கனவு !

நினைவோட்டங்கள்
நித்திரை வழியாய்
மனத்திரையில்
பிரதிபலித்து
உள்ளுணர்வில்
காண்பதே கனவு

கனவுகள் யாதுமே
காகிதப் பூப் போலாகுமே
களைந்ததும் மறைந்திடும்
கரும்புகைக் கூட்டமே

கனவுகள் யாவருக்கும்
மெய்ப்படுவதில்லை
கவலையுற கண்ணீர்விட
கைச்சேதமில்லை

பகல்க்கனவு பலிக்காதென
பண்டுதொட்டுச் சொல்வதுண்டு
பல்லாண்டு வாழ்ந்திடவும்
பலர்க் கனவு காண்பதுண்டு Continue reading “கனவு !”

இதழுக்கு முத்தம் வேண்டாமா! முத்தத்துக்கு நான் வேண்டாமா!

கண்ணுக்குக் கனவு வேண்டாமா
கனவுக்குச் சிறகு வேண்டாமா
சிறகுக்குக் கவிதை வேண்டாமா
கவிதைக்கு நான் வேண்டாமா
அன்பே நீ எனக்கு வேண்டாமா

நிலவுக்கு முகம் வேண்டாமா
முகத்துக்கு இதழ் வேண்டாமா
இதழுக்கு முத்தம் வேண்டாமா
முத்தத்துக்கு நான் வேண்டாமா
அன்பே நீ எனக்கு வேண்டாமா
Continue reading “இதழுக்கு முத்தம் வேண்டாமா! முத்தத்துக்கு நான் வேண்டாமா!”

கவிதை எழுத… பரப்பரப்பவரா நீங்கள்?

1926768_733669483369464_6327863217158497683_nகவிதை எழுத…
பரப்பரப்பவரா நீங்கள்?
பேனாவை மூடிவைத்துவிட்டு
நல்ல கவிதைத் தொகுப்புகளில்
முழுகி முத்து எடுங்கள் முதலில்!

முழுகும் ஆழம்
உங்களுக்கு சிரமமும் தரலாம்.
அந்த சிரமம்தான்
நீங்கள் எழுதப் போகும்
நாளைய கவிதைகளின்
அஸ்த்திவாரம்!
Continue reading “கவிதை எழுத… பரப்பரப்பவரா நீங்கள்?”

மில்லியன் மக்கள் பேரணிக் கவிதை

குறிப்பு – அமெரிக்காவில் வசித்த பத்து இலட்சத்துக்கும் அதிகமான கறுப்பினத்தவர்கள் வாஷிங்டன் டீ.சி.யில் ஒன்று கூடி தமது உரிமைகள், ஒற்றுமை மற்றும் தமது குடும்பங்களின் பெறுமதி ஆகியவற்றை முன்னிறுத்த ஏற்பாடு செய்யப்பட்ட அரசியல் பேரணியே ‘Million Man March’ என அழைக்கப்படுகிறது. 1995.10.16 ஆம் திகதி இடம்பெற்ற பேரணியானது, அமெரிக்க வரலாற்றிலேயே அதுவரை நடைபெற்றிருந்த மக்கள் ஒன்றுகூடல்களிலும் பார்க்க, விசாலமானதாக அமைந்திருந்தது.
Maya-Angelou
இரவு நீண்டிருக்கிறது
காயம் ஆழமானதாயிருக்கிறது
இருண்டிருக்கிறது பள்ளம் – அதன்
சுவர்கள் செங்குத்தானவை

தொலைதூர சமுத்திரக் கரைதனில்
மரித்துப் போன நீல ஆகாயத்தின் கீழ்
நீங்கள் எட்ட இயலாத் தொலைவில்
கூந்தலால் பிடிக்கப்பட்டு நான் இழுத்துச் செல்லப்படுகிறேன்
உங்கள் கைகள் பிணைக்கப்பட்டிருந்தன
உங்கள் வாய்கள் கட்டப்பட்டிருந்தன
குறைந்தபட்சம் உங்களால்
எனது பெயர் கூறி அழைக்கக் கூட
இடமளிக்கப்படவில்லை
எந்தவொரு ஆதரவுமற்ற நீங்களும்
என்னைப் போலவே
ஆனால் துரதிர்ஷ்டவசமாக
வரலாறு முழுவதும் நீங்கள்
அவமானம் எனும் அடையாளத்தைச் சுமந்தபடி

