுதினீர்களா?’ என்று கேட்கிறார்கள் சிலர்.

என் கவிதைகளை வாசிக்க வேண்டும் என்ற தாகம் அவர்கள் கண்களில் மிதக்கலாம் அல்லது ஒரு கவிஞனை விசாரிக்கும் சம்பிரதாய கேள்வியாகவும் அது இருக்கலாம்.

இந்தக் கேவிக்கு பதிலாக ‘இல்லை’ என்று ஒரு சொல்லிலும் பதில் கூறலாம் அல்லது எனக்கு எப்பொதெல்லாம் கவிதைச் சிறகுகள் முளைக்கும் என்ற ரகசியத்தை விளக்கியும் கூறலாம். ஆனால் நானோ ‘விரைவில் எழுதுவேன் எழுதியதும் முதலில் உங்களுக்குத்தான் அனுப்பிவைப்பேன்’ என்று கூறுவதுண்டு.

இந்த பதிலுக்குப் பின்னணியாய் நான் பிறந்த ஒரத்தநாட்டில் எங்கள் தெருவில் நெடுங்காலம் தபால்காரராய் எங்களுக்கு தபால்ப் பால் ஊட்டிய கண்ணையா என்பவரின் உயர்ந்த பண்பு இருக்கிறது. எங்களுக்குக் கடிதம் வராவிட்டால் ‘இன்று கடிதம் இல்லை’ என்று அவர் சொல்லமாட்டார் ‘அவசியம் நாளை தருகிறேன் தம்பி’ என்று அன்போடும் கனிவோடும் கூறுவார்.

ஒரு கவிதையாவது எழுதாமல் உறங்கச் செல்லாத நாட்கள் அடர் மழைக் காலத்தைப்போல தொடர்ந்து எனக்குச் சிலகாலம் இருப்பதுண்டு. அதே போல கவிதைகளே எழுதாமல் பலகாலம் அப்படியே மௌனமாயும் மூடிக்கிடப்பேன்.

கவிதைகள் என் உயிரின் கதவுகளைத் தட்டும்போது நடு இரவானாலும் உடனே எழுந்து எழுதுவதும் உண்டு, மூளைக்குள் அப்படியே ஒரு சேமிப்பாய்க் கிடத்திவிட்டு பின்னொருநாள் தட்டி எழுப்பி அதற்கொரு வடிவம் அமைக்கப் பாடுபடுவதும் உண்டு. ஆனால் இன்று ஒரு கவிதை எழுதியே தீரவேண்டும் என்று முடிவெடுத்துக்கொண்டு ஒரு நாளும் அமர்ந்ததே இல்லை.

இதில் சில விதிவிலக்குகளும் உண்டு.

தலைப்பு தந்து கவியரங்கம் பாட அழைக்கும்போது வலுக்கட்டாயமாக அமர்ந்து கவிதை எழுத வேண்டிய சூழல் அமையும். அப்ப்டி அமையும் போதெல்லாம் கவிதை எழுதிப் பழகிய அனுபவ விரல்கள் வார்த்தை விளையாட்டுகளில் இறங்கிவிடும். சில சமயம், பழைய கவிதைகளை எடுத்துக் கோத்து இடைச் செருகல்களோடு புதிய கவிதைகள் உருவாக்கும் நிலைப்பாடும் அமையும்.

இங்கே நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், கவிதைகள் என்பன உள்ளத்தில் கருக்கொண்டு உணர்வுகளில் உந்திக்கொண்டு உயிரை உரசிக்கொண்டு அறிவின் சீரமைப்போடு தானே வெளிவருபவை. அப்படி வராதவை கவிதைகளாய் இருப்பதில்லை, வார்த்தை விளையாட்டுக்களாய்த்தான் அமையும்.

ஆகையினால்தான் நான் என் இணையக் குழுமமான அன்புடனில் கவிதைப் போட்டிகளை அறிவித்தபோது கவிதை எழுதுவதற்கு எந்த ஒரு தலைப்பினையும் தரவில்லை. அது மட்டுமல்லாமல் கவிதை எழுதுவதற்கான காலத்தையும் அதிகமாக நீட்டிக்கொடுத்தேன்.

தானாய்க் கனிவதுதான் கனி. தடியால் அடித்துக் கனியவைப்பது என்பதே கவிதை உலகில் தனி.

*

என்னிடம் சமீபகாலமாக சிலரிடமிருந்து ஒரு கேள்வி வந்து அவசரமாய் விழுகிறது. ’கவிதை எழுதுவதை விட்டுவிட்டு எப்போது இறைவனின் வழியில் செல்லப்போகிறீர்கள்?’

இந்தக் கேள்வியை அப்படியே நிராகரித்துவிட்டு நான் நடக்கலாம்தான். ஆனாலும் அதற்கான பதில் எனக்குள் மிதந்துகொண்டிருக்கும்போது அதை இங்கே பத்திரமாய்க் கரையேற்றினால் என்ன என்று தோன்றுகிறது.

நான் கண்டவரை பெரும்பாலான மத நூல்கள் கவிதை நடையிலேயே இருக்கின்றன.

ஏன்?
Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on December 23, 2010 in Uncategorized

 

Tags: , , ,

தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பதினால் ஏற்படும் நன்மைகள், தேர்வில் சாதிக்க தேவையா அடிப்படை விஷயங்களை காண்போம்.

தற்போது தேர்வுகாலம், பல்வேறு போட்டி தேர்வுகள், அரசு நடத்தும் 10 ஆம் வகுப்பு 12-ஆம் வகுப்பு தேர்வுகள் என பல்வேறு தேர்வுகள் மாணவ மாணவிகளை நெருங்கி கொண்டு இருக்கின்றன. இந்த சூழ் நிலையில் நாம் நுழைவு தேர்வுகளிலும், அரசு பொது தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண் எடுத்தால் தான் நாம் நினைக்கும் படிப்பை குறைவான செலவில் படித்து நாம் நினைத்த வேலைக்கு போக முடியும். இந்தியாவை பொருத்தவரை நாம் எடுக்கும் மதிப்பெண் தான் நம்முடைய அறிவு திறனை தீர்மானிப்பதாக இருக்கின்றது. எனவே நாம் கல்வி துறையில் முன்னேற அதிகமாக மதிப்பெண் எடுப்பது கட்டாயமாகின்றது.

examPA_468x336

இந்த பகுதியில் தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பதினால் ஏற்படும் நன்மைகள், தேர்வில் சாதிக்க தேவையா அடிப்படை விஷயங்களை காண்போம்…. Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on December 22, 2010 in Uncategorized

 

Tags: , , , ,