டாக்டர்_மன்மோகன்_சிங்

காங்கிரசின் இன்றைய நிலமைக்குக் காரணமாக இருந்தவர் டாக்டர் மன்மோகன்சிங்.
டாக்டர் சிங் மிகச் சிறந்த கல்விமான்
அவரது கல்வியும் ஆற்றிய பணிகளும்
சாதாரணமானவையல்ல .
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில்
பொருளாதாரத்தில்
First Class Honours பட்டம் பெற்றவர் அவர்.
பல பல்கலைக் கழகங்களில்
பாராசிரியர்
திட்டக்குழுத் துணைத் தலைவர்
பொருளாதார ஆலோசகர்
ரிசர்வங்கி கவர்னர்
நிதியமைச்சர்
என பல பதவிகளை வகித்தவர் .


2004 முதல் 2014 வரை இந்தியப் பிரதமராக இருந்து
தன்னுடைய அனுபவமிக்க அறிவின் முதிர்ச்சியால் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றவர்
மன்மோகன் சிங்.
இந்தியப் பிரதமர்களிலேயே
மிகத் திறமையான பிரதமர்
டாக்டர் சிங் என்று சொன்னால் மிகையாகாது.

இத்தனை இருந்தும் …
ஒரு பலஹீனத்தால் அவரது சாதனைகள்
மக்களுக்குத் தெரியாமல் போய்விட்டது.
அதுவே காங்கிரசின் தோல்விக்கும்
காரணமாக அமைந்து விட்டது.

அது என்ன பலஹீனம் ?
டாக்டர் சிங் மிகச் சிறந்த நிர்வாகி
மிகச் சிறந்த பொருளாதார நிபுணர்
மிகச் சிறந்த பிரதமர்
எல்லாம் சரி.
ஆனால் …
அவர் ஒரு சிறந்த அரசியல்வாதி இல்லை.
அரசியலுக்கும் அவருக்கும் சம்பந்தமே இல்லை.
அப்பழுக்கற்ற அந்த மனிதர் நாட்டின்
முன்னேற்றத்துக்காக அயராது உழைத்தார்.
வெற்றிகளை பெற்றுத் தந்தார்.
என்றாலும் அவரது சாதனைகளை
தனது சுயநலத்துக்காக
அவர் விளம்பரப்படுத்தவில்லை.
காங்கிரஸ் கட்சியும் அவரது சாதனைகளை மக்களிடம் சரியான முறையில் கொண்டு சேர்க்கவில்லை.

ஏசி அறைக்குள் குப்பைகளைப் போன்ற பொருட்களை அழகாக குவித்து வைத்து
குப்பை பொறுக்கும் பெண்களிடம்
நலம் விசாரிப்பதுபோல் படம் காட்டத் தெரியவில்லை.
இமயமலை குகைக்கு தவம் செய்ய செல்வதுபோல்
அடர்ந்த காடுகளிலும் மலைகளிலும்
அட்வெஞ்சர் பண்ணுவதுபோல்
ராக்கெட்டுகளை தனது தலையில் சுமந்து பறக்க விடுவதுபோல்
பட்டாம் பூச்சிகளையும் பரிதாபப்பட்டு
பறக்க விடுவதுபோல்
நடிக்கத் தெரியவில்லை.

உலகம் முழுக்க சுற்றினாலும்
அதை தன் விளம்பரத்துக்காக
சுய நலத்துக்காக செய்யவில்லை.
மன்மோகன் சிங் ஆட்சியில்
அவரவர் பணிகளை அவரவர்
சரியாக செய்து கொண்டிருந்தார்கள்.
யாருடைய சாதனைக்கும் சிங் உரிமை கொண்டாடவில்லை.
அதனால்
அவரது சாதனைகளின் அருமைகளை
மக்கள் அறிந்து கொள்ளவில்லை.

முக்கியமாக
மக்களைக் கவரும் வகையில்
பொய் மூட்டைகளை கூச்சமே இல்லாமல்
அவிழ்த்து விடும் வாய் சாமர்த்தியம்
அவரிடம் இல்லை.
மக்களிடம் நேரடி தொடர்பும் இல்லை.
அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளில்
ஒருவரைப்போலவே அவர் நடந்து கொண்டார்.
மக்களோடு நெருக்கமான தொடர்பில்லாத பிரதமராக அவர் இருந்ததால் அவரது சாதனைகள் கட்சிக்கு பெரிய அளவில் பலம் சேர்க்கவில்லை.
இந்த விஷயத்தில் கோட்டை விட்டதால்தான் காங்கிரஸ் கோட்டையை பறிகொடுத்தது.

மோடியைப்போல் வாய்ப்பந்தல்
போடக்கூடிய பிரதமராக அவர் இல்லையென்றாலும்
அவர் செய்த சாதனைகளால்தான்
இன்றுவரை இந்தியா தாக்குப் பிடித்துக் கொண்டிருக்கிறது.
அவர் ஆளும்போது
அவரது அருமைகளை அறிந்து கொள்ளாதவர்களெல்லாம்
இன்றைக்கு அவரை வானளாவ புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
டாக்டர் மன்மோகன் சிங் மட்டும்
ஒரு அரசியல்வாதியாகவும்
இருந்திருந்தால் …

இன்றைக்கும்அவர்தான்பிரதமர்.

டாக்டர் சிங் இன்னும் பல்லாண்டுகள்
நலத்தோடு வாழ வேண்டும்.
இந்த நாடு இழந்து விட்ட சிறப்புக்களையெல்லாம் அவர் மீட்டுத் தர வேண்டும்.
அதற்கு இறைவன் அருள் புரிய வேண்டும் என்று அவர் பிறந்த இந்த நாளில் வாழ்த்துகிறேன்.

Abu Haashima

Author: S.E.A.Mohamed Ali. "nidurali"

S.E.A.Mohamed Ali (Jinnah)B.A.,B.L., (nidurali) Nidur. Indeed all the praises are due to Allah, we praise him and we seek his assistance and forgiveness, and we seek refuge in Allah. https://aboutme.google.com/?referer=gplus

Leave a comment