மீண்டும் சொல்கிறேன்
இரவு நீண்டிருக்கிறது
காயம் ஆழமானதாயிருக்கிறது
இருண்டிருக்கிறது பள்ளம் – அதன்
சுவர்கள் செங்குத்தானவை

ஆனாலும் இன்று
புராதன ஆத்மாக்களின் ஒலி எழுகிறது
நூற்றாண்டுகளையும் வருடங்களையும் கடந்து
சமுத்திரங்களையும் கடல்களையும் தாண்டி
ஆழமான வார்த்தைகளால் எம்மிடம் உரைக்கின்றன
‘ஒன்றாயிணைந்து இனத்தைக் காப்பாற்றுங்கள்
தொலைதூர இடமொன்றில் விடுதலை வேண்டி நீங்கள்
ஏற்கெனவே இழப்பீட்டைச் செலுத்தி விட்டீர்கள்’

எமது அடிமைச் சங்கிலிகள்
விடுதலை வேண்டி மீண்டும் மீண்டும்
தம் இழப்பீட்டைச் செலுத்தியதை
அவை நினைவுபடுத்துகின்றன

இரவு நீண்டிருக்கிறது
காயம் ஆழமானதாயிருக்கிறது
இருண்டிருக்கிறது பள்ளம் – அதன்
சுவர்கள் செங்குத்தானவை

நாம் வாழ்ந்த,
இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கும்
நரகமானது,
எமது புலன்களைக் கூர்மைப்படுத்தியிருக்கிறது
எமது இலக்குகளை இறுக்கமாக்கியிருக்கிறது

இரவு நீண்டிருக்கிறது
இன்று காலை உங்கள் வேதனைகளினூடு
உங்கள் ஆன்மாக்களை எட்டிப் பார்த்தேன்
ஒருவரோடு ஒருவர் நம்மை நாமே
பூரணப்படுத்திக் கொள்ளலாமென நானறிவேன்

உங்கள் நிலைப்பாட்டினூடும் மறைந்த மாறுவேடத்தினூடும்
நான் பார்த்தேன்
உங்கள் கபிலநிற விழிகளில் தேங்கியிருந்த
உங்கள் குடும்பம் மீதுள்ள நேசத்தை நான் கண்டேன்

நான் கூறுகிறேன் கை தட்டுங்கள்
இணைந்துகொள்வோம் இச் சந்திப்பு மைதானத்தில்

நான் கூறுகிறேன் கை தட்டுங்கள்
பழகிக் கொள்வோம் ஒருவரோடொருவர் நேசத்தோடு

நான் கூறுகிறேன் கை தட்டுங்கள்
ஒன்றாய் எழுவோம் தாழ்ந்த பாதையினூடு

கை தட்டுங்கள் ஒன்றாக வந்து
வெளிப்படுத்துவோம் எம் இதயங்களை

ஒன்றாயிணைந்து வருவோம்
எமது மனநிலைகளை மாற்றியமைக்க

ஒன்றாயிணைந்து வருவோம்
எமது ஆன்மாக்களைத் தூய்மைப்படுத்த

கை தட்டுங்கள் இறுமாப்புக்களைக் களைந்து
எம் வரலாற்றைத் திரிபுபடுத்துவதை நிறுத்துவோம்

கை தட்டுங்கள்
ஓரங்கட்டப்பட்ட ஆன்மாக்களை அழைப்போம்

கை தட்டுங்கள்
வரவேற்போம் நாம்
எமது உரையாடல்களில் மகிழ்ச்சியை
எமது படுக்கையறைகளில் மரியாதையை
எமது சமையலறைகளில் கருணையை
எமது முன்பள்ளிகளில் பாதுகாப்பை

மூதாதையர் நினைவுருத்துகின்றனர்
வரலாறானது வேதனை மிக்கதெனினும்
நாம் முன்னே செல்லும் வழித்தோன்றல்களென்பதையும்
மீண்டும் எழும் மனிதர்களென்பதையும்

நாங்கள் எழுவோம்
மீண்டும் மீண்டும் !

