ஏன் இந்த மாற்றம் !? பழசை நாம் வெறுக்கின்றோமா !?

sanku-1நேரத்தை அறிந்து கொள்வதற்காக நம் முன்னோர்கள பலர் இயற்கையையும், சில சாதனங்களையும் தங்களின் வாழ்வின் நடைமுறையில் பயன்படுத்தி வந்தனர். குறிப்பாக சூரியன் சந்திரன் போன்றவற்றின் சுழற்சி முறையிலிருந்து அன்றாட கால அளவை கணக்கிட்டும் வந்தனர். இப்படி படிப்படியாக நாகரிகம் வளர வளர புதுப்புது சாதனங்கள் பலவற்றை கண்டுபிடித்து அவற்றை நம் வாழ்வில் பயன்படுத்த தவறியதில்லை. அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட கருவிகளில் ஒன்றுதான் மின்சார சங்கு.

இவை ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தின் போது, ஆங்கிலேய அதிகாரிகளும், மக்களும் நேரத்தை தெரிந்து கொள்ள, ஊருக்கு பொதுவான இடத்தில் மின்சார சங்கு அமைக்கப்பட்டு, தினமும் அதிகாலை 5 மணி, காலை 8 மணி, மதியம் 1 மணி, மாலை, 6 மணி மற்றும் இரவு 9 மணி போன்ற நேரங்களில் சங்கு ஒலிக்கப்படுகிறது. ஒரு நிமிட கால அளவைக் கணக்கில் கொண்டு ஒலிக்கப்படும் ஓசை ஏறக்குறைய 10 கிலோ மீட்டர் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கக்கூடிய பொதுமக்களின் காதில் விழக்கூடியது.

  • முந்தைய காலக்கட்டத்தில் மின்சார சங்கின் மூலம் ஒலிப்பரப்படும் ஓசையினால் உறங்கிக்கொண்டு இருப்பவர்களை தட்டி எழுப்பவும், அன்றாட பணிகளில் மூழ்கி கிடப்போருக்கு நினைவூட்டவும் பயன்பட்டன. ஆனால் இன்றைய பொழுதில் அறிவியலின் அபரிதமான வளர்ச்சியால் இன்று நேரத்தை அறிந்து கொள்வது நமக்கு கடினமான வேலையில்லை என்றாலும் விஞ்ஞானத்தின் அபரித வளர்ச்சியால் உருவாக்கப்பட்ட கையடக்க கடிகாரங்கள், அலைபேசிகள், ஐபோன் போன்றவற்றால் கால நேரத்தை நாம் அறிந்துகொள்ள முடியும்.

    பழைமையை மறக்காமல், மின்சார செலவினங்களையும் பொருட்படுத்தாமல் மின்சார சங்கின் மூலம் அன்றாடம் ஒலி எழுப்பும் பணிக்கென்று ஊழியர் ஒருவரை நியமனம் செய்து உள்ளாட்சி அமைப்புகள் சிறப்பாக தங்களின் சேவையை செய்துவந்தாலும், இவற்றின் மூலம் பெறப்படும் ஓசை நம்மின் காதைக்கிழிப்பது போல் உணர்கின்றோம். பச்சிளம் குழந்தைகள் வீரிட்டு அழும் குரலை ஆங்காங்கே நாம் கேட்க முடியும். நோயாளிகள் அதிர்ச்சியடைந்து மன உளைச்சலுக்கு ஆளாகிவிடுவதும், இவற்றை வெறுத்து ஒதுக்குமளவுக்கு வணிகர்களிடத்தில் நிறைய மாற்றங்கள் காணப்படுவதும் உண்டு. இதனைச் சுற்றியுள்ள வழிபாட்டுத்தளங்களுக்கும் இடையுறாக இருக்கின்றன என்பதையும் நம்மால் மறுக்க முடியவில்லை.

    ஏன் இந்த மாற்றம் !? பழசை நாம் வெறுக்கின்றோமா !?

    சேக்கனா M. நிஜாம்
    Source : http://nijampage.blogspot.in/2012/12/blog-post_11.html

  • வீண் விரயம் செய்யாதீர்கள்

    8-48-0-55படர விடப்பட்ட, மற்றும் படர விடப்படாத தோட்டங்களையும், பேரீச்சை மரங்களையும், மாறுபட்ட உணவான தானியங்களையும், (தோற்றத்தில்) ஒன்று பட்டும் (தன்மையில்) வேறு பட்டும் உள்ள மாதுளை மற்றும் ஒரிலவ மரங்களையும் அவனே படைத்தான். அவை பலன் தரும் போது அதன் பலனை உண்ணுங்கள்! அதை அறுவடை செய்யும் நாளில் அதற்குரிய (ஸகாத் எனும்) கடமையை வழங்கி விடுங்கள்! வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் நேசிக்க மாட்டான். திருக்குர்ஆன் 6:141.

    இறைவனால் உலகில் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களுக்கும் அவைகளின் உடல் அமைப்பிற்கு ஏற்றவாறும், அவைகளின் மனம் ஒப்புமாறும் உண்டு வாழ்வதற்குத் தேவையான உணவு வகைகளை தாவரங்கள், கால்நடைப் பிராணிகள் மூலம் இறைவனே ஏற்படுத்திக் கொடுத்தான்.

    அனைத்து வகை உயிரினங்களும் தன்னுடையத் தேவைக்குப் போதுமான அளவு உண்டுப் புசித்து தன்னைப் படைத்தவனுக்கு நன்றி செலுத்துகின்றன.

    தேவைக்கு மீறி சமைப்பதும், மிஞ்சுவதைக் கொட்டுவதும்.

