இஸ்ரேலில் கூகிள் அதிக முதலீடு!

கூகிள் நிறுவனம் அதிக பயனீட்டாளர்களைப் பெற்று இணைய உலகில் கொடி கட்டி பறக்கிறது. யூடூப்(youtube), ஓர்குட்(orkut) போன்ற வலைதளங்கள் அவற்றில் சில. கூகிள் நிறுவனங்கள்  ஏற்கனவே பல்வேறு இஸ்ரேலிய யூத தொழில் நுட்ப வலைதளங்களை வாங்கி தன்னுள் பெற்றுள்ளது. மேலும் தற்போது இஸ்ரேலில் உள்ளதன து  அலுவலகத்தில் ‘Incubator’ (அடை காக்கும் கருவூலம்) என்ற பெயரின் கீழ் புதிய 20 இணைய மதிப்பு கூட்டிகளைத் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கு இஸ்ரேலிய யூத பல்கலைகழங்களுடன் இணைந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. கூகிளின் இஸ்ரேலிய முதலிடு இஸ்ரேலிய யூதர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. தொடர்ந்து இஸ்ரேலில் கூகிள் நிறுவனம் தனது முதலீட்டை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலில் இரண்டாவது பெரிய நகரமான ‘டெல் அவிவ்'(Tel Aviv)வில் கூகிள் தனது மத்திய கிழக்கு நாடுகளுக்கான அலுவலகத்தையும் நிர்வகித்து வருகிறது.

கூகிளின் பேசவல்லவர் கூறும் போது “இஸ்ரேல் மென்பொருளாளர்கள் மிகவும் திறமையுடைவர்கள்; கூர்மையான படைப்புத்திறன் கொண்டவர்கள். பல முன் மாதிரி தொழில் நுட்பங்களை அவர்கள் இயற்றியுள்ளனர்” என்று கூறியுள்ளார்.

இந்தத் திட்டத்தின் மாநாட்டின் யூத பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், தொழில் முனைவோர் உட்பட 80 பேர் கலந்துகொள்ள உள்ளனர். மேலும் இணைய மதிப்புகூட்டிகள் ஒபன் கோட் முறையில் தற்போது புகழ் பெற்று விளங்கும் கூகிள் க்ரோம்  (Google Chrome) மற்றும் ஆண்டிரியாய்டு கைபேசி மென்பொருள் (Android Mobile) போன்ற வடிவத்தை ஒத்திருக்கும்.

பல நவீன கண்டுபிடிப்புகளை இஸ்ரேல் உலகிற்கு அளித்துள்ளது. தற்போது கணிப்பொறி தகவல்களைப் பாதுகாக்க அனைவராலும் பயன்படுத்தப்படும்  USB ஃபிளாஷ்டிரைவ் இஸ்ரேலிய கண்டுபிடிப்பு ஆகும். மேலும் சமீபத்தில் இஸ்ரேலிய பொறியாளர்கள் கண்டுபிடித்த வீடியோ கேம் சிஸ்டம் மைக்ரோசாப்ட் நிறுவனம் கைனடிகஸ் (Microsoft Kinetics) வாங்கி பெரும் விற்பனையில்  முன்னிலை அடைந்து வருகிறது.  AOL வலைதளத்தின் ICQ எனப்படும் சாட்டிங் மென்பொருளும் இஸ்ரேலிய கண்டிபிடிப்பாகும் என்பது குறிப்பிடதக்கது.

Source : http://www.inneram.com/

 

Author: S.E.A.Mohamed Ali. "nidurali"

S.E.A.Mohamed Ali (Jinnah)B.A.,B.L., (nidurali) Nidur. Indeed all the praises are due to Allah, we praise him and we seek his assistance and forgiveness, and we seek refuge in Allah. https://aboutme.google.com/?referer=gplus

Leave a comment