– மாயா ஏஞ்சலோ
தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

மாயா ஏஞ்சலோ (1928 – 2014) :

1928 ஆம் ஆண்டு கறுப்பின அமெரிக்கக் குடும்பத்தில் பிறந்த மாயா ஏஞ்சலோ (மாகிரட் ஆன் ஜான்சன்), வட கரோலினாவிலுள்ள தனது வீட்டில் இருதய நோயின் காரணமாக, கடந்த மே 26 ஆம் திகதி, தனது 86 வயதில் காலமானார். சிறு வயதில் பெற்றோரால் கைவிடப்பட்ட இவர், தனது எட்டு வயதில் தாயாரின் காதலனால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட காரணத்தால் அதிர்ச்சியில் பேசும் திறனிழந்து பல வருடங்களை துயரத்தோடு கழித்தவர். வறுமையினாலும், இனப்பாகுபாட்டின் காரணத்தாலும் பல துயரங்களை அனுபவித்தவர். எழுதுவதோடு நிற்காமல், நடைமுறை வாழ்க்கையில் சிறந்த முறையில் சாதித்துக் காட்டியவர் இவர்.

தனது வாழ்நாள் முழுவதும் காத்திரமானதும், பிரபலமானதுமான பல கவிதைகளை எழுதியுள்ள இவர், திரைப்படத் துறையிலும் பணி புரிந்திருக்கிறார். ஆறிற்கும் அதிகமான மொழிகளில் தேர்ச்சி கண்ட இவர் அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்துள்ளதோடு, எகிப்து, கானா நாட்டுப் பத்திரிகைகளின் ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார். எந்தவொரு பல்கலைக்கழகத்திலும் கற்றில்லாத போதிலும் கூட, உலகம் முழுவதிலுமுள்ள முப்பதிற்கும் அதிகமான பல்கலைக்கழகங்கள் இவருக்கு கௌரவப் பட்டங்களை வழங்கி கௌரவித்திருக்கின்றன.

நன்றி
M.RISHAN SHAREEF-HEARTS எம்.ரிஷான் ஷெரீப்by எம்.ரிஷான் ஷெரீப்
http://www.rishantranslations.blogspot.in/2014/08/blog-post.html

கவிதை கிடைத்துவிட்டது

Man Opening Third Eyeஒரேயொரு கவிதையேனும்
எழுதிவிடவேண்டுமென்று
ஒரு கதாசிரியனுக்கு
உயிருறங்காத தாகம்

பிடித்தச் சிறுகதையொன்றை
பிடித்துக் கட்டுகிறான்
கொம்பில்

வாக்கியம் வாக்கியமாய்
உரித்தெடுக்கிறான்
நடுப்புள்ளிவிட்டு
நழுவிய குற்றவாளிகளென்று

  • வார்த்தை வார்த்தையாய்க்
    கத்தரிக்கிறான்
    அனாவசியத் தொந்தியென்ற
    அவசியத் தீர்மானத்தோடு

    எழுத்து எழுத்தாய்க்
    கிள்ளியெறிகிறான்
    சொல்லிலும் வேண்டுமே
    சுருக்கமென்று

    வாசித்து வாசித்துத்
    துள்ளித்துள்ளி குதிக்கிறான்
    கவிதை வந்துவிட்டதென்று

    நெடிதாய்க்
    காய்ந்துகிடந்த சுடுகாடு
    நொடிப்பொழுதில் ஈரமாகிறது
    KavithaikaloduBuhari
    http://anbudanbuhari.blogspot.in/2008/03/blog-post_4304.html

  • படிக்கச் சென்றனர்: துடிக்கக்கொன்றனர்..!!

    சன் செய்தியில் தலைப்புச் செய்தி: (09/10/2013)

    engr-collegeprincipal (1)நெல்லை மாவட்டம் , தூத்துகுடியில் உள்ள தனியார் பொறி இயற் கல்லூரி முதல்வரை, அக் கல்லூரி மாணவர்களே அரிவாளால் வெட்டிக் கொன்றனர். – இது நிகழ்ந்தது , காலை எட்டரை மணிக்கு, அவர் தம்முடைய காரில் கல்லூரிக்கு வந்து சேர்ந்த போது.

    நேற்று மாலை, ஒரு மாணவன் மீது முதல்வர் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்காக, அம்மாணவனைக் கல்லூரியிலிருந்து நீக்கியதற்காக மாணவர்கள் அவரை வெட்டிக் கொன்றனர்.