  • மனிதனுடைய உள்ளத்தில் இதுப் போதாது, இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்று சொத்து சேர்ப்பதிலிருந்து நாவுக்கு சுவையானத் தீணிப் போடுவது வரை எல்லா நிலைகளிலும் எல்லை இல்லாத ஆசையை விதைத்து பொருளாதாரத்தை விரயமாக்கச் செய்வது ஷைத்தானின் வேலையாகும். அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்கள் மெச்சுவதற்காகத் தமது செல்வத்தைச் செலவிடுவோர் (ஷைத்தானின் நண்பர்கள்). யாருக்கு ஷைத்தான் நண்பனாக ஆகி விட்டானோ அவனே கெட்ட நண்பன். திருக்குர்ஆன் 4:36

    உள்ளத்திற்கு கடிவாளமிட்டு எந்த தேவைக்கும் குறிப்பிட்ட அளவை நிர்ணயித்தக் கொண்டு போதுமென்ற சிந்தனையை யார் உருவாக்கிக் கொள்வாரோ அவரே இறைவனின் திருப்பொருத்தத்திற்கு உகந்த அடியாராவார் இறைவனின் அடியானின் பக்கம் ஷைத்தான் நெருங்க மாட்டான். …உன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட உனது அடியார்களைத் தவிர (மற்றவர்கள்) அனைவரையும் வழி கெடுப்பேன்” என்று கூறினான். திருக்குர்ஆன் 15:40

    இன்றுப் பார்க்கின்றோம்.

    எதை உண்ணுவது என்றுக் கூட முடிவெடுக்க முடியாத அளவுக்கு பல வகை உணவுகளை பணக்கார வீடுகளில் தயார் செய்து அளவுக்கு மீறிப் பறிமாறுவதும் அதனால் உண்ண முடியாமல் மீதம் வைப்பதை குப்பையில் கொட்டுவதும் அவர்களது அன்றாட வழக்கமாகி விட்டது.

    யதார்த்தமாக மிஞ்சுவது என்பது வெறு

    வேண்டுமென்றே வெரைட்டிகளை அதிகப்படுத்தி உண்ண முடிமாமல் கொட்டுவது என்பது வேறு.

    இதில் இரண்டாவது நிலையே இன்று வசதி படைத்தவர்களின் வீடுகளில் அதிகபட்சம் நடந்து வருகிறது. சமைக்கும் பொழுதே பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் ( முஸ்லீமாக இருந்தாலும், முஸ்லீமல்லாதோராக இருந்தாலும் ) சிறிதை சேர்த்து சமைக்கச் சொல்கிறது ஈகை குணத்தை வலியுருத்தும் இஸ்லாம். அபூதர்ரே ! நீர் குழம்பு சமைத்தால் அதில் சிறிது தண்ணீரை அதிகப்படுத்திக் கொள்வீராக ! அதன் மூலம் உமது அண்டை வீட்டாரை கவனிப்பீராக ! என்று கருணை நபி(ஸல்) அவர்கள் உபதேசம் செய்தார்கள். ஆதாரம் : முஸ்லிம்.

    அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) அவர்களின் வீட்டில் ஒரு ஆடு அறுக்கப்பட்ட பொழுது இதிலிருநது பக்கத்து வீட்டு யூத குடும்பத்திற்கும் கொடுத்தீர்களா ? என்று கேட்டு விட்டு அண்டை வீட்டாரை எனது வாரிசாக்கி விடுவாரோ என்று எண்ணும் அளவுக்கு ஜிப்ரீல் என்னிடம் வலியுறுத்திக் கொண்டிருந்தார் என்று நபி (ஸல்)அவர்கள் கூற நான் கேட்டேன் என்று அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) அவர்கள் அவர்களது வீட்டாரிடம் கூறினார்கள் ஆதார நூல்: திர்மிதீ

    உணவு வகைகளும், அளவும் கூடுதலாக இருக்கிறதென்றுக் கருதி சமையலறையிலேயே சிறிதை பக்கத்து வீட்டாருக்காக ஒதுக்குவதில்லை சமைப்பது அனைத்தும் டைனிங் ஹாலுக்குப் போய் கைகளால் புறட்டப்பட்டு மிஞ்சுவது குப்பைக்குப் போய் விடுகிறது.

    விருந்துகளிலும் இதே நிலை.

    ஒரு காலத்தில் விருந்துகளில் தயார் செய்யப்படும் பிரியானி உணவில் இறைச்சி இட்டு சமைப்பார்கள். அதனுடன் வெங்காயம் தயிர் கலந்த ஊறுகாய் ஒன்று மட்டும் அதிகமாக சேர்த்து கொள்வார்கள்.

    அது சிறிது காலத்தில் வசதி படைத்தவர்களின் விருந்தில் முன்னேற்றம் அடைந்து முட்டை சேர்க்கப்பட்டது,

    இன்று அதுவும் முன்னேற்றம் அடைந்து அவைகளுடன் சிக்கன் ஃப்ரை, அல்லது சிக்கன் சிக்ஸ்டி ஃபைவ் சேர்க்கப்படுகிறது.

    இனிவரும் காலங்களில் அதனுடன் காடை, கொக்கு ஃப்ரை ஐட்டங்களும் சேர்க்கப்படலாம்.

    பெரும்பாலும் விருந்துகளுக்கு பிரபலங்கள் அழைக்கப்படுவதால் வெரைட்டிகளை அதிகப்படுத்துகின்றனர் விருந்தினர் அதிலொன்றும், இதிலொன்றுமாக கை வைத்து விட்டு அப்படியே விட்டு விடுகின்றனர் அவைகளும் பெருமளவில் குப்பைகளுக்கே செல்கின்றன.

    இஸ்லாம் தடை செய்கிறது.

