நிஷா மன்சூர் சிந்திய முத்துக்கள்.

கனவுகளில் உட்செறிந்த அபூர்வ உறவு,
நம் பிழைகளின் இருள் அறைகளில்
நிகழ்வுகளின் உட்பரிமாணச் சிதைவுகளில் உயிர்ப்புற்று வளரும்
வினோத ராட்சஷனால் மறுதலிக்கப் படுகிறது..!!

விதைத்தேன் ஒரு சிறு பொய்யை,
விளைந்தன ஆயிரம் பெரும்பொய்கள்..!!

சிறுபிழைகள் பெரும்பிழைகளிலிருந்து பாதுகாத்தன,
பிழைகளெல்லாம் புத்திக் கொள்முதல் ஆயின..!!

பிழைகளிலிருந்து அனுபவம் தேர்ந்தேன்,
அனுபவங்களால் பிழைகளைக் குறைத்தேன்..!!

வணிக உத்திகள் கற்றுத்தேர்ந்த இலக்கியவாதிகள் மிகைக்க மிகைக்க,
இலக்கியம் தேர்ந்த வணிகர்கள் குறைந்துகொண்டே போகிறார்கள்..!!

என்னைப்போல் இருக்கிறீர்கள் என்றான்,
என்னைப்போல்தான் இருக்கிறேன் என்றேன்..!!

————
பயணம்,
என் வாழ்க்கை.

பயணம்,
என் நாகரீகம்.

பயணம்,
என் ரசனை.

பயணம்,
என் கர்வம்…!!
——–
வானத்துல புல்லு மொளச்சா
மான்கூட பறக்க ஆரம்பிச்சுடும் மாப்ள..!!
————-
பகலிரவாய் உழைத்து ஒரு ஓவியம் வரைந்தேன்,
உங்கள் கையொப்பமிட்டு உலகுக்களித்தீர்கள்.

வியர்வையில் உதிரம் குழைத்து ஒரு சிற்பம் செய்தேன்,
உங்கள் பெயர் பொறித்து மகுடம் சுமந்தீர்கள்.

களைப்பும் சோர்வும் மிகைக்க இருள் போர்த்தி உறக்கத்தில் ஆழ்ந்தேன்,
உலகுக்கே வெளிச்சமிட்டுக் காட்டி
எள்ளி நகையாடுகிறீர்கள்..!!
———-

நீ உண்ணும் உணவில் ருசிப்பது
என் வியர்வையின் சுவை என்றான்,
நீ உடுத்தும் ஆடையின் ஊடும் பாவுமாய் பின்னியிருப்பது என் உழைப்பின் சாரம் என்றேன்..!!

—————-
அனுபவத்தை அப்படியே சொல்லும்போது அது வெறும் காட்சிப்படுத்தலாகவும்
கதைசொல்லலாகவும் எளிமையாகி விடும்,
அனுபவத்தின் உணர்வுகளை/சாரத்தைச் சொல்லும்போது ஒவ்வொருவரும் அவரவர் அனுபவத்துடன் பொருத்திப் பார்த்துக் கொள்ளும் அளவில் பன்முக தளத்தில் விரிவடையும்..!!
1525450_466503866826869_5088817348350159500_n
நிஷா மன்சூர்

Author: S.E.A.Mohamed Ali. "nidurali"

S.E.A.Mohamed Ali (Jinnah)B.A.,B.L., (nidurali) Nidur. Indeed all the praises are due to Allah, we praise him and we seek his assistance and forgiveness, and we seek refuge in Allah. https://aboutme.google.com/?referer=gplus

One thought on “நிஷா மன்சூர் சிந்திய முத்துக்கள்.”

Leave a reply to நிஷா மன்சூர் Cancel reply