    இச்செய்தியைக் கருவாக வைத்து யான் இன்று எழுதிய கவிதை இதோ:=
    ————————————————————————————
    படிக்கவே அனுப்பிப் பெற்றோர்ப்

    …….. பயத்துடன் இருக்கும் ஆசை

    அடிக்கவா அறிவை ஊட்டி

    ……அனுதினம் வளர்த்தார் ஆசான்?

    வெடிக்குதே மனமும் ஏனோ

    ………விடியலின் சமயம் செய்தி

    படித்ததும் எனக்கும் தானே

    ……..படிப்பவர் செயலை எண்ணி

  • அறிவிலார் நிகழ்த்தும் பாவம்

    ,,,,,,,அனைத்தையும் படித்துப் பார்த்தால்

    அறிவுளோர் அடைவர் சோகம்;

    ……….அவர்களின் குறைகள் என்ன?

    நெறிகளை முறையாய்க் கற்றால்

    ………நிலத்தினில் குருதி சிந்தி

    வெறியுடன் அலைந்துக் கொல்லும்

    …….வெகுளியும் வருமா முந்தி?

    தடியுடன் அரிவாள் கொண்டு

    …….தலையினை உடனே வெட்டி

    முடிவுரை எழுதிச் சென்று

    …….முடிவிலே அவர்தம் பெற்றோர்

    முடிவிலா இருளில் வாழ

    ………முடிந்ததே இவர்கள் கற்றப்

    படிப்பினில் இருந்து நாமும்

    ………படிப்பினைப் பெறுவோம் இன்றே!

    தவறுகள் நடக்கா வண்ணம்

    ………தணிந்துதான் தடுத்தார் ஆசான்

    கவலைகள் பயமும் இன்றிக்

    ……..கலைகளாய்க் கொலையும் ஆச்சு

    அவலமும் வருதல் நோக்கி

    ………அமைதியாய் நடந்தால் என்ன?

    எவருமே உதவ மாட்டார்

    ……….இனிவரும் பலன்தான் என்ன?

    எழுத்தினை அறியச் செய்த

    ………இணையிலா அறிஞர் ஆசான்

    கழுத்திலே அரிவாள் வைக்கக்

    ……….கடுமனம் வருதல் மோசம்

    அழுத்திடும் விழியில் பொங்கும்

    ………..அழுகையில் எழுதிப் பாட

    வழுத்தியே விளிக்கும் ஆசான்

    ……வலியினை நினத்துப் பார்க்க!

    தியாகமும் நிரம்பச் செய்து

    …..தினம்தினம் வறுமை தாங்கி

    வியாதிகள் பெருகக் கண்டும்

    …….விடியலாய் உனையே ஏங்கி

    மயானமும் அழைக்கும் காலம்

    ……வரைக்குமே பொருளை ஈட்டி

    நியாயமாய் அளித்த பெற்றோர்

    …..நினைவினில் வராமல் போச்சே!

    படித்துநீ பெறுதல் பட்டம்

    ……படித்திட விரும்பும் பாரும்

    துடித்திடும் கொலையைக் கற்கத்

    ……..துணையது எவரோ கூறும்?

    குடித்திடும் மதுவா? உள்ளம்

    …….குடிபுகும் விழியாள் தானா?

    கெடுத்திடும் கொலைவெறி உன்னில்

    ……..கொணர்ந்திட வளர்த்தாய்த் தானாய்!

    kalam “கவியன்பன்” கலாம்
    அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்

    “கவித்தீபம்”, “கவியன்பன்” கலாம்,
    அதிராம்பட்டினம் ( பாடசாலை),
    அபுதபி (தொழிற்சாலை)
    வலைப்பூந் தோட்டம்:
    அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844/ 055 7956007
    மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com , kalamkader2@gmail.com

  • தத்துவங்கள் காதலாகிக் கசிந்துருகி வழிகிறது “காதலிக்கிறேன் உன்னை எப்போதும்”

    சேவியர் விமரிசனம் – காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
    1236243_632758293421861_313473699_n
    (கவிஞர் புகாரி & Prof. R.S.மணி & கவிஞர் சேவியர்)

    சிலருக்குக் கவிதை எழுதுவது பொழுதுபோக்கு. சிலருக்கு பொழுதெல்லாம் அதிலேயே போக்கு. இன்னும் சிலருக்கு அது ஒரு தவம். ஆழ்மன ஆராய்ச்சி செய்யும் காதல் தவம். புகாரியின் கவிதைகளைக் கூட அப்படியென்பேன் நான்.

    ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்கு முன் அவருடைய கவிதைகள் பரிச்சயமானது எனக்கு. இன்னும் அந்த முதல்க் கவிதையின் குளிர்ச் சாரலிலிருந்து நான் முழுமையாய் வெளியே வரவில்லை. இப்போது அவருடைய சமீபத்தியக் கவிதைத் தொகுப்பு என்னைப் பழைய நினைவுகளுக்குள் இன்னுமொருமுறை சிறை வைத்திருக்கிறது.

    கவிதைகள் மீது எனக்கிருப்பதைக் காதல் என்று நான் சொன்னால், அவருக்கிருப்பது உயிர்க்காதல் என்றேனும் சொல்ல வேண்டும்.

    சில வேளைகளில் கவிதை நூல்களை வேகமாய் வாசிக்கும் மனநிலை எனக்கும் நேர்வதுண்டு. வேகமாய் வாசிக்க கவிதையொன்றும் தினத்தந்தியல்ல. ஆனாலும் பாதிக் கவிதை வாசித்தபின்னும் பாதிக்காக் கவிதையெனில் அதை வேகமாய்க் கடந்து போகவே மனம் அவசரப்படுத்துகிறது. வேகமாய் வாசிக்க விடாமல் உள்ளிழுத்துக் கொள்ளும் பிளாக்ஹோல் கவிதைகள் கவிஞனை ஒரு தத்துவார்த்தவாதியாக முன்னிறுத்துகின்றன. அந்த தத்துவங்கள் காதலாகிக் கசிந்துருகி வழிகிறது “காதலிக்கிறேன் உன்னை எப்போதும்” நூலில்.

  • கடல்க் கவிதைப் பயணத்தில், தூரப்பார்வைக்கு உயரம் குறைந்த சின்னப்பாறையாய்த் தோன்றி, உள்ளே டைட்டானிக்கையே உடைத்துச் சிதைக்கும் வீரியம் கொண்ட பனிப்பாறைகள் தான் புகாரியின் கவிதைகள். நமது வாழ்வின் நிகழ்வுகளிலிருந்து அவருடைய கவிதைகள் கிளை முளைப்பிக்கின்றன. அவருடைய வாழ்வின் அனுபவங்களிலிருந்து அவை வேர் பெறுகின்றன. அவருடைய தமிழின் வற்றாத் தடாகத்திலிருந்து அவை நீர்பெறுகின்றன.

    இந்த தஞ்சைக் கவிஞனிடம் தஞ்சம் கொண்டிருப்பது சந்த மனசு. ஆனால் இந்தத் தொகுப்பில் சந்தக் கவிதைகளைக் கொஞ்சம் சத்தம் காட்டாமல் அடக்கியே வைத்திருக்கிறார். எனினும் சன்னல் திறக்கையில் சிரித்துக் கடக்கும் சின்னப் புன்னகையாய் ஆங்காங்கே அவருடைய சந்த வீச்சுகள் விழாமலில்லை.

    காதலில்லாமல் எப்படி
    ஒரு நொடி நகர்த்துவது ?

    என்கிறார் புகாரி. அவருடைய இந்த வரிகளைப் புரிந்து கொள்ள அவருடைய காதலுக்கான அர்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அதை தனது முன்னுரையிலேயே எழுதி வாசகனை கவிதைக்குள் வழியனுப்பி வைத்திருக்கும் உத்தி சிலாகிக்க வைக்கிறது !

    காதலிக்கும் ஒவ்வொரு மனிதனும் இவருடைய கவிதைகளின் வரிகளில் விழுந்து விடாமல் இருக்க முடியாது. காதல் கானகத்தின் வரிக்குதிரைகளாய் கவிதை வரிகள் துள்ளித் திரிகின்றன.