    இவ்வாறு செய்வதை இஸ்லாம் வண்மையாக கண்டிக்கிறது எந்தளவுக்கென்றால் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது கையிலிருந்து தவறி கீழே விழும் சிறுத் துண்டு உணவைக் கூட எடுத்து துடைத்து விட்டு சாப்பிடச் சொல்கிறது இஸ்லாம் …உங்களில் ஒருவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் ஒருத் துண்டு உணவுப் பொருள் கீழே விழுந்து விட்டால் அதில் அசுத்தம் ஏதும் பட்டிருந்தால் அதை நீக்கி விட்டு சாப்பிடட்டும் அதை ஷைத்தானுக்கு விட்டு விட வேண்டாம் என்று அறிவின் பொக்கிஷம் அண்ணல் நபி(ஸல்)அவர்கள் அறிவுருத்தினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள். நூல்கள்: முஸ்லிம், அஹமத், அபூதாவூத், திர்மிதி.

    ஒரு சிறுத் துண்டைக் கூட ஷைத்தானுக்கு விட வேண்டாம் என்று இஸ்லாம் கூறுகையில் தட்டை, தட்டையாக கொண்டுப் போய் குப்பையில் தட்டலாமா ? சிந்தித்தால் சீர் பெறலாம்

    விருந்துகளுக்கு அழைக்கப்படுபவர்களில் ஏழைகளும் இருக்க வேண்டும் என்று ஏற்றத் தாழ்வுகளைக் கலைந்து சமநிலைப படுத்திய இஸ்லாம் வலியுருத்துவதுடன் ஏழைகள் அழைக்கப்படாத விருந்தே விருந்துகளில் வெறுக்கத்தக்கது என்றும் கண்டிக்கிறது இஸ்லாம். வலீமா விருந்துகளில் கெட்ட விருந்து பணக்காரர்கள் அழைக்கப்பட்டு ஏழைகள் புறக்கனிக்கப்படும் விருந்தாகும் என்று பெருமானார்(ஸல்) அவரகள் கூறியதாக அபூஹூரைi(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். புகாரி-முஸ்லீம்

    ஏழைகள் என்பவர்கள் எங்கிருந்தோ தேடிக் கண்டுப் பிடித்து அழைத்து வரப்படுபவர்கள் அல்ல மாறாக ஒவ்வொரு பணக்காரர்களின் குடும்பத்திலும் ஏழைகள் இருக்கின்றனர் அவர்களும் விருந்துக்கு அழைக்கப்பட்டால் அதிகபட்சம் உணவுகள் குப்பைக்குப் போகாது.

    ஆனால் விருந்துகளில் கலந்து கொள்ள வரும் பிரபலங்கள் இந்த ஏழைகளைக் கண்டால் முகம் சுளிக்கலாம் என்றுக் கருதியேப் பெரும்பாலும் இரத்த உறவுகளாகிய ஏழைகள் அழைப்பதில்ல. அழைத்தாலும் இவர்களுடன் அல்லாமல் வேரொறு ஹாலுக்கு அனுப்பப்படுவார்கள் அதனால் அவர்களது உணவுகளை குப்பையில் கொட்ட வைத்து அல்லாஹ் அவர்களை ஷைத்தானின் தோழர்களாக்கி விடுகின்றான்.

    அல்லாஹ் மனிதனுக்குப் பொருள் வளத்தை அதிகப்படுத்த, அதிகப்படுத்த மனிதன் தன்னுடைய சுகபோகத்திற்காக, சுயநலனிற்காக தனக்குப் பொருள் வளத்தை வழங்கிய அல்லாஹ்வை மறந்து அதை வீண் விரயம் செய்து ஷைத்தானின் தோழனாகி விடுகின்றான்.

    இது இந்தியாவின் நிலை என்றால் ? அரபு நாடுகளின் நிலையோ இதை விட மோசம் எனலாம்.

    விருந்து நடந்து முடிந்தப் பகுதியின் குப்பைத் தொட்டிகள் அனைத்தும் உயர் தர உணவுகளால் நிரம்பி வழிந்து ரோடுகளிலும் சிதறிக் கிடப்பதைக் காணலாம்.

    ஒரு காலத்தில் இஸ்லாமிய நாடுகளை ஆளும் ஆட்சியாளர்கள் இஸ்லாமிய ஒழுக்க நெறிமுறைகளை பின்பற்றி வாழ்ந்தார்கள், தங்களின் ஆட்சி அதிகாரத்திற்குட்பட்ட மக்களையும் இஸ்லாமிய ஒழுக்க நெறிமுறைகளை பின்பற்றி வாழும்படி ஏவினார்கள்.

    இன்றைய ஆட்சியாளர்கள் அவற்றிற்கு நேர்மாறான வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர்.

    Ø ஒரு மன்னர் குடும்பத்தில் பிறந்திருக்கா விட்டாலும் பரவாஇல்லை,

    Ø ஒரு அமீர் குடும்பத்திலாவது பிறந்திருக்கக் கூடாதா ?

    என்று அவர்களின் ஆடம்பர வாழ்க்கையைக் கண்டு ஏழைக் குடிமக்கள் ஏங்கித் தவிக்கும் மோசமான முன்மாதிரிகளாக ஆகிக் கொண்டார்கள்.

    இவர்களின் வீடுகளில் தயார் செய்யப்படும் உணவு வகைகளை சொல்லவே வேண்டியதில்லை எனும் அளவுக்கு மிதமிஞ்சி குப்பைத் தொட்டிகளை நிறைத்து வருகின்றனர்.

