மவுனமும் ஒரு மொழிதான்

விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சி ஓடிக் கொண்டிருக்கிறது. எதேசையாக கால் மணி நேரம் பார்த்ததில் ஒன்று புரிந்தது. நம்பர் 1 சேனலான சன் டீவியே வேறு வழியில்லாமல் விஜய் நிகழ்ச்சிகளை காப்பி அடிப்பது ஏன் என்று.

அதே மாதிரி, இத்தனை நல்ல நிகழ்ச்சிகளை தயாரிக்கும் விஜய் ஏன் ரசிகர்களை தக்க வைத்துக் கொள்ள முடிவதில்லை என்பதும். பார்வை இல்லாத ஒரு சிறுவன் அசத்தலாக பாடி நாம் தடுத்து வைத்திருந்த கண்ணீரை எல்லாம் வெளியே கொண்டு வந்தான். அது 15 சதவீதம் முடிவதற்குள் விளம்பர இடைவேளை விட்டு அடுத்த கட்ட நிகழ்ச்சிக்கு முன்னோட்டம் போட்டது விஜய் சேனல்.

  • இதைவிட சீக்கிரமாக சுலபமாக நேயர்களை கேவலப்படுத்த முடியாது. அருமையான விளம்பரம் தயாரித்து காட்டும்போது சில பத்திரிகை முதலாளிகள் அல்லது விளம்பர முதலாளிகள் சொல்வார்கள்: ‘ஏங்க, அவ்வளவு ஒயிட் கேப் தேவைதானா?’. ‘அட நாதாரிகளே, வெள்ளையும் ஒரு கலர்தானடா. விளம்பரத்துக்கு அழகூட்ட அது தேவையடா’ என்று சொல்ல நா(க்கு) துடிக்கும். முடியுமா? ப்ராஜக்ட் ட்ராப் ஆகிவிடும்.

    அதுபோல, சேனல்களில் நிகழ்ச்சிகள், விளம்பரங்களுக்கு இடையே மவுன இடைவெளியும் ரொம்ப அவசியம். விஜய் அறிவாளிகளுக்கு புரியவில்லை. 7 மணி மகாபாரதத்துக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். டைட்டில் மியூசிக் கேட்டு அவர்கள் ஓடி வருவதற்குள் சீரியலின் முதல் 3 நிமிட முக்கிய காட்சிகள் ஓடிவிடும். அப்படிஎன்னடா அவசரம், உங்களுக்கு என்று கேட்க தோன்றும். மகாபாரதம் பார்ப்பது பழைய பவர் ஸ்டார் படம் பார்ப்பது மாதிரிதானே என்று அவர்கள் நினைத்திருந்தால் நாம் என்ன செய்யமுடியும்?

    சன் டீவியில் மகாபாரதம் பார்த்த பிறகுதான் ‘அடடே,விஜய் டீவியில் இதே சீரியல் சிறப்பாக வருகிறதே’ என்று பலரும் இந்த பக்கம் வந்தார்கள். அவர்களை தக்கவைக்க துப்பில்லை விஜய் டீவி நிர்வாகத்துக்கு. வீட்டில் உட்கார்ந்து டீவி பார்க்கும் எவருமே காலில் வெந்நீரை கொட்டிக் கொண்டு ரிமோட்டை கையில் எடுக்கவில்லை.

    புரிஞ்சுக்கங்கப்பா.
    1509273_822563767771201_2089649643210206418_nKathir Vel

    Author: S.E.A.Mohamed Ali. "nidurali"

    S.E.A.Mohamed Ali (Jinnah)B.A.,B.L., (nidurali) Nidur. Indeed all the praises are due to Allah, we praise him and we seek his assistance and forgiveness, and we seek refuge in Allah. https://aboutme.google.com/?referer=gplus

  • Leave a comment