    வேகமாய் ஓடிக் கிடந்தவன்
    நிதானமாய் நடக்கிறான்,
    மூர்க்கமாய் முறுக்கித் திரிந்தவன்
    கனிந்து குழைகிறான்

    என காதலிக்கும் இளைஞனின் மனநிலையைப் பதிவு செய்கிறார். மறுத்துப் பேச யாரும் இருக்கப் போவதில்லை. நிதானமாய் மட்டுமா நடக்கிறான். ஆட்டோக்காரனின் “சாவுகிராக்கியை”க் கேட்டால் கூட சிரித்துக் கொண்டேயல்லவா நடக்கிறான்.

    “நேரம் போவதெங்கே தெரிகிறது ?
    உயிர் போவதல்லவா தெரிகிறது ! ?

    எனைக் கேட்டுப் போனேன்
    மரணம் வந்து சேர்ந்தது.
    எதைக் கேட்டுப் போனால்
    நீ வந்து சேர்வாய் ?

    நண்பரின் கவிதைகளிலுள்ள வரிகளில் மனம் தொட்ட வரிகளைப் பட்டியலிட்டால் எல்லா கவிதைகளிலும் வசீகரிக்கும் ஏதேனும் வரிகள் விழுந்து கொண்டேயிருக்கின்றன.

    இந்தத் தொகுப்பு காதலை மட்டுமே பாடினாலும், புகாரியின் கவிதை மனசு காதலைத் தாண்டிய பல பரிமாணங்களையும் கண்டது. அவருடைய பஞ்ச பூதக் கவிதைகள் பரவலான கவனத்தையும், கவனித்த அனைவரின் பாராட்டையும் பெற்றக் கவிதைகள்.

    புகாரி ஒரு சிற்பி என்று சொல்ல மாட்டேன். சிற்பியின் சிற்பங்கள் குடிசைகளில் புரள்வதில்லை. சிற்பங்கள் ஏழைத் தோழனின் முகமாய் பெரும்பாலும் இருப்பதில்லை. அவரை ஓவியன் என்று சொல்லவும் ஒப்புக் கொள்ள மாட்டேன். இப்போது ஓவியங்களெல்லாம் ஐந்து நட்சத்திர ஓட்டல்களின் பணிப்பெண்கள் போல ஒய்யாரச் சுவர்களுக்கே சொந்தமாய்க் கிடக்கின்றன.

    அவரைக் கவிதைக் குயவன் என்பேன்.

    குயவன் தனது பாண்டத்துக்காக நேர்த்தியான மண்ணைத் தேடும் கவனம் அவருடைய வார்த்தைத் தேர்வில் இருக்கிறது. விரல்களின் லாவகம் மண்பாண்டத்தை கைகளை விட்டுக் காகிதத்தில் இறக்கி வைக்கின்றன. உடைந்து விடக் கூடாதே எனும் பதை பதைப்புடன் அடுக்கி வைக்கிறார். பானையில் எத்தனை கொள்ளளவு தேவையோ அதை குயவனே முடிவு செய்கிறார். கடைசியில் பாகுபாடில்லாமல் அதைப் பாருக்குப் பந்தி வைக்கிறார்.

    புகாரி. தமிழை உயிரின் ஆழம் வரை நேசிப்பவர். மனிதனை தமிழின் ஆன்மாவாய் நேசிப்பவர். அவருடைய இந்தத் தொகுப்பு தோளை விட்டு இறங்க மறுக்கும் சின்னக் குழந்தையாய் என் நெஞ்சம் பற்றிக் கிடக்கிறது.

    இன்னும் பல தொகுப்புகளைக் காண அந்த மென் மனசை வாழ்த்துகிறது என் மனசு.

    (கவிஞர் சேவியர்)578558_521293627901662_45723309_n

    15747_102183289806853_100000455463856_55302_1348971_nநன்றி சேவியர் – அன்புடன் புகாரி
    நன்றி http://anbudanbuhari.blogspot.in/2010/12/blog-post.html

  • கொக்குகள் பூக்கும் மரம்

    5075154004_a93e0216c2_zதசாப்தங்கள் பல பார்த்துத் தரித்திருக்கிறது
    காலையில் பறக்கும் கிளைகளை
    தலையில் கொண்ட பெரு விருட்சம்

    ஆற்று நீருக்கு வட்டப் பாலமாய்
    நிழலைக் கொடுக்கும் அம் மரத்தை
    அந்தி சாயும் நேரங்களில் பார்க்க வேண்டும்