    நல்ல முன் மாதிரி

    சமீபத்தில் ஆஸ்திரேலிய ஸிட்னி நகரில் சர்ரி ஹில்ஸ் என்ற ஊரில் இயங்கும் ஓட்டல் ஒன்றில்

    Ø சாப்பாட்டை மீதம் வைத்தால் அபராதம் விதிக்கப்படும் என்றும்,

    Ø முழுமையாக சாப்பிட்டால் 30 சதவிகிதம் விலையில் சலுகை வழங்கப்படும் என்றும் அறிவித்து போர்டு வைத்துள்ளனர். http://www.dailythanthi.com/article.asp?NewsID=571928&disdate=6/6/2010

    இந்த முன் மாதிரியை அனைத்து ஹோட்டல்களிலும் பின்பற்றினால்,

    மீதம் வைக்காத அளவுக்கு போதுமான சாப்பாட்டை வீடுகளில் சமைத்தால்,

    விருந்துகளில் ஏழைகளும் அழைக்கப்பட்டு சமமாக நடத்தப்பட்டால்,

    அல்லாஹ்வின் அருட்கொடையாகிய உணவு குப்பைக்கு செல்வதை ஓரளவாவது தடுத்து நிருத்த முடியும்.

    அவ்வாறு தடுத்தால் ஷைத்தான் நுழையும் வழிகளில் ஒன்றை அடைத்து ஷைத்தானின் சூழ்ச்சி முறியடிக்கப்படும்.

    இறைவனின் அடியார்களை அவனின் நிணைவிலிருந்து திசை திருப்புவதற்காக ஷைத்தான் வகுத்தப் பலவழிகளில் பொருளாதாரத்தை வீண் விரயம் செய்வதற்காக தூண்டும் வழி முக்கியமான வழியாகும்.

    அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்கள் மெச்சுவதற்காகத் தமது செல்வத்தைச் செலவிடுவோர் (ஷைத்தானின் நண்பர்கள்). யாருக்கு ஷைத்தான் நண்பனாக ஆகி விட்டானோ அவனே கெட்ட நண்பன். த்ல்மச்;என்;ஙக்; 4:36

    Ø உணவு இறைவனின் அருட் கொடை இந்த அருட் கொடையை வீதியில் வீசி எறியலாமா ?

    Ø வீதியில் வீசி எறியும் அளவுக்கு மிதமிஞ்சி விருந்து செய்யலாமா ?

    Ø இன்று உலகில் எத்தனையோ மக்கள் உணவு கிடைக்காமல் செத்து மடிவதற்கான காரணங்களில் குறிப்பிட்ட ஓரிடத்தில் உணவுகள் சீரழிக்கப்படுவதும் முக்கியக் காரணம் என்பதை பலருடைய மனம் ஏற்க மறுக்கின்றது ஏனோ ???

    சிந்தியுங்கள் சீர் பெறுவீர்கள்.
    Source :http://tamilislamsite.blogspot.in/2010/07/blog-post_18.html

  • அஞ்சோன் அஞ்சு

    ஒரு குழுமத்தில் ஆளுக்கு ஒரு எண் கொடுத்து கவிதை எழுதச் சொன்னார்கள். எனக்கு வந்தது அஞ்சு. நானும் எழுதினேன். அது ஒரு காலம். இதையும் கவிதைக் கணக்கில் சேர்த்துக்கங்க, தப்பில்லை!

    அஞ்சோன் அஞ்சு (மார்ச் 2002)

    அஞ்சாத சிங்கம்போல்
    அஞ்சுபத்திப் பாடவந்தேன்
    அய்யாவும் அம்மாவும்
    அக்கறையாக் கேப்பியலா
    கொஞ்சம் அக்கறையாக் கேப்பியலா

    நஞ்சோடு நாகந்தான்
    அஞ்சுதலை விரிச்சாக்கா
    நடுநடுங்கிப் போவியலா
    குலைநடுங்கி சாவியலா
    சும்மா குலைநடுங்கி சாவியலா

    பஞ்சநதிப் பாஞ்சோடும்
    பஞ்சாப்ப பாத்தியலா
    பஞ்சாப்பு வரப்புக்கும்
    பக்கத்துல நிப்பியலா
    அய்யா பக்கத்துல நிப்பியலா

    அஞ்சுவிரல் இல்லாம
    கையுமொரு கைதானா
    அஞ்சுபுலன் இல்லாம
    உசுருமொரு உசுர்தானா
    அய்யா உசுருமொரு உசுர்தானா

    சொகமுன்னா என்னான்னு
    அளந்துத்தான் பாத்தியலா
    சொர்க்கத்தை அளப்பதுக்கும்
    அஞ்சேதான் வேணுமுங்க
    அய்யா அஞ்சேதான் வேணுமுங்க

  • மகராசந் தங்கிவர
    மாளிகையா விடுதிங்க
    மாளிகையின் சொகத்துக்கு
    நச்சத்திரம் அஞ்சுங்க
    அய்யா நச்சத்திரம் அஞ்சுங்க

    அஞ்சுமணிக் காலையிலும்
    அஞ்சுமணி மாலையிலும்
    ஆகாயத் திரையெல்லாம்
    அழகுன்னா அழகுங்க
    அய்யா அழகுன்னா அழகுங்க

    அஞ்சருவி பாத்தியலா
    அம்புட்டுந் தேனுங்க
    அழுக்கோடு நெஞ்சத்தை
    அலசித்தான் போகுங்க
    சும்மா அலசித்தான் போகுங்க

    அஞ்சுக்கே எந்திரிச்சா
    ஆயுளுக்கே தெம்புங்க
    அஞ்சுமணிக் காத்துக்கு
    அம்புட்டும் பூக்குங்க
    அய்யா அம்புட்டும் பூக்குங்க

    அஞ்சுமணி ஆனாக்கா
    அலுவலகம் விட்டாச்சு
    அஞ்சுநாளு போனாக்கா
    அந்தவாரம் முடிச்சாச்சு
    சோரா அந்தவாரம் முடிச்சாச்சு