    வெள்ளைப் பூக்களென
    வந்து தங்கிச் செல்லும்
    கொக்குகள்
    இரவில் பசித்து விழிக்க நேர்ந்தால்
    கரு முகில்களிடையே நட்சத்திரங்களையுண்ணும்

  • இரை தேடி விடிகாலையில்
    தமதிரு நெடிய கிளைகளையும்
    வயிற்றில் பதித்துப் பறப்பவை
    விருட்சத்தின் தலையில் சூடிக் கொள்ள
    வெண்ணிறகுகளை அன்பாய்க் கொடுத்துச் செல்லும்

    அவற்றைச் சேமிக்கும் மரம்
    காற்றைத் தொட்டு
    இறகுத் தூரிகையால்
    ஓடும் ஆற்றில் கவியெழுதும்

    M.RISHAN SHAREEF– எம்.ரிஷான் ஷெரீப்
    http://mrishanshareef.blogspot.in/2013/06/blog-post_1.html

  • கவிதைக்குப் பொய்யழகு

    1சுனாமியின் வேதனையை ஒரு கவிதையாய்க் கொட்டினால் பாருப்பா, சோகத்தில் ஆதாயம் தேடுகிறான் கவிஞன். இவனுக்கு இப்படிப் பொய்யாய் புலம்பியே பழகிப்போச்சு என்கிறார்கள் அறியாத சிலர். சுனாமியின் தகவல் வந்ததிலிருந்து, கண்கள் கரைபுரண்டோட செய்திகள் கேட்பதிலேயே தவிப்போடு இருந்தேன். சுனாமிக்கு உண்மையான காரணம் என்ன அதை எப்படித் தவிர்க்கமுடியும் என்ற என் சிந்தனை
    எங்கெங்கோ சென்றது.

    நேற்று முதல் காரியமாக அதிகாலையிலேயே, இந்து நாளிதழ் நிவாரண நிதி மூலமாக நிதியளித்தேன். நேற்று நடு இரவில் என் மனதில் தங்கிய சோகம், சிந்தனை, உணர்வுகளின் அலைக்களிப்பு எல்லாம் கவிதையாய் வெளிவந்து கொட்டின.

    ஓவ்வொருவருக்கும், ஒவ்வொரு வடிகால். கவிஞனின் வடிகால் கவிதை. துக்கம் என்பது அழுகையால் மட்டும் வருவதில்லை. கவிதையாலும் வரும். களிப்பில் வருவதுதான் கவிதை என்பது தவறான நினைப்பு. இதுபோன்ற தருணங்களில் வரும் கவிதைகள் வார்த்தை தேடி அலையாது. உணர்வுகளை அப்படியே கொட்டும்.

    கவிஞர்கள் உணர்வுகளால் ஆனவர்கள். பிணங்களைத் தின்று புகழ் தேடமாட்டார்கள். கவிஞன் என்பது அரிதார முகம் அல்ல. அது ஒரு மன இயல்பு. கவிஞன் தன்னை மீறிய உணர்வுகளால் ஆளப்படுபவன்,
    அதைக் கவிதைகளில் இறக்கிவைக்கிறான். அது மிகை என்றும் கவிதைக்குப் பொய்யழகு என்றும்
    கவிதை என்பதே பொய் என்றும் கூறுகிறார்கள் சிலர். Continue reading “கவிதைக்குப் பொய்யழகு”

    என்னடா காதல் இது ?

    என்னடா காதல் இது ?
    ——————————-

    என்ன இது காதல் ?

    மகரந்தச் சேர்க்கைக்காய்
    மலர்கள் மீது
    வந்தமரும்
    வண்ணத்துப் பூச்சிகளாய்,

    ஹார்மோன்களின்
    காட்டுக் கத்தலில்,
    பூவுக்குள்
    பூட்டிக் கொள்ளும் மோகத்தில்,
    இருட்டுக் கதவுகளை
    நோக்கிய
    குருட்டு ஓட்டம் தானே இது !

    மறுப்பீர்களா ?

    சீண்டல்களை
    சிரச்சேதம் செய்துவிட்ட
    ஒரு காதல் ஜோடியைக்
    கைகாட்ட இயலுமா
    உங்களால் ?
    Continue reading “என்னடா காதல் இது ?”