    அஞ்சேதான் பருவமுங்க
    அவனியிலே பெண்ணுக்கு
    ஆரம்பம் கொழந்தைபின்
    சிறுமியாயாகி சிறகடிப்பாள்
    சின்னச் சிறுமியாய்ச் சிறகடிப்பாள்

    நெஞ்சத்தைப் பஞ்சாக்கும்
    கன்னியவள் மனைவியாகி
    நெறமாசங் கொண்டாடி
    தாயாகி நெறஞ்சிடுவாள்
    அருமைத் தாயாகி நெறஞ்சிடுவாள்

    அஞ்சு அறைப் பெட்டித்தான்
    அடுக்களைக்கு பொக்கிசங்க
    அஞ்சில்லாச் சாப்பாட்டில்
    அடுப்புக்கும் வெறுப்புங்க
    அய்யா அடுப்புக்கும் வெறுப்புங்க

    அஞ்சுப்பொன் சிறப்புங்க
    அஞ்சுப்பால் அறிவீங்க
    அஞ்சுபெரும் காவியங்கள்
    அழகுதமிழ் சொல்லுங்க
    அய்யா அழகுதமிழ் சொல்லுங்க

    அஞ்சுக்கே வளையாட்டி
    அம்பதுக்கும் வளையாது
    அஞ்சோடு சேராட்டி
    பாடந்தான் ஏறாது
    பள்ளிப் பாடந்தான் ஏறாது

    அய்யெட்டு ஆனாத்தான்
    அமைதிக்கே வருவீங்க
    அதுவரைக்கும் ஆடாத
    ஆளுந்தான் ஏதுங்க
    அய்யா ஆளுந்தான் ஏதுங்க

    அஞ்சேதான் பூதங்கள்
    அந்நாளில் சொன்னாங்க
    அஞ்சுக்குள் அடங்கித்தான்
    அத்தனையும் சுத்துதுங்க
    அய்யா அத்தனையும் சுத்துதுங்க

    அஞ்சாம மேடையில
    ஆனவரைச் சொல்லிப்புட்டேன்
    அய்யாவே அம்மாவே
    அசரடிங்க கையத்தட்டி
    சும்மா அசரடிங்க கையத்தட்டி
    Source : http://anbudanbuhari.blogspot.in/
    என்னைப்பற்றி
    ——————————————-
    anbudanBuhari2004
    வானூறி மழை பொழியும் வயலூறி கதிர் வளையும் தேனூறி பூவசையும் தினம்பாடி வண்டாடும் காலூறி அழகுநதி கவிபாடிக் கரையேறும் பாலூறி நிலங்கூட பசியாறும் உரந்தையில் நான் பிறந்தேன்

    தஞ்சாவூரையும் பட்டுக்கோட்டையையும் இணைத்து ஒரு கோலம் போட்டால் சிரிக்கும் பூசணிப்பூவை நீங்கள் ஒரத்தநாட்டின் கொண்டையில்தான் செருகவேண்டும்.

    தென்னங்கீற்றைப் போல வாரி வகிடெடுத்த தெருக்கள் ஒரத்தநாட்டிற்குப் பேரழகு. உரந்தை என்று சுருக்கமாக அதன் பெயர் கொஞ்சப்படும்.

    என் ஊரைப்பற்றி நான் சொல்லிவிட்டேன் என்னைப்பற்றி என் கவிதைகள் சொல்லட்டும்.

    நேர்காணல்
    ஒரத்தநாடு
    ஒரு கவிதையின் கதை
    எனக்கு மின்னஞ்சல் அனுப்ப

    செல்பேசி 416-500-0972

  • ஒன்றை இழந்தால்தான் மற்றதனை பெறமுடியும்.

    eid_greetings
    ‘அப்பா ரொம்ப தொலைவில் வெளிநாட்டில் இருக்காரே நம்ம மேலே அன்பா இருந்து நம்மை நினைத்து பார்ப்பாரா அம்மா`

    ‘நிட்சயமாக நம்ம நினைவில்தான் இருப்பார்.’

    அப்பா இந்த பெருநாளுக்கு ஊருக்கு வரமாட்டாரா அம்மா !’

    ‘நீ படிக்க பணம் வேணுமே! அதுக்குத்தான் உங்க அப்பா அங்கே தங்கி இருக்காங்க . இன்சாஅல்லாஹ் அடுத்த பெருநாளுக்கு நம்முடன் இருப்பார் . நீ நல்லா பெருநாள் கொண்டாடவேண்டும் என்றுதான் நினைக்கிறார், அதனால்தான் அவர் உனக்கு பணம்,சட்டை பாவாடை எல்லாம் அனுப்பி இருக்கின்றார்.’

    பிள்ளைகளை, மனைவியை மற்றும் குடும்பத்தாரை பிரிந்து பணத்திற்காக வாழ வேண்டிய கொடுமை . குடும்பத்தாரை பிரிந்து வெளிநாட்டில் இருக்கும் மக்களை பார்பவர்களுக்கு மகிழ்வாக இருப்பொழுதுபோல் இருக்கும் ஆனால் அவர்களின் மன வலி அவர்கள்தான் அறிவார்கள்.

    எல்லோருக்கும் எல்லாம் எப்பொழுதும் கிடைத்துவிடுமா !
    எங்கிருந்தாலும் குடும்பத்தினை மறக்கமுடியுமா? நினைவைத்தான் பிரிக்கமுடியுமா? குடும்பத்தினை மறந்து வாழ்வில் மகழ்ச்சி காண முடியுமா‌! குடும்பத்தினை பாதுகாக்க திரைகடல் ஓடியும் திரவியம் தேட வேண்டிய நிலமை என்ன செய்வது ! ஒன்றை இழந்தால்தான் மற்றதனை பெறமுடியும்.

    ‘செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உமர் இப்னு கத்தாப்(ரலி) மேடையிலிருந்து அறிவித்தார்கள். – 1 ஸஹீஹுல் புகாரி ஹதீஸ்

    சமூக அவலத்தை நினைத்து சித்திப்பது தொடரட்டும்…

    inspiration_quotes_graphics_b3சமூக அவலத்தை நினைத்து சித்திப்பது தொடரட்டும்…

    ஒருவர் இன்னொருவரை ஏமாற்றி போலியான உறவுமுறையை ஏற்படுத்திக்கொண்டு தங்களின் உடல் இச்சையை தனித்துக்கொள்வதே “கள்ளக்காதல்” என சமூகத்தால் குறிப்பிடப்படுகிறது.

    1. மனிதாபிமானம், அன்பு, பாசம், குழந்தைகள், அவர்களின் எதிர்காலம் என்று எதையுமே பொருட்படுத்தாமல் சுயநலம், சபலம், காமம், துரோகம் என்பதை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படும் கேடு கெட்ட மனிதர்கள் ஒரு வகையாகவும்…

    2. கணவன் எங்கோ போய் குடும்பத்துக்காக உழைத்துக் கொண்டிருக்கையில் இங்கே கள்ளக்காதலனோடு தொடர்பு ஏற்படுத்தி அவர்களின் போலியான அன்பையும், பாசத்தையும் உண்மை என நம்பி தனது குடும்ப அந்தரங்க ரகசியங்களைச் சொல்லி அவர்களிடம் ஏமாந்து போனவர்கள் மற்றொரு வகையாகவும்…

    3. பிள்ளைகள் கல்வி கற்க வேண்டி வீட்டை விட்டு வெளியேறி, பள்ளிக்கூடம். காலேஜ், ட்யூசன், கம்ப்யூட்டர் கிளாஸ், ட்ரைனிங் கிளாஸ், ஹாஸ்டல், இண்டெர்நெட் கஃபே, கிளப், பப், சுற்றுல்லா என்று போகும் இடங்களில் அவர்கள் “காதல்” வலையில் சிக்கிக்கொண்டு இந்த இனம்புரியாத வயதில் சின்னாபின்னமாகி போனவர்கள் ஒரு வகையாகவும்…

  • 4. பொழுதைப் போக்குகின்ற விழாவில் ஏற்பட்ட சந்திப்பு, தொலைத்தொடர்புகள் மூலம் ஏற்பட்ட தொடர்பு போன்றவற்றால் வீட்டை விட்டு ஓடிப் போனவர்கள் இன்னொரு வகையாகவும்…

    5. குடும்ப உறுப்பினர்கள், அக்கம்பக்கத்தினர் சிலரால் ஏற்பட்ட முறையற்ற தொடர்பைக் கொண்டுள்ளவர்கள் மற்றொரு வகையாகவும்…

    என சமூகத்தில் இருக்கத்தான் செய்கின்றனர்.

    பிள்ளையின் வாழ்க்கை, குடும்ப மானம், மார்கத்தின் கண்ணியம். இவற்றை முன்னிறுத்தி. கவனமாக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.. இவ்விசயத்தில் சிந்தித்து செயல் பட வேண்டியது ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் மிக மிக அவசியம்.

    தங்கள் பிள்ளைகளுக்கு மார்க்கத்தை கற்றுக்கொடுத்து அவர்களின் வாழ்வில் முன்னேற்றம் அடைய உறுதுணையாக இருங்கள். தங்களின் பொறுப்பை மறந்து..,… தங்களது பிள்ளைகளுக்கு ”செல்லம்” ”பாசம்” “ஃபேஷன்” என்ற பெயரில் சுதந்திரம் கொடுத்து. பிள்ளைகளின் ஆசைகளை பூர்த்தி செய்வதாக கருதி அவர்கள் வழிகெட காரணமாக இருக்க வேண்டாம்.
    எழுதியவர் சேக்கனா M. நிஜாம்
    தாயே! இஸ்லாத்தை சொல்லி தாலாட்டு…

  • நடுவுலே திடீர்னு ஜட்டியைக் காணோம்

    jatti“கொடியிலே காய வெச்சிருந்தது எங்கப் போச்சி? இதைப் போயி காக்காவா தூக்கிட்டுப் போயிருக்கும்?”

    “ஒழுங்கா தேடுங்க. கருமம். தலைதீபாவளிக்கு வந்த மாப்புள்ளை மோதிரம் காணோம், செயினைக் காணோம்னு சொன்னாலாவது கெத்தா வெளியே சொல்லிக்கலாம்”

    “ஏண்டி. எது காணோமோ அதை தானேடி காணோம்னு சொல்ல முடியும். இதுக்காக செயினையும், மோதிரத்தையும் தொலைச்சிட்டு, காணாம போனது என்னோட ஜட்டி இல்லே.. செயினும் மோதிரமும்னு சொல்ல சொல்றீயா?”

    “எதுக்கு இப்போ நாய் மாதிரி கத்தறீங்க. தொலைஞ்சது தம்மாத்தூண்டு ஜட்டிதானே? அதுக்கு ஏன் இவ்வளவு கூப்பாடு?”

    “அதென்னடி நாய் மாதிரி.. நாய்னு டைரக்டாவே சொல்லிட்டு போவவேண்டியது தானே?”

  • “அய்யோ.. அய்யோ.. விடுங்க வேற ஜட்டியை எடுத்து போட்டுட்டு நீட்டா வெளிய வாங்க. யாரு காதுலேயாவது விழுந்ததுன்னா ஆயுசுக்கும் கேலி, கிண்டல் பண்ணிக்கிட்டு இருப்பாங்க!”

    “ஹேய்.. அது காஸ்ட்லி ஜட்டிடீ. தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டுக்கு வர்றமே, கொஞ்சம் கவுரவமா இருக்கட்டும்னு காஸ்ட்லியா வாங்கனேன். இதுவரைக்கும் இவ்வளவு விலை கொடுத்து வாங்குனதே இல்லை!”

    “என்ன சத்தம்.. என்ன சத்தம்? என்ன மாப்புள்ளே. எம்பொண்ணு பஜாரி மாதிரி கத்துறாளா?”

    “இல்லை மாமா.. அதெல்லாம் ஒண்ணுமில்லே!”

    “இல்லையே ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் சத்தம் போடுறா மாதிரி கேட்டுதே?”

    “அப்பா. அவரோட ஜட்டியை காணோமாம். நேத்து காலைலே குளிச்சிட்டு மாடியிலே இருந்த கொடியிலே காயப்போட்டு வெச்சிருந்தது”

    “பச்சை கலரு ஜட்டியா?”

    ஆர்வத்தோடு “ஆமாம் மாமா. நீங்க பார்த்தீங்களா?”

    “அடடே அதே மாதிரி என்கிட்டேயும் ஒண்ணு இருக்கறதாலே என்னோடதுன்னு நெனைச்சி காலையிலே எடுத்து போட்டுக்கிட்டேன். கொஞ்சம் டைட்டா இருக்கறப்பவே டவுட் வந்தது..”

    “கருமம்.. என்ன மாமா இது? ஒரு ஜட்டி கூட உங்களோடதா உங்களோடது இல்லையான்னு உங்களுக்கு தெரியாது?”

    “மாப்ளே.. ஓவரா பேசாதீங்க. வேணும்னா இப்பவே நான் கயட்டி துவைச்சி கொடுத்துடறேன். சும்மா சத்தம் போடுற வேலையெல்லாம் வெச்சிக்காதீங்க!”

    பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உண்மைச் சம்பவம். சகிக்க முடியாத இந்த துயரச் சம்பவத்தைச் சந்தித்த மாப்பிள்ளை என்னுடைய அண்ணன். சம்பந்தப்பட்ட மாமனார் வெற்றிகரமாக பொண்ணு கொடுத்து மொகலாயப் படையெடுப்பு மாதிரி எங்கள் குடும்பத்தின் மீது படையெடுத்து தவிர்க்க முடியாத சக்தியாக இப்போது விளங்கிக் கொண்டிருக்கிறார். எங்கள் குடும்பத்தின் நல்லது கெட்டது எதுவுமே இவரின்றி இன்று அணுவும் அசையாது. ‘நான் புடிச்ச மாப்பிள்ளை’ ஜனகராஜ் மாதிரி லவ்வபிள் மாமனார். எழுபத்தாறு வயதாகிறது. இன்னமும் ஸ்பீடாக சைக்கிளில் டபுள்ஸ் மிதிக்கிறார். வாராவாரம் ஞாயிறுக்கிழமை காலையிலேயே சைக்கிளோடு வந்துவிடுவார். முன்பெல்லாம் ஷெட் கிணறுகளில் குளிக்கப் போகும்போது, எங்களோடு வந்து டைவ் அடிப்பார்.

    அண்ணனின் சோக வரலாறு இந்த தம்பிக்கும் தொடர்கிறது. அந்த துயரச்சம்பவம் நடந்து பத்து ஆண்டுகள் கழித்து, மாமனார் அவருடைய தம்பிமகளை பிடித்துதான் எனக்கும் கட்டிவைத்தார்.
    எழுதியவர் யுவ கிருஷ்ணா
    yuvakrishna
    Source : http://www.luckylookonline.com/2012/12/blog-post_3.html

  • நினைத்தேன் எழுதுகிறேன்!

    ரபியுதீன் அப்துல் ஹமீத்
    by Rafiudeen Abdul Hameed

    59377_500795223286770_1360261254_n
    படத்தினை பெரிது படுத்தி படிங்கள்
    https://www.youtube.com/watch?v=zYnBnaw5r-M&list=UUoabIjVbkTBBMUQ4hGHrCMQ&index=9&feature=plcp
    தீன் கலை அறிவியல் கல்லூரி
    http://nidurseasons.blogspot.in/2012/10/blog-post_3278.html

    கணவனும் மனைவியும் வேலைக்குப் போகலாமா ?

    முஸ்லிம் பெண்கள் ஏன் கல்வியில் பின்தங்கியவர்களாய் இருக்கிறார்கள்?

    http://nidurseasons.blogspot.in/2012/08/blog-post_3276.html

    centre-of-my-universe
    யார் வேலைக்கு போவது கணவனா! மனைவியா?
    நானும் எனது மனைவியும் படித்தவர்கள். எங்கள் இருவருக்கும் வேலை கிடைத்தது . சில காலம் இருவரும் வேலைக்கு சென்றோம் . அரசாங்க வேலை அதனால் சம்பளத்திற்கு குறைவில்லை அதனால் ‘கிம்பளம்’ வாங்க வேண்டிய அவசியமில்லை. ஆனாலும் எனக்கு கீழ வேலை பார்பவர்களும் மேல் வேலை பார்க்கும் எனது அதிகாரிகளும் எங்களை பல வகையில் ‘கிம்பளம்’ வாங்கும் நிலைக்கு தள்ளப் பார்கின்றனர் .அவர்களுக்கு உடன்படவில்லையென்றால் நமக்கு ஏதாவது தொல்லை வரும் நிலைக்கு தள்ளப்பட்டோம். நாங்கள் ஒரளவுக்கு வசதி படைத்தவர்கள் அதனால் வேலைக்குப் போய்தான் பொருள் ஈட்டவேண்டும் என்ற அவசியமில்லை. படித்துவிட்டு மக்களுக்கு சேவை செய்யலாம் என்ற நோக்கில்தான் வேலைக்குப் போனோம். இந்த தொந்தரவுக்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டுமென்று இருவரும் யோசனையில் ஈடுபட்டோம். அதன் முடிவின்படி நான் மட்டும் வேலைக்குப் போனேன். ஒரு வருடம் கழித்து வேறு ஒரு நல்ல வேலையில் சேர்ந்தேன். வேலைப் பளுவின் காரணமாக உடல்நிலை சிறிது பாதிக்கப்பட்டது. அதனால் நான் சிறிது காலம் ஓய்வு எடுக்க வேண்டிய அவசியமானது. அதனால் நான் வீட்டில் இருந்துக் கொண்டு குழந்தைகளைக் கவணிப்பது மனைவி வேலைக்கு போவது என்ற முடிவுக்கு வந்தோம். அது வேடிக்கையாக இருக்கலாம். எங்கள் நிலையில் அதுதான் சரியாகப்பட்டது.

    நான் வேலைக்குப் போனால் அதிக வேலை கொடுப்பதும் அர்த்தமில்லாத அவதியும் வரும் . பெண்கள் வேலைக்குப் போவதால் அவர்களுக்கு பாதுகாப்பு அதிகம் அத்துடன் அவர்கள் அதிக நேரம் வேலைப் பார்க்க அலுவலகத்தில் கட்டாயம் செய்ய மாட்டார்கள். அவ்விதம் செய்தால் மேல் முறையீடு செய்தால் அவர்களுக்கு சாதகமாக பதில் வரும். உலக அறிவும் மன தைரியமும் வந்து தன்னம்பிக்கை ஏற்பட்டுவிடும். நான் இல்லையென்றாலும் என் மனைவி யாரையும் சார்ந்து இருக்க வேண்டிய அவசியமில்லை.
    வீட்டில் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட வாய்ப்பு கிடைத்ததால் அவர்களிடத்து பாசம் அதிகமானது அவர்களுக்கும் என் மீது நேசம் மிகுந்தது. சமைக்கவும் தெரிந்துக்கொண்டேன் அதனால் எனது மனைவிக்கு வீட்டு வேலை குறைந்தது. சமைப்பதில் பொதுவாக தன் தாயிடம் கற்று வந்த சமையல் முறைதான் அதிகமான பெண்களுக்குத் தெரியும். ஆண்கள் அப்படியல்ல. எதிலும் புதுமை காண்பவர்கள்.அதனால் நான் பலவகையில் சமைத்துக் கொடுத்ததில் வீட்டில் அனைவரும் உணவை விரும்பி சாப்பிட்டனர். ‘இன்று ஆட்டுக்கறி ஆனத்தில் (குழம்பு)முருங்கைக்காய் போட்டு சமைக்கப் போகின்றேன்’ என்று சொன்னபோது அப்படிச் செய்தால் ஆனம் நன்றாக இருக்காது என்று மனைவி சொன்னாள் . அவ்விதமே நான் சமைத்துக் கொடுத்தபின்பு ‘இதுவும் மிகவும் சுவையாகத்தான் இருக்கின்றது’ என்று சொல்லிவிட்டு நானும் அப்படி சமைத்துப் பார்க்கிறேன்’ என அவளது ஆர்வத்தை வெளிப்படுத்தினாள்

    நான்கு ஆண்டுகள் கழிந்தன எனக்கும் எனது மனைவிக்கும் சிங்கப்பூரில் வேலை கிடைத்தது. நல்ல சம்பளம். தங்க வீடும் கொடுத்தார்கள். மனைவிக்கு மற்றொரு குழந்தை அங்கு பிறந்தது. ஆனால் அவளுக்கு உதவி செய்ய யாரும் இல்லை. பணத்தைவிட நம் குழந்தைகள் வாழ்வுதான் முக்கியம் என்பதால் வேலையை உதறி விட்டு இந்தியாவுக்கே திரும்பினோம். இங்கு அவள் வீட்டில் நான் அலுவலகத்தில். அவள் வீட்டு வேலையில் நானும் பகிர்ந்துக் கொள்கின்றேன். அவளுக்கு கிடைத்த அலுவலக வேலை அனுபவத்தால் எனது அலுவலக வேலையில் வீட்டில் இருக்கும் பொது உதவி செய்கின்றாள். இருவரும் கணினி பொறியாளர் படிப்பு படித்தவர்கள்தான். ஒருவருக்கு ஒருவர் இறைவன் அருளால் அனைத்திலும் ஒத்துப்போதலும் மகிழ்வும் நிறைவாக இருக்கின்றது. நாங்கள் இயந்திர வாழ்க்கை வாழ விரும்பவில்லை. மனித நேயத்தோடு, அன்போடு , ஒருவருக்கு ஒருவர் அனுசரணையோடு,இறைபக்தியோடு மகிழ்வாக வாழ விரும்புகின்றோம். சிரமங்களை தாங்கிக் கொள்ளும் சக்தியை இறைவன் அருளால் நாங்கள் பெற்ற அனுபவமே எங்களுக்கு உதவுகின்றது.
    குர்ஆனில் சூரத்துல் பகரா என்கிற அத்தியாயத்தில் “அவர்கள் உங்களுக்கு ஆடை; நீங்கள் அவர்களுக்கு ஆடை!” என்று சொல்லப்பட்டுள்ளது! அதாவது, கணவன் மனைவிக்கு ஆடை! மனைவி கணவனுக்கு ஆடை!
    ஓர் ஆடை பல நூல் இழைகளால் நெய்யப்பட்டது . ஒற்றுமை, அன்பு, பாசம், விட்டுக்கொடுத்தல்,அனுசரித்துப்போதல் என்ற பிணைப்பால் பிணைக்கப்பட்டதுதான் கணவன் மனைவி உறவு வாழ்க்கை